புதன், 28 டிசம்பர், 2011

முகத்தை பார்த்து ஜோசியம் சொல்வது எப்படி..?

முகத்தை பார்த்து ஜோசியம் சொல்வது எப்படி..?


ஜோசியம் ஜாதகத்தை பார்த்து சொல்லலாம்..முகத்தை பார்த்து சொல்ல முடியுமா.சொல்ல முடியும்.இது சைக்காலஜி அல்ல.அஸ்ட்ராலஜி.ஜாதகத்தை பார்க்கும் போது லக்னம் என்ன சாரத்தில் இருக்கோ,அதை கவனிச்சும் லக்னத்தில் என்ன கிரகம் இருக்கோ அதை வெச்சும்,லக்னத்தை பார்க்கும் கிரகத்தை வெச்சும் அவரோட குணம் ,மணம்,முக ராசி எல்லாத்தையும் சொல்லிடலாம்..இது நல்ல அனுபவ பாடமா இருந்தா ஒருத்தர் முகத்தை பார்த்ததும் எள்ளும் கொள்ளும் வெடிக்கிற முகமா எப்பவும் சோகமா துக்கமா வாட்டமா இருந்தா செவ்வாய் சாரம்,சனி சாரம் கண்டுபிடிக்கலாம்..

லக்னம் தான் உயிர்.ஒரு ஜாதகனின் தாய் தந்தைக்கு சமமானவர்.அந்த ஜாதகனுக்கு நடக்கும் அனைத்து நல்லது கெட்டதுக்கும் இந்த இடத்துக்கு உடையவனே காரண கர்த்தா.லக்னத்தில் அமரும் கிரகத்தை பொறுத்து ஜாதகனின் குணாதிசயங்கள் அமையும் .உதாரணமாக ஆட்சி வீடில்லாத ராகுவோ,கேதுவோ லக்னத்தில் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.ஜாதகன் ஒரு முரண்பட்ட மனிதனாக காட்சி யளிப்பான்.செய்யக்கூடிய செயலில் இருந்து எடுக்ககூடிய முடிவுகள் வரை புரிந்து கொள்ள முடியாத புதிர்.சுருக்கமா சொன்னா இவரை நம்பக்கூடாது!படிக்கிறது ராமாயணம்,இடிக்கிறது பெருமாள் கோயில் ரகம்.எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்வார்.யாருக்கும் தெரியாது.சிறுசா ஒரு தப்பு பண்ணுவார்.அது தினமலர் ல வரும் அளவு பிரபலம் ஆகிடும்.

அதுவே சுபகிரகம் லக்னத்தில் நின்றால் ஆயுள் கூடும்.மலர்ந்த முகம்.முக ராசிக்காரர்.பண்பு,பழகும் விதம் எல்லாமே மென்மை தான்.இவரு ரொம்ப நல்ல மனுசன் என்ற பெயரை பெற்று தரும்,...ஒண்ணுமே செஞ்சிருக்க மாட்டாருங்கிறது வேற விசயம்.முன்ன பின்ன தெரியாதவர் இவரை பார்த்தாலும் அட..இவர பார்த்தா நல்ல மனுசனா தெரியறாரு என்பார்கள்..அந்த டயலாக் புறப்படும் இடம் முகத்தை பார்த்து மனதில் எழும் எண்ணம் தான்.அதற்கு காரணம் லக்னத்தில் இருக்கும்,பார்க்கும் கிரகம் தான்.

முகத்துல வெட்டுக்காயம் இருந்தா கிராமபகுதிகளில் திருடன் சொல்லுவாங்க..அது எப்படி../ தழும்பு,மச்சத்தோட பழைய சினிமாக்களில் ரவுடிகளை காண்பிப்பாங்க அது ஏன்..? ஏன்னா திருட்டு,சண்டை சம்பந்தமான கிரகம் செவ்வாய்.அது லக்னத்தில் இருந்தாலோ,லக்னத்தை பார்த்தாலோ,நட்சத்திர சாரம் வாங்கியிருந்தாலோ..முகத்தில் அடிபடுவான்.கீறல்,தழும்பு உண்டாகும்.திருடிட்டு ஓடுறப்ப அடிபடுறது சகஜம் அதனால கிராமத்துல அப்படி சொல்வாங்க...எப்பவும் யார்கிட்டியாவது சண்டை போட்டுகிட்டே இருக்குறவனுக்கும் லக்னத்தில் செவ்வாய் இருக்கலாம்..

ஆக,முகத்தை பார்த்ததும் அவர் எப்படிப்பட்ட குணம் உடையவர் என்பதை யூகம் செய்யமுடியும்.ராசிபலன் மாதிரி அதன் மூலம் அவர் குணாதிசயத்தையும் கண்டறிய முடியும்!

சனிப் பெயர்ச்சி பலன்களில் தனுசு ராசிக்கு எழுதிய பதிவு மட்டும் 55,000 ஹிட்ஸ் தாண்டியிருக்கிறது!! அனைவருக்கும் மிக்க நன்றி!

6 கருத்துகள்:

arul சொன்னது…

nalla pathivu

perumal shivan சொன்னது…

பாஸ் எனக்கு விருச்சக லக்னம் விசாக சாரம் லக்கினத்தில் சனி, ஏழில் சந்திரன், பத்தில் செவ்வாய் உடன் சுக்கிரன் (குரு+சனி+சந்திரன்+செவ்வாய் ) நால்வரின் தொடர்பு லக்கினத்தை பாதிக்கிறது . ஏதாவது நாலு வார்த்தை நச்சுனு சொல்லுங்க பாஸ் .
நன்றி !

Astrologer sathishkumar Erode சொன்னது…

பெருமாள்,லக்னத்தை குரு பார்க்கிறதால் உங்களை ரொம்ப கெட்டவருன்னு சொல்லிட முடியாது! நல்லவரும் கூட..;-))

சனி,செவ்வாய் பார்வை மைனஸ்...வளர்பிறை சந்திரனா இருந்தா ப்ளஸ்...கடவுள் பாதி..மிருகம் பாதி டைப்தான்!!

perumal shivan சொன்னது…

ok thanks boss!

சேகர் சொன்னது…

அண்ணே நீங்க எதுக்கும் lie to me அப்படின்னு ஒரு ஆங்கில சீரியல் ஒளிபரப்பாகிறது.. மூன்று சீசன்களை தாண்டி நான்காம் சீசன் இன்னும் சற்று தினங்களில் தொடங்கவுள்ளது.எதற்கும் தாங்கள் அதை ஒருமுறை பதிவிறக்கம் செய்து பார்த்துவிடுங்கள். உங்களுக்கு பிடிக்கும். இது,முகபாவனையை கொண்ட கதை ஆதலால் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஒண்ணுமே தெரியாத பச்சை புள்ளையாட்டம் மூஞ்சை வச்சுக்கிட்டு வந்தால் என்ன செய்யுறது