வெள்ளி, 5 செப்டம்பர், 2014

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்

பலருக்கும் கண் திருஷ்டியில் நம்பிக்கை கிடையாது...நம்பிக்கை இருப்பவர்களுக்கு இந்த தகவலை பகிர்கிறேன்..
இல்லாதவன் இருப்பவனை பார்த்து பெருமூச்சு விடுவதும்..ஏக்கப்பார்வை பார்ப்பதும்,கண்களால் கண்டு பொறாமைப்படுவது கண்பார்வை திருஷ்டி எனப்படும்...கிராமங்களில் இதனை எப்படி கழிக்கிறார்கள் என பார்ப்போம்..
சிலர் கல் உப்பு கொஞ்சம் எடுத்து 3 முறை சுற்றி ஓடும் தண்ணீரில் போடுவார்கள்..பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வேஷ்டி துணி சிறிது கிழித்து திரி செய்து திரியை தலை முதல் கால் வரை வலது புறம் தடவி மற்றொரு திரியை இடதுபக்கமாக தடவி அதனை சுவர் ஓரமாக வைத்து எரிய விடவும்...குழந்தை அழாமல் தூங்கி விடும்.

குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோசம் நீங்க,தெருமண் கொஞ்சம் எடுத்து கடுகு,உப்பு,மூன்று மிளகாய்,எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும்..இது கண் திருஷ்டியை போக்கும் இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்வார்கள்..

நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும்,கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும்,கண் திருஷ்டி விலகவும் வீட்டு வாசலில் பெள்ர்ணமியில் நீர் பூசணி கட்டி தொங்கவிடலாம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் காலை 9 மணிக்கு கற்றாழை கட்டி தொங்கவிடலாம்...வாசலுக்கு மேல்...ஒரு எலுமிச்சை,ஒரு பச்சை மிளகாய் என மார்ரி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொங்கவிடலாம்...செவ்வாய் கிழமையில் இதை செய்யலாம்..!! சிலர் படிகாரக்கல்,வெள்ளெருக்கு வேர்,மருதாணிக்கட்டை சேர்த்தும் தொங்க விடுவர்...

மூன்று வயது குழந்தை வரை கன்னத்தில் கறுப்பு பொட்டு வைத்துவிடுவர்..இதுவும் கெட்ட கண் பார்வையை தடுக்கும்...நாமும் வெளியே செல்லும்போது கறுப்பு பொட்டு சிறிது வைக்கலாம்..அந்த கறுப்பு பொட்டு ஹோம குண்டத்தில் எடுக்கப்பட்ட சாம்பலாக இருக்க வேண்டும் அதனை நெய்யில் கலந்து இட்டுக்கொள்ள வேண்டும்...வீட்டு நிலையில் வெள்ளி தோறும் மஞ்சள் சிறிது பூசி குங்குமம் இடவேண்டும்..இது நோய்கிருமிகளை அண்டாமல் பாதுகாப்பது மட்டுமில்லாமல் கண் திருஷ்டியையும் போக்கும்....

வியாழன், 4 செப்டம்பர், 2014

வேண்டியது வேண்டியபடி கிடைக்கச்செய்யும் கோயில்கள்

சூரிய ஒளி சுவாமி சிலை மீது வருடத்தின் குறிப்பிட்ட நாளில் நேரத்தில் விழுவது போன்ற நுணுக்கமான கட்டிடக்கலை அமைப்பு உலகில் வேறு எங்கும் இல்லை..நம் தமிழகத்தில் முன்னோர்கள் அப்படி பல கோவில்களில் வடிவமைத்துள்ளனர்..அப்படிப்பட்ட கோயில்களில் சூரியன் கர்ப்பகிரகத்தில் ஒளிப்பாய்ச்சும் மாதத்தில் அந்த ஆலயம் சென்று வழிபட்டால் வேண்டியது வேண்டியபடி நடக்கும்....கிருஷ்ணகிரி புதுப் பேட்டை வடக்கு மாடவீதியில் ஸ்ரீ ஞானராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 1ம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு அம்மன் மீது சூரிய ஒளி படும் அதிசயம் நடந்து வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பின்னத்தூர் கிராமத்தில் ராமநாத ஈஸ்வரன் கோவில் உள்ளது. மிக பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் மூலவர் மீது சூரிய ஒளி நேரடியாக படும் நிகழ்வு நடைபெறும்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த செல்லபிராட்டியில் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி தேவியர் ஒரே உருவமாய், லலிதா செல்வாம்பிகையாக அருள்பாலிக்கின்றனர். கருவறையில் உள்ள அம்மன் சிலை மீது, ஒவ்வொரு ஆண்டும், தட்சணாயண காலத்தில், மூன்று நாட்களும், உத்ராயண நாட்களில் மூன்று நாட்களும், சூரியஒளி நேரடியாக பாயும்.உத்ராயண காலத்தில் சூரியஒளி, காலை, 6:35 மணி முதல், 6:39 மணி வரை, ராஜகோபுர வாசல் வழியாக, சூரியஒளி அம்மன் மீது விழுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீதும் வருடத்தில் குறிப்பிட்ட நாளில் மூலவர் மீது சூரிய ஒளி படுகிறது...

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் வரலாற்று சிறப்புமிக்க பக்த ஜனேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. சுந்தரர் கயிலையில் பெற்ற சாபம் நீங்க அரூரராக அவதரித்த இத்தலத்தில் சிவன் சுயம்புவாக காட்சியளிக்கிறார். நவக் கிரகங்களில் ஒன்றான சூரியன் இத்தலத்தில் ஈசனை நோக்கி (மேற்கு திசை நோக்கி) பங்குனி மாதம் 23 முதல் 27-ம் தேதி வரை வழிபட்டுள்ளார். அதனால் இந்த தேதிகளில் பக்த ஜனேஸ்வரர் (சிவன்), மனோன்மணி அம்பாள் (பார்வதி) ஆகியோர் மீது காலை சூரிய உதயம் படுவது ஒர் அற்புதமான நிகழ்வாகும்.

திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது. சூரியன் வழிபட்டதலமாதலின், மாசிமாதம் 13, 14, 15-ஆம் நாள்களில் மாலையில் 5 . 45 மணிமுதல் 6 . 10 மணிவரை சூரிய ஒளி சுவாமிமீது படுகிறது..

கொடுமுடி மகுடேஸ்வரர் சன்னதியில் ஆவணி மாத கடைசியிலும்,பங்குனி மாத கடைசியிலும் சூரிய ஒளி மூலவரை தரிசனம் செய்யும்...

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பின்னத்தூர் கிராமத்தில் ராமநாத ஈஸ்வரன் கோவில் உள்ளது. மிக பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் மூலவர் மீது சூரிய ஒளி நேரடியாக படும் நிகழ்வு நடைபெறும்.

அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோவில், ஆயக்குடி ,திருநெல்வேலி மாவட்டம்.
இது மிகவும் பழமையானதும் சக்தி வாய்ந்ததும் ஆன கோவில் ஆகும். இது 1900 வருடம் பழமை வாய்ந்தது. இந்த கோவிலின் சிறப்பு அம்சம் என்னவென்றால், சித்திரை மாதம் பிறந்தவுடன் ஒரு வாரத்திற்கு மூலவரின் மீது சூரியனின் ஒளி பாய்ந்து வெளிச்சம் தருவது அதிசயமாக கருதப்படுகிறது. மற்ற நாட்களில் இங்கு சூரிய ஒளி வருவதில்லை.

 தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி பிப்ரவரி 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களில் சூரியன் மறைவதற்கு முன் 5..45 முதல் 6.10 வரை விழும்

 மலையப்பாளையம் உதயகிரி முத்துவேலாயுதசுவாமி சித்திரை 15,16,17 தேதிகளில் விழும் அதனாலேயே அவருக்கு உதயகிரி என பெயர் வந்ததாக திருக்கோவில் வரலாறு

 கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மகாமண்டபம், அர்த்த மண்டபத்தை கடந்து கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மீது படுவதையும், விளக்குகள் ஏதுமில்லாத நிலையில் சூரிய ஒளியில் ஒளிரும் சிவலிங்கத்தையும் படத்தில் காணலாம்.

 விழுப்புரம் மாவட்டம்,பனையபுரம் சத்யாம்பிகை(புறவாம்பிகை,மெய்யாம்பிகை)உடனுறை பனங்காட்டீஸ்வரர் ஆலயம். சித்திரை மாதம் முதல் தேதி-யில் இருந்து ஒரு வாரம் காலை வேளையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மகாமண்டபம், அர்த்த மண்டபத்தை கடந்து கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மீது படுவதும், இங்குள்ள சிவசூரியனாரை வழிபட்டால் கண் சம்பந்தமானா பிரச்சனைகள் தீருவது திண்ணம். இவ்விரண்டும் இக்கோவிலின் சிறப்பு விழுப்புரம் to திருக்கனுர்-புதுச்சேரி-------விக்கரவாண்டி to பண்ருட்டி ----- இந்த இரண்டு சாலைகள் சந்திக்கும் கூட்டுரோடுதான் இந்த பனையபுரம் இக்கோவிலை அனைவரும் தரிசனம் செய்யுங்கள்


செவ்வாய், 2 செப்டம்பர், 2014

அமெரிக்கர்களை வியக்க வைத்த வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் அற்புதம்

வைத்தீஸ்வரன் கோயில் அற்புதம்

1.9.2014 நேற்றிரவு 9 மணி முதல் 10 மணி வரை, "Miracles decoded" என்ற நிகழ்ச்சி ஹிஸ்டரி சானலில் ஒளிபரப்பாகியது.. இந்த நிகழ்ச்சியின் நோக்கம், அற்புதங்கள் இல்லை என்று அறிவியல் பூர்வமாக நிருபிப்பது (decoding).

அதில் தமிழ்நாட்டில் ஒரு 10 வயது சிறுவனுக்கு பித்தப்பையிலோ அல்லது கல்லீரலிலோ ஏதோ பிரச்சனை. அவனை வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அழைத்து செல்கிறார்கள், அங்குள்ள குளத்தில் சிறுவன் குளித்து வருகிறான். கோவிலுக்கு செல்லும் முன் ஸ்கேன் எடுக்கிறார்கள், அப்பொழுது அதில் பிரச்சனை இருப்பதை காட்டுகிறது. பிறகு, அவன் குளத்தில் குளித்த மூன்று நாட்களுக்கு பிறகு, அவன் உடல் பரவாயில்லை என்கிறான், மீண்டும் ஸ்கேன் எடுக்கிறார்கள். அந்த ஸ்கேன் நார்மலாக வருகிறது. அவன் மீண்டும் அந்த  கோவிலுக்கு சென்று மொட்டை அடித்து, மீண்டும் குளத்தில் குளித்து தன் பிராத்தனையை நிறைவேற்றுகின்றான்.

இந்த நிகழ்ச்சியின் நோக்கமே, அற்புதங்களை, அவை அற்புதங்கள் அல்ல என்று அறிவியல் ரீதியாக நிருபிப்பது. ஆனால், இந்த சிறுவனுக்கு ஏற்ப்பட்ட அற்புதத்தை இந்த டிவி நிகழ்ச்சியை நடத்தியவர்களால் அறிவியல் என்று நிருபிக்க முடியவில்லை...


இது ஒரு செவ்வாய் ஸ்தலம்...செவ்வாய் தான் ரத்தத்துக்கு அதிபதி...சகோதரனுக்கு அதிபதி யுத்தத்துக்கு அதிபதி..வெட்டு,குத்து,காயம்,அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு இவரே காரணமாகிறார்..விபத்துக்கள் இவர் சனி,சூரியன்,கேது,போன்ற பாவ கிரகங்களுடன் சேர்வதால் உண்டாகிறது...வயிறு நோய் முதல் உடல் உஷ்ணத்தால் உண்டாகும் நோய்களுக்கும்,கடும் விஷ ஜுரத்துக்கும் இவர் ஜாதகத்தில் பாதிப்பதால் உண்டாகிறது...இதன் அதிபதியான முருகனை வழிபட்டால் "இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால்
சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். இந்தக்கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி. அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள். இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் பெயர் முத்துக்குமார சுவாமி. இவன்மீது முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் என்னும் நூல் பாடப்பட்டுள்ளது..இக்கோயிலில் அமைந்திருக்கும் சித்தாமிர்தக் குளத்தின் நீர் புனித நீராக கருதப்படுகின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்று அங்கு வழிபடும் மக்களால் நம்பப்படுகின்றது...சிவன் ஸ்தலமாக இருப்பினும் முருகன் இங்கு பிரபலம்..மருத்துவ கடவுள் தன்வந்திரிக்கு இங்கு தனி சன்னதி உண்டு...மருத்துவர்கள் பெரும்பாலும் செவ்வாய் கிழமையில் அதிகம் வந்து வழிபடுவர்.

இத்தலத்தில் காலடி வைத்தாலே பில்லி சூனியம்
முதலானவையும் கூட அகலும் என்பர்."
 
தென் நாட்டின் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றானது. புள்ளிருக்கு வேளூர் எனப்படும் பாடல் பெற்ற தலம். பலராலும் பொதுவாக வைத்தீஸ்வரன் கோயில் என்றே அழைக்கப்பெறுகின்றது. சோழ வளநாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவிரியின் வடகரைத் தலங்களில் 16வது தலமான இத்திருத்தலம் இந்திய இருப்புப் பாதையில் வைத்தீஸ்வரன் கோயில் எனும் பெயருடன் புகை வண்டி நிலையமாகவும் அமைந்துள்ளது.
 
 ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான அங்காரகன், தொழுநோயால் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டதின் விளைவாக கடவுள் சிவனார் வைத்தியநாத சுவாமியாக எழுந்தருளி அவரின் பிணிதீர்த்தார். ஆகையால் இக்கோயில் ஒன்பது கிரக கோயில்களில் இது செவ்வாய் கிரகத்தை குறிக்கும் கோயில் தலமாக விளங்குகின்றது.  என்னும் அப்பர் பெருமானின் தேவாரப் பகுதியில் இறைவன் வைத்திய நாதர் என்னும் பெயர் பூண்ட காரணத்தை சொல்கிறது.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

நவக்கிரகங்களும் உயிர்கள் வளர்ச்சியும்;ஜோதிடம்

சூரியன் சந்திரன் இல்லாவிட்டால் உலகில் மனித வர்க்கமே தோன்றி இருக்காது..மற்ற எந்த ஜீவராசிகளும்,தாவரங்களும் தோன்றி இருக்கவும் நியாயமில்லை.சூரிய சந்திரனால் எல்லாம் உயிர் பெற்று வளர்கின்றன..வாழ்கின்றன..இவ்விரண்டு கோள்கள் போல மற்ற கிரகங்களும் தனக்கென தனித்தன்மை பெற்றிருக்கின்றன...இக்கோள்களின் மொத்த ஒளிக்கதிர்கள் ஒன்றாக சேர்ந்து பூமியில் விழும்போது மனிதனின் குணங்களில் ,ஜீவராசிகளின் குணங்களில் வாழ்க்கை முறையில் நிறைய மாறுதல்கள் உண்டாகின்றன...மனிதன் வாழ பலவித தேவைகள் பூர்த்தியாகின்றன...

பூமிக்கு ஆக்ர்ஷ்ண சக்தி இருப்பதால் சுமார் இரண்டு கிலோ மீட்டர்களுக்குண்டான எதையும் தன்னுள் ஈர்த்துக்கொள்ளும்.இந்த சக்தி மற்ற எந்த கோளுக்கும் இல்லை..இதனால்தான் பூமியை தவிர எங்கும் ஜீவராசிகள் வாழ வாய்ப்பில்லை என அக்கால நம் முனிவர்களும் ,சித்தர்களும் சொல்லிவிட்டு சென்றனர்.இக்கால விஞ்ஞானிகளும் அது உண்மை என ஒப்புக்கொள்கின்றனர்.

 மனித உடல் வளர்ச்சியில் தலை முதல் மார்பு வரையிலுள்ள மேல் பகுதியை கிரக மண்டலத்தின் இளவரசனான சூரியன் வளர்க்கிறான் என்கிறது ஜோதிடம்.அதுபோலவே சந்திரன் முகத்தையும் ,செவ்வய் மார்பையும் ,புதன் இடையையும் முதுகையும்,வயிற்றை குருவும்,கைகளை ராகுவும் கால்களை கேதுவும் வளர்க்கின்றனர் என ஜோதிடம் சொல்கிறது.ஜாதகத்தில் எந்த கிரகம் வலு குன்றி இருக்கிறதோ அதர்குறிய உடல் பாகங்கள் அழகில்லாமலோ ,வளர்ச்சி இல்லாமலோ,பாதிக்கப்படவோ வாய்ப்பு இருக்கிறது!!

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

ராசிக்கட்டம் ,ஜோதிடம்,வானியல்

ஆடி அமாவாசைக்கு சில நண்பர்கள் உதவியால் சிறப்பாக அன்னதானம் ,உடை தானம் செய்தோம்..உதவிய நண்பர்களுக்கு நன்றி..இந்த மாதமும் நிதி அனுப்பட்டுமா என சில நண்பர்கள் கேட்டார்கள்..வேண்டாம் உங்களுக்கு சிரமம் தர விரும்பவில்லை...புரட்டாசி மகாளயபட்ச அமாவாசைக்கு பெற்றுக்கொள்வதாக சொல்லிவிட்டேன்.

ஃபேஸ்புக்கில் சில வரிகளை எழுதிவிட்டு அப்படியே ஜோதிடம் பார்க்க வருபவர்களிடம் நேரம் சரியாக போய்விடுவதால் ப்ளாக் பக்கம் வரவே முடியவில்லை..வாட்ஸ் அப்பில் ஒரு நண்பர் ப்ளாக்கையே மறந்துட்டீங்களா...தினமும் வந்து ஏமாந்து போகிறேன் .தினமும் ஒரு ஜோதிட பதிவு எழுதுங்க என வருத்தப்பட்டார்..இனி ஒழுங்காக எழுதுகிறேன் என சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.

வானியலும் ராசிக்கட்டமும் ;

பூமியின் சுற்றுவட்ட பாதை சுமார் 149.59787 மில்லியன் கிலோமீட்டர். மணிக்கு 108000 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனை சுற்றுகிறது. 360 டிகிரி வட்ட பாதையை நாள் ஒன்றிற்கு 1 டிகிரி விதம் கடக்கிறது.பூமி சூரியனை சுற்றிவர 365.25 நாட்கள் ஆகும். இது ஓர் ஆண்டு என சூர்ய சித்தாந்தப்படி கணக்கிடப்படுகிறது. 360 டிகிரியைதான் 12 ராசிகட்டங்களாக ஒரு ராசிக்கு 30 டிகிரி வீதம் கணக்கிட்டு பிரிக்கப்பட்டிருக்கிறது..அதாவது மேசம் ராசிக்கு 30 டிகிரி..இந்த ராசி முதல் ராசி..அதாவது சூரியன் 360 டிகிரி சுற்றி வந்து ஒரு வருடம் முடிந்து அடுத்த வருடத்தை தொடங்குகிறார்.முதல் ராசியான மேசத்தில் சுற்றுப்பயணத்தை துவக்குகிறார்.. முதல் 30 டிகிரியான இதனை சித்திரை மாதம் வருடத்தின் முதல் மாதம் என கணக்கிடப்பட்டது.அதுதான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.

நம் முன்னோர்கள் ,பூமி சூரியனுக்கு வல இட பாகமாக செல்வதை இரண்டு அயனமாக பிரித்தார்கள்.பூமியிலிருந்து பார்வைக்கு சூரியன் வட பாகமாக செல்வதை உத்திராயண புண்ணியகாலம் என்றும் (ஆடி மாதம் முதல் மார்கழி வரை) பின்னர் தென்பாகமாக செல்வதை தட்சயனாயண புண்ணியகாலம் (தை முதல் ஆனி மாதம் வரை)என்றும் பெயரிட்டனர்.

  ரத்த கொதிப்பு கட்டுப்பட

மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா அவர்களுக்கு திருப்பதியின் நுழைவாயிலில் தத்ரூபமான சிலை உண்டு. எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா குரலை இந்துக்கள் வீடுகளில் , நாளின் ஏதாவது தருணத்திலாவது கேட்காமல் இருக்க முடியாது,இவர் 1930களில் பாடிய விஷ்ணு சஹஸ்ரநாமம் அத்தனை சக்தி வாய்ந்தது,அதை ரத்தக் கொதிப்பு இருப்பவர்கள் கேட்டு வர ரத்தக்கொதிப்பு கட்டுக்குள் வரும் என்பது கண்கூடு
(.-நன்றி -கீதப்ப்ரியன்)

 எப்போதும் வறுமை 

ஜாதகத்தில் மிக முக்கியமானது லக்னாதிபதி..4ஆம் அதிபதி 9ஆம் அதிபதி..1,4,9 என இந்த அதிபதிகள் 6,8ஆம் இடங்களில் மறைந்து போனால் எப்போதும் வறுமைதான்...2 ஆம் அதிபதி 6ல் இருந்தால் கடன் வாங்கிதான் வாழ்க்கை நடத்த முடியும்..2ஆம் அதிபதி 8ல் இருந்தால் எதை தொட்டாலும் நஷ்டம்.2 ஆம் அதிபதி 6,8,12ல் இல்லாமல் எங்கு இருந்தாலும் செல்வம் ,செல்வாக்கு வளரும்.