புதன், 30 நவம்பர், 2011

புலிப்பாணி ஜோதிடம் 300;மந்திரவாதி ஜாதகம்

புலிப்பாணி ஜோதிடம் 300;மந்திரவாதி ஜாதகம்


பாரப்பா யின்னமொரு புதுமை கேளு
பால்மதிக்கு நாலோனும் சுங்கன் கூடில் 
கூரப்பா யெத்தடத்தில் கூடிட்டாலும்
கொற்றவனே ஜென்மனுமோ மந்திரவாதி
வீரப்பா வராகி துர்க்கை தேவி அம்மன்
விதமான பூசை தனை மண்ணோர் போற்ற
சீரப்பா போகருட கடாட்சத்தாலே
செப்பினேன் புலிப்பாணி செயலைதானே.

விளக்கம்;

புதுமையான ஜாதகரின் பலனை கூறுகிறேன்.கேட்பாயாக.சந்திரன் இருக்கும் வீட்டிற்கு நாலாவது வீட்டானுடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால் அல்லது எட்டாம் இடத்தில் கூடியிருந்தாலும் இந்த ஜாதகர் மந்திரவதியாவார்.இவர் வராகி,துர்க்கா தேவி,காளிகா தேவி போன்றோர்களுக்கு பூசைகள் செய்வார்.இதனால் ஊரில் உள்ளோர்கள் போற்றுவார்கள்.இதனை போகருடைய அருளினாலே புலிப்பாணி கூறியுள்ளேன்!!


குறிப்பு;மந்திரவாதிகள்,மாயம்,மந்திரம் எல்லாம் ஏமாற்று வேலை என படித்த இளைஞர்களும்,கைநிறைய சம்பாதித்து செட்டில் ஆனவர்களும் சொல்கின்றனர்.என்னை போல நீயும் அறிவாளியா ! இரு என்பதுதான் அவர்கள் வாதம்.நான் என்ன சொல்றேன்னா இதை முழுசா ஆய்வு செய்யாம எதையும் நாம முடிவு பண்ண முடியாது.உளறி கொட்டவும் கூடாது.என் சின்ன வயதில் எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு மந்திரவாதி குடியிருந்ததாகவும்,அவர் ஒரு நாள் நான் மந்திரத்தால் எதுவும் செய்ய முடியும் என சொல்லி,எனது சைக்கிளை சில வினாடிகள் மறைய வைத்து பின்பு தோன்ற செய்தாராம்.இதன் பின் அவரைக் கண்டு பயந்து போய் அருகில் உள்ள குடியிருப்போர்கள் ஒன்று சேர்ந்து அவரை வீடு காலி செய்து போக சொல்லிவிட்டதாக சொல்வார்கள்.

இன்று ப்ளாக் மேஜி செய்பவர்கள் விமானம்,தாஜ்மஹாலை மறைய செய்பவர்கள் எல்லாம் கேள்விபடுகிறோம்.அவர்களை பிரமிப்பாக மீடியாக்கள் புகழவும் செய்கின்றன.ஆனால் காளி துணையால் பல சித்துக்களை செய்யும் மந்திரவாதிகள் தமிழ்கத்தில் பல கிராமங்களிலும்,காண முடியும்.மக்கள் ஒதுக்கி விடுவார்கள் என பயந்து தன் சக்தியை வெளிக்காட்டாமல் இருக்கும் மந்திரவாதிகள் நிறைய உண்டு.அவர்கள் சக்தி வாய்ந்த கோயில்களில் இன்றும் நடு சாம பூஜை செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

மந்திரவாதி என்றால் இன்று பணத்துக்காக குழந்தைகளை நரபலி கொடுக்கும் போலிகளும்,பெண்களை நிர்வாணமாக்கி பூசை செய்யும் காமுகர்களும்தான் இதன் மகத்துவத்தை அழிக்கின்றனர்.இந்த கொடூரம் உண்மையான மாந்திரீகத்தில் இல்லை.துன்பத்தில் வாடும் மக்களை காப்பதே மாந்த்ரீகம்

கருத்துகள் இல்லை: