புதன், 26 செப்டம்பர், 2012

ஜோதிடம்;விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர் பலன்கள்



விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர் கல்வி கேள்விகளில் தேர்ச்சியுள்ளவராயிருப்பர். பெண்களின் மீது அன்பு வைத்திருப்பார். சற்று முன்கோபம் என்பது இருந்தேயிருக்கும். செல்வவான் என்று பெயர் எடுப்பார். எடுத்த காரியத்தை விரைவுடன் செய்யும் ஆற்றல் உடையவராக இருப்பார். கொஞ்சம் அவசரகுணம் இருந்தேயிருக்கும்.
விருச்சிக லக்னத்திற்கு சூரியனும், சந்திரனும் சுபர்கள். லக்னத்தை சுபர்கள் பார்க்க இவர்கள் 90 வயது வரையில் வாழ்ந்திருப்பார்கள் என்று கூறலாம். சூரியனும், சந்திரனும் கூடினால் பிரபலமான யோகத்தைக் கொடுப்பார்கள். செவ்வாய், புதன், சுக்கிரன் மாராதிபர்கள். குருவும், சனியும் கொல்லமாட்டார்கள். அவ்வாறே புதனும் கொல்லமாட்டார். மாரக ஸ்தானத்தில் பாவிகள் இருந்தால் கஷ்ட கண்டம் ஏற்படும்.

விருச்சிக லக்னத்தார் பணம் முக்கியமில்லை..மரியாதை தான் முக்கியம் என நினைப்பவர்...இவர்களை மதித்தால் போதும்...காரியம் நடக்கும்..கோபம் அதிகம் உண்டு..

விருச்சிக லக்னத்துக்கு சந்திரன் 5,9 ஆம் இடங்களில் அமர்ந்தால் நல்ல வசதி வாய்ப்புகளும் செல்வமும்,செல்வாக்கும்,நிறைய சொத்துக்களும் இருக்கும் என புலிப்பாணி ஜோதிடத்தில் புலிப்பாணி முனிவர் சொல்கிறார்..

இவரது குணத்தை பார்க்கும்போது,பிறரைபற்றி தன் கருத்தை சொல்லும்போதும் கிண்டலும்,கண்டனமும்,அறிவுரை சொல்லும்படியும் இருக்கும்..இவரை எளிதில் ஏமாற்ற முடியாது..ஏமாற்றினாலும் சும்மா விட மாட்டார்..இவரது லக்னத்துக்கு குரு பூர்வபுன்ணியாதிபதி..வாக்குக்கும் அதிபதி எனவே இவர் சொல்வது ,சிந்திப்பது,நினைப்பது,பிறருக்கு சொல்வது பெரும்பாலும் பலிக்கும்..இவரது கணிப்பு பெரும்பாலும் சரியாகவே இருக்கும்.,.தீர்க்கதரிசி என்றே சொல்லலாம்..

இவருக்கு தேவையானபோது பணம் கிடைக்கும்..செல்வாக்கு இருந்தாலும் சந்திரனும்,குருவும் மறைந்தால் மிக துரதிர்ஷ்டசாலியாக வறுமையில் துன்புறுவார்..பணம் இல்லாத பணக்காரனாக இருப்பார்..செல்வாக்கு மட்டும் இருக்கும்..

இந்த லக்னத்தார்க்கு நோய்கள் விரைவில் குணமாகும்...6ஆம் இடமாக சரராசி வருவதால் வரும் நோய்கள் விரைவில் தீரும்..இவர்களுக்கு எப்போதும் எதிரிகள் தொல்லை இருந்துகொண்டே இருக்கும்..மேசம்,ரிசபம் ராசிக்காரர்கள் இவர்களுக்கு நல்ல பார்ட்னர்களாக இருப்பர்..தனுசு,மீனம் இவர்களுக்கு சாதகமான ராசிகளாகும்..

இவருக்கு 10 அதிபதியாக சிம்மம் வருவதால் தந்தை வழி தொழில்,அல்லது அரசு சார்ந்த தொழில் பெரும்பாலும் அமைந்துவிடுகின்றன..அதிகாரம் செய்யும் பணியே இவருக்கு பிடிக்கும்...

1,3,9 இவருக்கு அதிர்ஷ்ட எண்களாகும்..முருகனை வழிபடுவது நன்மை தரும்..திருப்பதி சென்று வருவது நிம்மதி தரும்..





கருத்துகள் இல்லை: