ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 மகரம்
(உத்திராடாம் 2 ஆம்பாதம் முதல் திருவோணம்,அவிட்டம் 2 ஆம் பாதம் முடிய)
மகரம் பெண் ராசி.இதன் அதிபதியான சனி ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத அலித்தன்மை கொண்ட கிரகம்.திசைகளில் தெற்கை குறிக்கும் ராசி.மனித உடலில் முழங்காலை குறிக்கும் ராசி.மண் தத்துவம் கொண்ட ராசி.இந்த ராசியில் உச்சம் பெறும் கிரகம் செவ்வாய்.நீசம் பெறும் கிரகம் குரு.
பொதுவாக இந்த ராசியில் பிறப்பவர்கள் வில்லங்கம் வீராச்சாமிகள்.எடக்கு மடக்கான செயல்பாடுகளை கொண்டவர்கள்.ஆயக்கலைகள் 64 கற்றிருந்தாலும் சுயநலம் அதிகம் காணப்படும்.(நான் யதார்த்தமா பொதுவான கருத்தை சொல்றேன்.மெதுவா சிந்திச்சு பாருங்க..அருவாளை என் பக்கம் திருப்பிடாதீங்க சாமிகளா) சகோதரர்களால் நன்மை இல்லை.தாயை பிரிந்து இருப்பது இந்த ராசியின் அடிப்படை விதி.கடன் கொடுப்பதும் வாங்குவதும் பல பிரச்சினைகளை தரும்.புகழ்ச்சிக்கு மயங்குவீர்கள்.
தன்னலவாதிகள் என ஜோதிடம் சொல்கிறது.ஆன்மீகத்தில் உயர்ந்தவர்கள்.தியானம்,யோகா,பொது தொண்டு,அன்னதானம்,கோயில் கமிட்டி இதில் இந்த ராசியினர் அதிகம் காணப்படுவர்.பொது நலம் செய்ய வசதி இருப்பினும் தன் காசை கெட்டியாக பிடித்துக்கொள்வார்கள்.இதனாலேயே உறவினர்,நண்பர்கள் வெறுப்புக்கு ஆளாவர்.. இவர்கள் அறிவாற்றலில் வல்லவர்கள்.எதையும் எளிதில் கற்றுகொள்ளும் நுண்ணறிவு படைத்தவர்கள்.நடக்குதோ நடக்கலையோ ஆசைப்படுவதில் சமர்த்தர்கள்.மலையளவு ஆசை மனதுக்குள் இருக்கும்.ஒருவனை வீழ்த்திதான் மேலே வரவேண்டும்..என்றால் வீழ்த்திட்டா போச்சு என்பது இதில் சிலருக்கு கொள்கையாக இருக்கும்.தாழ்வு மனப்பான்மை அதிகம்...எவ்வளவு வசதியிருப்பினும்...ஏழை ஆகிடுவோமோ என்ற பயமும் த்ருடன் வந்துடுவானோ என்ற பயமும் இருக்கும்.தேவையில்லா குழப்பங்கள்...தான் ஒரு ராசியில்லாத ஆளோ என நினைக்க வைக்கும்படி காரிய தடைகள் காணப்படும்.மனதை திடமாக வைத்துக்கொண்டு செயல்பட்டால் நீங்களும் ரஜினிதான்.
குரு உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் உலவுவதால் சொத்துக்கள்,உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படும் காலமாக இது இருக்கிறது.சிலருக்கு சொத்துக்கள் விரயமும் ஆகியிருக்கலாம்...விரயம் ஆனோர்க்கு அது பரிகாரமாக நினைத்துக்கொள்ளுங்கள்.இல்லையேல் பெரிய கெட்ட செலவு வந்திருக்கும்.உங்கள் ராசிக்கு உச்ச கிரகமான செவ்வாய் கடகத்தில் இருந்து சிம்மத்துக்கு பெயர்ச்சியாகிவிட்டதால் இதுவரை இருந்து வந்த அனைத்து பயமும் உங்களை விட்டு அகலும்.தைரியமாக நீங்கள் செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.தொழிலில் இனி புதிய முடிவு எடுப்பீர்கள்.2012 மத்திமம் வரை சிம்ம செவ்வாய் உங்களுக்கு நற்பலன்களை வாரி வழங்க போகிறது.
உங்கள் ராசிக்கு பத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் தொழிலில் ஸ்திர தன்மையை உண்டாக்குவார்.தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறும் சனியால் பல நன்மைகள் உண்டாகும்.இதுவரை இருந்துவந்த அலைச்சல்,காரிய தடை நீங்கி வேகமான நடை போட வைக்கும்.பாவகிரகமான சனி கேந்திரம் பெறுவது பல நல்ல பலன்களை தருவது மட்டுமில்லாமல் உங்கள் ராசி நாதன் சனி துலாத்தில் உச்சம் பெறுவதால் உங்களுக்கு பல நன்மைகளை அள்ளிதரப்போகிறது.வருமானம் அதிகரிக்கும்.மொத்தத்தில் 2012 ஆம் வருடம் உங்களுக்கு இனிமையாகவே அமையும்.வாழ்க வளமுடன்!!
4 கருத்துகள்:
அம்மா மாதிரி முதல்ல கடுமையா சொல்லிவிட்டு கடைசியில் கனிமாதிரி பலன் சொன்ன நீங்கள் வாழ்க வளர்க
அய்யா,
நல்ல நேரத்தை ஒப்பென் பண்ணினால் சிறிது நேரத்திற்குள் கரண்டு போன டிவி மாதிரி இருள் சூழ்ந்து "பதிவுகளை மின்னஞ்சலில் பெற" என்று மிரட்டுவது போல் உள்ளது. அதை தூக்கி ஓரமாக போட்டால்தான் என்ன? சனி பெயர்ச்சி ஆகும் இந்த நேரத்தில் சனி (இருள்) நல்ல நேரத்தை செயல் படவிடாமல் மறைத்து நிற்பது போல் அப சகுனமாக நிற்கிறது. கொஞ்சம் என்னன்னு பாருங்க பாஸ்.
பதிவு மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி நண்பரே...
தனுஷ் ராசி?
கருத்துரையிடுக