வெள்ளி, 13 ஜூன், 2014

குரு வாழ்க .! குருவே துணை..!! குருப்பெயர்ச்சி பலன் 13.6.2014

குரு வாழ்க .! குருவே துணை..!!

குருபகவான் கடக ராசிக்கு பெயர்ச்சியாகி கொண்டிருக்கும் இந்த வேளையில் அவரைப்பற்றி சிந்திப்பது புண்ணியம் என்பதால் இந்த பதிவு...
 

குருப்பெயர்ச்சி பலன்கள் 13.6.2014  பாகம் 1 படிக்க இங்கு செல்லவும் 

பாகம் இரண்டு படிக்க இங்கு செல்லவும்

குரு என்றால் இருளை போக்குபவர் என்று பொருள்.குரு அதிர்ஷ்டத்தை குறிப்பவர்..ஊரில் செல்வாக்கு உங்களுக்கு அளவு இருக்கிறது என்பதை குருவை வைத்து சொல்லலாம்.மனித உணர்ச்சிகளையும்,எண்ணங்களையும் ஒழுங்குபடுத்தி சீராக இயங்கச் செய்யும் திறன் பெற்றவர்.அதனால்தான் இவரது பெயர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.குரு நீதி,நேர்மை,குழந்தை பாக்யம்,ஒழுக்கம்,சட்ட,ஹோமம்,தியானம்,யோகா,விவேகம் போன்றவற்றிற்கான அதிபதியும் ஆவார்...

நல்ல குழந்தைகளை பெற்றெடுத்து அவனை சான்றோன் என கேட்டு மகிழும் பாக்யத்தை கொடுப்பவர் குரு பகவானே.செல்வம் கொடுப்பார். சேமிக்கவும் வைப்பார்..குரு 5 வது பாகையில் இருக்கும்போது பிறந்தவர் புன்ணியாத்மா.குரு உச்சம் பெற்று இருந்தால் அவர் உலகில் எல்லா இன்பங்களையும் பெற முடியும்.மனித மூளைக்கு அதிபதி.குரு கெட்டால் புத்தி கெட்டுப்போச்சு என அர்த்தம்.குரு எனில் மஞ்சள்,தங்கம், மங்களம்..முழுமையான சுபர்.அவர் பார்த்தால் கோடி நன்மை..பெண்கள் ஜாதகத்தில் குரு மறைந்தால் மங்களம் இல்லை.குருவே ஆன்மீகத்தை தழைக்க செய்கிறார். குருவருள் இந்தியாவிற்கு அதிகம் இருப்பதால்தான், ஆன்மீக பூமியாக திகழ்கிறது. பெரும்பாலான மகான்கள் அவதரிக்க காரணமாக இருந்தது..குரு வாழ்க, குருவே துணை!

கருத்துகள் இல்லை: