புதன், 9 நவம்பர், 2011

உங்களுக்கு எத்தனை மனைவி..? ஜோசியம் சொல்கிறது 18+

உங்களுக்கு எத்தனை மனைவி..? ஜோசியம் சொல்கிறது-நல்ல நேரம் சதீஷ்குமார்

(ஃபேஸ்புக்,டிவிட்டர்,கூகிள் பஷ் -ல் என்னை கலாய்ப்பவர்கள் பதிவை முழுமையாக படித்துவிடவும்.)

ஜோதிடம் எத்தனையோ ரகசியங்களை சொல்கிறது.வெறும் ராசிபலன் படிப்பது மட்டுமே ஜோசியம் என நினைப்பவர்கள்,மேற்க்கொண்டு படிக்க வேண்டாம்.ஜோதிடத்தின் மீது நம்பிக்கையும்,ஆர்வமும் இருப்பவர்கள் தொடரவும்.

’’தன்னூரல் நின்றுவிட்டால் தாமிரமும் தங்கமாகும்.
பெண்போகம் நீக்கிவிட்டால் தங்கத்திற்கினை அங்கமாகும்.’’

(தாமிரம் -செம்பு.தன்னூரல்;களிம்பு ஊறுவது)

-சித்தர்கள் சொன்னது.


களத்திர ஸ்தானம் எனப்படும் லக்கினத்தில் இருந்து 7ஆம் இடத்தில் எத்தனை கிரகங்கள் நிற்கிறதோ,களத்திரகாரகன் எத்தனை கிரகங்களுடன் சேர்ந்திருக்கிறதோ அத்தனை,களத்திர ஸ்தானத்தை எத்தனை கிரகம் பார்வை யிடுகிறதோ அத்தனை மனைவி/கணவன் என ஜோதிடம் மூல நூல்கள் சொல்கிறது.

இன்னும் சில விளக்கம்;

7 ஆம் அதிபதியாக வருகிற கிரகம் 6,8,12 ல் இருந்து எத்தனை பேர் பார்க்கிறார்களோ அத்தனை களத்திரம்.

7 ஆம் அதிபதி 11 ல் இருந்து எத்தனை கிரகங்களோடு சம்பந்தம் பெறுகிறதோ அத்தனை களத்திரம்.

களத்திரம் என்றால் என்ன..?

மூன்று தேவர்களும்,முப்பத்து முக்கோடி தேவர்க்லளும்,நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிமார்களும் பூமாரி பொழிய,அம்மி மிதித்து,அருந்ததி பார்த்து,உற்றார் உறவினர் நண்பர்கள் முன்னிலையில் தாலிக்கயிறு கட்டும் சடங்கால் வருவதா..?

அதானே..?

இல்லை.காதல் திருமணம் என்ற பெயரில் மனமொத்த இருவர் மாலை கூட மாற்றாமல் வாழ்வது கூட இல்லறம் என்கிற கணக்கில் வந்துவிடும்.அப்படி என்றால் அப்படி இப்படி பழக்கவழக்கத்தால் வரும் உறவு கூட களத்திரம் கணக்கில் வந்துவிடுமா.?

நிச்சயமாக.எத்தனை ஆண்/பெண் தொடர்பு ஒருவருக்கு உண்டாகும் என்பதுதான் கணக்கு.அது குடும்பம் நடத்துவது பற்றியோ,குழந்தை பெற்றுக்கொள்வதை பற்றியோ கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.என்ன குழந்தை பாக்யம் பற்றி நான் எழுதியது குழப்பம் தருகிறதா..அது இனப்பெருக்கம் எனப்படும் இனப்பெருக்க உறுப்பின் பலம் மற்றும் பாக்கிய ஸ்தானம் கணக்கில் சேரும்.இது களத்திர ஸ்தான ஆராய்ச்சி மட்டுமே.

இதென்ன இப்படி சொல்றீங்க.அப்படி பார்த்தா பல ஜாதகருக்கு பல தார அமைப்பு இருக்குமே..? எனக்கேட்டால் உண்மை. நண்பர்கள்,கூட்டு தொழில் என பல விசயங்கள் இந்த 7ஆம் பாவம் அடிப்படையில் ஜோதிடத்தில் பார்க்கப்படுவதால் ஜாதகரின் காம எண்ணத்தை தூண்டும் கிரக சேர்க்கைகளான சுக்கிரன் -சந்திரன்,சுக்கிரன் -ராகு,சுக்கிரன் -சனி,சுக்கிரன் -செவ்வாய் அமைப்பை வைத்து இதை கண்டறிதல் வேண்டும்.

இரண்டாம் பாவமாகிய பேச்சு ,கண் பார்வை என சொல்லப்படும் லக்கினத்தில் இரண்டாம் இடமாகிய கட்டத்தில் இந்த கிரக சேர்க்கை இருப்பின் ,சுக ஸ்தானமாகிய 4 ஆம் இடத்திலோ,7 ஆம் இடத்திலோ இந்த அமைப்பு இருப்பின் களத்திர காரகனும் பல பாவ கிரகங்களும் சேர்ந்திருப்பின் பார்ட்டி மன்மத கலைக்கு வித்தகன் என்பதில் சந்தேகமில்லை.ஆணாய் இருப்பின் வீரிய ஸ்தானம் எனும் 3 ஆமிடமும் வலு அடைய வேண்டும்.அங்கு சனி பார்வை மற்றும் சூரியன் இருக்க கூடாது.3ஆம் அதிபதி கெட்டிருக்ககூடாது.

கோயில் கும்பாபிசேகம் முஹூர்த்தம் முதல்..மாடு கன்னு போட்ட நல்ல நேரம் முதல்,விவசாயத்தில் எந்த நாளில் நடவு நட்டால் அதிக மகசூல் என்பது முதல்..  ஹோமோ செக்ஸ்,சுய இன்பம் வரை பற்றியெல்லாம் ஜோதிடத்தில் இருக்கு.அதை எழுதினா சர்ச்சை வரும்.எதுக்கு வம்பு.கோயில் சிறபங்களில் எத்தனையோ அந்த மாதிரி சிற்பங்களை பார்த்துருப்பீங்க.மிருகங்களுடன் உறவு கொண்டவனை பத்தி சொல்லி நடுங்க வைத்த ஜோசியர் எல்லாம் இருக்காங்க.இன்னும் பல அதிர்ச்சிகரமான பல உண்மைகளை பழைய ஜோதிட நூல்களில் இருக்கு.அந்த கால மன்னர்கள் கையாண்ட ஜோதிட பரிகாரங்கள் பல அதிர்ச்சி தரும்படிதான் இருக்கு.இன்னும் கைரேகை மூலமா பொண்டாட்டி எத்தனை உனக்கு தெரியுமா என கேட்டு பார்க்க வந்தவர்களை வெட்கப்பட வைத்து சொல்லும் கிராமத்து ஜோசியர்கள் அதிகம்.

இரண்டாம் மனைவி என்பது ஜாதகத்தில் 11 ஆம் இடத்தை கொண்டு பலன் சொல்கிறோம்.மனைவியுடன் ஒற்றுமை என்பதை 7 ஆம் அதிபதி வைத்து பலன் சொல்கிறோம்.7 ஆம் அதிபதி தனித்து இருந்தால் ஒரே மனைவி.வேறு பெண்களை நினைத்தாலும் அவர்களுடன் சேர்ந்து வாழ இயலாது.இரண்டாம் இடத்தில் விவகாரமான கிரகங்கள் இருந்தால் ஜாதகனுக்கு காம எண்ணங்கள் அதிகம்.காம சேட்டையும் அதிகம்.பேச்சு காமத்தை பற்றி அதிகம் இருக்கும்.ஆனா செயலில் அதாவது பெண் தொடர்பு நிரந்தரமாக எதுவும் இருக்காது.காதல்,காமம்,ஆபாசம் எல்லாம் ஜாதகத்தில் கிரகங்கள் கூட்டு சேர்க்கையால் உண்டாவது.இதை ஜாதகத்தை பார்த்தவுடன் கண்டறியலாம்.ஜாதக கட்டத்தில் அவ்வளவு விசயம் இருக்கு.

1 கருத்து:

arul சொன்னது…

i understand this article but if it is explained with a sample chart it will be so helpful.