வியாழன், 19 டிசம்பர், 2013

குரு வக்கிர பூஜைக்கான பரிகார விபரம்..விருச்சிகம்,மீனம்,துலாம்

குரு வக்ரத்திற்காக பாதிக்கப்பட்ட ராசியினருக்காக பரிகாரம் செய்வதாக  சொன்னீர்கள் அது பற்றி விவரம் தேவை என போனில் கேட்ட சில நண்பர்களுக்காக;அது சம்பந்தமான முழு விவரம் அறிய எந்தெந்த ராசியினருக்கு பாதிப்பு என அறிய இந்த பதிவை படிக்கவும்

வரும் 25.12.2013 அன்று புதன்கிழமை தேய்பிறை அஷ்டமியாகவும் வருகிறது அன்று காலபைரவருக்கு சிறப்பு பூஜை பவானி கூடுதுறையில் செய்யலாம்..என நினைக்கிறேன்..தட்சிணாமூர்த்திக்கு குரு ஓரையில் ஒரு பூஜை....பிறகு 150 ஊனமுற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு....இதுதான் எனது வக்ர பூஜைக்கான திட்டம்..இதில் கலந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள் பூஜை செலவு மற்ரும் அன்னதான நன்கொடையை அனுப்பலாம்..அப்படி அனுப்புபவர்கள் .நீங்கள் உங்கள் குடும்பத்தார் பெயர் ராசி நட்சத்திரம் குறிப்பிட்டு என் மெயிலுக்கு அனுப்பவும்...வங்கி கணக்கு விபரம் அதில் குறிப்பிட்டு அனுப்புகிறேன்...தொகை எவ்வளவு குறைவாக இருப்பினும் பரவாயில்லை...உங்கள் பங்களிப்பும் இருக்கட்டும்..அவ்வளவுதான்...நன்றி
மெயில்;sathishastro77@gmail.com இது பற்றி விவரம் அறிய என்னிடம் பேச 9443499003

குரு வக்கிரம் என்ன செய்யும்..? மேசம்,ரிசபம்,துலாம்,விருச்சிகம்,சிம்மம்,தனுசு,மீனம்

மாசி மாசம் 21 தேதி வரை குரு வக்கிரமாக இருக்கிறது .. துலாம்,விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கும் மேசம், ,ரிசபம் ராசியில் பிறந்தவர்களுக்கு எதிர்மறையான பலன் நடக்கும்.. அதிக பண நெருக்கடி ,தொழில் நெருக்கடி உண்டாகும் என்றால் இதற்கான பரிகாரம் என்ன என பலர் கேட்டிருக்கின்றனர்..மீனம் ராசியினருக்கும் தனுசு ராசியினருக்கும் பாதிப்புதான் ...காரணம் ராசிநாதன் குரு வக்கிரம் ஆகி இருக்கிறாரே..பிரச்சினை கடுமையாகதான் இருக்கும்..காரணம் குருதான் செல்வாக்கு..குருதான் வருமானம்...இந்த இரண்டும் பாதிக்கும் செல்வாக்கு இழப்பு என்றால் கெட்டபெயர் அவமானம் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமை...அது மட்டுமில்லாமல் குரு வக்கிரம் ஆகும் போது எதிர்பாராத மருத்துவ செலவும் குடும்பத்தில் துக்க காரியமும் உண்டாகும் குருபலம் இருந்தால் நல்ல செலவு குருபலம் இல்லாவிட்டால் கெட்ட செலவுதானே..?

 குரு வக்கிரம் ஆகி இருப்பதால் சிம்மம் ராசிக்கும் அதிக பாதிப்புகள் உண்டு..அதனால்தான் முதல்வர் ஜெயலலிதா கோயில் யானைகளை புத்துணர்வு முகாம்க்கு அனுப்பி இருக்கிறார் ..யானை குருவின் அம்சம் அல்லவா..சிம்மம் ராசியினர் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்..

இதற்கு என்ன பரிகாரம்..? உங்க ஊரில் இருக்கும் முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்யுங்கள்..குரு என்றால் மரியாதைக்குரியவர்கள்,மூத்தவர்கள்,வயோதிகர்களை குறிக்கும்...

அவர்களில் குறிப்பாக முதியோர் இல்லத்தில் இருப்போருக்கு மன வருத்தம் இருக்கும் தன்மேல் அன்பு செலுத்த யாரும் இல்லைன்னு....அவங்களுக்கு சுவையான உணவு கொடுத்து ஆசி பெறலாம்..காதுகேளாத வாய் பேச முடியாத குழந்தைகள் குரு கெடுவதால் ஏற்பட்ட பாதிப்பில் பிறந்தவர்கள் அவர்களுக்கு அன்னதானம் செய்து சந்தோசப்படுத்தலாம்...அங்கு செய்ய முடிந்தவர்கள் செய்யலாம்...நான் இங்கு சில வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களுக்காக வரும் வியாழன் அன்று முதியோர் இல்லம் மற்றும் காதுகேளாத வாய்பேச முடியா குழந்தைகளுக்கு அன்னதானம் செய்யவிருக்கிறேன் ..மற்றும் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகளும் செய்ய இருக்கிறோம்..தனியாக சிறப்பு ஹோம பூஜை செய்யலாம் என நினைக்கிறேன்...நண்பர்கள் விருப்பத்தை பொறுத்து சிறப்பாக செய்யலாம்...பூஜையில் ஒவ்வொருவர் குடும்ப அங்கத்தினர் விவரம் சொல்லி பூஜிக்க இருக்கிறோம்... அதிலும் கலந்துகொள்ளலாம்..உங்கள் அர்ப்பணிப்பை செய்யலாம்...மற்ற விவரங்களுக்கு இன்பாக்ஸ் வரவும்...அல்லது மெயில் sathishastro77@gmail.com செல்லிலும் 9443499003 தொடர்பு கொள்ளலாம்..

பரிகாரம் பற்றியும் அன்னதானம் பற்றியும் முழு விபரம் அறிய புதிய பதிவை படிக்க இங்கு க்ளிக் செய்யவும் 

கொழுப்பு சம்பந்தமான நோய்களை தீர்ப்பது எப்படி? health

இப்போ எல்லாம் டாக்டர்கள் ,தேங்காய் சட்னி சாப்பிடாதீங்க..தேங்காயை உணவில் சேர்த்துக்காதீங்க..கொழுப்பு என்கிறார்கள்...இது ஒரு செம காமெடி..தேங்காய் உலகத்திலேயே மிகச்சிறந்த ஒரு உணவு..கோயில்களில் பிரசாதமாக தேங்காயும் பழமும் கொடுக்கிறார்கள்...கெட்ட கொழுப்பு பொருளை கடவுள் பிரசாதமாக தரும் அளவுக்கு நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல...

தேங்காயில் உடலுக்கு தேவையான அனைத்து தாது பொருட்களும் இருக்கின்றன....பழங்காலத்தில் எந்த நோயாக இருந்தாலும் பனங்கருப்பட்டியையும் ,தேங்காய்ப்பாலையும் தான் வைத்தியர்கள் கொடுப்பார்கள்..சுக்கு ,கருப்பட்டி சேர்ந்த அந்த கலவை மற்றும் தேங்காயை பிழிந்து எடுக்கப்பட்ட பாலுக்கு எந்த நோயையும் முறித்து குணமாக்கும் சக்தி உண்டு....அஜீரணம்தான் அனைத்து நோய்களுக்கும்
அடிப்படை...தேங்காய் அதை இல்லாமல் செய்வதால்தான் சமையலில் அது இல்லாமல் எந்த உணவும் தமிழர் உணவில் இல்லை.....

தேங்காய் கெட்ட கொழுப்பு அல்ல..நல்ல கொழுப்பு..மிருகங்களில் இருக்கும் கொழுப்பும் தேங்காயில் இருக்கும் கொழுப்பும் ஒன்றல்ல...உலகில் சுத்தமான நீர் தேங்காயில் இருக்கும் நீர்தான்..முன்பெல்லாம் சாககிடக்கும் தாத்தா,பாட்டிகளுக்கு தேங்காய்ப்பால் கொடுத்து பிழைக்க வைப்பார்கள்..இப்போது எல்லாம் மாட்டுப்பால் கொடுத்து சாகடிக்கிறார்கள்....தேங்காய் அதிகம் சாப்பிட்டால் மட்டுமே கொழுப்பு சம்பந்தமான அனைத்து நோய்களும் தீரும் என்பதே உண்மை..!!

புதன், 18 டிசம்பர், 2013

கல்யாணம் சீக்கிரம் நடக்க எந்த கோயில் போகலாம்..? ஜோதிட பரிகாரம்

கல்யாணம் ஆகலையா...உடனே திருமனஞ்சேரி போயிட்டு வராங்க..நாக தோசம் இருக்குன்னா காளஹஸ்தி போறாங்க..அதெல்லாம் சரி....ஆனா இன்னும் நுணுக்கமான திருமண தடை நீக்கும் பரிகாரம் இருக்கு...முருகன் மனைவியுடன் இருக்கும் பழைய கோயிலில் வழிபடுங்க...அப்புறம் அகத்தியர் சிவபெருமானை கல்யாண கோலத்தில் தரிசனம் செய்த பழமையான கோயில்கள் மாவட்டம் தோறும் இருக்கு அங்க போயிட்டு வாங்க...குறிப்பா ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர்..ரொம்ப விசேஷம்..காவிரி கரையில் தீர்த்த கிணருகள் சூழ மும்மூர்த்திகளும் அருளும் ஸ்தலம்..அப்பர்,சுந்தரர்,திருஞான சம்பந்தர் பாடிய ஸ்தலம்..பல மன்னர்கள் கோயிலை புதுப்பிச்சிருக்காங்க..காசிக்கு நிகரானது...

சனீஸ்வரர் காகம் மேல் உட்கார்ந்திருப்பது இந்தியாவில் இங்கு மட்டும்தான்..!! மகுடேஸ்வரர் என்பதால் இந்த சிவனிடம் நிறைய சூட்சுமங்கல் இருக்கின்றன..வேலை பறிபோனவர்கலும் இங்கு வழிபட்டால் மகுடம் மீண்டும் சூடப்படுவார்கள்...3000 வருடம் பழமையன வன்னி மரத்தின் கீழ் பிரம்மா இருக்கிறார் ரோகிணி நட்சத்திரம் ரிசப ராசியினர் வழிபட எல்லா பிரச்சினையும் தீரும் வெள்ளைத்தாமரை வைத்து 27 நெய் தீபம் ஏற்றி வணங்க வேண்டும்...ஸ்ரீரெங்கம் பெருமாள் போல சயன கோலத்தில் இருக்கும் பெருமாளை வழிபட சம்சார வாழ்வின் சோதனைகள் விலகும் கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்..

ஜாதகத்தில் 7ஆம் இடத்தில் சனி அல்லது சூரியன் என கடுமையான தோசம் இருப்பவர்கள் பவானி கூடுதுறையில் சிறப்பு பரிகாரம் செய்த பின் கொடுமுடி செல்வதே நல்லது...பரிகாரம் செய்தாலும் செய்பவர் ராசியான அய்யராக இருக்கனும் உங்க நட்சத்திரத்துக்கு தாரபலன் இருக்கும் நாளாக இருக்கனும்...பரிகாரம் செய்தவர் பல கல்யாணங்களை நடத்தி வைத்தவராக இருக்கனும்..உங்க ஜாதகப்படி இப்போ திசாபுத்தி தடையில்லாம இருக்கனும்...அதுக்கு விளக்கமாக தெரிஞ்சிக்க என் மெயிலுக்கு எழுதுங்க..விரிவா சொல்றேன்...பரிகாரம் செய்வதாக இருந்தா மட்டும் எழுதவும் sathishastro77@gmail.com


சனி, 7 டிசம்பர், 2013

ஃபேஸ்புக் ஜோதிடம் facebook astrology

ஃபேஸ்புக்கில் நான் எழுதிய ஜோதிட குறிப்புகள்;

எனது ஃபேஸ்புக் ஐடி...சதீஷ்குமார்ஜோதிடர்

நடப்பு டிசம்பர் கடைசியில் வால் நட்சத்திரம் தோன்ற போகிறது இது 60,70 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அதிசயம்...வால் நட்சத்திரம் தோன்றினால் நாட்டின் அரசியல் தலைவர்கள் உயிருக்கு ஆபத்து என்ற நம்பிக்கை பல முறை நிஜமாகி இருக்கிறது...லால்பகதூர் சாஸ்திரி இறந்ததும் வால் நட்சத்திரம் தோன்றிய காலம்தாம்..மூத்த அரசியல் வாதிகளில் தென்னகத்தை சேர்ந்தவர்கள்,மற்றும் தேசிய அரசியல் தலைவர்களில் ஒரு சிலருக்கு இது கண்டமான காலம் என சொல்லலாம்...இன்னும் சில குறிப்புகள் நாளை மற்றும்,திங்கள்கிழமை விரிவாக பார்ப்போம்

 உங்கள் ஜென்ம நட்சத்திரத்துக்கு யோகமான நட்சத்திர காலில் நின்று திசை ஜாதகத்தில் நடப்பவர்கள்தான் வேகமான முன்னேற்றத்தை அடைகிறார்கள்..மிதுன லக்னம்..குரு பாவி ஆச்சே...குரு திசை நடக்குது..உனக்கு மரண கண்டம் வாசல்ல நிற்குது..ன்னு ஒரு ஜோசியர் சொன்னார்..ன்னு ஒருவர் கலக்கமுடன் வந்தார்...பூசத்தில் நின்று குரு திசை நடக்குது..நீங்க வீடு கட்டுவீங்கன்னு சொன்னேன்...கண்டம் இல்லைன்னு சொன்னேன்...ஒரு வருசத்துக்கு முன்னாடி சொன்னது..இன்னிக்கு பழத்தட்டுகளுடன் வந்து சந்தோசமாக நீங்க சொன்ன மாதிரியே நடந்துச்சி..வீடு கட்டிட்டேன் என்றார்...ஜாதகத்தில் கிரகம் எப்படி இருப்பினும் திசை யோகமாக இருந்தால் சிறப்பு...எம்.ஜி.ஆர்..ரஜினிக்கெல்லாம் யோகமான ஜாதகம்தான்..ஆனா 30 வயது வரை கஷ்டம்தான்..யோகமான திசை வந்தபின் தான் வேகமான முன்னேற்றம் அடைந்தார்கள்...

 கோயிலுக்கு போனால் நட்சத்திரம் பெயர் சொல்லிதான் அர்ச்சனை செய்து கொள்கிறோம் ஒரு ராசிக்கு மூன்று நட்சத்திரங்கள் வருவதால் ஜென்ம நட்சத்திரம் முக்கியம்..மிருகசிரீடமும் ரிசபம் ராசிதான்..ரோகிணியும் ரிசப ராசிதான் ஆனால் இருவருக்கும் வித்தியாசம் உண்டு..ஜென்ம நட்சத்திரம் அடிப்படையில் யோகமான நாளை தேர்ந்தெடுப்பது அவசியம்..இதைதான் நம் முன்னோர்கள் கடைபிடித்தனர்..ராமாயணத்தில் ராமரே தனது புனர்பூசம் நட்சத்திரத்துக்கு நல்ல நாள் தேர்ந்தெடுத்துதான் போரும் புரிந்திருக்கிறார்....இப்போது எல்லாம் முகூர்த்தம் வளர்பிறையில் அமைந்தால் போதும் என முடிவு செய்கிறார்கள்..ஜென்ம நட்சத்திரத்துக்கு அது உகந்ததாக இல்லாவிட்டால்தான் கஷ்டமும் நஷ்டமும் தான் வந்து சேரும்...!!