வெள்ளி, 28 மார்ச், 2014

2015 எந்த ராசியினருக்கு யோகமான வருடம்..? புத்தாண்டு ராசிபலன் 1.1.2015

2015 எந்த ராசியினருக்கு யோகமான வருடம்..? ராசிபலன்

1.1.2015 புத்தாண்டு தினத்தில் இருக்கும் கோட்சார நிலைகளை வைத்து பார்த்தாலும் குரு,சனி,ராகு கேதுவை வைத்துதான் பலன் சொல்ல வேண்டியிருக்கும்...இந்த வருடம் குருப்பெயர்ச்சி ஜூலை மாதம் நடக்கும்...சனி 2016 வரை இருக்கும்..ராகு கேது பெயர்ச்சி ஜூலை 2015ல் இருக்கும்..அதன்படி சிம்மம் ராசியினருக்கு சனி,குரு,ராகு கேதுக்கள் மூவரும் கெடுபலன்களை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்..தமிழக ஆட்சியில் இருப்பவர்களை நினைத்தால் புரியும்.சிம்மத்துக்கு ராகு இரண்டில் இருக்கு...வாயை திறந்தாலே போச்சு..என அமைதியாக சிம்ம ராசியினர் இருக்க வேண்டும்..கன்னி ராசிக்கு சனி விடுதலை தந்தாலும் ராகு இன்னும் தலையில்தான் உட்கார்ந்திருக்கிறார்...தனுசுக்கு ஏழரை சனி,அஷ்டம குரு,10ல் ராகு என இருக்கிறார்கள் வயதான பெற்றோர்களை கவனமுடன் பாதுகக்கவும்...செலவுகள் அதிகம் வருமானம் குறைவு.

துலாம் இன்னும் கண்ணை கட்டி காட்டில் விட்டது போலவே இருக்கும் 12ல் ராகு தூக்கம் கெடுப்பார்..10 ல் குரு தொழில் பிரச்சினை.2ல் சனி விரய செலவுகள்...

மேசம் அஷ்டம சனி...குரு 4ல்...வீடு கட்டுதல்,சொத்து வில்லங்கம் என பணம் பல வழிகளிலும் தண்ணீராய் பாயும்..உடல்நிலையை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் பயணத்தின் போது எச்சரிக்கை தேவை.

கும்பம் வீண் வில்லங்கம் வீடு தேடி வரும் அடுத்தவர் பஞ்சாயத்தில் மூக்கை நுழைத்தால் போலீஸ் ஸ்டேசன் போக வேண்டி வரும்...

ரிசபம் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும் மருத்துவ செலவுகளை உண்டாக்கலாம்...தாயார் உடல்நிலையில் அக்கறை தேவை.வீடு கட்டி சுப செலவு செய்யலாம்..

விருச்சிகம் ஜென்ம சனி விரகதியின் விளிம்பு நிலை என கவலைப்படாதீர்கள் சனி திசை அல்லது புத்தி ,ஜாதகத்தில் அஷ்டமாதிபதி ,ஆறாம் அதிபதி திசை நடந்தால்தான் மோசமான பலன்கள் நடக்கும்..

மற்ற ராசியினருக்கு அவ்வளவு பாதிப்பில்லை.

2015 ஆம் வருட ஆரம்பத்தில் பார்த்தோமானால் பல ராசியினருக்கு குரு,சனி,ராகு கேது பெயர்ச்சி புதிய பலன்களை கொடுத்துக்கொண்டிருக்கும் வாழ்க்கை என்பது சக்கரம் போலத்தான் மேலே இருப்பவர்கள் கீழே வருவதும் கீழே இருப்பவர்கள் மேலே போவதுமாகதான் இந்த பெயர்ச்சிகள் பலன் தரும் முழுமையாக கோட்சார பலன்களை வைத்தே பலன் அறிய முடியுமா..? என்றால் இல்லை என்றுதான் சொல்வேன்.. உங்கள் ராசிப்படி கோட்சார பலன் சூப்பராக இருந்தாலும் ஜாதகத்தில் யோகமான கிரக அமைப்பு,திசாபுத்தி வலிமையும் இருந்தால்தான் அதை அனுபவிக்க முடியும் மீனம் ராசியினருக்கு எல்லாம் சூப்பரா இருக்கு என்றால் ஜாதகம் வலிமை பெற்றவர்கள் 100 ரூபாய் லாபம் அடைந்தால் வலிமை குறைந்தவர்கள் 10 ரூபாய்தான் லாபம் அடைய முடியும்..

2015ல் மீனம் ராசியினருக்கும்,கன்னி ராசியினருக்கும்  குரு,சனி இரண்டுமே மிக சாதகமாக இருக்கின்றன..கன்னி ராசியினருக்கும் ஏழரை சனி முடிந்து மிக சாதகமாக இருக்கின்றன...விருச்சிகம் ராசியினருக்கும்,மகரம் ராசியினருக்கும்,மிதுனம் ராசியினருக்கும், குரு மிகவும் சாதகமாக இருக்கிறார்..

தை அமாவாசை அன்னதானம்;

தை அமாவாசை 20.1.2015 செவ்வாய் அன்று வருகிறது அன்று ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் அன்னதானம் செய்ய இருக்கிறோம் விருப்பம் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம் என் ஈமெயிலில் தொடர்பு கொள்ளவும்...sathishastro77@gmail.com நன்கொடை அனுப்புபவர்கள் குடும்பத்தார் பெயரில் அன்று முருகனுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யப்படும்..

நன்கொடை அனுப்ப விரும்புபவர்கள்’இந்த கணக்கிற்கு அனுப்பலாம்..

k.sathishkumar,20010801181,state bank of india,bhavani

cell;9443499003

கருத்துகள் இல்லை: