திங்கள், 10 ஏப்ரல், 2017

பிரம்ம ஹத்தி தோசம் தோசம் நீங்க பரிகாரம்

பிரம்ம ஹத்தி தோசம்
------------------------------------

குரு பலமிழந்து சனி பலம் பெற்று, குருவும் சனியும் 5 பாகைக்குள் இணைந்து அல்லது சம சப்த பார்வை பெறும் போது, இந்த தோஷம் உண்டாகிறது.


சூட்சுமம்-குருவின் பலம் அதிகம் இருந்து, சனி குருவுடன் இணையும் போதோ அல்லது சம சப்த பார்வை பெறும் போதோ, சனியின் அசுப தன்மை குறைந்து சுப தன்மை அடையும். அதே நேரத்தில் குருவின் பலம் சிறிது குறையும். இதில் இருந்து அறியும் சூட்சுமம் என்னவென்றால் முன்னோர்கள் செய்த பூர்வ பலன்களின் (குரு) பலம், முன்னோர்களின் கர்ம பலன்களை (சனி) விட பலம் பெற்று, சனி தரும் அசுப பலன்களை குறைகிறது என்பதே சூட்சுமம். 

இதனால் ஜாதகன் நினைத்த அனைத்தும் கடவுள் அருளால் கிடைக்க பெற்று, நல்ல நிலையில் இருக்க வைக்கிறது.
இங்கே சனி பலம் அதிகமாகி குரு பலம் குறையும் போது பிரம்ம ஹத்தி தோஷம் என்ற பூர்வ பல குறைபாடு ஏற்படுகிறது. ஒரு உயிரை வதைத்த பாவத்தை அல்லது அதற்கு தவறான முறையில் வழிகாட்டியாக இருக்கும் பாவமே, பிரம்ம ஹத்தி தோஷம். இதனால் கர்ம பலம் அதிகமாகி, குரு பலம் குறைகிறது. இதுவே பிரம்ம ஹத்தி தோஷம்.

ஆனால் இந்த தோஷம் மிக அரிதாகவே ஜாதகத்தில் காணலாம். ஏனெனில் குரு அவ்வளவு சீக்கிரம் பலமிலப்பதில்லை.


பிரம்ம ஹத்தி தோஷம் பரிகாரம்!

பிரம்மஹத்தி தோஷத்திற்க்கு பரிகாரம் என்றால் திருவிடை மருதூர்கோவிலில் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜை செய்து கோவிலின் தலைவாசல் வழியாக சென்று பின்வாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு. மதுரை மன்னனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் இக் கோவிலின் வழியாக இம்முறையில் சென்றுவந்தபோது நீங்கியதாக கூறப்படுகிறது.  பெரும்பாலானவர்கள் சொல்வது இந்தக்கோவிலின் பரிஹார முறையைத்தான்.

இதைத்தவிர வேறு சில எளிதான பரிஹாரமுறைகளும் சொல்லப்படுகிறது.


ராம நாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் ராமபிரான் கடலுக்கு அடியில் உருவாக்கிய நவக்கிரகங்களுக்கு தகுந்த வைதீகர் மூலம் பூஜைகள் செய்து கடலில் நீராடி வழிபட்டு அங்குள்ள கடலடைத்த பெருமாளை வணங்கினால் பிரம்மஹத்திதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை

பழமையான சிவன் கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் பஞ்சக்கூட்டு எண்ணெய் கொண்டு விளக்கேற்றிவந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். ராமேஸ்வரம் கடலில் நீராடி அனைத்து தீர்த்தங்களிலும் குளித்து ஒரு நாள் அங்கேயே தங்கி இருந்து மறுநாள் ராமேஸ்வரம் அருகில் தனுஷ்கோடிசெல்லும் வழியில் உள்ள ஜடாமகுடேஸ்வரர் கோவிலில் உள்ள ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி ஜடாமகுடேஸ்வரரை வழிபட்டு வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. 

ஏனென்றால் ராவணனுடன் வதம் செய்து ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் இத்தலத்தில்தான் ராமபிரானுக்கு நீங்கியதாக வரலாறு.

 ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று, மாலை 5 மணிக்கு சிவன் கோவிலுக்கு சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்து சிவனை வணங்கிவரவேண்டும். 

இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கி, சிவனுக்கு மூன்று அகல் விளக்கு ஏற்றி, அர்ச்சனையும், அபிஷேகம் செய்து வந்தால் சிவபெருமான் அருள்பாலித்து, பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவார் என்பது ஐதீகம். இவைகளை செய்வதால் பிரம்மஹத்தி தோஷத்தால் அனுபவித்து வரும் பாதிப்புகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வட நாட்டில் இருப்போர் பிரம்மஹத்தி தோசம் நீங்க இங்கு ராமேஸ்வரம்  வருகின்றனர் அது போல நாமும் பிரம்மஹத்தி தோசம் நீங்க கஷ்டப்பட்டு வட நாட்டில் தரிசனம் செய்வதுதான் தோசம் நீங்கும் முறையாகும்..அதற்கு திருவேணி சங்கமம் வழிபாடுதான் சரியான தோசம் நீங்கும் பரிகாரமாக இருக்க முடியும்.

கிரக அவஸ்தை யும் துங்க கணிதமும்

ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..!!

கிரகங்கள் ஜாதகத்தில் இருக்கும் நிலையை பொருத்து தனது திசா காலத்தில் பலன்களை தரும். ( ஆட்சி ,உச்சம், நட்பு ,பகை, நீசம், அஸ்தமனம் போன்ற நிலைகளில் ) இவைகள் ஒன்பது நிலையில் கிரக அவஸ்தைகள் என அழைக்கபடுகின்றன.


1.தீப்தாவஸ்தை (பிரகாசித்தல்) : ஒரு கிரகம் உச்ச வீட்டில் இருப்பது.
2.ஸ்திமிதாவஸ்தை (நிலையான தன்மை ) : ஒரு கிரகம் ஆட்சி வீட்டில் இருப்பது.

3.முகிதாவஸ்தை (மகிழ்ச்சி ) : ஒரு கிரகம் தனது அதிமித்திரன் வீட்டில் இருப்பது.

4.சாந்தவஸ்தை (அமைதி ) : ஒரு கிரகம் தனது நட்பு வீட்டில் இருப்பது.

5.ஹீனாவஸ்தை (பலக்குறைவு ) : ஒரு கிரகம் தனது சமன் வீட்டில் இருப்பது.

6.துக்காவஸ்தை (கவலை ) : ஒரு கிரகம் தனது பகை வீட்டில் இருப்பது.

7.விகலாவஸ்தை (வெறுப்பூட்டும் செயல் ) : ஒரு கிரகம் பாபக்கிரகங்களோடு சேர்ந்து இருப்பது.

8.கலாவஸ்தை (துஷ்டன் ) : ஒரு கிரகம் கிரக யுத்தத்தில் தோற்று இருந்தால்.
9.கோபாவஸ்தை (கோபம் ) : ஒரு கிரகம் சூரியனோடு சேர்ந்து அஸ்தமனம் அடைந்து இருந்தால்.


துங்க கணிதம் ;

ஒரு கிரகம் உச்ச வீட்டில் இருக்கும் போது 60 டிகிரி அல்லது 60 மதிப்பெண்கள்

அதே கிரகம் நீச வீட்டில் இருக்கும்போது 0 டிகிரி. அதாவது 0 மதிப்பெண்கள் .
.
நீச வீட்டில் இருந்து உச்ச வீட்டை நோக்கி செல்லும்போது ஒரு ராசிக்கு பத்து மதிப்பெண் வீதம் அதிகரித்த்துக்கொண்டே போகும்…உச்ச வீட்டில் இருந்து நீச வீடு வரை பத்து பத்து மதிப்பெண்களாக குறைந்து கொண்டே வரும்..

சுக்கிரன் மீனத்தில் உச்சம் 60 -மதிப்பெண்கள் மிதுனத்தில் சுக்கிரன் 30 மதிப்பெண்கள்-கடகத்தில் சுக்கிரன் 20 மதிப்பெண்கள் -சிம்மத்தில் சுக்கிரன் 10 மதிப்பெண்கள்-

கன்னியில் சுக்கிரன் 0 மதிப்பெண்கள்-மேசத்தில் சுக்கிரன் 50 மதிப்பெண்கள்
ரிசபத்தில் சுக்கிரன் 40 மதிப்பெண்கள்

இவ்வாறு சுக்கிரன் நீச வீட்டில் இருந்து உச்ச வீட்டை நோக்கி செல்லும்போது ஒரு ராசிக்கு 10 மதிப்பெண்கள் என உயர்ந்து கொண்டே செல்லும்.இவ்வாறு  ஒரு கிரகத்தின் பலத்தை அறிந்துகொள்வதே துங்க கணிதமாகும்.

ஒரு கிரகம் தன் நீச வீட்டை நோக்கி போய்க்கொண்டிருப்பது அக்கிரகத்தின் பலவீனமான அமைப்பை காட்டுகிறது அதன் திசாபுத்தி சுமாரான பலன் தரும் என்பது மட்டுமல்லாமல் அக்கிரகம் குறிக்கும் காரகத்துவமும் பாதிக்கப்படும்.

சனி, 8 ஏப்ரல், 2017

Astrology ஜோதிட பதிவுகள்


ஞாயிறு பங்குனி உத்திரம்.இந்த நாளில்தான் ராமர் பட்டாபிசேகம் நடந்தது..ராமர் நட்சத்திரம் புனர்பூசம்.அதற்கு ஆறாவது நட்சத்திரமான உத்திரம் அன்றுதான் அவரது முக்கியமான செயல்கள் எதுவும் துவங்கின.ராவணன் மீது போர் தொடுத்ததும் உத்திரம் அன்றுதான் என கம்பராமாயணம் சொல்கிறது.உத்திரம் என்றால் நிலையானது என்று பொருள்.ஆயுள் தோசம் நீங்கி ஆயுள் பலம் உண்டாக்கும் நாள் இது.

பங்குனி தமிழ் மாதங்களில் கடைசி மாதம் என்பதாலும் உபய மாதம் என்பதாலும் நீடித்து நிலைத்து பலன் தரும் எதையும் தமிழர்கள் இந்த மாதத்தில் செய்வதில்லை.ஆனால் பங்குனி உத்திரம் அன்று குலதெய்வத்தை வழிபடுவதால் தொழில் வலிமை அடையும்.ஆயுள் பலமடையும் ..பங்குனி உத்திரம் வழிபாடு ஆயுளை பெருக்கும் சக்தி கொண்டது..அன்று முனி,கருப்பன்,மாசி பெரியண்ணன்,அய்யனார்,மதுரை வீரன் போன்ற கிராம காவல் தெய்வங்களை வழிபட உன்னதமான நாள்...அருள் அன்று பூரணமாக கிடைக்கும்



ஆதி காலத்தில் இருந்து தமிழர்கள் கொண்டாடும் நாட்கள் எவை என பார்த்தால் சித்திரை 1 தமிழ் புத்தாண்டு ,மதுரை சித்திரை திருவிழா,எல்லா மாதங்களிலும் அமாவாசை குலதெய்வ வழிபாடு.,பெளர்ணமி நிலா சோறு,ஆடி 18,புரட்டாசி பெருமாள் வழிபாடு,கார்த்திகை தீபம்,ஆடி 18, ஆடி,மாசி அம்மன் திருவிழாக்கள்,தை பொங்கல்,பங்குனி உத்திரம்,இவைகள்தான்..

இவையெல்லாம் பெரும்பாலும் விவசாயத்தை சார்ந்தவை.மழை வழிபாடு சார்ந்தவை.நாம் விவசாயம் சார்ந்து வாழ்ந்து வருகிறோம் இப்போது கார்ப்பரேட்டுகளை சார்ந்து வாழ நெருக்கடிதரப்படுகிறது.விவசாயத்தை சுருக்கிக்கொள்ளுங்கள் என மறைமுகமாக அழுத்தம் தருகிறார்கள்..விவசாய நிலங்கள் விற்பனை ஆகாமல் இருந்தால் விவசாயம் காக்கப்படும்.


தொழில் பிரச்சினை நீங்க ஸ்ரீராம நவமி வழிபாடு;
ஸ்ரீராமர் பட்டாபிசேகம் படம் வைத்து ,தீபம் எற்றி நாளை அதிகாலை வழிபடவும்..நீர் மோர் பானகமும் அதிகளவில் கரைத்து வைத்துக்கொள்ளவும்..எவ்வளவு நாட்கள் முடியுமோ அவ்வளவு நாட்கள் வீட்டு வாசலிலோ கோயில் போன்ற பொது இடங்களிலோ பந்தல் அமைத்தோ மக்களுக்கு தாகத்துக்கு கொடுக்கலாம்..தாக சாந்தி அடையும் மக்களின் மன நிறைவு உங்கள் துன்பத்தை போக்கும். தொழில் முடக்கம் ,பதவி உயர்வு இன்மை பிரச்சினைகள் இதனால் நீங்கும்.

ஸ்ரீ ராமர் அருள் கிடைக்க ஸ்ரீ ராம நவமி வழிபாடு;

ஸ்ரீராமர் பங்குனி கோடைக்காலத்தில் பிறந்தார்.ஸ்ரீராமரை பார்க்க ஏராளமான மக்கள் தினசரி வெகு தூரத்தில் இருந்து வெய்யிலில் வாடி களைப்புடன் அயோத்தி அரண்மனைக்கு வந்து கொண்டே இருந்தனர்..இதனால் புண்ணிய புருஷர் மாமன்னர் தசரதன் தன் மகனை பார்க்க வரும் மக்களின் அயர்ச்சியை போக்க பார்க்க வந்தவர் களுக்கு எல்லாம் வழியெங்கும் நீர்மோரும், பானகமும் கொடுத்து உபசரிக்க செய்தார்.கூடவே விசிறியும் கொடுத்தார்.

இதனால் ராமநவமியன்று இவற்றை பிறருக்கு கொடுப்பதால் ஸ்ரீராமர் அருள் பரிபூரண்மாக கிடைக்கும்..ராமரை போன்று வனவாச துன்பங்களை அனுபவிக்காமல் ஸ்ரீராமரால் காக்கப்படுவோம்....ஏழைகளுக்கு செருப்பு,குடை தானமும்,நீர் மோர் பந்தல் அமைத்து நிழல் கொடுத்து அருந்த மோரும்,நீரும் கொடுப்பது மகா புண்ணியமாகும்.


மிதுனம்,கன்னி,தனுசு,மீனம் லக்னத்தார் திருமணம் ஆகும் வரை தாயை தெய்வமாக மதிப்பர்.திருமணத்துக்கு பின் மனைவியை அதிகம் நேசிப்பர்...மனைவி சொல்படி நடப்பர்.மாமியார் மருமகள் பிரச்சினை இவர் வீட்டில்தான் அதிகம்...
இவர்களில் புத்திசாலிகள் பலர்,இரண்டு பக்கமும் ஆமாம் சொல்வார்...நீ சொல்வதுதான் கரெக்டு என அம்மாகிட்டயும் ,மனைவி கிட்டயும் சமமாக சொல்லி நல்ல பிள்ளையாக இருப்பர்.
தாய்க்கு முன் மனைவியை பாராட்டினால் நம்ம அம்மாவா இப்படி என நினைக்குமளவு அம்மா ருத்ர தாண்டவர் ஆடுவார்...அம்மா சொல்வதுதான் எனக்கு முக்கியம் என மனைவிக்கிட்ட சொல்லிட்டா போச்சு..அப்புறம் எதுக்குடா என்னை கட்டிக்கிட்ட என பொண்டாட்டி பெட்டியை தூக்கிடுவா ..பாவம் இவர் படும் பாட்டை பார்க்கனுமே.கம்பி மீது தினமும் நடப்பது எல்லாம் அதிசயமே இல்ல இவர் செய்ற பேலன்ஸ் க்கு முன்னாடி.
தனிக்குடித்தனம் இவர் போயிட்டா அதிர்ஷ்டம் இவரை விட்டு போய்விடும்.நிம்மதி,சுகமும் போயிடும்.இருவரும் இவருக்கு இரு கண்கள் அம்மா,மனைவி இருவரும் ஒரு வீட்டில் இருந்தால்தான் அதிர்ஷ்டம்,தொழில் இரண்டும் நடக்கும்...
மேற்க்கண்ட நான்கு லக்னங்களில் பிறந்து,அம்மா சொல்வதைதான் கேட்பேன் என சொல்லி மனைவியை துன்புறுத்தியதால், தொழிலில் நிறைய நஷ்டம் வந்து பாதிப்படைந்தவர்கள் நிறைய பேரை பார்த்திருக்கிறேன்...தாயை மதிக்காததால் பணமிருந்தும் சொந்த வீடு வாங்க முடியாமல் தவிப்பவர்களும் உண்டு.

நவகிரக தோசம் போக்கும் முறை

நவகிரக தோசம் போக்கும் முறை

ஒரு மஞ்சள் பையில் ஒரு கிலோ நவதானியம் கட்டி வியாழக்கிழமை இரவு அதை தலைக்கு வைத்து படுக்க வேண்டும் வெள்ளிக்கிழமை காலை அதை எடுத்து அதனுடன் சிறிது வெல்லம் ,தண்ணீர் கலந்து கிரைண்டரில் அரைத்து கட்டியாக உருட்டி பசு மாட்டிற்கு உண்ணக்கொடுக்க வேண்டும்..பசு மாட்டில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உள்ளனர்.அவர்கள் நவதானிய சக்தியை ஈர்த்து திருப்தி அடைகின்றனர்.இதன் மூலம் நவகிரக தோசங்களில் இருந்தும் கண் திருஷ்டி செய்வினை தோசங்களில் இருந்தும் விடுபடலாம்

சபரி மலை செல்பவர்கள் ,திருப்பதி செல்பவர்கள்,பழனி பாத யாத்திரை செல்பவர்கள் 5 கிலோ நவதானியங்களை வாங்கி வைத்துக்கொள்ளவும்..அரசு,ஆலம்,பூவரசு,வேம்பு தலா அரை கிலோ விதைகளை வாங்கி வைத்துக்கொள்ளவும்..அவற்றை போகும் வழியில் காடுகளில் வீசி சென்றால் நவகிரக தோசங்களில் இருந்து விடுபடலாம்..களிமண் உருண்டைகளாக உருட்டி அதனுள் விதைகளை வைத்து வீசி எறிந்தால் மழைகாலங்களில் மண் கரைந்து விதைகள் முளைக்க ஏதுவாக இருக்கும்.

முளைப்பாரி எடுத்து சென்று கிராமத்து கோயில்களில் வழிபடுவார்கள் பின்பு அதனை ஆற்றில் கரைத்து வழியனுப்புவார்கள் இது தொன்று தொட்டு வரும் வழிபாடு நவராத்திரி வழிபாட்டின்போது ஒன்பது நாளும் நவதானியம் வளர்த்து ஒன்பதாம் நாள் அதை நதியில் கரைக்கிறார்கள் இது சிறந்த நவகிரக தோசம் நீக்கும் வழிபாடு ஆகும்.

சூரியன் சக்தி கோதுமையில் இருக்கிறது சந்திரனின் சக்தி நெல்லில் இருக்கிறது துவரம்பருப்பில் செவ்வாய் சக்தி இருக்கிறது...சிறுதானியம் பாசிபயிறில் புதன் சக்தி அடங்கி இருக்கிறது கொண்டைக்கடலையில் குருவின் சக்தி இருக்கிறது மொச்சையில் சுக்கிரன் சக்தி இருக்கிறது...ராகுவின் சக்தி உளுந்திலும் கேதுவின் சக்தி கொள்ளுபருப்பிலும் இருக்கிறது...


செவ்வாய், 4 ஏப்ரல், 2017

கடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-2018

கடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-2018

மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும்.

செவ்வாய்க்கிழமையும் அசுவனி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ரேய முகூர்த்தம் எனப்படும்.

செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ரேய முகூர்த்தமாகின்றது.

மேற்படி காலங்களில் லக்கினமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 % பலன்களை பெறலாம்.

செவ்வாய்க்கிழமை அமைந்தால் நிச்சயமாக 100 % பலன்களை பெறுவது திண்ணம்.



மேற்குறித்த நாட்களில் நீங்கள் பெருந்தொகையாக தரவேண்டிய கடன் தொகையில் கொஞ்சம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பி தரவேண்டும், அவ்வளவுதான் அந்த பெரும் தொகையானது சிறுக சிறுக அடைபட்டுவிடும்.

இவ்வளவு சிறப்பு மிக்க நாட்களும் , நேரமும் இந்த ஆண்டில் (2017-2018) வருகிறது என்பதை கீழே இருக்கும் படத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.