செவ்வாய், 8 மே, 2018

ராஜயோகம் தரும் ஜாதகம்


குருவுக்கு   கேந்திரத்தில்   செவ்வாய்  இருந்தால்     குரு  மங்கள  யோகம்  ஏற்படுகிறது  .
இதனால்   பூமி யோகம்  , மனை  யோகம்   , அசையாத   சொத்துக்கள்     சேரும்   அற்புத   யோகம்    யாவும்  உண்டாகும் .


 . சூரிய  பகவான்  3 , 6 , 11  ல்   இருக்கும்  போது   அபரிதமான   ராஜ யோகம்  ஏற்படுகிறது  .
சூரியன் 7 ல்   இருக்கும்    போது   களத்திர தோஷம்  ஏற்படும் .
சூரியன்  5  ல்   இருக்கும்  போது    புத்திர தோஷம்   ஏற்படும் .
சூரியன்   3  ல் இருக்கும்  போது   சகோதர  தோஷம்  ஏற்படும் .

. கால சர்ப்ப  தோஷத்தால்   பாதிக்கப்பட்ட   ஜாதகர்  சர்ப்ப  சாந்தி   செய்வதன்  மூலமும்  ,    நவக்கிரக   ஹோமம்   செய்வதன்  மூலம்   ராகு  , கேது   தோஷம்  அனைத்தும்   விலகும் .

 .  ஒருவருடைய  வீடு   வளமாக   இருக்க   தென்கிழக்கு   திசையில்  சமையல்  அறை  , தென் மேற்கு  திசையில்    படுக்கை அறை  , வட  கிழக்கில்   பூஜை  அறையும்  ,  கன்னி  மூலை  , உயர்ந்து  , ஈசான்யம்  வளர்ந்து  காணப்பட்டால்   வீட்டில்   வளமாக  வாழலாம் .

 . ஜாதகத்தில்  ஒரு  கிரகத்தின்  காரகத்துவம்  மற்றும்  கிரகம் ஏற்றுள்ள  ஆதிபத்தியத்தின்    தன்மைகளைத்   தராவிடாமல்   முழுமையாகத்   தடுக்கும் .( )  குறைக்கும்  ஆற்றல்  நவகிரகங்களில்    இராகுவிற்கு   மட்டுமே   உண்டு   என்று  அறியும்  .

 .   ஜாதகத்தில்   இராகுவிற்கு   8  எட்டு   டிகரிக்குள்  நெருக்கும்  கிரகம்  இராகுவினால்   சுத்தமாக  பலவீனமாக்கப்பட்டு   தனது  இயல்புகள்  அனைத்தையும்   பறி  கொடுத்துவிடும் .


அதாவது  அதிக  ஒளியையும்  , ஒளியே  இல்லாத   இருட்டையும்  நெருங்கும்    கிரகங்கள்   தங்களின்   சுய  தன்மையை  இழப்பார்கள்  .

 .   ஜாதகத்தில்   இராகுவிடம்  மிக  நெருங்கும்   குரு  பகவான்  
குழந்தைகளையும்   , அதிகமான   பண  வசதியையும்  , நேர்மையான   குணத்தையும்  ஆன்மிக  ஈடுபாட்டையும்   தரும்  சக்தி  அற்றவர்   ஆவார்

. இராகுவிடம்  நெருங்கி இணையும்  சுக்கிர  பகவான்  பெண்  சுகத்தையும்  , உல்லாசத்தையும்  ,    காதல்   அனுபவம்  மற்றும்   சுக வாழ்வு  தர மாட்டார் .

.  செவ்வாய்  பகவான்  தன்  இயல்புகளான  கோபம் , வீரம் , வெறித்தனம்  கடின மனம்  சகோதரம்  போன்றவற்றை   இழப்பார் .

   .      இராகுவிடம்  இணையும்   சனியால்   (   சரணடையும் )   சனியால்  வறுமை , தரித்தரம்  , கடன் , நோய்  , உடல்   ஊனம் போன்றவறைத்  தர  இயலாது  .

 . சந்திரன்   மனத்திற்கும்   , மனம்  எடுக்கும்  முடிவுகளுக்கும்  காரணமானவர்  என்பாதால்  இராகுவிடம்  நெருங்கும் போது  மனத்தைக்  கட்டுபடுத்தும் ஆற்றலை  ஜாதகர்   இழந்து   மன நலம்  குன்றுவார் . தாயன்பு  பரிபோகும் .



 .  இராகு  புதனுடன்  இணையும் போது    நிபுணத்துவம்  குறையும்  அறிவாற்றல்  அளவோடுதான்   இருக்கும் .
கணிதத்  திறமை  காணாமல்  போகும் .

. இராகு  சூரியனுடன்  இணையும்  போது  அரசுத் தொடர்பு , அரச லாபம் , தந்தையின்   ஆதரவு  போன்றாவற்றைத்  தரும்  வலிமையை  இழப்பார் .

 . ஒரு  கிரகம்  உச்சம் , மூலத்திரிகோணம்  , ஆட்சி  போன்ற  எத்தகைய   வலிமை  நிலையில்  இருந்தாலும்   சரி  , அது   இராகுவுடன்  மிகவும்   நெருங்கினால்   அத்தனை  வலிமையையும்  இழக்கும் .

.   ஒரு  கிரகம்   ஒரு  ராசியில்   ராகுவுடன்   குறிப்பிட்ட   டிகரி இடை வெளி தள்ளி   இணையும் போது   அந்த   சுப    கிரகங்களின்   இயல்பை   ராகு  பகவான்  பெற்று   தனது  திசையில்   அந்த    கிரகங்களின்  காரகத்துவம்  மற்றும்   ஆதிபத்திய  பலனைத்  தருவார்  .

 .   அதே  போல்  பாபக்  கிரகங்களுடன்   இணைந்த ராகு   அவர்களின்   கெட்ட  காரகத்துவங்களை   தனது  திசையில்   பிரதிபலித்து  கஷ்டங்களுக்கு  உள்ளாக்குவார் .
குறிப்பாக   சனி  , செவ்வாயின்   பார்வைப் பெற்ற ராகு   தன்  திசையில்   நல்ல  பலன்களை  செய்வது   கடினம்   சனி  , செவ்வாய்   லக்னம்  சுபர்களாக   இருந்தாலும்   கஷ்டங்களை  கொடுத்து  விடுவார் .




கருத்துகள் இல்லை: