வியாழன், 22 அக்டோபர், 2015

ஜோதிட சூட்சுமம் ;குருவும்,சுக்கிரனும் செய்யும் மாயங்கள்

அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்...!!

ஜாதகத்தில் 5ஆம் இடத்திலோ 9ஆம் இடத்திலோ குரு இருக்க வேண்டும் அல்லது குரு பார்க்க வேண்டும்..அவர்தான் உண்மையான ஆன்மீகவாதி.சனி ,குரு சேர்ந்திருந்தாலும் குரு, கேது சேர்ந்திருந்தாலும் சனி, கேது சேர்ந்திருந்தாலும்அவர்கள்நிறையபுண்ணியஸ்தலங்களையும்,மகான்களையும் தரிசிக்கும் புண்ணியம் பெற்றவர்கள்..

இவர்களுக்கு முன்ஜென்ம கர்ம வினைகள் பாவ வினைகள் அதிகம் பாக்கி இருக்கிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்..இவர்கள் தான் இப்பிறவியில் சமூக சேவகர்களாகவும்,மக்களுக்கு தொண்டு செய்பவர்களாகவும்,சம்பாதிக்கும் பணத்தை தான தர்மம் செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.வாழ்வில் அதிகம் போராடுபவர்களாகவும்,மகான்களின் ஆசி பெறுபவர்களாகவும் இருக்கிறார்கள்..


வாழ்க்கையில எதை பத்தியும் கவலைப்படாம ஆட்டம்,பாட்டு,கொண்டாட்டம்,என வாழனும்னா..அதுக்கு சுக்கிரன் தான் அதிபதி...ரிசபம்,துலாம் ராசி,லக்ன காரங்க.லக்னத்துல சுக்கிரன் இருக்குறவங்க..பொதுவா ஜாலியானவங்க...தானும் சந்தோசமா இருந்து மத்தவங்களையும் சந்தோசப்படுத்துவாங்க!!
தனுசு,மீனம் ராசியினர் குரு ஆதிக்கம் கொண்டவங்க..நீதி..நேர்மை..எதிலும் ஒழுக்கம் வேணும்...டைமிங் கீப் பண்ண தரலைன்னா எதுக்கு வாழனும் என்பார்..குரு என்பதே தனக்காக வாழாமல் சமூகத்துக்காக வாழ்வது சுக்கிரன் என்றால் தனக்காக மட்டுமே வாழ்வது தன் சந்தோசமே முக்கியம் என வாழ்வது..பிறரை சந்தோசப்படுத்துவது...சுகத்தை கொடுப்பது..அனுபவிப்பது..

குருவும்,சுக்கிரனும் எவ்வளவு வித்தியாசப்படுகிறார்கள்..

உச்சமன்ற நீதிபதி என்றால் குரு கெடாமல் இருக்கனும்...தனுஷ் போல ஷாருக்கான் போல வாழனும்னா சுக்கிரன் கெடாமல் இருக்கனும்.சுக்கிரன் பணத்தை தருவார்..ஆனா அந்த பணத்தை எப்படியெல்லாம் செலவு செஞ்சு ,சந்தோசமா இருக்கலாம் என்ற அறிவை புதன் தான் தருவார்..

வித்தியாசமா யோசிச்சு ,அந்த ஐடியாவை பிக்கப் செஞ்சு பணக்காரன் ஆனவங்கதான் இந்த உலகத்துல அதிகம்.அதுக்கு காரணகர்த்தா புதன்.புதன் கெட்டுப்போனா ஒரே மாதிரி செக்கு மாடு வாழ்க்கைதான்.குரு கெட்டுப்போனா கூறுகெட்டவன்.எதை எப்போ யார்கிட்ட எப்படி பேசனும்..எதை எப்போ எப்படி செய்யனும் என்ற அறிவு இருக்கனும் குரு கெட்டவனை ஊரில் ஒருத்தரும் மதிக்க மாட்டார்..

புதன் கெட்டவன் வசியம் இல்லாதவன்..அவர் வாழ்வில் சுவாரஸ்யம் இருப்பதில்லை...சுக்கிரனும்,புதனும் நன்றாக இருந்தால் நிறைய சம்பாதித்து சந்தோசமாக இருக்கலாம்...!!

திங்கள், 12 அக்டோபர், 2015

அன்னதானம் /annadanam




அன்னதானம் ;annadanam;

வருடம் தோறும் ஆடி,புரட்டாசி,தை அமாவாசைகளில் ஆதரவற்ற குழந்தைகள்,முதியவர்கள்,உடல் ஊனமுற்றோர்க்கு அன்னதானம் செய்து வருகிறோம்.இந்த வருடமும் புரட்டாசி மகாளயபட்ச அமாவாசைக்கு ,ஆதரவற்றோர்க்கும் ,கண்பார்வையற்றோர்க்கும் அன்னதானம் செய்தோம்.ஆதரவளித்த நண்பர்களுக்கு நன்றி!








வெள்ளி, 9 அக்டோபர், 2015

புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை அன்னதானம் மகிமை

திங்கள் கிழமை 12.10.2015 புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை;

சிறப்பு வாய்ந்த அமாவாசைகள் ஆடி,தை,புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசையாகும்.சில குடும்பங்களில் ,வழிவழியாக யார் இறந்தாலும் அவர்களுக்கு திதியோ ,தர்ப்பணமோ அவர்களை நினைத்து வருடாந்தர பூஜையோ செய்ய மாட்டார்கள்.இப்போது இருக்கும் தலைமுறை நல்ல வேலை நல்ல சம்பளம் இருக்கு..கடவுளை எதுக்கு கும்பிடனும் என நினைப்பது போல சில குடும்பத்தினர் நல்ல வசதி இருக்கு.அவங்களை கும்பிட்டு என்னாக பொகுது என விட்டுவிடுவர்.முன்னோர்களை நினைத்து வருடத்தில் ஒருநாள் திதி கொடுத்து வழிபட்டால் ,அவர்கள் ஆசி உங்களுக்கும் உங்கள் சந்ததிக்கும் கிடைக்கும்.ஞாயிறு ,திங்கள் இரண்டு நாளும் கொடுக்கலாம் .புனிதமான புரட்டாசி அமாவாசையில் அன்னதானம்,ஏழைகளுக்கு உதவி செய்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும்.பலன் பலமடங்காகநமக்கு கிடைக்கும்.

வருடம் தோறும் செய்வது போல இந்த வருடமும் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்ய இருக்கிறேன்..இணையும் நண்பர்கள் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்கிறேன்.வெளிநாட்டில் இருப்போர் முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாதோர் என்னை தொடர்பு கொள்ளவும்.sathishastro77@gmail.com