தமிழ் புத்தாண்டு துன்முகி ராசிபலன் 2016; கடகம்
கடகம் ராசியில் பிறப்பதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும்..ராமர் பிறந்த ராசி என்பது மட்டுமல்ல..சந்திரனின் ஒரே ராசி கடகம்....அன்பு,பாசம்,நேசம்,காதல் என மனித உணர்வுகளை வகைப்படுத்தி இருக்கிறோம்..இந்த அத்தனை உனர்வுகளையும் சரியாக வெளிப்படுத்த தெரிந்தவர்கள் கடகம் ராசியினர்தான்...கொடுத்து சிவந்த கரம் என கடகம் ராசியினரை சொல்லலாம் ...கொடுப்பதில் வள்ளலாக இருப்பதால் இந்த ராசியில் பலர் நம்பியவர்களால் ஏமாற்றமும் அடைந்து இருப்பர்.ஆனாலும் நண்பன் தானே என சட்டுன்னு விட்டுக்கொடுக்கும் குனம் இவர்களை தவிர யாருக்குண்டு...
இந்த ராசியில் புனர்பூசம் குருவின் நட்சத்திரம்.....பூசம் சனியில் நட்சத்திரம்..ஆயில்யம் புதனின் நட்சத்திரம்....என அமைந்துள்ளது...அறிவு,உழைப்பு,செல்வாக்கு மூன்றும் சமமாக கடகம் ராசியில் அமைந்திருக்கிறது...நிறைய மகான்கள்,சித்தர்கள் ,பிரபலங்கள் பிறந்த ராசியாக கடகம் இருக்கிறது...தலைமை பதவி,அரசியல் செல்வாக்கை இதில் பிறந்தோர் சீக்கிரம் அடைந்துவிடுகிறார்கள் ..இந்த ராசியில் பிறப்பதின் சூட்சுமம் மக்கள் பணி,மக்கள் தொண்டு,இறை தொண்டு செய்வதுதான்..
கடகம் ராசிக்கு அஷ்டம சனி ,ஏழரை சனி பிரச்சினைகள் எதுவும் இல்லை...சிம்மத்தில் இப்போது குரு இருப்பதால் குருபலமும் இருக்கிறது...உங்களுக்கு தனாதிபதி சூரியன் இந்த சித்திரை முதல் உச்சம் அடைகிறார்..அதுவும் தொழில் ஸ்தானத்தில் என்பதால் பணி புரியும் இடத்தில் தொழில் முன்னேற்றம்,வருமானம் உயர்வு,பல வித லாபங்கள் வந்து சேரும்...அரசாங்க ஆதரவும் கிடைக்கும் ....
உங்கள் பூர்வபுண்ணியாதிபதி செவ்வாய் விருச்சிகம் ராசியில் ஆட்சி பெற்று இதுவரை தடைகளாக இருந்த அனைத்தையும் உடைத்து உங்களுக்கு வெற்றிகளை தேடி தரப்போகிறார்..அரசுப்பணி,வங்கித்தேர்வுகள் எழுதி காத்திருப்போருக்கு வெற்றிகள் கிடைக்கும்
இந்த வருடம் நிறைய கடக ராசியினருக்கு சொத்துக்கள் வாங்குதல்,காலி மனை வாங்குதல்,வீடு கட்டும் யோகம் உண்டாகும் திருமனம் ஆகாதவர்களுக்கு திருமணம் நல்லபடியாக நினைதது போல அமையும்.....உயர்கல்விக்காக மாகள் வெளிநாடு செல்லும் யோகத்தையும் நீர் ராசியில் இருக்கும் செவ்வாய் ஏற்படுத்தி தருவார் ..செவ்வாய் ஆட்சி பெற்று ஏழு மாதங்களுக்கு இருக்கப்போவதால் கடக ராசி பெண்களுக்கு நகைகள் புதிதாக வாங்கும் யோகம் உண்டாகும் அடகு வைக்கப்பட்ட நகைகள் மீட்கும் யோகமும் ,கடன் அடைபடும் நல்ல சூழலும் உண்டாகும்..
பாக்யாதிபதி,தனாதிபதி வலுத்திருப்பதால் பெரிய மனிதர்களுடன் தொடர்புகள் புதிதாக உண்டாகி அவர்கள் மூலம் பெரிய காரியங்களை சுல்பமாக சாதிப்பீர்கள்...
குருபெயர்ச்சி ஆகஸ்ட் மாதம் வருகிறது தைரிய ஸ்தானத்துக்கு குரு போனதும் சிலருக்கு விரும்பிய இடமாறுதலும்,சிலருக்கு சொந்த வீட்டுக்கு குடியேறும் யோகமும் உண்டாகும்..
மகான்களை வழிபடுதல்,முருகனை செவ்வாய் தோறும் வழிபடுதல்,அறுபடை வீடுகளில் ஒன்றை நேரில் சென்று தரிசித்தல் உங்களுக்கு சிறந்த பரிகாரமாகும்..
சித்ரா பெளர்ணமி அன்னதானம்;
சித்திரை மாதத்தின் பெரும் சிறப்பு,
சித்ரா பெள்ர்ணமி தினமாகும்..புராணக் கதைகளின்படி, மனிதர்களின் பாவ,
புணணியக் கணக்குகளை எழுதும் சித்ர குப்தன் அவதரித்த நாளும்
இன்றுதான்....அன்று நாம் செய்யும் புண்ணிய காரியங்கள் பல ம்டங்கு
பலன்களை கொடுக்கும்...
சித்ரா பெளர்ணமி வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி
வருகிறது.. அன்று உடல் ஊனமுற்றோர் ,ஆதரவற்ற முதியோர்கள்,குழந்தைகளுக்கு
வழக்கம் போல அன்னதானம்,ஆடைதானம் செய்ய இருக்கிறோம்..இணைந்து செய்ய
விரும்புவோர், மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும் sathishastro77@gmail.com
cell;9443499003
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக