வியாழன், 27 மார்ச், 2014

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014 மகரம்,கும்பம்,மீனம் ராசிபலன்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014 மகரம்,கும்பம்,மீனம் ராசிபலன்

பங்குனி உத்திர அன்னதானம்;

பங்குனி உத்திரம் வரும் 13.4.2014 அன்று வருகிறது அன்று ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் அன்னதானம் செய்ய இருக்கிறோம் விருப்பம் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம் என் ஈமெயிலில் தொடர்பு கொள்ளவும்...sathishastro77@gmail.com நன்கொடை அனுப்புபவர்கள் குடும்பத்தார் பெயரில் அன்று முருகனுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யப்படும்..

நன்கொடை அனுப்ப விரும்புபவர்கள்’இந்த கணக்கிற்கு அனுப்பலாம்..

k.sathishkumar,20010801181,state bank of india,bhavani

cell;9443499003



 ராகு கேது பெயர்ச்சி 2014 ஆம் ஆண்டில் ஜெய வருசம் ஆனி மாதம் 13.7.2014 அன்று இரவு 9 மணிக்கு உண்டாகிறது....ராகு கன்னி ராசிக்கும் கேது மீனம் ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்

மகரம்; மகர ராசியினருக்கு இதுவரை 4ஆம் இடத்தில் கேது நின்று உடல் ஆரோக்கிய பாதிப்புகள்,சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினை,ஓய்வில்லா உழைப்பு,காரிய தடங்கல்களை ஏற்படுத்தி வந்தது இனி ராசிக்கு 3ல் மறைகிறார் அதனால் மேற்க்கண்ட கெடுபலன்கள் மறைந்து நன்மையான பலன்கள் நடக்கும்...உரவினர் பகை நீங்கும்..மருத்துவ செலவுகள் குறைந்து உடல் ஆரோக்கியம் உண்டாகும் துணிச்சல் தைரியமுடன் சில முடிவுகள் எடுத்து நன்மையான பலன்கள் அடைவீர்கள்..ராகு ராசிக்கு 9ஆம் இடத்திற்கு வருகிறார் இதனால் தந்தைக்கு சில பாதிப்புகள் உண்டாகும்..மருத்துவ செலவுகள் ஏற்படுத்தலாம்..குழந்தைகள் நலனில் அக்கறை தேவை.

கும்பம்;உங்கள் ராசிக்கு இதுவரை 3ஆம் இடத்தில் அமர்ந்து தொல்லை தராமல் இருந்த கேது இப்போது ராசிக்கு இரண்டில் வருகிறார் இது பணப்பிரச்சினைகளை உண்டாக்கும் குடும்பத்தில் தேவையற்ற சச்சரவுகளை உண்டாக்கும் பேச்சில் நிதானம் தேவை வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும் கடன் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை ஏமாற அதிக வாய்ப்புகள் இருக்கிறது..8 ல் அமரும் ராகு தொழிலில் முன்னேற்றம் தரும்.. விரய செலவு கேதுவால் அதிகரித்தாலும் ராகுவால் வருமானம் கூடும்...விஷக்கண்டம் இருப்பதால் உணவில் கவனம் தேவை சரியான நேரத்துக்கு உனவு உன்பதை கடைபிடிக்க வேண்டும் அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு..விஷப்புச்சிகள் சார்ந்த தொந்தரவு இருப்பதால் கவனம் தேவை.

மீனம் ;மீனம் ராசிக்கு குரு சனி இந்த வருட மத்தியிலும் இறுதியிலும் நன்மையான பலன்கள் தர காத்திருந்தாலும் கேது ராசியில் அமர்வதால் மன உலைச்சலை உண்டக்குகிறார் ............ராசியில் வேறு கிரகங்கள் எது அமர்ந்திருக்கிறதோ அதை பொறுத்து பிரச்சினைகள் மாறுபடும் சனி இருந்தால் தொழில் பாதிக்கும் செவ்வாய் இருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கும் சகோதர வழி கஷ்டம் உண்டாகும் ...7ல் இருக்கும் ராகு வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு உண்டாக்கலாம்..


கருத்துகள் இல்லை: