தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;தனுசு
மூலம்,பூராடம்,உத்திராடம் 1ஆம் பாதங்களை கொண்ட தனுசு ராசி நண்பர்களே..
குருவின் சொந்த வீட்டை ராசியாக கொண்டவர் நீங்கள்..குருவின் அருளாசி நிரம்பியவர்.குரு செல்வாக்கு,கெளரவம் கொடுப்பார்...ஊரார் மதிக்கும் அளவு திரமைகளை கொடுப்பார் முக்கியமாக அன்பு,கருணை,மனிதாபிமானம்,இரக்கம்,கடவுள் பக்தியை அதிகம் கொடுப்பார்...மூலம் அனுமனின் நட்சத்திரம் இவர்கள் இன்னும் ஒரு படி மேலே கடவுள்,ஆன்மீகம்,சித்தர்,மந்திரம் என வாழ்வார்கள்...பூராடம் சுக்கிரன் நட்சத்திரம் என்பதால் உல்லாசம்,கேளிக்கையில் அதிக நாட்டம் கொண்டிருப்பர்...உத்திராடம் அரசு சார்ந்த துறை,அரசியல்,மக்கள் செல்வாக்கு,கோயில் தலைமை பதவிகள்,பெற்று நேர்மை,நியாயம்,ஒழுக்கத்துடன் வாழ்வார்கள்..
தமிழ் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு பாக்யாதிபதி சுரியம் பூர்வபுண்ணியத்தில் உச்சம் பெறுவது சிறப்பன யோகம் தரும் நினைத்த காரியம் தடையின்றி முடியும்...தந்தை வழி ஆதாயங்கள், கிடைக்கும் பூர்வீக சொத்து வில்லங்கம் தீரும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் குழந்தைகளால் பெருமை உண்டாகும்...சொத்துக்கள் வாங்கும் யோகமும் சிலருக்கு கிடைக்கும்..திருமண சுபகாரியங்கள் பேச்சு தடைகள் விலகி ,திருமணம் கூடி வரும் பணத்தட்டுப்பாடு நீங்கும்...தொழிலில் இருந்து கசப்பான நிலை மாறி உய்ர்வு உண்டாகும்..
உங்கள் ராசிக்கு குரு ஒன்பதாம் இடம் பாக்யத்தில் இருப்பது சிறப்பான இடமாகும்...இதுவரை பெறாத ஒன்றை ஆகஸ்ட் மாதத்துக்குள் பெறுவீர்கள் ..அது சிலருக்கு வீடாக இருக்கலாம் சிலருக்கு குழந்தை பாக்யமாக இருக்கலாம். சிலருக்கு திருமணமாக இருக்கலாம் ..பதவி உயர்வாக இருக்கலாம் ..ஒரு பாக்யம் நிச்சயம் கிடைக்கும்...
அசையா சொத்துக்கள் மூலம் பெரிய லாபம் ஒன்று கிடைக்கும்.கஷ்டங்கள்,சிக்கல்கள் நீங்கி மதிப்பு மரியாதை உண்டாகும்..உங்கள் ராசி அதிபதி குரு சிம்மத்தில் இருக்கிறார் அவர் நின்ற வீட்டு அதிபதி சூரியன் மேசத்தில் உச்சம் ஆகிறார் ...இது சிரப்பான ராஜயோகம் என்பதால் வரும் குருப்பெயர்ச்சிக்கு முன் ஒரு சந்தோசம் தரும் அதிர்ஷ்டம் உண்டாகும்.அரசியல்,அரசுப்பணிகளில் இருப்போருக்கும் வியாபாரம்,தொழிலில் இருப்போருக்கும் பொன்னான காலமாக இருப்பதால் சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
விரய சனி ஆரம்பித்ததும் ஒரு மருத்துவ செலவை தந்தது...இந்த வருட கடைசியில் குடும்பத்தில் இன்னொரு மருத்துவ செலவையும் தரும் அது வீட்டில் இருக்கும் முதியவர்களுக்காகவும் இருக்கலாம்...சனி விரயத்தில் இருப்பதால் நிரைய பணம் வந்தாலும் உங்கள் பாக்கெட்டில் தங்குவதில்லை..அப்படி இருப்பதும் நல்லதுதான் நீண்ட கால முதலீட்டை செய்து விரயத்தை சுப விரயமாக மாற்றிக்கொள்ளவும் ..கடன் வாங்கி வீடு கட்டி தவணை கட்டி வந்தாலும் விரய சனி பாதிப்பு அதில் நீங்கிவிடும்..
அலைச்சல்,நீண்ட பயணத்துக்கு குறைவிருக்காது வேலைப்பளு அதிகமாக இருக்கும்..பிரமோசன் கொடுத்து வேலைப்பளுவையும் குரு,சனி கொடுத்து விடுகிறார்கள்...எந்த காரியமானாலும் சனியால் காலதாமதம் உண்டாகும். இது ஏழரை சனியால் உண்டாகும் தாமதம் ஆகும் ஏழரையில் கடுமையாக உழைத்தால் பாதிப்பு இல்லை.
சனிக்கிழமை அனுமனை வழிபடுதல் நல்ல பலன் தரும்..
1 கருத்து:
Nice thanks sir
கருத்துரையிடுக