புதன், 12 மார்ச், 2014

நல்ல நேரத்தில் குழந்தை பிறக்குமா..ஜோதிடம்

ஒரு குழந்தையின் ஜாதாகத்தில் லக்னாதிபதி வலுவா இருக்கான்னு பாரு..லக்னத்தை சுபர் பார்க்குதான்னு பாரு....திசை நல்லாருக்கான்னு பாரு,...இல்லைன்னா அக்குழந்தைக்கு 12 வயசு வரைக்கு கண்டம்..மாசம் ஒருமுறை கோயில்ல தாயத்து மந்திரிச்சு கட்ட சொல்லு..12 வயசு வரைக்கும் ஆஸ்பத்திரிக்கு ஓடிக்கிட்டே இருக்கனும்..என்பார் என் குரு..இப்பல்லாம் தினசரி ஒரு போன் வருது..

சார் டாக்டர் சிசேரியன்னு சொல்லிட்டாரு நல்ல நேரம் குறிச்சு சொல்லுங்க அந்த தேதியில சிசேரியன் பண்ணிடலாம்..என்பார்கள்...ஒரு வாரம்தான் டைம் இருக்கும்..அதில் குழந்தைக்கு,அப்பா,அம்மாவுக்கு பாதிப்பில்லாத லக்னம் மட்டும் ,ராகு காலம்,எமகண்டம் இல்லாத நேரம் குறித்து தருகிறேன்..குழந்தைக்கு ராஜயோகம் ,பெரிய கலெக்டர் ஆவான்,முதலைமைச்சர் ஆவான் என்றெல்லாம் கணிப்பதில்லை..
ஆனால் சனி வக்ரம்,குரு வக்ரம்,சனி செவ்வாய் சேர்க்கை இதெல்லாம் தவிர்க்க முடியாது..விதி அப்படியேதான் இருக்கும் ..காரணம் ஒரு வார காலம் என்பதால்...ஆனா அக்காலத்தில் சாந்தி முகூர்த்த நேரம் குறிப்பார்கள்...அது அந்த நேரத்தில் கர்ப்ப தானம் நடந்தால் மட்டும்..சரியா 10 வது மாதத்தில் பிறக்கும் குழந்தை நல்ல நேரத்தில் பிறக்கும் என்ற கணக்கு..பெரும்பாலும் அது தப்பாது..இப்பல்லாம் முகூர்த்த நேரமே மண்டபம் எப்போ ஃப்ரீயா இருக்கோ அதை வெச்சுதான் முடிவு செய்யப்படுது!!

லக்னத்தை அசுபர் பார்க்காமல் இருக்கனும்...லக்னத்துக்கு பாக்யாதிபதி 6,8,12ல் கெடாமல் இருக்கனும்..லக்னத்தில் அசுபர் இல்லாமல் இருப்பது நல்லது..எந்த ஜாதகத்திலும் சந்திரம் மிக முக்கியம்..மனக்காரகன் உடல்காரகன் அவர்தான் லக்னாதிபதி உயிர்காரகன் லக்னாதிபதி நன்றாக இருந்தால்தான் ஆயுள் நன்றாக இருக்கும்..

சிசேரியனுக்கு நேரம் குறிக்கும்போது எமகண்டம்,ராகுகாலம் பார்த்துதான் டாக்டர்கள் அப்ரேசன் செய்கிறார்கள்...அதிலும் சிலர் ஜோசியரை டைம் கேட்டுட்டு வாங்க என சொல்லிவிடுகிறார்கள்..அப்பா,அம்மா மூத்த குழந்தை இருந்தால் அவர்களுடைய நட்சத்திரம்,ராசி இல்லாத நாளாக இருக்கனும் ..யாருக்கும் ஒரே திசை இல்லாமல் இருக்கனும்..அதுதான் முக்கியம்..இது எல்லாம் பார்த்துதான் நான் நேரம் குறிக்கிறேன்..

பங்குனி உத்திரம் அன்று ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகலுக்கு அன்னதானமும் முதியோர் ல்ல்லங்களுக்கு உடைதானமும் செய்ய இருக்கிறேன் 13.4.2014 அன்று செய்கிறோம்...விருப்பம் இருக்கும் நண்பர்கள் நன்கொடைகளை அனுப்பலாம்..உங்கள் குடும்பத்தார் விவரங்களை அனுப்பினால் அன்று முருகனுக்கு சிறப்பு அர்ச்சனை வழிபாடு செய்து உங்கள் குடும்பத்தாருக்காக பிரார்த்தனையும் செய்கிறோம்..

sathishastro77@gmail.com

k.sathishkumar
state bank of india,bhavani
20010801181