திங்கள், 15 அக்டோபர், 2012

பவானி கூடுதுறை புரட்டாசி அமாவாசை அன்னதானம்!

பவானி கூடுதுறையில் இன்று புரட்டாசி மகாளயபட்ச அமாவசைக்காக திதி,தர்ப்பணம் கொடுத்தல்,தானம்,தர்மம் வழங்குதல்,அன்னதானம் செய்தல் மிக நல்லது புன்ணியம் சேர்க்கும் என எழுதியிருந்தேன்...


ஆதரவற்ற முதியவர் ,குழந்தைகள் காப்பகத்திற்கு சில உதவிகள் செய்யலாம் என இருக்கிறேன்..விருப்பம் இருப்பவர்கள் உடன் இணையலாம் என எழுதியிருந்தேன்..அதன்படி சில நண்பர்கள் தாங்களும் பங்களிப்பதாக சிறு தொகைகளை அனுப்பி இருந்தனர்...

     அரிசி,சர்க்கரை வழங்கிய போது  நண்பர் தினகர்,நான்,அருள் தீபம் காப்பாளர்

அவ்ர்கள் சார்பில்,பவானியில் உள்ள அருள் தீபம் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்திற்கு இன்று காலையில் சென்று ,உணவு அளிப்பதாக காப்பாளரிடம் சொன்னேன்..சாப்பாடு கூட இன்னிக்கு கிடைச்சிடும் சார்..ஆனா அரிசியா வாங்கிக்கொடுத்தா உங்க தானம் செய்தவர்களை நினைத்து குழந்தைகள் 10 நாள் சாப்பிடுவாங்க என்றார்..அதுவும் சரிதான் என எண்ணி,அரிசி 25 கிலோ ,சர்க்கரை 4கிலோ, அந்த இல்லத்தில் இருந்த 50 குழந்தைகளுக்கு இனிப்புகள்,பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கி கொடுத்தேன்.உணவும் வழங்கப்பட்டது....அதற்காக அக்குழந்தைகள் தனக்கு தானம் வழங்க உதவி செய்த நண்பர்கள் அவர்கள் குடும்பத்தார்க்கு நன்றி தெரிவித்ததும்பிரார்த்தனை செய்ததும் மறக்க முடியாத அனுபவம்..

                                                குழந்தைகளின் பிரார்த்தனை

                                              குழந்தைகளின் பிரார்த்தனை

என்னுடன் பேஸ்புக் நண்பர்,வானியல் ஆய்வாளர்,சென்னையை சேர்ந்த தினகர் அவர்களும் கலந்துகொண்டார்..அவரை சந்தித்ததும் மகிழ்ச்சியாக இருந்தது...

மிகவும் கஷ்டமான சூழலில் 50 குழந்தைகளை வைத்து அந்த இல்லம் பராமரிக்கப்பட்டு வருகிறது..முதல் நாள் இரவு நான் அங்கு போனபோது நல்ல மழை பெய்துகொண்டிருந்தது...சில குழந்தைகள் வெறும் தரையில் படுத்துறங்கினர்..அவர்கள் காலடியில் மழை நீர் கூரை வழியாக ஒழுகி சொட்டிக்கொண்டிருந்தது...பாய் இல்லையா சார்..பாய் இருக்குங்க..சின்னப்பசங்க..ராத்திரியில் யூரின் போயிடுவாங்க..அதான் அடிக்கடி அலசி.அடிக்கடி கிழிஞ்சிடுது என்றார்..ப்ளாஸ்டிக் பாய் வாங்கி வரேன்..கீழே படுக்க வைங்காதீங்க என சொன்னேன்..நாங்கள் பிஸ்கட்,ஸ்வீட் கொடுத்துவிட்டு வெளியே வந்து பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது,12 வய்சு பொண்ணு வெளியே வந்து அண்ணா தேங்க்ஸ்...என சொல்லியது மனதை நெகிழ செய்துவிட்டது!!


நன்றிகள் அனைத்தும்,புண்ணியங்கள் அனைத்தும் எனக்கு பணம் அனுப்பிய நண்பர்களுக்கு சென்று சேரட்டும்..!!

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

ஆடி மாசம் புது மண தம்பதிகளை ஏன் பிரிச்சு வைக்கிறாங்க..?

ஆடி மாசம் புது மண தம்பதிகளை ஏன் பிரிச்சு வைக்கிறாங்க..?

ஆடி மாசம் முதலிரவு நடந்தா கரு உண்டாகி அடுத்த பத்தாவது மாசமான சித்திரையில் குழந்தை பிறக்கலம்..சித்திரை அக்னி நட்சத்திரம் எனும் கடுமையான வெப்பம் நிறைந்த மாசம்..இம்மாதத்தில் குழந்தை பிறந்தால் வெப்பத்தால் உண்டாகும் நோய்கள் குழந்தையை பாதிக்கும் உடல் நலிவடையும்..அப்போ எல்லாம் இவ்வளவு மருத்துவ வசதி கிடையாது...குழந்தைகள் பிறப்பதும் ஏதாவது நோயால் இறப்பதுமாக இருப்பதால் ஒவ்வொருவரும் 10,15 குழந்தைகள் வரை பெற்றுக்கொண்டனர்...சில குழந்தைகள் இறந்தாலும் சில குழந்தைகள் பிழைக்குமே என்பதற்காக..சித்திரை மாசம் குழந்தை பிறந்தா அப்பனுக்கு ஆகாது ..வம்சத்துக்கு ஆகாது என்பதும் இதனால்தான்..
அக்குழந்தைக்கு பல நோய்கள் உண்டாகலாம்..என்பதோடு அவன் ஜாதகத்தில் மேசத்தில் சூரியன் உச்சம் ஆகியிருக்கும்..சரியான கோபக்காரனாகவும் இருப்பான்..யாரிடமும் அனுசரித்தும் போக மாட்டான்..குடும்பத்தில் கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடாகவும் இருக்கும் என்றெல்லாம் யோசித்துதான் ஆடி மாதத்தை அதுக்கு ஆகாதுன்னு சொல்லி வெச்சிருக்காங்க!!

மாரியம்மன் உருவான கதை

ஆடி மாசம் பொறந்தாச்சுன்னா மூலைக்கு மூலை அம்மன் கோயில்ல கூழ் ஊத்த ஆரம்பிச்சிடுறாங்க ...மாரியாத்தா கூழ் தான் குடிக்குமா...பெப்சி எல்லாம் குடிக்காதா...? ஒரு சேஞ்ச்க்கு அதையும் கொடுங்கடா....என ச்லித்துக்கொள்பவரா நீங்க..?.நம் முன்னோர்கள் இந்த சம்பிரதயம் எதுக்கு வெச்சிருக்காங்க தெரிஞ்சா இப்படி பேச மாட்டீங்க..இன்று நாகரீகம்,வசதி வாய்ப்பு,கம்ப்யூட்டர்,கார்,பைக் என நாம் பரபரப்பாக இருந்தாலும் 20 வருடங்களுக்கு முன்பு ஐ.டி கம்பெனியை நம்பி நாம் இல்லை..விவசாயத்தை நம்பித்தான் இருந்தோம்....ஒண்ணு முதலாளி..அல்லது கூலி...இவர்களை சார்ந்த வணிகர்கள் இதுதான் பெரும்பான்மை...சாதாரண பாமர மக்களை அதிகம் கொண்ட,கிராமங்களை அதிகம் கொண்ட நம் இந்தியாவில் மழையை நம்பித்தான் அனைவரும் இருந்தோம்...

மழை பெய்தால்தான்..விவசாயம் செழிக்கும்..விவசாயம் செழித்தால்தான் எல்லாம் செழிக்கும்..எனவே மழை வேண்டி ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு தெய்வம் உருவாக்கப்பட்டது..பெண் தானே இரக்கமுள்ளவர்..தாயை விட அன்பு ஏது? எனவே பெண் தெய்வத்தை வணங்கினர்..மாரி என்றால் மழை..மழைக்கான தெய்வத்தை மாரியம்மன் என வழிபட்டனர் அதற்காக நேர்த்திக்கடன் செலுத்தினர்..நோயை விரட்டும் தெய்வமாகவும் மாரியம்மன் வழிபடப்பட்டது..ஒவ்வொரு கால சூழலிலும் ஒவ்வொரு நோய் நம்மை தாக்கும்..மழைக்காலத்தில் ஒரு சில நோய்கள்...வெய்யில் காலத்தில் சின்னம்மை,பெரியம்மை ,வெட்கை போன்றவை..இவற்றை குணமாக்கும் அருமருந்துகள் வேப்பிலை,மஞ்சள்தான்..இவை இரண்டும் அற்புத கிருமி நாசினிகள் என இப்போதான் விஞ்ஞானிகள் தலை சொறிந்து கொண்டே ஒப்புக்கொள்கிறார்கள் ஆனா நம்ம முப்பாட்டன் இதை அப்பவே தெரிஞ்சி வெச்சிருந்தான்..

இன்னிக்கு அமெரிக்காகாரன் இதை எப்படியாவது நம்ம சொத்தாக்கிடனும்னு துடிக்கிறான் ...ஆனா இந்த மரம் நம் இந்திய மண் சூழலுக்குத்தான் பழுதில்லாத அற்புத மருந்தாக விளையும்..ஆடி மாதம்  தமிழ் மாதங்களில் நாலாவது மாதமாக வருகிறது..இதை நம் முன்னோர்கள் ஒரு ராசியில்லாத மாதமாகவே கருதி வந்தனர்..நோய்கள் உண்டாக்கும் மாதம் மாதங்களில் ஒன்றாகவும்,உள்ளுறுப்புகள் பாதிக்கும் நோய்கள் உண்டாக்கும் கிருமிகள் உற்பத்தியாகும் மாதமாகவும் கருதினர்..இந்த பயத்தால் முதலுதவியாக நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க வேண்டும் என கருதினர்..அதற்காக ஒரு மருந்தை தயாரித்தனர்..அதுதான் கூழ்..இதில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் ராகியை கூழாக்கி அதில் மருந்தான வேப்பம்பூ,கலந்து கொடுத்தனர்..சும்மா கொடுத்தா நம் மக்கள் குடிப்பானா...பிகு பண்ணுவான்...அதுக்காக உண்டாக்கப்பட்டது திருவிழா...அப்பல்லாம் கூலி ஆட்கள்தானே அதிகம்..அவன் எங்கிருந்து கூழ் தயரிக்க முடியும்..? திருவிழா வெச்சா பணக்காரன் தான் நடத்த முடியும்..அவன் கிட்ட பணம் வர வைக்கவும் திருவிழா உதவும்..சும்மா கேட்டா தருவானா..சாமிக்குன்னு கேட்டா அள்ளி தருவான்..இதனால் ஏழைகளின் பசியும் அடங்கியது...ஒரே கல்லில் நம் முன்னோர் எத்தனை மாங்கா அடிச்சிருக்காங்க பாருங்க!!

வெள்ளி, 12 அக்டோபர், 2012

ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவி,அன்னதானம்



வரும் திங்கள் கிழமை காலை அமாவாசை அன்று ஆதரவற்ற முதியோர் இல்லம் சென்று அன்னதானம்,உடைகள் தானம் செய்யவிருக்கிறேன்..பவானி கூடுதுறையிலும் அன்னதானம் செய்கிறேன்... பேஸ்புக் மற்றும் நல்ல நேரம் இணைய தளத்தில் வந்த அறிவிப்பை பார்த்து சிலர் அவரவரால் முடிந்த தொகையை அனுப்பி வைத்து, எங்கள் சார்பிலும் நடத்துங்கள் என்றனர்...அவ்வாறு பணம் அனுப்பி வைத்தவர்களுக்காக முதியோர் இல்லத்தில் அவர்கள் குடும்பத்தினருக்காக சிறப்
பு பிரார்த்தனை செய்யப்படும்..பவானி கூடுதுறை கோயிலில் சங்கமேஸ்வரருக்கு அவர்கள் பெயரில் அர்ச்சனையும் செய்து பிரசாதமும் அனுப்பி வைக்கப்படும்..நான் வெறும் கருவிதான்...என்னை நம்பிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி..உங்கள் பிரச்சினைகள் பிரார்த்தனைகள் இதன்மூலம் சிறிதளவேனும் குறைந்தால் மகிழ்ச்சி..நிச்சயம் நல்லது நடக்கும்..வாழ்க வளமுடன்
 
என்னை தொடர்பு கொள்ள விரும்பினால் 9443499003 எண்ணுக்கு அழைக்கவும் மெயில்;sathishastro77@gmail.com

வியாழன், 11 அக்டோபர், 2012

கடகம் ராசியும் கண்டக சனியும்;ஜோதிடம்

கடகம் ராசியும் கண்டக சனியும்;ஜோதிடம்

கடகம் ராசிக்காரங்களுக்கு இப்போ சனி ராசிக்கு 4ல் நிற்கிறார்..இது கண்டக சனி எனப்படும்..சுக ஸ்தானமாகிய நான்காம் இடத்துக்கு சனி வருவதால்    சுகம்   பாதிக்கப்படும்..  அதாவது உடல் ஆரோக்கியம்..வீடு,சொத்துக்கள்,தாயார்,வர்த்தகம்,வாணிகம்,உற்றார் உறவினர்,கல்வி போன்றவற்றையும் 4 ஆம் பாவம் குறிப்பதால் இவை எல்லாம் சிக்கல் உண்டாக்கும் என்பது ஜோதிட விதி..பொதுவாகவே சனிக்கும் க்டகத்துக்கும் ஆகாது...ஏழு,எட்டுக்குடையவன்  ஆச்சே..


கடக லக்னத்துக்கு சனி பாவி என்பதால் அந்த சனி உச்சம் வேறு அடைந்து துலாத்தில் நிற்கிறார்...இதனால் மனதில் அதிக குழப்பம் உண்டாக்கும்..40 வயதை கடந்தவர்களுக்கு ரத்த அழுத்தம்,நீரிழிவு தொந்தரவுகள் அதிகமாகலாம்..கல்வி கற்கும் நிலையில் இருப்பவர்களுக்கு மேற்படிப்பில் பல சிக்கல்கள்,பாடங்கள் கடுமையக இருந்து அதன் மூலம் மன உளைச்சல் வரலாம்...பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான வில்லங்கள் உண்டாகலம்..பெண்களுக்கு 4 ஆம் இடம் ஒழுக்க ஸ்தனாமாகவும் வருவதால் ஆண்களால் சில பிரச்சினைகள் உண்டாகலாம் கவனம் தேவை..புதிய ஆட்களிடம் பழகும்போது எச்சரிக்கை தேவை..இல்லையெனில் செய்யாத தவறுக்கு கெட்ட பெயர் உண்டாகும்..

கண்டக சனி கண்டத்தை கொடுக்கும் என அதிக பயம் கொள்ளத்தேவையில்லை..ஜாதகத்தில் நல்ல திசா புத்தி நடந்தாலோ உங்கள் ஜாதகத்தில் சுக்ஸ்தானாதிபதியும்,லக்னாதிபதியும் கெடாமல் இருந்தாலோ இது அதிக பாதிப்பு தருவதில்லை..அதுவும் இல்லாம கடக ராசிக்காரங்கதான் மன தைரியத்துல மத்தவங்களுக்கு ஆறுதல் சொல்லும் அளவு மன உறுதி படைச்சவங்க ஆச்சே..சந்திரன் ராசியில் ஆட்சி பெறுவதால் உங்களை போல தெளிவான ஆளு யாரு இருக்கா...? அதனால எவ்வளவு சிரமம் வந்தாலும் அதை நெருப்பாற்றில் நீந்தி வருவது போல கரை சேர்ந்துவிடுவீர்கள்...

காதலுக்கும் கடக ராசிக்கும் அவ்வளவு பொருத்தம் உண்டு..ஏன்னா இயற்கையிலியே கடகராசிக்காரங்க ரொம்ப அழக இருப்பாங்க..பொண்ணுங்க வலிய வந்து வழியும்..பெண்களுக்கோ ஆண்களால் தினசரி தொல்லைதான்...இன்னிக்கும் ஒருத்தன் லவ் லெட்டெர் கொடுத்துட்டான்..என சலித்துக்கொள்ளும் அளவு தொல்லைகள் இருக்கும்..செல்போன் வெச்சிருந்தா ஓய்வே இருக்காது..இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு சார்ன்னு சொல்றீங்களா..? நண்டு கொழுத்தா வலையில தங்காது...அதுபோல கொஞ்சம் பணத்தோட,சந்தோசமா இருந்தா ஊர் சுத்த கிளம்பிடுவான் கடக ராசிக்காரன்..என்றுதான் நண்டு படம் வெச்சிருக்காங்க..தானும் சந்தோசமா இருக்கனும்..தன்னுடன் இருப்பவர்களும் சந்தோசமா இருக்கனும் என நினைப்பாங்க..கொண்டாட்டம்,கும்மாளம்தான் எப்போதும்..பணம் இல்லைன்னா இழுத்து போர்த்தி வீட்டுக்குள்ளியே முடங்கி கிடப்பாங்க..

நீங்க செய்ற தப்பை அவ்ளோ சீக்கிரம் யாரும் கண்டறியவும் முடியாதே ஏன்னா நீங்க புத்திசாலி ஆச்சே..சந்திரன் அழகையும்,அறிவையும் ஒருங்கே படைச்சிட்டானே ..உங்களுக்கு..அதை வைத்து சரியான படி பயன்படுத்தினால் கடக ராசிக்காரங்க ஆக்க சக்தி..இல்லைன்னா எல்லா குறுக்கு வழிகளிலும் போக கூடிய அழிவு சக்தி...பெரிய மகான்கள்,பெரிய தலைவர்கள்,புதிய கண்டுபிடிப்பாளர்கள் பலர் இந்த ராசிக்காரங்கதான்...

சந்திரன் மனசு..சனி இருட்டு..இப்போ இது இரண்டும் ஒண்ணு சேர்ந்தா மாதிரி..இருட்டான சூழலில் நீங்க இருக்கலாம்..ஆனா இது நிரந்தரம் இல்லை..மார்கழி 8 ராகு பெயர்ச்சி ஆனால் பெரிய பிரச்சினைகள் பல தீரும்..

புரட்டாசி  மகாளய பட்ச அமாவாசை யின் மகத்துவங்கள் மற்றும் உங்கள் சகல பிரச்சினைகளும் தீர ஒரு வழி என்னும் பதிவை படிக்காதவர்கள் இங்கு க்ளிக் செய்யவும்

புதன், 3 அக்டோபர், 2012

உங்கள் சகல பிரச்சினைகளும் தீர;மகாளய பட்ச அமாவாசைக்கு என்ன செய்யனும்..?

மஹாளய அமாவாசை சகல தோசமும் நீக்கும் சிறப்பு அன்னதானம்,பரிகாரம் பவானி கூடுதுறை;

 மகாளய பட்ச அமாவாசை வரும் திங்கள் கிழமை 15.10.2012 அன்று வருகிறது..மாதம் தோறும் அமாவாசை வந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை முக்கியத்துவம் வாய்ந்ததாகவும்,புனிதமானதாகவும், நம் முன்னோர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..இந்த அமாவாசையில் செய்யப்படும் திதி,தர்ப்பணம் ,தானம்,தர்மங்கள் அனைத்துக்கும் உடனடி பலன் உண்டு....

இறந்துபோன நம் முன்னோர்கள்,இறந்தவர்கள் திதி தெரியாமல் எந்த நாளில் திதி,தர்ப்பணம் செய்வது என தடுமாறுபவர்கள்,அகால மரணம் அடைந்தவர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது ஆத்மாவுக்கு சாந்தி உண்டாகும்...சம்பந்தப்பட்டவர் குடும்பத்திற்கும் அவரது ஆசி உண்டாகும்...

இதுவரைக்கும் திதி தர்ப்பணம் எங்க குடும்பத்துல எங்க அப்பா,தாத்தா யாரும் கொடுத்தது இல்லை..எனக்கும் அப்படீன்னா என்னன்னே தெரியாது...எங்க முன்னோர்கள் யாரையும் நினைச்சு கோயிலுக்கு போய் திதி தர்ப்பணம் இதுவரை கொடுத்ததே இல்லை...என்பவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் போங்க..தயவு செய்து வரும் மகாளய பட்ச அமாவாசையில் உங்க முன்னோர்களை நினைச்சு திதி தர்ப்பணம் கொடுங்க..உங்க பிள்ளைகள் எதிர்காலம் சிறக்கும்..அவர்களுக்கு உங்க முன்னோர்களின் ஆசியும்,வழிகாட்டலும் கிடைக்கும்..

அமாவாசையில் பசுக்களுக்கு கோதுமை தவிடு 2கிலோ ,வெல்லம்,அகத்தி கீரை கலந்து ஊறவைத்த உணவை தரலாம்..

ஏழைகளுக்குஅன்னதானம்தரலாம்...ஆதரவற்றோர்,முதியோர்,ஊனமுற்றோர்க்கு உதவிகள் செய்யலாம். இதனால் உங்கள் வாழ்வில் பல சிக்கல்கள் தீரும்..இது முக்கியமான ஜோதிட பரிகாரம் ஆவதால் அஷ்டம சனி,ஏழரை சனி,முன்னோர் சாபம்,பித்ரு சாபம்,புத்திர தோசத்தால் குழந்தை தாமதத்தால் தவிப்பவர்களுக்கு இது நல்ல பரிகாரம் ஆகும்...காவிரி,அமிர்த நதி,காவிரி,பவானி மூன்று முக்கிய நதிகள் கூடும்..பவானி கூடுதுறை அருள்மிகு சங்கமேஸ்வரர் ஆலயத்தில் அன்னதானம் செய்வது மிக சிறப்பு..இங்கு வர முடியாதவர்கள்,வெளி நாட்டில் இருப்பவர்கள் என்னை தொடர்புகொண்டால் அவர்களுக்காக நாங்களே அன்னதானம் செய்து அதற்கான புகைப்படமும்,கோயில் பிரசாதமும் அனுப்பி வைக்கிறோம்..

என் வாடிக்கையாளர்கள் சிலருக்காக ஊனமுற்றோர்,ஆதரவற்றோர்க்காக உதவிகள்,அன்னதானம் போன்றவை அன்று நாங்கள்  செய்து தர இருக்கிறோம்..நீங்கள் விரும்பினால் இந்த நல்ல காரியத்தில் இணைந்து கொள்ளலாம்..ஒருவருக்கு அன்னதானம் ரூ.50 எனும் அளவில் எத்தனை பேர்க்கு செய்ய விரும்புகிறீர்களோ...அதன்படி செய்யலாம்..என் செல்;9443499003 ஈமெயில்;sathishastro77@gmail.com

அரசு உதவியால் காதுகேளாத, வாய் பேச முடியாத பள்ளி பவானி டூ ஈரோடு ரோட்டில் புதூர் என்னும் ஊரில் இருக்கிறது..இங்குள்ள குழந்தைகள் 100 பேர்க்கும்,ஆதரவற்ற முதியவர்கள் 50 பேர்க்கும்,செருப்பு,புதிய உடைகள் தானம் பெற்ரு தர ஆவலுடன் இருக்கிறோம்..ஒருவருக்கு ரூ.600 ஆகும்..உதவி செய்ய விரும்புபவர்கள் முன்னதாக தொடர்பு கொள்ளவும்...

சந்தோசத்துல பெரிய சந்தோசமே அடுத்தவங்களை சந்தோசப்படுத்தி பார்க்குறதுதான்!!