கார்த்திகை 1 ந்தேதி முதல் சபரிமலை சீசன் ஆரம்பித்து விட்டது...இனி எங்கு பார்த்தாலும் ஐயப்பன் கோசம்தான்...ஒரு நாளைக்கு மூணு வேளை குவார்ட்டரும்,கப்புமாக அலைந்த குப்புசாமி ராமசாமி எல்லாம் ஐயப்பசாமி ஆகிவிட்டனர்..அவர்களை இனி சாமி என்றுதான் அழைக்க வேண்டும்..காலையில் பவானி கூடுதுறை சென்று இருந்தேன்..கர்நாடகா,ஆந்திரா பக்தர்களால் பவானி கோவில் திணறியது..எங்கு பார்த்தாலும் டூர் பஸ்களும்,வேன்களுமாக நிற்கின்றன..வரும் வாரங்களில் இன்னும் அதிகரிக்குமாம்...கோவை என்.ஹெச் ரோடு திணறிவிடும்...இவர்கள் இந்த வழியே.கொடுமுடியும்
செல்வார்கள்...சபரிமலை செல்லும் வழியில் இருக்கும் கோயில்களில் எல்லாம் தரிசனம் செய்து விட்டு வரும் வழியில் மதுரை,திருச்செந்தூர் சென்று வருவார்கள்...அசைவம் சாப்பிட்டு தினசரி குவார்ட்டர் அடிப்பவர்களும் மாலை போட்டுவிட்டால் சந்தன பொட்டும் காவி வேட்டியுமாக பக்தியுடன் காணப்படுகிறார்கள்..அவர்களை பார்த்தாலே கையெடுத்து கும்பிட வேண்டும் போலிருக்கிறது..எல்லோரும் சாமி சாமி என அழைப்பதாலும் ,ஐயப்பன் கோபக்காரர் என்பதாலும் ஐயப்ப வழிபாட்டுக்கே உரியஆச்சாரங்களை சுத்த பத்தமாக ஒழுக்கத்துடன் 48 நாளைக்கு கடை பிடிப்பார்கள்...சிலர் குடும்பத்தில் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இருந்தாலும் ஐயப்பன் காப்பாத்துவார் என கடனை வாங்கி கொண்டு மலைக்கு போய் வருகிறார்கள்...வருடா வருடம் கன்னி சாமி அதிகரித்து கொண்டே தான் இருக்கிறார்கள்....
வருடம் முழுக்க இருக்கும் கோபம்,ஆத்திரம் குறைந்து பலர் சாந்த சொரூபியாக இருப்பதை இந்த நாட்களில் பார்க்கிறேன்..அதே சமயம் மலைக்கு போய்விட்டு வந்ததும்,மாலையை கழட்டி விட்டு பொங்கல் வைத்து சாமி கும்பிட்டதும் டாஸ்மாக் கடைக்கு ஓடுவதையும் பார்த்திருக்கிறேன்...
சிலருக்கு கார்த்திகை பிறந்ததும் மாலை போட்டே ஆக வேண்டும்..ஐயப்பன் கூப்பிடுறான் போறேன்..என வருசா வருசம் மாலை போட்டு விடுவார்கள்.சிலர் ஒரு முறை மாலை போட்டு விட்டு மலைக்கு போய் வந்ததும் இந்த வேலை நமக்கு ஆகாது...அடுத்த வருசம் என்னை கூப்பிடாத மாப்ள...நம்ம வீட்டு பக்கத்துலியே ஐயப்பன் கோயில் கட்டிட்டாங்க.அங்கியே அவரை கும்பிட்டுக்கிறேன்...என்பார்கள்...
சிலருக்கு ஐயப்பன் கோயில் போய் வருவது பெருமையான விசயம்...என் வீட்டுக்காரரு மாலை போட்ருக்காரு..உங்க மருமகனை வழி அனுப்ப அம்மாவை கூட்டிகிட்டு வந்துடுங்க...அப்பா..!என மனைவி சொந்தக்காரர்களிடம் சொல்லி அழைப்பதை பெருமையாக பார்க்கும் கணவர் சாமிகளும் உண்டு...பல இடங்களில் இது ஒரு மொய் கணக்காகவும் இருக்கிறது...வழி செல்வுக்கு பணம் கொடுத்து அனுப்பும் மொய் கணக்கு.....
ஆந்திராவுக்கு திருப்பதி போல...கேரளாவுக்கு சபரிமலை தங்க சுரங்கம்..திருப்பதி போலவே கேரளாவுக்கும் தமிழன் தான் படியளக்கிறான்..
ஐயப்பன் ஆலயத்துக்கு பெண்கள் யாரும் செல்ல கூடாது என்பது விதி...இது பழங்கால விதி..காரணம் புலி நடமாட்டம் அதிகமுள்ள சபரிமலையில்பெண்களுக்கு ஏற்படும் அந்த மூன்று நாள் பிரச்சனை வழியில் ஏற்பட்டால் , ரத்த வாடைக்கு புலிகள் சூழ்ந்து விடும்..பக்தர்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் என்பதால் தான்...அன்று காட்டுக்குள் 16 கிலோ மீட்டர் நடந்தார்கள் ..கடும் புதர்கள் சூழ்ந்த பாதை..இன்று ஐயப்பன் கோயில் வாசலில் பஸ் நிறுத்தும் அளவுக்கு நெருங்கி விட்டார்கள்...பெரிய வழி பாதை ,சிறிய பாதை என இரண்டும் உண்டு....சிறிய வழி பாதைதான் பலரது சாய்ஸ்...சபரிமலையில் சீரகதண்ணீர் ,பஞ்சாமிர்தம் மாதிரி ஒரு பிரசாதம் சூப்பரா இருக்கும்..எங்கு பார்த்தாலும் நெய் வாசம்..ஐயப்பன் மீது அளவுகடந்த பக்தி வைத்திருந்த நம்பியார் 6 மாதம் சிகரெட் பிடிப்பார்..6 மாதம் சிகரெட் பிடிக்க மாட்டார்...யார் வீட்டிலும்,ஹோட்டலிலும் சாப்பிட மாட்டார்...ஐயப்பனையே நினைத்து உருகி வழிபட்டவர்...ரஜினி,சிரஞ்சீவி வருடம் தோறும் சென்று வந்தார்கள்..பக்தர்களுக்கு தம்மால் இடைஞ்சல் வரக்கூடாது என நிறுத்தி விட்டார்கள்..கஸ்டப்பட்டு நடந்து சென்று18 படிகளை தொட்டு வணங்கி ஏறும் தருணம் சிலிர்ப்பானது...ஐயப்பனை காணும் கணம் மெய் மறந்த நிலைதான்...நான் அனுபவித்திருக்கிறேன்.. .
இந்த ஆந்திரா,கர்நாடகா பக்தர்கள் முரட்டுத்தனமானவர்கள்..பவானி,கொடுமுடி வழியாக இவர்கள் வந்து சாமி கும்பிட்டு விட்டு போகும் தை மாதம் வரை கோவில் பணியாளர்களும்,கடைக்காரர்களும் உசாராகத்தான் இருப்பார்கள்...பெரும்பாலும் இவர்கள் பணம் செலவழிப்பதில்லை..கழிவறையை உபயோகப்படுத்துவதில்லை ..திறந்த வெளிதான்....பவானி,கொடுமுடியில் கடைக்காரர்கள்,கோவில் பணியாளர்கள் ஏதாவது நொரண்டாக இவர்களிடம் பேசி விட்டால்,உடனே அடிதான்....தமிழ்நாட்டு ஐயப்ப சாமிகள் போல இவர்களை சாந்த சொரூபியாக பார்க்க முடியாது வருசம் முழுக்க சாப்பிட்ட கோங்கிரா மிளகா சட்னி ,அடக்கி வைக்கப்பட்ட அந்த நேரத்தில்தாம் முழுசா வெளிப்படும் போல இருக்கு.கடைக்காரர்கள் கொஞ்சம் ஏமாந்தால் சுட்டுவிடும் சாமிகளும் இருக்கிறார்கள்....ஐயப்பன் பாட்டு கேசட் ஹாட் பிசினஸ் எஸ்.பி.பி முதல் இதையே முழு நேர தொழிலாக செய்யும் பாடகர்கள் வரை இந்த மாதம் அடை மழைதான்... மாலை போட்டு விட்டால் ஐயப்பன் சிடி வாங்கத்தான் முதலில் ஓடுகிறார்கள்
பொதுவாக மாலை போட்டு விட்டால் லாகிரி வஸ்துக்கள்,போதை பொருட்கள் உபயொகிக்க கூடாது என்பது விதி...ஆனால் பீடியை கட்டுகட்டாய் இழுக்கும் சாமிகள்,டாஸ்மாக்கில் சுத்தபத்தமாய் குவார்ட்டர் அடிக்கும் சாமிகள் பார்த்திருக்கிறேன்..கவிச்சி தான் ஐயப்பனுக்கு ஆகாது அதனால் சுண்டல் கொடுன்னு வாங்கி சாப்பிடுவார்கள்..
சுற்றுலா சாமிகள் இருக்கிறார்கள்..இவர்கள் சபரிமலை,மதுரை,திருச்செந்தூர் டிரிப் அடிக்கவும்,குவார்ட்டர் அடிக்காம ஒரு மாசம் எல்லாம் இருக்க முடியாது என்பவர்களும்...சபரிமலையில அப்படி என்னதான் இருக்குன்னு பார்த்திட்டு வரலாம் என கிளம்பும் உளவாளிகளும், 5,7,9,நாள் மட்டும் மாலை போடுவார்கள்..சிலர் ஒரு நாள் முதல்வர் போல ஒரு நாள் மட்டும் மாலை போட்டு செல்வதை பார்த்திருக்கிறேன்...
48 நாட்கள்...காலை 5 மணிக்கு ஒரு குளியல்..மாலை 6 மணிக்கு ஒரு குளியல்...தகாத வார்த்தைகள் பேசாமல் ,குருசாமிக்கு கட்டுப்பட்டு நாகரீகமுடன்,அமைதியுடன் ,ஐயப்பனை வழிபட செல்லும் ஐயப்ப சாமிகளை நான் வணங்குகிறேன்...இவர்கள் சபரி சென்று வந்தாலும் இதே ஒழுக்கமுடன் வாழ முயற்சி செய்வார்கள்....இதற்குதான் இந்த வழிபாடே துவங்கியது..ஒரு மனிதன் 48 நாட்கள் ஒழுக்கமுடன் இருந்தால் அவன் வாழ்நாள் முழுக்க ஒழுக்கமுடன் வாழ மனம் பழகி கொள்ளும்....
மத்தபடி சில சிரிப்பு சாமிகளுக்கும், நல்ல சாமிகளுக்கும் ஒரு வார்த்தை ..மழை அதிகமா பெஞ்சுகிட்டே இருக்கு மலை பாதையில வழுக்கி விழுந்துடாதீங்க..சின்னஞ்சிறு குழந்தைகளை அழைத்து போகிறவர்கள் இன்னும் எச்சரிக்கையாக் இருக்க வேண்டும்...கூட்ட நெரிசலில் குழந்தைகளோடு சிக்கிக்காதீங்க...
சுவாமியே சரணம் ஐயப்பா.