திருநள்ளாறு சனிபகவான் வரலாறு;
திருநள்ளார் சனிஸ்வரர் ஆலயத்தில் சனிபெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி,21.12.2011 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.திருக்கணிதபடி சனி பெயர தொடங்கிவிட்டது 1.11.2011.முழுமையான சனி பெயர்ச்சி 15.11.2011 காலை 10.12 ஆகும்.
திருநள்ளாறு கோயிலுக்கு ஒரு காலத்தில் ஆதிபுரி என்பது பெயராகும்.அங்குள்ள சிவனை வழிபட்டு பிரம்மா பரிகாரம் பெற்றதாக ஸ்தலபுராண வரலாறு சொல்கிறது.பிரம்மதேவர் பூஜித்த சிவனுக்கு தர்ப்பாரண்யேஸ்வரர் ‘’ என்பது பெயராகும்.இங்குள்ள ஸ்தல விருட்சம் தர்ப்பை ஆகும்.
இங்குள்ள லிங்கம் சுயம்புவாக தோன்றியதாகும்.முசுகுந்த சக்கரவர்த்தி ஆண்ட காலத்தில் அந்த ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்துள்ளார்.இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு நளவிடங்கர்’’நளேஸ்வரம்’என்று பற்பல பெயரும் உண்டு.நளமகாராஜா கலிபுருடனின் அம்சமான சனி பகவானால் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகி,இறுதியில் இக்கோயிலுக்கு வந்து நளதீர்த்தத்தில் நீராடியபின் கலி நீங்கி சகல சம்பத்துகளையும் பெற்றான்.
இங்குள்ள தர்ப்பாராண்யேஸ்வரர் விக்ரகத்தின் கீழ் சனிபகவானால் எழுதி(முனிவர்களாகவும் இருக்கலாம்)பிரதிஷ்டை செய்யப்பட்ட இயந்திரமொன்று இருக்கிறது.இதுவே இந்த திருத்தலத்தின் பரிகார மகிமைக்கு காரணமாகும்.
கலிபுருடனாகிய சனிபகவான் நளமன்னன் முன் தோன்றி,நீ என்னிடம் விரும்பும் வரத்தை கேட்டு பெற்றுக்கொள்வாயாக’’என்று கேட்க,நளன் உனது ஆட்சி நடக்கும் காலத்தில் என் வரலாற்றைக் கேட்டாரை நீ அடையாமல் இருப்பாயாக’’ என்று வேண்டினான்.இதனை நளவெண்பா ,கலி நீங்கு காண்டத்தில்,
‘’உன் சரிதம் சொல்ல உலகாளும் காலத்தும்
மின் சொரியும் வேலாய்!மிக விரும்பி-என் சரிதம்
கேட்டாரைநீயடையேல் என்றாந்கிளர்மணிப்பூண்
வாட்டானை மன்னன் மதித்து’’
என்று கூறுகிறது.எனவே சனிபகவானின் பிடியில் சிக்கியோர் அக்காலத்தில் நளமன்னனின் சரித்திரத்தை வாசிப்பது சிறந்த பரிகாரமாகும்.என அக்க்காலம் முதல் நம் பெரியோர் சொல்லி வந்திருக்கின்றனர்.இதில் உள்ள சூட்சுமம் என்னவெனில்,இவனை விட நாம் கஷ்டப்படவில்லை என தைரியம் வரும் அளவுக்கு கஷ்டத்தை நளன் பட்டதுதான்.
சனி தனது சஞ்சாரத்தின் போது ரோகிணி சாரத்தில் நுழையும்போது உலகம் பெரும் அழிவுகளை சந்திக்கும் என்றும்,போர்,வறுமை,வெள்ளம்,பசி,பட்டினி என மக்கள் துன்புறுவர் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
வராஹிமிரர் தனது ப்ருஹத் சம்ஹிதை நூலின் 47 வது அத்தியாயம் 14 வது சுலோகத்தில் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.
’’ரோஹிணி சகடமர்க்க நந்தனோயதி
பிநத்திருதிரோ(அ)தவாசிகி!
கிம்வதாமியத நிஷ்டசாகரே
ஜகத் சேமுபயதி ஸ்ங்க்சயம்’’
இன்னொரு பாடலில் பிரளய காலத்துக்கு ஒப்பானதொரு நிலையை உலகம் சந்திக்கும்’’என்ரு கூறுகிறது.மேலும் இக்கருத்தை காஸ்யபர்,பிரம்மகுப்தர் ஆகியோரும் ஒப்புக்கொள்கின்றனர்.
சனி தன் தந்தை சூரியனை விடவும் பலமானவனாக மாற வேண்டும் என்பதற்காக காசியில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அதன்படி சனீஸ்வரர் என் பெயர் பெற்றார் என புராணம் சொல்கிறது.அதன்படி நாமும் காசி விஸ்வநாதரை வழிபட்டால் சனி தோசத்துக்கு சிறந்த பரிகாரமாக அமையும்.
திருநள்ளாறு சென்று அங்குள்ள தீர்த்தகட்டங்களில் முதலில் நீராட வேண்டும்.
1.பிரம்ம தீர்த்தம்
2.வாணிதீர்த்தம்
3.அன்ன தீர்த்தம்
4.அகத்திய தீர்த்தம்
5.நளதீர்த்தம்
6.நளகூப தீர்த்தம்
இதில் நீராட முடியாதவர் நள தீர்த்தத்தில் மட்டுமாவது நீராடலாம்.முதலில் குளக்கரையில் உள்ள வினாயகரை மூன்று முறை வலம் வந்து வழிபட்டு,குளத்தை உருவாக்கியோருக்கு நன்றி சொல்லிவிட்டு,தீர்த்தத்தை மூன்று முறை தலையில் தெளித்துவிட்டு,அதன்பின் கறுப்பு நிற வஸ்திரம் கட்டிக்கொண்டு,உடலில் நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு,மேற்கு பார்த்து நின்று குளிக்கலாம்.தலையில் நீலோத்பவ மலரை வைத்து மூழ்குவது இன்னும் சிறப்பு.அதன்பின் புத்தாடை அணிந்து,கறுப்பு நிற வஸ்திரங்களையும்,எள்,எள்சாதம்,முதலியவற்றை தானம் செய்வது விசேஷமாகும்.
நீராடும்போது இந்த மந்திரத்தை சொன்னால் இன்னும் விசேஷம்.
‘’அஷ்ய ஸ்ரீ சனீஸ்வர கிரஹ
மந்த்ரஷ்ய;
அகஸ்த்ய ரிஷி காயத்ரி சந்த;
சனிச்சர தேவதோ
மம கிரஹ பீடா நிவாரணார்த்தே
சனைச்சர கிரக சுப பல
சித்தியர்த்தே ஜெபே விநியோக’’
கடுமையாக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பு நிற பசுவை தானம் செய்வது சிறந்த பரிகாரம்.
ஏழரை சனி,அஷ்டம சனி,அர்த்தாஷ்டம சனி போன்றவை நடக்கும் ராசியினர் நவகிரஹ ஹோமம் வீட்டில் செய்வது நல்ல பரிகாரம்.
10 கருத்துகள்:
நல்ல பதிவு நண்பா .. பல புதிய ஜோதிட விஷயங்களை சொல்கின்றிர்கள் ..
நானும் இரண்டு முறை இந்த கோயிலை தரிசித்திருக்கிறேன்..
அதனுடைய சிறப்பும், வல்லமையும் வியப்பிற்குறியது...
அந்த ஆலய விவரங்களை கொடுத்தற்க்கு..
Yennay! Konja Nalluku munnala Rasathiammal intha koilukku poi neega sonna intha parikarangala pannunagaley. Onnum Palan illay polirukku ...
thalyva sithodu accident pathi pathi va kanam?
நன்றி சதீஷ்..அந்த மேப் படமும் அருமை.
sir ,good post ,continue it
சோதிடர் சதீஷ்குமார் அவர்களின் பதிவு,
பாராட்டுதலுக்குறியது.
என் ஆழ்மனதின் வாழ்த்துக்கள்
்்.
அடியேன்
எல்.தருமன்
18.பட்டி.
மனம் நெகிழ வைத்த உண்மைகளை உங்களால் இந்த ஸ்தலத்தின் வரலாறு
நன்றி
Thank u sathish
Nalan history venum
கருத்துரையிடுக