திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி எப்போது..?
திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்க அடிப்படையில் தான் இதுவரை கடைபிடிக்க படுகிறது.திருக்கணித பஞ்சாங்கம் துல்லியமான கணிப்பை கொண்டது.அதன்படி 15.11.2011 காலை 10.12 க்கு சனி பெயர்ச்சி ஆனாலும்,பலர் வாக்கிய பஞ்சாங்கபடி தான் சனி பெயர்ச்சியை எதிர்பார்த்திருக்கின்றனர்.திருநள்ளாறு சனி பகவானின் முக்கியமான தலம்.சனி பகவானுடைய ப்ரீதி ஸ்தலங்களில் திருநள்ளாறுதான் அதிக பிரசித்தி பெற்ற தலமாக விளங்குகிறது.
ஏழரை சனி என்றாலும்,சனி திசை என்றாலும் திருநள்ளாறு போயிட்டு வாங்க என்பதுதான் ஜோதிடர்களின் முக்கிய பரிகாரமாக இருக்கும்.இது காலம் காலமாக பலரின் நம்பிக்கை.
ஆகவே திருநள்ளாறு தலத்தில் சனிப் பெயர்ச்சியை முன்னிட்ட சிறப்பு வழிபாடுகள் என்று நடைபெறுவதாக அறிவிக்கப்படுகிறதோ அதை திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி என்று குறிப்பிடுவதும் வழக்கமாகியிருக்கிறது.
பொதுவாக எல்லா ஆலயங்களிலுமே நடைபெறக்கூடிய விசேஷ வைபவங்கள்,சிறப்பு வழிபாடுகள் ஆகியவை வாக்கிய பஞ்சாங்க முறைப்படி கடைபிடிக்கப்படுவதே நீண்டகால மரபாகும்.
வாக்கிய பஞ்சாங்கபடி -நிகழும் கர வருடம்,மார்கழி மாதம்,5 ஆம் நாள் 21.12.2011 புதன்கிழமையன்று நாழிகை3 வினாடி 29க்கு சென்னை நேரப்படி காலை 7.54க்கு சனி கிரகப் பெயர்ச்சி நடைபெறுகிறது.
திருநள்ளாறு,திருக்கொள்ளிக்காடு,குச்சனூர் ,கொடுமுடி போன்ற சனி ப்ரீதி தலங்களிலும்,சனீஸ்வரனின் தனி சன்னிதி உள்ள மற்ற ஆலயங்களிலும் 21.12.2011 அன்று காலையிலிருந்து இரவு வரையிலுமாக சனிப் பெயர்ச்சியை முன்னிட்ட விசேஷ வைபவங்கள்,சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடைபெறும்.
திருக்கணிதம் பஞ்சாங்கம் துல்லியமானது.வாக்கியம் மிக பழைமையானது.என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக