உலகம் தோன்றிய நாள் முதல் உண்டான ஒலி அலைகள் ஆகாயத்தில் தேங்கி
நிற்கின்றன..வேத மந்திர ஒலிகளும் இதர நம் பேச்சுகளும் ஆகாயத்தில் பதிந்து
நிற்கின்றன..மனம் ஒருநிலைப்படுத்துவதால் தியானம்,யோகா இவைகள் மூலம் உடல்
சுத்தம்,மன சுத்தம் அடைந்தவர்களால் இதை உணர முடியும் கிரகிக்க முடியும்
இப்படி கிரகிக்கப்பட்டுதான் வேதங்கள் எழுதப்பட்டன..மந்திரங்கள்
உண்டானது..அசரீரி என இவை வானில் இருந்து கேட்கும் குரலாக
சொல்லப்பட்டது..
இஸ்லாமியர் காதுகளில் கை வைத்து தொழுவதும் கடவுளின் குரலை
கேட்கத்தான்.செல்போன் எப்படி இயங்குகிறதோ
அதைப்போல தூரத்தில் இருக்கும் மனிதர்களிடம் எந்த கருவியும் இல்லாமல் பலர்
பேசி இருக்கின்றனர்..வாழ்க வளமுடன் என பிறரை வாழ்த்துவாதால் அந்தஒலி அலைகள்
பிரபஞ்ச சக்தியில் எதிரொலித்து வாழ்த்தியவரையே வந்தடைகிறது நீங்கள் பிறரை
மனங்குளிர வாழ்த்தினால் நீங்கள் குறையின்றி வாழ்வீர்கள் என்பதால்தான் நம்
முன்னோர்கள் வாழ்த்துவதை ஆசி என அழைத்து அதை காலம் காலமாக நம்மை பின்பற்ற
வைத்துள்ளார்கள்...பிறரை வாழ்த்துவாதால் மனம் விட்டு பாராட்டுவதால்
உங்களுக்கு அதிக நன்மை..உடல் ஆரோக்கியமும் ,செல்வவளமும் உண்டாகும்...பிறரை
ஊக்கப்படுத்துங்கள்...அன்பாக உற்சாகப்படுத்துங்கள்...!! நிறைய அதிசயங்கள்
உங்கள் வாழ்வில் நடக்கும்!!
வெற்றிகரமான மனிதர்களை பார்த்தோமானால் அவர்கள் மனம் விட்டு சிரிக்கிறார்கள் மனம் விட்டு அழுகிறார்கள்..மனம் விட்டு பேசுகிறார்கள்..மனம் விட்டு விகல்பமில்லாமால் பாராட்டுகிறார்கள்..தன்னை விட தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் நல்ல செயல்கள் செய்தாலும் எல்லோரிடமும் அதை சொல்லி சொல்லி ஆனந்தப்படுகிறார்கள்..பாராட்டுகிறார்கள்..உற்சாகபடுத்துகிறார்கள்..கடினமாக உழைத்து ,நன்கு சம்பாதித்து ட்தாராளமாக தன்னை சார்ந்தவர்களுக்கு செலவழிக்கிறார்கள்..பொறாமைபடுதல்,பழிவாங்குதல்,கோபபடுதல் ஒரு நோய் அது உங்களை வெகு சீக்கிரம் கீழ்நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது...எங்கு சந்தோசம் குடிகொண்டிருக்கிறது..? எங்கு மகாலட்சுமி வாழ்கிறாள்..? விகல்பமில்லாமல் அன்பு காட்டும்,உற்சாகபடுத்தும்,பிறரை வாழ்த்தும் உள்ளம் இருக்கும் வீடுகளில்தான் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக