புதன், 14 டிசம்பர், 2011

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 அஷ்டம சனி பயம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 அஷ்டம சனி பயம்

                                                   குச்சனூர் சனிபகவான்

சனி பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையில் 15.11.2011 அன்று முடிந்துவிட்டாலும் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி வரும் 21.12.2011 அன்று காலை சனீஸ்வரர் ஆலயமான திருநள்ளாறில் விசேசமாக கொண்டாடப்படுகிறது.சனிப்பெயர்ச்சிக்கு முன்பே சொல்லியிருந்தேன்...சனி துலாம் வீட்டில் உச்சம் ஆகிறார்.பல புதுபுது திருப்பங்களை அரசியலிலும் ,பொருளாதாரத்திலும்,தொழில் துறையிலும் ஏற்படுத்துவார்.சனி நீதிக்காரகன்.அவன் வலுப்பெற்றால் உச்சநீதிமன்றத்தின் கை ஓங்கி இருக்கும்.மத்திய மாநில அரசுகளை நம்பாமல்,..மக்களும் அரசியல் தலைவர்களும் முன்பைவிட அதிகமாகவே நீதிமன்றங்களை நம்பியிருப்பர் என்றேன்.அதன்படி இன்று முல்லைப்பெரியார் விவகாரத்தில் மத்திய அரசு மிக மிக அலட்சியமாக நடந்துகொண்டிருக்கிறது...

இரு மாநிலத்துக்கும் பிரச்சினை என்றால் நடுநிலையோடு நடந்துகொள்ளாமல் ஆபத்தில் இருக்கும் அணைக்கு பாதுகாப்பு செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது.இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா மிக விவேகத்துடன், அரசியல் ராஜதந்திரத்துடன் செயல்பட்டு வருகிறார்.ஆரம்பம் முதல் முல்லப்பெரியார் அணைக்காக போராடி வரும் வைகோவே தமிழக அரசை பாராட்டி இருக்கிறார்.

ம்..சனி வலுப்பெறும்போது சனி ஆதிக்கத்தில் கறுப்புத் துண்டை அணிந்திருக்கும் வைகோவுக்கு முக்கியத்துவம் கூடுமோ..நடந்தாலும் ஆச்சர்யமில்லை.சனி சார்ந்த இரும்பு சம்பந்தமான ,வாகனம்,இயந்திரம்,ஆயில் சார்ந்த பங்கு வர்த்தகம் சிறப்பாக இருக்கும்.

அஷ்டம சனி என்ன செய்யும்..? என்ற கேள்விக்கு ஏழரை சனியில் எவ்வளவு கஷ்டம் தருமோ அந்த கஷ்டத்தை இரண்டரை வருடத்திலே சனி கொடுத்துவிடுவார் என்பதுதான் பொதுவான பதிலாக இருக்கிறது.கும்ப ராசிக்காரர்களுக்கு இப்போது அஷ்டம சனி முடிந்து மீனம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்கியிருக்கிறது.குமப ராசிக்காரர்கள் அளவுக்கு மீனம் ராசிக்காரர்கள் கஷ்டப்படுவர் என சொல்ல முடியாது.கும்பம் ராசியினர் பொதுவாகவே தாழ்வு மனப்பான்மையினர்.வாழ்வில் அதிக போராட்டம் அனுபவித்து வரக்கூடியவர்கள். ,மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி வாழக்கூடியவர்கள்..அடிக்கடி தடங்கல்களை அனுபவிக்ககூடியவர்கள்.அப்படிப்பட்டவர்களுக்கு அஷ்டம சனி வந்தால் கஷ்டம் அதிகமாகவே இருக்கும்.அதை அனுபவித்து,ஒருவழியாகி,முடிந்துவிட்டது.இனி கவலைப்படாதீர்கள்.

மீனம் ராசியினர் இதற்கு நேர் மாறானவர்கள்.குருவின் ராசிக்கு சொந்தக்காரர்.குருவை போல பலருக்கு வழிகாட்டியாக இருப்பவர்கள்..இவர்களால் பலன் அடைந்தவர்கள் ஏராளம்.ஆனா இவர்களுக்கு அவர்கள் உதவி செய்வார்களா என்றால் சந்தேகம்தான்...குருவின் ராசி என்பதால் பண வருவாய்க்கு குறைவிருக்காது.பணம் நஷ்டம் வந்தாலும் சமாளித்துவிடுவர்.தொழில் பாதிப்போ மந்தமோ வந்தாலும்...தன் சாதூர்யத்தால் சமாளிப்பர்.புலம்புவார்கள்.ஆனால் இவங்க புலம்பலை யாரும் மதிக்க மாட்டார்கள்..உங்களுக்கு என்ன சார்...எங்கியாவது ஷேர் மார்க்கெட்ல லம்பா போட்டு வெச்சிருப்பீங்க,.ன்னு சொல்லிடுவாங்க...

சிக்கன்,மட்டன் சாப்பிடுறவங்க இந்த ராசியில கம்மி.காரணம் இவங்க..பல பேருக்கு சிவபக்தி அதிகம்..கந்த சஷ்டி கவசம் உச்சரிச்சு முருகன் மேல ரொம்ப ஈடுபாட்டோட இருப்பவர்களும் அதிகம்.தெய்வபலம் இருப்பதால் அஷ்டம சனி தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனமாதிரிதான்..

மீனம் ராசிக்காரங்க தொழில் விசயத்துல பணம் விசயத்துல கெட்டி.ஆனாலும் அஷ்டம சனியில ஏமாற போறாங்க..யாரால நண்பர்களால.உறவினர்களால...குழந்தைகளால்...மருத்துவ செலவும் கொஞ்சம் ஏற்படும்.அடுத்தவனுக்கு செலவு பண்ணாம தன் பணத்தை கெட்டியா வெச்சிருக்குறவங்க..டாகடருக்கு கொடுத்தே ஆகணும்.உங்க ராசி இயல்பே குரு வின் குணாதிசயம்தான்..குரு எப்படியிருக்கணும்..?அன்னதானம் செய்தல்,கோயில் கட்ட உதவி செய்தல்,.ஏழைக்குழந்தைகள் கல்வி கற்க உதவி செய்தல்,ஏழைப்பெண்களுக்கு திருமண உதவி இதுதான்.இதையெல்லாம் இதுவரை நீங்க செய்யலைன்னா இப்போ செய்யுங்க...

அஷ்டம சனி என்பது ராசிக்கு எட்டில் சனி வருவது.கிராமத்தில் சொல்வாங்க...எட்டுல சனி புட்டுல அடி..(மர்ம உறுப்பு பாதிக்கும்).எனவே வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம்.இரவில் வாகனத்தில் செல்லும்போது இன்னும் கவனம்.அதுவும் மது அருந்திட்டு போனா .....மறுபடி இந்த பேராவின் முதல்வரியை படிக்கவும்.

எட்டில் சனி வரும்போது ஏழாம் பார்வையாக சனி பார்ப்பது..வாக்கு ஸ்தானத்தை.அதாவது எப்போதும் மத்தவங்களுக்கு புத்திமதி சொல்வதுன்னா உங்களுக்கு சர்க்கரை கட்டி.இன்னும் இரண்டு வருசத்துக்கு இந்த சேவையை நீங்க குறைச்சுக்கணும்.நீங்க ஒண்ணு சொல்ல அது ராங்கா எதிராளிக்கு போய் சேர்ந்து உங்களுக்கு நீங்களே ஆப்பு வெச்சிக்கிட்டா மாதிரியாகிடும்...பேச்சில் நிதானம் இழத்தல் அஷ்டம சனியின் முக்கிய பாதிப்பு..பேச்சை குறைச்சிக்குங்க சார்..வீண் விவாதத்தில் வாயை கொடுத்து மாட்டிக்க வேணாம்..மனைவியிடம்..வம்பிழுப்பது பெரிய துன்பத்தில் முடியும்..அனுசரிச்சு போய்விடவும்...

குச்சனூர் சனிபகவானை வழிபட்டுட்டு வாங்க..திருச்செந்தூர் வருசம் ஒரு தடவை போயிட்டு வாங்க...

இவ்ளோதான்...அஷ்டம சனி...மலைப்பா இருக்கா..எப்பவும் போல இருங்க..நான் சொன்னது மட்டும் நினைவு வெச்சுக்குங்க..அஷ்டம சனி வந்திருச்சி இனி அவோதான்னு நீங்க..வேலை செய்யாம படுத்துக்கிட்டா அதுக்கு சனிபகவான் பொறுப்பல்ல...!!

9 கருத்துகள்:

முத்தரசு சொன்னது…

அடேங்கப்பா இம்ம்புட்டு விஷயம் இருக்கா? நீங்க சொல்றதை பார்த்தா 21.12.2011 பின் நிறைய மாற்றம் வருது அதற்கான அறிகுறி இப்பவே தெரியுது.
தகவலுக்கு நன்றி

Yoga.S. சொன்னது…

வணக்கம்,சார்!சனி நல்லது.

ஜோதிஜி சொன்னது…

மிகத் தெளிவாக இருக்கு. இப்படித்தான் எழுதனும்.வாழ்த்துகள்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மீ மீனம், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பகிர்விற்கு நன்றி நண்பரே!

Unknown சொன்னது…

சனி பெயர்ச்சி தனுசுக்கு(மூலம்) பரவாயில்லையா?

ADMIN சொன்னது…

நானும் தெரிஞ்சுக்கிட்டேன்..நன்றி.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நன்றி..பயனுள்ள பகிர்வுக்கு..

பெயரில்லா சொன்னது…

நல்லா சொல்லிருகீங்க... அதும் கடசி வரிகள் superp