புதன், 24 டிசம்பர், 2014

தனுசு ராசியினருக்கு ஏழரை சனி சோதனை காலமா..? astrology

 astrologer in erode,salem,coimbatore ,tamil astrology ,tamil jothidam ,nalla neram,astrologer sathishkumar,rasipalan,raasipalan,elarai sani,thanusu,mesam

நல்ல நேரம் ப்ளாக்கில் எழுதப்பட்ட இந்த பதிவு மட்டும் 16,000 ஹிட்ஸ் தாண்டி போய்க்கொண்டிருக்கிறது..மொத்த சனிப்பெயர்ச்சி பலன் பதிவுகள் 3 வாரங்களில் 90,000 முறை படிக்கப்பட்டிருக்கின்றன..இந்த பதிவுக்கு மட்டும் 1,100க்கும் மேற்பட்ட பேஸ்புக் நண்பர்கள் லைக் போட்ருக்கீங்க..நன்றி நண்பர்களே..இன்னும் துல்லியமான சனிப்பெயர்ச்சி பலன்கள் மீண்டும் ஒருமுறை எல்லா ராசிக்கும் எழுதப்போகிறேன்...அதில் சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்படும் முக்கியமான 7 ராசியினருக்கு கெடு பலன்கள் எத்தனை சதவீதம்..அப்பலன்கள் நடக்குமா நடக்காதா ,எப்போது நடக்கும் என மறுபடியும் எழுதியிருக்கிறேன்...மற்ற பதிவுகளையும் படித்து பார்க்கவும்.

ஜென்ம சனி,அஷ்டம சனி,பாத சனி, பலன்கள் படிக்க க்ளிக் செய்யவும்



தனுசு ராசியினரின் ஏழரை சனி சோதனை காலமா..? astrology

தனுசு ராசியினருக்கு இப்போது குரு எட்டாம் ராசியில் இருக்கிறது எட்டில் குரு பண வரவுக்கு கெடுதல்தான் ...பணம் தங்குவதில்லை..நிறைய செலவுகள் வந்துகொண்டே இருக்கும் வருமானமே இல்லை செலவு மட்டும் வந்துகிட்டே இருக்கு என புலம்பும் நேரம் இது.குரு ராசியின் அதிபதியும் ஆவதால் தன்னம்பிக்கை குறைந்துபோகும் குழப்பம் அதிகமாக இருக்கும்..

.ராசிக்கு 12ல் சனி வந்துவிட்டதால் தூக்கம் கெடும்...எதிர்காலம் குறித்து பயம் உண்டாகும்...சனி சந்திரனை நெருங்கும்போது என்ன நடக்கிறது என பார்த்தால் சந்திரம் உடல்,மனம் இவற்ருக்கு அதிபதி..சனி முடக்கம் தருபவர் இருள் கிரகம்...சந்திரன் வெளிச்சம் என்றால் சனி இருள்...அப்போ வெளிச்சத்தை குறைத்து இருளை அதிகமாக்குகிறார் என்றுதான் அர்த்தமாகிறது..

ஒளி கிரகம் கெடும்போதுதான் தவறான வழியில் செல்ல நேர்கிறது.. குழப்பம் அதிகமாகிறது..கல்வியில் மந்தம் ,தெளிவான சிந்தனை இல்லாமல் மனம் போன வழியில் செயல்படுவது உண்டாகிறது சுய ஜாதகத்தில் இயற்கையாக சந்திரன் கெட்டவர்களுக்கும், தேய்பிறையில் பிறந்தவர்களுக்கும் ஏழரை சனி சோதனை அதிகமாக இருக்கும்.

ஏழரை சனி கண்டு வளர்பிறையில் பிறந்தவரும்,சந்திரன் பாவ கிரகங்களுடன் சேராதவர்களும் ,சந்திர திசை ,சனி திசை ,சந்திர புத்தி,சனி புத்தி நடக்காதவர்களும் அதிகம் கவலையுற தேவையில்லை..அப்படி நடப்பவர்கள் அதன் காரகத்துவம் எதனை குறிக்கிறதோ அந்த ஸ்தானம் பாதிக்கப்படும்..

குறிப்பாக மேசம் ராசியில் சுய ஜாதகத்தில் சனி இருப்பின் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...விபத்தை உண்டாக்கும்..குருப்பெயர்ச்சியானால் 2015 ஜூன் மாதம் முதல் பணப்பிரச்சினை தீரும்..

நள மகாராஜா ஏழரை சனி முடிந்தபின் திருநள்ளாறு போனாரா..சனி ஆரம்பித்தவுடன் போனாரா....அவர் சனியை வழிபட்டாரா..? தர்ப்பணேஸ்வரரை வழிபட்டாரா என நளதமயந்தி கதை படித்தவர்களுக்கு புரியும்...!!! இப்போது கன்னி ராசிக்காரர்கள் மட்டுமே அங்கு செல்ல தகுதியானவர்கள்.. பணம் பொருள் தேவைப்படுபவர்கள்,நல்ல நிம்மதி கொடுக்கும் பெருமாள் கோயில் சென்று வழிபடுங்கள்....முக்தி ? தேவைப்படுபவர்கள் சிவன் கோயில் போய் வாருங்கள்..எல்லாவற்றையும் போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள்!! ‪#‎thirunallar‬ ‪#‎astrology‬ ‪#‎raasipalan‬
  
வளைகாப்பு ரகசியம்;

கர்ப்பிணி பெண்களுக்கு 7ஆவது மாதத்தில் வளைகாப்பு எனும் சடங்கு நடத்தி பிறந்த வீட்டுக்கு அழைத்து செல்வது நம் மண்ணில் காலம் காலமாக நடக்கும் சம்பிரதாயம்...எல்லா உறவினர்களும் வந்து 7 விதமான அறுசுவை உணவு கொடுத்து ஆசீர்வாதம் செய்யும்போது கர்ப்பிணி உள்ளம் மகிழ்ச்சியக இருக்கும் வயிற்றில் இருக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்..
.அறுசுவை உணவு கர்ப்பிணி சாப்பிடும்போது எல்லாவிதமான சத்துளும் குழந்தைக்கு கிடைக்கும்..மேலும் ஏழு மாதத்துக்கு பின் கணவனுடன் உறவு கொண்டால் குழந்தை வயிற்றில் திரும்பி கொள்ளும்...மூளை வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும் என மருத்துவ நுண்ணறிவோடு நம் முன்னோர் உண்டாக்கிய சடங்குதான் இது..7 வது மாதத்துடன் கணவன் மனைவியை பிரித்து வைப்பது அதற்குத்தான்..
இப்போதெல்லாம் வீண் செலவு என்றெண்ணி அதையும் சிலர் தவிர்க்கின்றனர்..9 வது மாசம் அம்மா வீட்டுக்கு போனா போதும் என நாகரீகம் கருதி தவிர்க்கின்றனர்...‪#‎science‬ ‪#‎medical‬

 கரு உருவாவதற்கு முன்பே தாய், தந்தையரின் உடல் நலம் இவ்வாறு இருந்தால் தான் பிறக்கும் குழந்தைகள் நீண்ட காலம் உடல் மனநலத்துடன் வாழும் என வரையறுத்துத் தந்தவர்கள் நம் முன்னோர்கள்...இன்று அப்படி வழிகாட்ட இப்போதிருக்கும் பெரியோர்கள் முயற்சித்தாலும் பெரியோர்களை பார்த்து நீ என்ன லூசா என்பார்கள் இன்றைய இளசுகள்....!! கருர் சதாசிவம் சித்தர் பெற்றோர்கள் குழந்தை உருவாகும் முன் நம் உடலில் இருக்கும் அனைத்து செல்களும் சுத்தமாக வேண்டும் என எண்ணி பல நூறு கோடி முறை ராம் ராம் என உச்சரித்து திருப்தியான மனநிலை வந்தபிறகே தாம்பத்யம் கொண்டார்களாம்..ஆனா இப்ப கல்யாணம் ஆன உடனே அது ஏன் முதல் இரவு..? முதல் பகல் வைக்க கூடாதா என கொலைவெறியுடன் இருக்கிறார்கள் நம்மாட்கள்!!


ஒருவருக்கு ஆயுள் பத்தி தெரிஞ்சிக்கனும்னா லக்னத்துக்கு எட்டாம் இடத்தை வெச்சி தீர்க்காயுளா என்பதை அறிகிறோம்..அதே போல ஒருவருடைய சொத்துக்களுக்கு அதாவது வீடு நிலம் இவர்ருக்கும் ஆயுள் கணக்கிடலாம்..அதாவது இவருக்கு அந்த சொத்து நிலைக்குமா கைய விட்டு போயிடுமா என பார்க்கும் முறை..இதற்கு 4ஆம் இடத்துக்கு எட்டாம் இடம் பார்க்கனும்...அதுதான் 11 அம் இடம்..அதாவது லாப ஸ்தனம் என சொல்லப்படும் இடம்..
இந்த இடத்தில் சுபர்..அல்லது 11 ஆம் அதிபதி பாவருடன் சேராமல் கெடாமல் பகை,நீசமில்லாமல் இருக்கனும் அப்பதான் அவருக்கு எப்பவும் சுகவாசியாகவும்,ஆரோக்கியமாகவும்,நிறைய சொத்து சேர்க்கைகளும் பெற்று இருப்பார்..
இப்ப கருணாநிதி ஜாதகம் பார்த்தால் அவருக்கு 11 ஆம் இடத்தில் சந்திரன் உச்சம் ஆகி இருக்கும்..அவர் இந்த வயதிலும் ஆரோக்கியமாக செயல்பட இதுவும் ஒரு முக்கிய காரணம்..அதுவும் லக்னாதிபதியே அங்கு இருப்பதால் சொத்துக்கள் வளர்ந்துகொண்டே இருக்கும்.அவருக்கு 4ஆம் இடத்தில் சனி உச்சமும் ஆகி இருக்கும்..‪#‎jothidam‬ ‪#‎astrology‬



2 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

எல்லா ராசிக்கும் விரிவா எழுதுங்க..

'பரிவை' சே.குமார் சொன்னது…

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.