வியாழன், 23 ஜனவரி, 2014

உங்கள் மகன்/ மகள் கல்வியில் நல்ல மதிப்பெண் பெற என்ன வழிபாடு? மந்திரம்? ஜோதிட பரிகாரம்

சென்னிமலை முருகன் கோயில் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மிக உகந்த ஸ்தலம்..ரத்த அழுத்தம்,நீரிழிவு நோயாளிகள் இங்கு வழிபட்டால் விரைவில் நோய் குறையும் ..உங்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை கிடைத்து நோயின் தாக்கம் குறையும்..காங்கேயம் சிவன்மலை முருகன் குருவின் அம்சம்.,..கல்வியில் முன்னேற்றம் அடைய இந்த முருகனை வழிபட்டால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்..வெளிநாடு வேலைக்கு செல்ல முயற்சிப்பவர்கள் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க விரைவில் வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும்!!

கல்வியில் நல்ல மதிப்பெண் பெற ஜாதகத்தில் லக்னத்துக்கு இரண்டாம் இடத்தில் சுபர் இருக்கனும் 4ல் சுபர் இருக்கனும் குரு,புதன் கெடாமல் பாவிகளுடன் சேராமல் இருக்கனும்...2,4ல் கேது இருக்க கூடாது புதனுடன் கேது சேரக்கூடாது.குரு திசையோ புதன் திசையோ படிக்கும் காலத்தில் நடந்தால் அக்குழந்தைகள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள்.

அருகில் இருக்கும் முருகன் கோயிலில் வியாழன் தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்...அம்மா மட்டும் விழுந்து விழுந்து சாமி கும்பிட்டா போதாது மகன் மகளையும் அப்படி பழக்கனும்..அவனுக்கு சாமின்னாலே பிடிக்காது நீயே கும்பிடுன்னு எரிஞ்சு விழுவான் என சில பெற்றோர் பெருமையாக சொல்வார்கள்...இது தப்பு ..சின்ன வயதில் இருந்து நாம் பழக்கவில்லைஎன்று அர்த்தம்.அவன் இஷ்டத்துக்கு இன்று அவனை விடும்போது நாளை அவன் தன்னை யார் கேட்பா என துணிச்சலை கொடுத்துவிடும்.

முருகன் கோயில் அல்லது அரசு வேம்பு இணைந்து இருக்கும் வினாயகர் கோயிலில் உங்கள் குழந்தையை தினசரி காலையில் 3 முறை வலம் வந்து வழிபட்டு பின் படிக்க சொல்லுங்கள்..இது தேர்வு நேரத்தில் கூட செய்யலாம் இதனால் மனதில் தன்னம்பிக்கையும் அதிகரித்து மனதில் பயம் குறையும்...கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்..அரச மரமும் வேப்பமரமும் குருவின் அம்சம்..குரு ஞானம் எனும் கல்வியை கொடுக்கும் கிரகம்.கடவுள் பார்த்துப்பார் என்ற நம்பிக்கை வந்தால் உங்கள் மகன் பதட்டமில்லாமல் தேர்வு எழுதுவான்... நல்ல மதிப்பெண்ணும் பெறுவான்..


தை அமாவாசைக்கு அன்னதானம் வழங்க ,ஏற்பாடுகளை செய்ய ஆதரவற்ற பார்வையற்றோர் காப்பகம் சென்றேன் ...வயதான முதியவர்களும் நிறைய இருந்தனர் ...அங்கிருந்த ஒரு பாட்டிக்கு தின்பண்டம் கொடுத்தபோது உள்ளே ஒரு பாட்டி படுத்திருக்கும் அதுக்கும் கொடு தம்பி என தன் தோழி மீதான பாசத்தை காட்டிய போது நெகிழ்ச்சியாக இருந்தது ...!பாசக்காரங்க எல்லாம் தனிமையில் வாடுவது கொடுமை ..அங்கிருந்த 40 முதியோர்களுக்கும் தின்பண்டம் கொடுத்துவிட்டு பேசிவிட்டு வந்தேன் ...மனசு லேசாக இருந்தது.....தை அமாவாசை அன்னதானம் பங்களிக்க விரும்புவோர் மெயில் செய்யலாம் sathishastro77@gmail.com

புதன், 22 ஜனவரி, 2014

கடன் தீர்க்க,கடன் முற்றிலும் அடைபட, ஒரு ஜோதிட பரிகாரம் கடன் அடைக்க நல்ல நேரம்

வாங்கிய கடனை அடைக்க முடியாமல் துன்பப்படுபவர்கள் இன்று அதிகம் இருக்கிறார்கள்..ஜாதகத்தில் லக்னத்துக்கு 6 ஆம் அதிபதி எட்டாம் அதிபதி திசை நடந்தாலோ அல்லது இவர்களது நட்சத்திரத்தில் நின்று எந்த கிரகமாவது திசை நடந்தாலோ கடன் பிரச்சினை அதிகம் உண்டாகிறது 

வருமானம் இல்லை என்றால்தான் கடன் நெருக்கடி அதிகமாகிறது வருமானம் ஏன் இல்லை..? தொழில் மந்தம்...வருமானம் போத
வில்லை சம்பலம் குறைவாக இருக்கிறது என்பதுதான் காரணம்.ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி 6ஆம் ராசியில் இருந்தால் வட்டி கட்டவே வருமானம் சரியாக இருக்கும்.

உங்களுக்கு கடன் பிரச்சினை இருந்தால் ,செவ்வாய் கிழமை வட்டி கட்டுங்கள் அஷ்டமி நாளில்,கரி நாளிலும் வட்டி கட்டலாம்...சீக்கிரம் கடன் அடையும்.வெள்ளிக்கிழமை,வியாழக்கிழமை கட்ட வேண்டாம் நெருக்கடி உண்டாகும் கடனும் அதிகமாகும்.

இந்த மாதத்தில் எந்த நாளில் நேரத்தில் பணம் கொடுத்தால் கடன் சீக்கிரம் தீரும் என குறித்திருக்கிறேன்.கடனில் ஒரு பகுதியையோ, வட்டியையோ இந்த நேரத்தில் முடிந்தவரை கட்ட பாருங்கள்..

ஜனவரி 25 சனிக்கிழமை மாலை 3 முதல் 4 மணி வரை....வங்கி என்றால் காலையில் கட்டலாம் தவறில்லை.

ஜனவரி 28 செவ்வாய் கிழமை 2 மணி முதல் 3 மணிக்குள்

பிப்ரவரி 1 சனிக்கிழமை 12 மணி முதல் 1மணிக்குள்

பிப்ரவரி 3 திங்கள்கிழமை 12 முதல் 1.30க்குள்

பிப்ரவரி 8 சனிக்கிழமை 12 மணிமுதல் 1 மணிக்குள்

மேற்க்கண்ட நாளை கடன் அடைக்க பயன்படுத்துங்கள்..

சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் லட்சுமி நரசிம்மரை எலுமிச்சை மாலை அணிவித்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வனங்கினால் மனமுருக வேண்டினால் கடன் சீக்கிரம் தீரும்.

செவ்வாய், 21 ஜனவரி, 2014

முன் ஜென்மத்தில் பாவம் செய்தோர் யார்..?ஜாதகத்தில் கண்டறிவது எப்படி..? ஜோதிடம்

30.1.2014 அன்று தை அமாவாசை வருகிறது...மாதம் ஒருநாள் சிறப்பு வாய்ந்த நாளாக தமிழ்மாதத்தில் வரும்...சித்ரா பெள்ர்ணமி,வைகாசி விசாகம்,ஆவணிஅவிட்டம்,புரட்டாசி மகாளயபட்சம்,கார்த்திகை தீபம்,என தமிழ் மாதங்களில் ப்[எள்ர்ணமியை ஒட்டி வரும் நட்சத்திரங்கள் சிறப்பான புண்ணிய நாட்களாக நம் முன்னோர்கள் கொண்டடி வந்திருக்கின்றனர் தான தர்மங்கள் செய்து தம் பாவ கணக்குகளை தீர்த்து புண்ணியங்கள் சேர்த்துள்ளனர்...

ஜாதகத்தில் லக்னத்துக்கு 5ஆம் ராசியில் சனி,ராகு,கேது,செவ்வாய்,சூரியன் போன்ற பாவ கிரகங்கள் இருப்பின் முஞென்மம் பாவங்கலை குறிக்கிறது இதனால் இப்பிறவியில் போராட்டமும்,காரியதடையும்,அடுக்கடுக்கான சோதனைகளும் உண்டாகிறது அவர்கள் இந்த நேரத்தில் தான. தர்மங்கள் செய்யலாம்..கர்மவினை தீரும்.வரும் தை அமவாசையில் கண் பார்வையற்றோர் இல்லத்துக்கு அன்னதானம் வழங்க இருக்கிறேன்..முடிந்தால் நீங்களும் இணைந்துகொள்ளலாம்..

உங்கள் பங்களிப்பை அளிக்க விரும்புவோர் தொடர்புகொள்ள;sathishastro77@gmail.com
 mob;9443499003

பாவங்களை போக்கும் தை அமாவாசை அன்னதானம் 2014

தை அமாவாசை அன்னதானம்;

நண்பர்களே...வரும் தை அமாவாசை அன்று கண் பார்வையற்றோர் காப்பகம் ஒன்றிற்கு அன்னதானம் செய்ய நினைக்கிறேன்..நண்பர்கள் பங்களிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும் தை அமாவாசை மிக சக்தி வாய்ந்த நாள்..அன்று சித்தர்கள் வழிபாடு மிக சிறப்பு வாய்ந்தது...அன்றைய தானம் தர்மம் உங்கள் வாழ்வில் பெரும் திருப்புமுனையை உண்டாக்கும்..

சென்ற முறை நம் அன்னதானத்தில் கலந்து கொண்ட பலர் சார் நான் அனுப்பியது சின்ன தொகைதான்..ஆனால் அதன்பின் எனக்கு பெரிய லாபங்கள் கிடைத்தன..நான் எதிர்பார்த்த உதவி கிடைத்தது...எனக்கு நல்லது சில நடந்தன..என போனில் தெரிவித்தனர் ..அதுதான் நான் உங்களுக்காக செய்யும் உதவியில் பெரும் மகிழ்ச்சி...பல முஞென்ம வினைகள் அன்னதானம் செய்வதால் தீர்கின்றன..இதனால் உங்கள் வாழ்வில் பல முட்டுக்கட்டைகள் விலகி வழி பிறக்கிறது!! தானத்தில் சிறந்தது அன்னதானம் மட்டுமே...

அன்னதானம் அளிப்பதால்,உங்கள் கடும் நெருக்கடிகளை தீர்க்கும்....கூட்டுமுயற்சியுடன் செய்யும் போது பலருக்கும் ஒரே சமயத்தில் செய்ய இயலும் கூட்டு பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உண்டு...உங்கள் பாவங்களையும் தீர்க்கும்..அன்று கொங்கு மண்டலத்தில் இருக்கும் 108 சித்தர்களின் தலைவராகிய தம்பக்கலை எனும் சித்துவில் தலை சிறந்தவராகிய தம்பிக்கலை அயன் கோயில் சிற்ப்பு வழிபாடும் அர்ச்சனையும் செய்ய இருக்கிறேன் உங்கள் குடும்பத்தார் விபரங்களையும் அனுப்பலாம்..பூஜிக்கப்படும்..என்னுடன் இணைந்து அன்னதானம் செய்ய விரும்புபவர்கள், உங்கள் நன்கொடைகளை அனுப்பலாம்..அன்னதானத்துக்கு பயன்படுத்திக்கொள்ளப்படும்.30.1.2014 தேதி அன்று அன்னதானம் மற்றும் தம்பிக்கலையான் கோயிலில் உங்கள் குடும்பத்தார்க்கு அர்ச்சனை பூஜை செய்யப்படும்..தொடர்பு கொள்ள 9443499003 mail;sathishastro77@gmail.com 

k.sathishkumar
state bank of india
bhavani 
20010801181
ifsc;sbin0000971

திங்கள், 20 ஜனவரி, 2014

யாருக்கு குழந்தை பாக்யம் இருக்காது..? ஜோதிடம்

மனைவி அமைவது மட்டுமல்ல.. குழந்தை பிறப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான்...குழந்தை இல்லாமல் கோயில் கோயிலாக சுற்றுபவர் பலர் இருக்க ,ஆண் குழந்தை வேண்டும் என கோயில் கோயிலாக சுற்றுபவர்களும் உண்டு.
ஒரு ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் தான் விந்தணு எனும் உயிர் அணுக்களுக்கு அதிபதி அவர் கெடாமல் பகை கிரகங்களுடன் கூடாமல் இருப்பது அவசியம் பெண் ஜாதகத்தில் பாக்ய ஸ்தானத்தில் ராகு கேது செவ்வாய் சூரியன் போ
ன்ற கிரகங்களில் யாரேனும் இல்லாமல் இருக்க வேண்டும் ..ஆண் ஜாதகத்தில் 5ஆம் இடத்தில் கேது,செவ்வாய் ,சனி இவற்றில் ஒருவர் இல்லாமல் இருப்பது நல்லது.அப்படி இருப்பினும் 5ஆம் அதிபதி,குரு,சுக்கிரன் கெடாமல் இருப்பது அவசியம்...

கெள்சிக சிந்தாமணி எனும் பழைய ஜோதிட நூலில் ஒரு பாடல் குழந்தை பாக்யம் பற்றி கீழ்க்கண்டவாறு சொல்கிறது.

சத்தம தானத்தாதி சஷ்டாஷ்ட விரையஞ் சார்ந்த
மெத்த ஐந்திடத்திற் காரி மேவிடிலதுவும் தீது
சுத்தமாய் மண்முடிக்கில் சுதனிலை என்று வேத
வித்தகம் தனக்கு உண்மை விரும்பிகோசிகன்
                                                                       உரைத்தேன்

சூட்சும விதிப்படி ஒளி இழந்த கிரகம் ஐந்தில் இருந்தாலும் ஒளி இழந்த வீட்டில் ஐந்தாம் அதிபதி நின்றாலும் ஐந்தாம் வீட்டில் சனி நின்றாலும் ஏழாம் அதிபதி பலம் இழந்தாலும் தவமாய் தவமிருந்தாலும் புத்திர பேறு கிடைக்காது.

தை அமாவாசை அன்னதானம்;

நண்பர்களே...வரும் தை அமாவாசை அன்று கண் பார்வையற்றோர் காப்பகம் ஒன்றிற்கு அன்னதானம் செய்ய நினைக்கிறேன்..நண்பர்கள் பங்களிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும் தை அமாவாசை மிக சக்தி வாய்ந்த நாள்..அன்று சித்தர்கள் வழிபாடு மிக சிறப்பு வாய்ந்தது...அன்றைய தானம் தர்மம் உங்கள் வாழ்வில் பெரும் திருப்புமுனையை உண்டாக்கும்..உங்கள் கடும் நெருக்கடிகளை தீர்க்கும்.....உங்கள் பாவங்களை தீர்க்கும்..அன்று கொங்கு மண்டலத்தில் இருக்கும் 108 சித்தர்களின் தலைவராகிய தம்பக்கலை எனும் சித்துவில் தலை சிறந்தவராகிய தம்பிக்கலை அயன் கோயில் சிற்ப்பு வழிபாடும் அர்ச்சனையும் செய்ய இருக்கிறேன் உங்கள் குடும்பத்தார் விபரங்களையும் அனுப்பலாம்..பூஜிக்கப்படும்..அத்துடன் உங்கள் நன்கொடைகலையும் அனுப்பலாம்..அன்னதானத்துக்கு பயன்படுத்திக்கொள்ளப்படும்.30.1.2014 தேதி அன்று அன்னதானம் பூஜை செய்யப்படும்..தொடர்பு கொள்ள 9443499003 mail;sathishastro77@gmail.com 

k.sathishkumar
state bank of india
bhavani 
20010801181