செவ்வாய், 30 ஜூன், 2015

குருப்பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கன்னி

குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கன்னி

உத்திரம் 2,3,4 ஆம் பாதம்,அஸ்தம் 4ஆம் பாதம்,சித்திரை 1,2 பாதங்கள் 

அன்பான ,கலகலப்பான கன்னி ராசி நண்பர்களே..புதனின் ராசியில் பிறந்ததால் அறிவும்,அன்பும்,நிரம்ப பெற்றவர்கள்..தானும் சந்தோசமாக இருக்க வேண்டும் மற்றவர்களையும் சந்தோசப்படுத்த வேண்டும்..என நினைக்கும் உயர்ந்த உள்ளம் படைத்தவர் நீங்கள்..எதற்கும் அலட்டிகொள்ளாமல் ,மற்றவர் பிரச்சினைக்கும் நல்ல ஆலோசனை சொல்வதி கெட்டிக்காரர் நீங்கள்..உங்களுக்கு இப்போது வரப்போகும் குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்..? என பார்ப்போம்..

வாக்கிய பஞ்சாங்கப்படி 5.7.2015 அன்றும் திருக்கணித பஞ்சாங்கப்படி 14.7.2015 அன்றும்  கடக ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார்..உங்கள் ராசிக்கு இதுவரை 11 ஆம் இடமாகிய லாபஸ்தானத்து சென்ற குரு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமாகிய 12 ஆம் இடத்துக்கு வருகிறார்...எது கிடைக்க வேண்டும் என் எதிர்பார்க்கிறீர்களோ அது கிடைக்காது ..யாரை நம்பி இருக்கிறீர்களோ அவரால் நல்ல பலன்கள் கிடைக்காது....வருமானம் குறையும்...கெட்ட பெயர் உண்டாக நிறைய வாய்ப்பிருப்பதால் கொஞ்சம் கவனமா இருந்துகிட்டா தப்பில்லை என்கிறார் குரு.

சென்ற குரு பெயர்ச்சி உங்களுக்கு லாபத்தில் அமர்ந்து சிலருக்கு புது வாகனம்,இடம்,வீடு கட்டுதல் வாங்குதல் போன்ற சந்தோசமான அனுபவங்களை கொடுத்திருப்பார்...இந்த வருடம் அது சம்பந்தமான செலவுகளை,பிரச்சினைகளை உண்டாக்குவார்...12 ஆம் இடத்து குரு அலைச்சல் அதிகம்..பலன் குறைவு...உழைப்பு அதிகம்..நல்ல பெயர் வருமானம் குறைவு...உங்க ராசிக்கு சனியால் எந்த தொந்தரவும் இல்லை..ஏழரை சனியும் எப்பவோ முடிஞ்சிருச்சி...ராசிக்கு குரு அவ்வளவு யோகம் தரக்கூடியவர் இல்லை..அவர் மறைவது ஒரு விதத்தில் நல்லதுதான் என்றாலும் மருத்துவ செலவினங்களை உண்டாக்குவார் என்பதும்,தொழில் நிலையில் ம்ந்தத்தை உண்டாக்குவார் சேமிப்பை கரைப்பார் என்பது ம் கவலை தரும் விசயம்தான்..

ஜாதகத்தில் பாவகிரகங்களின் திசாபுத்தி நடப்போருக்கு போன தடவை என்னத்த லாபகுரு மட்டும் கொடுத்தார்..பின்னி பெடல் எடுத்தார் என புலம்பினால் ,லாபகுருவே ஒன்றும் செய்யாத போது,12ஆம் இடத்து குரு இருமடங்கு மோசமான பலன்களையே தரும்...

ஜாதகத்தில் நல்ல திசாபுத்தி நடந்தால் மட்டும் சமாளிக்கலாம்..இருப்பினும் 12ஆம் இடத்து குரு சுபகாரியங்கள் செய்ய தடங்கல்கள்,தாமதத்தை உண்டாக்கினாலும் 8.1.2016 முதல் 8.5.2016 வரையிலன காலகட்டம் குரு வக்கிரம் என்பதால் அப்போது உங்களுக்கு லாபஸ்தான குரு செயல்படுவார் அது உங்களுக்கு அதிர்ஷ்டமான காலம் என்றே சொல்லலாம்..வருமனம் அதிகம் உண்டாகும் தடைகள்,தாமதம் எல்லாம் உடையும்,சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும்.தொழில் சிறப்பாக நடக்கும்.

முதல் 6 மாத காலங்கள் மட்டும் இந்த குரு பெயர்ச்சி பாதகமாக செயல்படும் எனவே செவ்வாய் அல்லது வியாழக்கிழமையில் முருகன் கோயிலில் நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும் நல்லதே நடக்கட்டும்..

செல்வவளம் உண்டாக

சர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம்  போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது..  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..!!

வெள்ளி, 26 ஜூன், 2015

குருபெயர்ச்சி ராசிபலன் 2015-2016 சிம்மம்

 குருபெயர்ச்சி ராசிபலன் 2015-2016 சிம்மம்

வாக்கிய பஞ்சாங்கப்படி 5.7.2015 ஞாயிறு இரவு 11 மணிக்கு சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார்..திருக்கணித பஞ்சாங்கப்படி 14.7.2015 அன்று செவ்வாய்க்கிழமை காலை 6.23 க்கு குருபகவான் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார் கோயில்களில் வழிபாடு 5ஆம் தேதியன்றே நடைபெறும்.

சிம்மம் (மகம் 4 பாதங்கள்,பூரம் 4 பாதங்கள்,உத்திரம் முதல் பாதம் மட்டும்) 

சிம்மம் ராசி நண்பர்களே..உங்கள் ராசிக்கு இதுவரை குரு 12ஆம் இடத்தில் சஞ்சரித்து வந்தார் இதனால் நீங்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல...ராசிக்கு யோகாதிபதி குரு கெட்டால் சகலமும் கெடும் என்பதற்கேற்ப செல்வாக்கும் சரிந்து,பணமுடக்கம் உண்டாகி,தொழில் மந்தமும் சிலருக்கு வேலை இழப்பும் உண்டானது சிலருக்கு சொத்துக்களை விற்கும் நிலையும் உண்டானது....மருத்துவ செலவுகளாலும் உடல் உபாதைகளாலும் பெரிதும் தவித்து போனீர்கள்..சொந்த பந்தம்,நண்பர்கள் எல்லாம் கைவிட்டு கையறுந்த நிலையில் தவித்தீர்கள்...ஒளிந்திருந்த குரு பகவான் இப்போது அதிக பிரகாசத்துடன் உங்கள் ராசிக்கே வருகிறார்..ஜென்ம குருவில் ராமன் சீதையை பிரிந்தார் .....என உங்களை இன்னும் கதிகலங்க வைக்கும் பழமொழி இருப்பினும் கலங்காதீர்கள் சென்ற வருட மோசம் இந்த வருடம் இருக்காது..


நான்காம் இடத்து சனி பெரிதும் உங்களுக்கு இடைஞ்சலா இருக்குது..சனி விருச்சிகத்துல இருக்கும்போது அது உங்க ராசிக்கு நான்காம் இடம் என்பதால் உங்கள் சுகம் பாதிக்குது,,,இடமாறுதல் உண்டாகுது..வம்பு வழக்குகள் கழுத்தை நெரித்தது..அப்போ குருவால ஒண்ணும் செய்ய முடியல..இப்போ குரு ராசியில் நிற்பதால் குரு பார்வை 5,7,9 ஆம் பார்வை செய்வதால் தெய்வ அருளால் பல சிக்கல்களில் இருந்து மீள்வீர்கள் நீங்கள் செய்த புண்ணியம் உங்களை காக்கும்..செல்வந்தர்கள்,பெரிய மனிதர்கள்,அதிகாரத்தில் இருப்போர் உங்களுக்கு இப்போது பகிரங்கமாக உதவ முன் வருவர்.

ஜென்ம குரு எப்போதும் சிக்கல்தான்.. ஜென்ம குருவினால் ஏதாவது இடற்பாடுகள் வந்து சேரும் என்பது விதி..வீடு மாறுதல்,தொழில் செய்யும் இடம் மாறுதல்,சொத்துக்கள் சார்ந்த வில்லங்கம்,உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினை இருக்கும்..இருப்பினும் முன்பு அதிலிருந்து தப்பிக்க வழி இல்லாமல் இருந்தது இனி வழி பிறக்கும்..ஜென்ம குருவில் பண நஷ்டம்,பெரிதாக ஏமாறுதல் போன்றவை பலருக்கு நடந்துள்ளதால் நீங்கள் எச்சரிக்கையக இருக்க வேண்டும் மற்ற ராசியினருக்கு நடப்பது போலவே ஜென்ம குரு சிம்ம ராசிக்கு நடக்குமா என்றால் நடக்காது காரணம் ராசிக்கு அவர் பஞ்சாமதிபதி...அவர் ராசியில் வலுக்கும்போது ஜென்ம குருவின் பாதிப்புகள் செயல் இழந்துதான் இருக்கும்..அதனால் நீங்கள் தைரியமாகவே இருக்கலாம்...

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் -9.5.2016 முதல் 10.8.2016 வரையிலான காலகட்டம் எச்சரிக்கையாக செயல்படுங்கள் குரு வக்ரமாகி மீண்டும் ராசிக்கு 12ல் மறைந்தால் மிக மோசமான பலன்கள் நடக்கும்...ரகு கேது ,சனி இவர்கள் ஏற்கனவே இடைஞ்சல் கொடுக்கும் நிலையில் குருவும் மறையும்போது பணப்புழக்கம் இருக்காது தொழில் சுறுசுறுப்பாக இருக்காது....உடல் ஆரோக்கியம் சட்டென பாதிப்புக்குள்ளாகும்..அதன் பின் பாதிப்பில்லை..

பரிகாரம் -முருகனை செவ்வாய் தோறும் நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..பிரதோச வழிபாடு செய்து வரவும்


செல்வவளம் உண்டாக

சர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம்  போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது..  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..!!

வியாழன், 25 ஜூன், 2015

குருப்பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கடகம்

குருப்பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கடகம்

வாக்கிய பஞ்சாங்கப்படி 5.7.2015 ஞாயிறு இரவு 11 மணிக்கு சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார்..திருக்கணித பஞ்சாங்கப்படி 14.7.2015 அன்று செவ்வாய்க்கிழமை காலை 6.23 க்கு குருபகவான் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார் கோயில்களில் வழிபாடு 5ஆம் தேதியன்றே நடைபெறும்...

புனர்பூசம் 4அம் பாதம்,பூசம் 4பதங்கள்,ஆயில்யம் 4பாதங்கள் கொண்ட கடகம் ராசி நண்பர்களே...உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமாகிய தன ஸ்தானத்துக்கு குரு வருகிறார்...குருபலம் பெறுகிறார்...கடந்த இரண்டாண்டுகலாகவே பல பிரச்சினைகளில் சிக்கி தவித்த உங்களுக்கு அடிச்சதடா லக்கி பிரைஸ் என துள்ளி குதிக்குமளவு சந்தோசமான பல அனுபவங்களை குருபகவான் தரப்போகிறார்...

குரு தன ஸ்தானத்துக்கு வரும்போது வருமானம் பல வழிகளிலும் வந்து சேரப்போகிறது..கடன்கள் தானாக அடையும் எனவே கடன் பிரச்சினையில் தவிப்போர் கவலைப்பட வேண்டாம்...அதே சமயம் உங்கள் இயல்பான குணமான அகலகால் வைத்தலை தள்ளிப்போட்டு விட்டு கடுமையாக உழைத்து இந்த குரு பலனை சரியாக பயன்படுத்திக்கொண்டால் எதிர்காலத்துக்கு நிறைய சேமிக்க முடியும்..ஜாதகப்படி நல்ல யோகமான திசாபுத்தி நடப்பவர்களுக்கு குருபகவான் அள்ளித்தரப்[போகிறார்...கடினமான திசாபுத்தி நடப்பவருக்கு கிள்ளிதான் கொடுப்பார் அதே சமயம் கஷ்டங்களை குறித்துவிடுவார்..

14.7.2015 முதல் 7.1.2015 வரையான காலகட்டம் நீங்க நினைச்சதெல்லாம் நடக்கும் கேட்டதெல்லாம் கிடைக்கும் உங்கள் நியாயமான நீண்டகால விருப்பங்கள் நிறைவேறும்.இப்போது குரு உங்கள் ராசிக்கு குடும்ப ,தன ,வாக்கு ஸ்தானத்துக்கு வந்திருக்கும் குருபகவான் அங்கிருந்து ராசிக்கு ஆறாமிடத்தையும்,எட்டாமிடத்தையும் ,பத்தாமிடத்தையும் பார்வையிடுவது மிக விசேஷம்..திருமணம் தடங்கலாக இருப்பவருக்கு திருமணம் நடத்தி வக்கிறார் பிரிந்திருந்தோரை ஒன்று சேர்க்கிறார்...கடனில் தவித்தோரை காப்பாற்றுகிறார் உடல்நலன் சரியில்லாதவருக்கு நல்ல சிகிச்சை நடக்கிறது..தொழில் முடக்கத்தால் தவிப்போருக்கு நல்ல வழி பிறக்கிறது..பெண்களுக்கு நகைகள்,சொத்து சேர்க்கைகள் உண்டாகிறது..குழந்தை இல்லாதோர்க்கு குழந்தை பாக்யம் உண்டாகும்..வீடு கட்டி பாதியில் நிற்போருக்கு தடையின்றி பணி முடிந்து கிரகப்பிரவேசம் செய்வீர்கள்...வீட்டில் ஒரு விசேஷம் நடக்கும்..இதுபோல அருமையான யோகமான காலம் இதுவென்றே சொல்ல வேண்டும்..

 வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு வய்ப்பு கதவை தடும்..அரசியலில் இருப்போருக்கும் மக்கள் தொண்டில் இருப்போருக்கும் புதிய பதவி ஒன்று கிடைக்கும்..புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்..கோர்ட் வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்..விரோதமா இருந்த சொந்தங்கள்,நண்பர்கள் ஒன்று சேர்வார்கள்..

புலிப்பாணி முனிவர் இரண்டாமிட குருவை பற்ரி சொல்லும்போது,பொன்,பொருள்,சொத்துக்கள் சேர்க்கை உண்டாகும் காலம் இதுவென்கிறார்...அரசு ஆதாயம் கிடைக்கும்,,,செல்வாக்கு உயரும் என்கிறார்.


எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்;8.1.2016 முதல் 8.5.2016 வரையான காலகட்டம் குரு வக்ரத்தில் இருப்பதால் ஜென்ம குருவின் பாதிப்புகள் இருக்கும்.இக்கலகட்டம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..

பரிகாரம்-திருச்செந்தூர் முருகனை வியாழக்கிழமையில் சென்று தரிசனம் செய்து வரவும்..சித்தர்கள் ஜீவ சமாதி அருகில் இருந்தால் அங்கு சென்று பெளர்ணமியில் வழிபட்டு வரலாம்..

செல்வவளம் உண்டாக

சர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம்  போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது..  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..!!

புதன், 24 ஜூன், 2015

குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 மிதுனம்

குரு பெயர்ச்சி ராசிபலன் 2015 -2016 மிதுனம் ராசிக்கான பலன்கள்

மிருகசிரீடம் 3,4 பாதம்,திருவாதிரை,புனர்பூசம்,1,2,3 பாதங்கள்..

 மிதுனம் ராசியை சேர்ந்த நண்பர்களே....வரும் 14.7.2015 செவ்வாய்க்கிழமை முதல் காலை 6.23க்கு உங்கள் ராசிக்கு 3ல் குரு மாறுகிறார்...இதுவரை குருபலத்துடன் இரண்டாம் இடத்தில் இருந்தார்.. இப்போது மூன்றாம் ராசிக்கு மாறியிருக்கிறார்....

இது பற்றிய புலிப்பாணி முனிவர் எழுதி வைத்துள்ள பாடல்;

’’கேளப்பா குருபதியும் மூன்றிலேறக்
கெடுதி மெத்த செய்வனடா வேந்தன் தானும்
ஆளப்பா அகத்திலே களவு போகும்
அப்பனே அரிட்டமடா சிசுவுக்கேத்தான்’’

என்கிறார்..இதன்மூலம் மூன்ராமிடத்து குரு சிறப்பான நல்ல பலன் தர வழியில்லை என அறிந்திருப்பீர்கள் அதே சமயம் இடி விழுந்தாற்போல துவண்டு விடாதீர்கள்..ஜாதகத்தில் சனி புத்தி,கேது புத்தி,செவ்வாய் அல்லது ராகு புத்தி நடந்தால் மட்டும் மேற்க்கண்ட பலன்கள் நடக்கும்.

பாடல் சொல்லும் முக்கிய விசயம்,அரசாங்கம் அல்லது காவல்துறை,நீதிதுறை மூலம் சிக்கல் வரும் வாய்ப்பு இருக்கிறது...ஏதேனும் ஒரு முக்கியமான பொருள் திருட்டு போக வாய்ப்பிருக்கிறது குழந்தைகள் அல்லது குடும்பத்தில் ஒருவரால் பெரிய மருத்துவ செலவு ஒன்று இருக்கிறது என புரிந்து கொள்ளலாம்..

4க்கு விரயம் 3 என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை..தாய்க்கும் பாதிப்புதான் தாயாரால் மனக்கசப்பு உண்டாகும்..அதிக அலைச்சல் ,தொழில் மந்தம்,வருமான குறைவு உண்டாகும்..கல்வியில் மனததன்மையும் பெண்களுக்கு கணவன் மனைவியால் மனக்கசப்பு உண்டாகும் வாய்ப்பும் அடிக்கடி உண்டாகும் நீங்கள் எப்போதும் யாரையும் சந்தேக கண்கொண்டே பார்ப்பவர்கள் யாரையும் எளிதில் நம்பி விட மாட்டீர்கள்...நான் சொல்வதே நினைப்பதே சரி என வாழ்ந்து வருபவர்கள் நீங்கள்.....ஈச்சமயத்தில் உங்கள் எண்ணங்களையும்,சந்தேகத்தாலும் வீணாக யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள்.. இதன் மூலம் உங்கள் செல்வாக்கு முற்றிலும் இழக்க நேரலாம்..கவனம் தேவை.

3ல் குரு இருப்பதால் சகோதர வழியில் பகை மனக்கசப்பு,மாமனார் வழியில் செலவினங்கள்,பிரச்சினைகள் வரும்.குரு 3ல் மறையும்போது செல்வ வசதிகள் குறையும் அல்லது கரையும்.உடல் உபாதைகள் கூடும் ஏற்கனவே சிகிச்சையில் இருப்பவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.ராசிக்கு 7ஆம் இடத்தை குரு பார்ப்பதால் குருபலன் இல்லாவிட்டாலும் திருமண முயற்சிகள் செய்யலாம் கூடி வரும்.பணப்பற்றாக்குறை இருக்கும். புதிய கடன்கள் உண்டாகுவதற்கும் வாய்ப்புண்டு...ஏற்கனவே கடனில் இருக்கோம் இன்னுமா என திகைக்க வேண்டாம்..திசாபுத்தி மாறினால் கடன்கள் அடைபடும்.

இட மாறுதல்,தொழில் மாறுதல் சிலருக்கு நடக்கும்...சிலர் ஊர் மாறும் வாய்ப்பும் உண்டு வீடு மாற்றம் இருக்கும்...நம்மை பற்றி யாரேனும் குறை சொல்லி கொண்டே இருப்பார்கள் வீட்டுக்கு போனாலும் கசக்கும் அலுவலகத்துக்கு வந்தாலும் கசக்கும் நேரம் இது.குழந்தைகளால் நிம்மதி உண்டாகும்.

வக்ர கதியால் நல்ல பலன்கள்;

குரு பகவான் உங்க ராசிக்கு 3ஆம் இடத்தில் அமர்ந்து தொல்லை கொடுத்தாலும் 8.1.2016 முதல் 8.5.2016 வரை குரு வக்ரமாகி மீண்டும் இரண்டாமிடமாகிய தன ஸ்தானத்துக்கு வந்து யோகத்தை தரப்போகிறார் பண நெருக்கடி தீரும் செல்வாக்கு உயரும்...கடன் தீரும் திருமண முயற்சிகள் கைகூடும்..

பரிகாரம் ;மூன்ராமிடத்து குருவால் துரியோதனன் படை மாண்டது என சொல்வார்கள் சகோதர யுத்தம் வரும் என்பர்....செல்வாக்கு சொல்வாக்கு போச்சு என்பர் எதுவாக இருப்பினும் திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவரை ஒருமுறை தரிசனம் செய்து வாருங்கள் துன்பங்கள் எல்லாம் தீரும் அருகில் இருக்கும் கோயிலில் அடிக்கடி சென்று தீபம் ஏற்றி வாருங்கள் .


செல்வவளம் உண்டாக

சர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம்  போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது..  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..!!

செவ்வாய், 16 ஜூன், 2015

குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 ரிசபம்

குருப்பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 ரிசபம்

கிருத்திகை2,3,4 ஆம் பாதம்,ரோகிணி,மிருகசிரீடம் 1,2 பாதங்களை சேர்ந்த ரிசப ராசி நண்பர்களே...

கடந்த ஒருவருடமாக உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் வரும் 14.7.2015 செவ்வாய்க்கிழமை காலை 6.23க்கு உங்கள் ராசிக்கு நான்காம் இடத்துக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி மாறுகிறார்...இதன் பலன்கள் எப்படி இருக்கும் என பார்ப்போம்..

ரிசபம் ராசிக்கு குரு பகைவர் என்றாலும் அவர் முழுமையான சுபக்கோள் என்பதால் தள்ளிவைத்து விட முடியாது..அவர் மறைந்தால் நல்லதுதான் என்றாலும்,போன வருடம் பல சிக்கல்களையும் இழுபறிகளையும் உண்டாக்கிவிட்டார்...சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினை,வரவேண்டிய பணம் இழுபறி,சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு,சேமிப்பு கரைதல்,புதிய கடன் உண்டாகுதல்,அவமானம்,மன உளைச்சல் ,மருத்துவ செலவினம் என பலரும் சந்தித்திருப்பர்.

இப்போ வரும் குருப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு நான்காம் இடத்துக்கு மாருகிறது..நான்காம் இடம் சுக ஸ்தானம்,சொந்த வீடு,தாயை குறிக்கும் இடம் ...உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்,இடம் வீடு வாங்கும் யோசனை செய்வீர்கள் ,குழந்தைகள் எதிர்காலத்துக்காக பெரும் தொகை ஒதுக்கவோ செலவு செய்யவோ செய்வீர்கள்,..அம்மா சம்பந்தமான ஆரோக்கியம் சம்பந்தமான செலவுகள் செய்ய நேரும்...இளைய சகோதரன் மூலமும்,..மாமனார் வழியிலும்  ஆதாயம் உண்டு... வெளிநாடு பயணம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும்...அலைச்சல் ,ஏமாற்றம் என கடந்த ஒரு வருடமாக அவதிப்பட்ட உங்களுக்கு சுகமும் நிம்மதியும் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும்..சேமிப்பு உயர்ந்தால் புதிய சொத்துக்கள் வாங்கும் நிலையும் உண்டாகும் ..சிலருக்கு கடன் அடையும் ..ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள்..உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துங்கள்..

14.7.2015 முதல் 7.1.2016 வரை உங்களுக்கு பெரிய பாதிப்பு தராத அதிர்ஷ்டமான காலம் என்றே சொல்லலாம்...நாலாம் இட குரு உங்க ராசிக்கு எட்டாம் இடம் பார்வை செய்வதால் அதிர்ஷ்டத்தால் பெரும் பணம் கிடைக்க வாய்ப்புண்டு..ஆயுள் ஸ்தானத்துக்கு பலம் கிடைக்கிறது விபத்துக்கள் தவிர்க்கப்படும்..மனைவியால் ஆதாயம் கிடைக்கும்..கணவன் மனைவி ஒற்றுமை பெருகும்...

ராசிக்கு பத்தாம் இடத்தை குரு பார்வை செய்வதால் தொழில் சிறப்பாக நடக்கும் பணிபுரியும் இடத்தில் மதிப்பும் செல்வாக்கும் உயரும்...சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்...12ஆம் இடத்தை குரு பார்ப்பதால் வங்கி இருப்பு அதிகரிக்கும் கடன் குறையும்...விரயங்கள் கட்டுப்படும்...வீண் செலவுகள் கெட்ட செலவுகள் கட்டுப்பட்டால் சேமிப்பு அதிகரிக்கத்தானே செய்யும்...

8.1.2016 முதல் 8.6.2016 வரை குரு வக்ரமாகி மூன்ராம் இட பலன்களே மறுபடி கொடுத்து சிக்கல் தருவார் அந்த காலம் மட்டும் கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையோடு இருத்தல் நல்லது....பண விரயம்,மருத்துவ செலவு,அலைச்சல்,நஷ்டம் உண்டாக்குவார்...அதன் பின் எல்லாம் சுகமே..

பரிகாரம் -திருப்பதி போயிட்டு வந்து ரொம்ப நாளாச்சுன்னு சொல்றவங்க அங்கு போயிட்டு வருவது ரொம்ப நல்லது....மகாலட்சுமி கோயில் தேடி சென்று வழிபட்டு வருவது திருநாகேஸ்வரம் சென்று வருவது நல்லது ..ஊட்டி,கொடைக்கானல் போறது மட்டுமே யோசிக்காம இப்படி ஆன்மீக டூரும் போயிட்டு வாங்க..குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்..

ஸ்ரீமகாலட்சுமி கலசம் ;

சர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி ஆகியவற்றை பல நண்பர்கள் நம்மிடம் பெற்றனர் அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும் நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.

இப்போது உண்மையாகவே உங்கள் வீட்டுக்கும்,தொழில் செய்யும் இடத்திற்கும் கவசம் போல திகழக்கூடிய ஸ்ரீ மகாலட்சுமி கலசம் உருவாக்கி இருக்கிறோம்..பல கேரள  வீடுகளில் பார்த்து இருப்பீர்கள் வீட்டு முன் மஞ்சள் துணியில் பல மூலிகைகளை ஒன்றாக கட்டி வீட்டு முன் கட்டி திங்க விட்டிருப்பர்..அதே போல செல்வவளம் உண்டாகவும்,தொழில் முடக்கம் நீங்கவும்,வருமானம் அதிகரிக்கவும்,வீட்டில் நிம்மதி உண்டாகவும்,கடன் தீரவுய்ம்,செய்வினை,பில்லி சூனியம் விலகவும் ஸ்ரீ மகாலட்சுமி கலசம் உருவாக்கி இருக்கிறோம்...



பல அரிய மூலிகைகள்,வேர் ரட்சைகள்,சத்ரு சம்ஹார அட்சரம்,தெய்வீக அருள் நிரம்பிய பட்டைகள்,வடக்கு நோக்கி செல்லும் வெள்ளெருக்கு வேர்,மருதாணி வேர் என அதிர்ஷ்டமான மூலிகைப்பொருட்கள் அடங்கிய மஞ்சள் துணியில் கட்டப்பட்ட இதனை வீடு,தொழில் செய்யும் முன் வாசலில் கட்டி தொங்க விடலாம்..கெட்ட சக்திகள் அண்டாது..நல்ல சக்திகள் வீட்டில் குடியேறும்...ஈசானிய மூலையில் தொங்க விடும்போது தெய்வ அருள் அந்த இடத்தில் நல்ல பலன் தரத்துவங்கும்.

இதன் விலை 700 மட்டும்.சர்வ ஜன வசிய எந்திரம் விலை ரூ 700..மூலிகை சம்பிராணி அரை கிலோ ரூ 500 மட்டும்..தேவைப்படுவோர் போன் செய்யவும். முகவரி எஸ்.எம்.எஸ் செய்யவும்... 9443499003 sathishastro77@gmail.com

வங்கி கணக்கு விபரம் ;
k.sathishkumar 20010801181 State bank of India ,bhavani Ifsc;sbin0000971


வெள்ளி, 12 ஜூன், 2015

குரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016 மேசம்

மன்மத வருடம் ஆனி மாதம் 20 ஆம் நாள் 5.7.2015 ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு மகம் நட்சத்திரம் முதல் பாதத்தில் சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார்..இது கோயில்களில் பின்பற்றப்படும் வாக்கிய பஞ்சாங்க தேதியாகும்..

திருக்கணித பஞ்சாங்கப்படி ஆனி மாதம் 29 ஆம் நாள் 14.7.2015 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை  காலை 6.23 க்கு சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார்..

மேசம் ராசி அசுவினி,பரணி,கிருத்திகை முதல் பாதம் வரை பலன்கள்;

அன்பான மேசம் ராசி நண்பர்களே....கடந்த ஒரு வருடமாக மேசம் ராசிக்கு நான்காம் இடத்தில் குரு இருந்தார்..இப்போது ராசிக்கு ஐந்தாம் இடத்திற்கு மாறியிருக்கிறார் ..4ல் குரு இருந்தபோது,அஷ்டம சனியும் உடன் இருந்ததால் மன உளைச்சல்,சொத்து சம்பந்தமான வில்லங்கம்,கடன் வாங்கி வீடு கட்டுதல்,பழுது பார்த்தல்,மருத்துவ செலவுகள்,வாகனம் வாங்குதல் போன்றவை செய்திருப்பீர்கள் ..ஒருசிலர் விபத்தையும் சந்தித்திருப்பார்கள்...செய்யாத தவறுக்கு கெட்ட பெயரும் உண்டாகியிருக்கும்..தொழில் மந்த நிலை வருமான குறைவு இருந்திருக்கும் ...பெருசா எதுவும் செய்யலைங்க..பெருசா எதுவும் கிடைக்கலைங்க..என்பதுதான் பல மேச ராசியினரின் பதிலாக இருக்கும்...

இந்த சூழலில் ராசிக்கு ஐந்தாம் இடம் என்பது குருபலம் ஆகும் இது பனபலம்,செல்வாக்கு பலத்தையும் ,எதிலும் வெற்றி எனும் தடையில்லாத வெற்றியை சொல்கிறது எனவே இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பானதாகும்..நல்லவை பல நடக்கும்.

உங்களுக்கு அதிர்ஷ்ட,யோகமான வீடாகிய சிம்மத்துக்கு குரு வருவது பல பெரிய மனிதர்களின் ஆதரவை கிடைக்க செய்யும்..அதன் மூலம் பல ஆதாயங்களும் கிடைக்கும்...ராசிக்கு ஐந்தாம் இடத்துக்கு வரும் குரு அங்கிருந்து உங்க ராசிக்கு பாக்யஸ்தானம்,லாபஸ்தானம்,ஜென்மராசி ஆகிய முக்கிய ஸ்தானங்களை பார்வை செய்வதால் இவையெல்லாம் பலம் அடையும்...14.7.2016 முதல் 7.1.2018 முடிய நீங்கள் நினைத்தவை தடையின்றி நிறைவேறும் லாபம் இருமடங்காகும்..வரவேண்டிய பனம் வந்து சேரும்..தொழில் மந்த நிலை மாறி சுறுசுறுப்பு உண்டாகும்....

உடல்நலனில் இதுவரை இருந்து வந்த தொந்தரவுகள்,பிரச்சினைகள் தீரும்..நல்ல மருத்துவர் கிடைப்பார்...பாதியில் நிற்கும் வீட்டு வேலைகள் நடக்கும்..திருமண முயற்சிகள் இனி தாமதம் இல்லாமல் நடந்தேறும்..கடன் பிரச்சினைகள் குறையும்..பதவி உயர்வு கிடைக்கும்...வேலைவாய்ப்பு சரியான முறையில் அமையாமல் சிரமப்பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.வெளிநாடு செல்லும் வாய்ப்பும் சிலருக்கு அமையும்.வீட்டில் புதிய ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்..வாகனங்கள் வாங்கலாம்..ஆனால் அஷ்டம சனி நடப்பதால் கவனம் தேவை.

குழந்தைகளுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்..பெண்கள் நினைத்தபடி வேலைவாய்ப்பு பெறுவர் சிலருக்கு அரசு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.தங்கம் சேரும்..பணப்புழக்கம் அதிகரிக்கும்.கணவன் மனைவி ஒற்றுமை பலமடையும்.மேற்க்கல்வியில் இருந்த தடைகள் விலகும்...

வசதி வாய்ப்பு,அந்தஸ்து கூடுதல் ஆவதால் வாடகை வீட்டில் குடி இருந்தவர்கள் சொந்த வீட்டுக்கு செல்லும் வாய்ப்பும்,பழைய பிரச்சினைகள் தீரும் காலமாகவும் இது இருக்கும்.

8.1.2016 முதல் 8.5.2016 வரை காலகட்டம் குரு வக்கிர காலம் என்பதால் இந்த காலம் அவ்வளவு நல்ல பலன் தராது அஷ்டம சனி பலன் கூடுதலாகிவிடும்..எனவே கவனம் தேவை....மீண்டும் 9.5.2016 முதல் 10.8.2016 வரை காலகட்டம் குரு நல்ல பலன்களை கொடுக்க துவங்கிவிடுவார்...லாபஸ்தானம்,ஒன்பதாம் இடத்தை குரு பார்ப்பதால் அரசு உத்யோகத்தில் இருப்பவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பிரச்சினைகள் குறைந்து வேலை பளு குறைந்து வியாபாரம் நல்லபடியாகவே நடக்கும்...நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் காலம் இது..

சிறப்பு பரிகாரம்;நீங்கள் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் உங்கள் குலதெய்வம் கோயில் சென்று 16 விதமான அபிசேகம் செய்து பொங்கல் வைத்து வழிபடவும்...செவ்வாய் தோறும் முருகனை வழிபட்டு வரவும்..
----------

செல்வவளம் உண்டாக

சர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம்  போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது..  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..!!

வியாழன், 11 ஜூன், 2015

குரு பெயர்ச்சி பலன்கள் 14.7.2015-10.8.2016

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள் 2015-2016


மன்மத வருடம் ஆனி மாதம் 20 ஆம் நாள் 5.7.2015 ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு மகம் நட்சத்திரம் முதல் பாதத்தில் சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார்..இது கோயில்களில் பின்பற்றப்படும் வாக்கிய பஞ்சாங்க தேதியாகும்..

திருக்கணித பஞ்சாங்கப்படி ஆனி மாதம் 29 ஆம் நாள் 14.7.2015 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை  காலை 6.23 க்கு சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார்..

இந்த குரு பெயர்ச்சியால் மேசம்,கடகம்,துலாம் ,தனுசு,கும்பம், ஆகிய ஐந்து ராசிக்காரர்களுக்கு மிக மிக நன்மை நடக்கப்போகிறது...ரிசபம்,சிம்மம்,விருச்சிகம் ஆகிய மூன்று ராசியினருக்கு மத்திமமான பலன்கள் கிடைக்கும்..

மிதுனம்,கன்னி,மகரம்,மீனம் ராசியினருக்கு பாதகமான பலன்கள் நடைபெறும்..

பாதகமான பலன்கள் நடைபெறும் என சொல்லப்பட்டிருக்கும் ராசியினர் சோர்ந்து விட வேண்டாம் உங்கள் ஜாதகத்தில் குரு திசை நடைபெறாமல் இருப்பின் குரு புத்தி நடக்காமல் இருந்தால் பாதிப்பு குறைவு...மோசமான திசை புத்தி நடக்காமல் இருந்தால் ஓரளவு நன்மையான பலன்களே நடக்கும் பெரிய கெடுதல் வந்துவிடாது...

மேலும் ஜனவரி 2016ல் குரு வக்கிரம் ஆகி மே மாதம் வரை வக்கிரத்திலேயே இருப்பதால் அந்த காலகட்டம் உங்களுக்கு குரு பெயர்ச்சியால் உண்டாகும் மோசமான பலன்கள் நடக்காது என்பதை நினைவில் வைத்துக்கொண்டால் நிம்மதி உண்டாகும்.

விரிவான பலன்கள் விரைவில் எழுதுகிறேன்....

ஸ்ரீமகாலட்சுமி கலசம் ;

சர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி ஆகியவற்றை பல நண்பர்கள் நம்மிடம் பெற்றனர் அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும் நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.

இப்போது உண்மையாகவே உங்கள் வீட்டுக்கும்,தொழில் செய்யும் இடத்திற்கும் கவசம் போல திகழக்கூடிய ஸ்ரீ மகாலட்சுமி கலசம் உருவாக்கி இருக்கிறோம்..பல கேரள  வீடுகளில் பார்த்து இருப்பீர்கள் வீட்டு முன் மஞ்சள் துணியில் பல மூலிகைகளை ஒன்றாக கட்டி வீட்டு முன் கட்டி திங்க விட்டிருப்பர்..அதே போல செல்வவளம் உண்டாகவும்,தொழில் முடக்கம் நீங்கவும்,வருமானம் அதிகரிக்கவும்,வீட்டில் நிம்மதி உண்டாகவும்,கடன் தீரவுய்ம்,செய்வினை,பில்லி சூனியம் விலகவும் ஸ்ரீ மகாலட்சுமி கலசம் உருவாக்கி இருக்கிறோம்...


பல அரிய மூலிகைகள்,வேர் ரட்சைகள்,சத்ரு சம்ஹார அட்சரம்,தெய்வீக அருள் நிரம்பிய பட்டைகள்,வடக்கு நோக்கி செல்லும் வெள்ளெருக்கு வேர்,மருதாணி வேர் என அதிர்ஷ்டமான மூலிகைப்பொருட்கள் அடங்கிய மஞ்சள் துணியில் கட்டப்பட்ட இதனை வீடு,தொழில் செய்யும் முன் வாசலில் கட்டி தொங்க விடலாம்..கெட்ட சக்திகள் அண்டாது..நல்ல சக்திகள் வீட்டில் குடியேறும்...ஈசானிய மூலையில் தொங்க விடும்போது தெய்வ அருள் அந்த இடத்தில் நல்ல பலன் தரத்துவங்கும்.

இதன் விலை 700 மட்டும்.தேவைப்படுவோர் போன் செய்யவும். முகவரி எஸ்.எம்.எஸ் செய்யவும் 9443499003 sathishastro77@gmail.com

புதன், 3 ஜூன், 2015

அஷ்டம சனி,ஏழரை சனி தோசம் விலக,குருப்பெயர்ச்சி தோசம் நீங்க ராஜவசிய எந்திரம்

சகல செல்வங்களும் பெற... கடன் தீர..தொழில் விருத்திக்கு.....அஷ்டம சனி,ஏழரை சனி தோசம் விலக,குருப்பெயர்ச்சி தோசம் நீங்க ராஜவசிய எந்திரம்

சர்வஜன வசியம் மற்றும் ராஜவசியம் எந்திரம்...பூஜிக்கப்பட்டது...கடன் தீர, செல்வவளம் உண்டாக ,நினைத்த காரியம் தடையின்றி நிறைவேற உருவாக்கப்பட்டது..சித்தர்கள் சொல்லிய முறைப்படி குருவின் வழிகாட்டல்பட கைப்பட எழுதி, தயாரிக்கப்பட்டது தேவைப்படுவோர் விலைவிபரம் அறிய இன்பாக்ஸ் ல் தகவல் தரவும்..உங்கள் ராசி நட்சத்திரம் அனுப்பினால் அதற்கேற்ற்வாறு பூஜித்து அனுப்பப்படும்....தாந்திரீக பரிகாரம் எனும் ஓலைச்சுவடி நூலில் சொல்லியபடி தயாரிக்கப்பட்ட சக்தி வாய்ந்த யந்திரம்..இதன் விலை ஆயிரக்கணக்கில் இல்லை..சில நூறு ரூபாய் மட்டும்..லேமினேசன் செய்யப்பட்டு இரு பக்கமும் ராஜவசிய மந்திரம்,சர்வஜன வசிய மந்திரம் செப்பு தகட்டில் எழுதப்பட்டிருக்கிறது...இதனை வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் தீபம்,தூபம் காட்டி பாக்கெட் அல்லது பர்ஸ்,பீரோவில் வைத்துக்கொண்டால் பணப்புழக்கம் அதிகரிக்கும்...தேவைப்படுவோர் மெயில் செய்யலாம்..sathishastro77@gmail.com

 k.sathishkumar 20010801181 State bank of India ,bhavani Ifsc;sbin0000971 முகவரி கொடுங்க கொரியரில் அனுப்பி விடுகிறேன்.விலை ரூ700 மட்டும்...


ஜோதிட தாந்த்ரீக பரிகாரம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ராஜ வசிய மந்திரங்கள் எழுதப்பட்ட யந்திரம்..இன்னொரு புறம் சர்வஜன வசிய மந்திரம் எழுதப்பட்டிருக்கு..இவை எல்லாம் நம் முன்னோர் வேதங்கள் அடிப்படையில் வசியத்துக்கும் பணப்புழக்கத்துக்கும்,தடைகள் நீங்கி முன்னேற்றம் உருவாக பயன்படுத்திய மாந்த்ரீக யந்திர வழிகள் ஆகும்..

அதன்படி வைகாசி விசாக நாளில் எழுதப்பட்டு உருவேற்றப்பட்டு முருகனுக்கு பூஜித்ததை சில நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் சிறு கட்டண அடிப்படையில் அனுப்பி வைத்திருக்கிறேன்...இதை கொரியரில் பெறும் நண்பர்கள் வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஓரையில் தீப தூபம் காட்டி இதனை உங்கள் பாக்கெட் ,பர்ஸ்,அல்லது பீரோ,கல்லாவில் வைக்கலாம்..பணப்புழக்கம் அதிகரிக்கும்