பொண்ணுக்கு கல்யாணம் என்றவுடன் இப்போது எல்லாம் பெண் வீட்டார் அதிகம் யோசிப்பது பையன் அழகா இருக்கனும் நல்லா படிச்சிருக்கனும் சொந்த வீடு சொத்து வசதி நல்லாருக்கனும் பெரிய கம்பெனியில பெரிய ஜாப் ல இருக்கனும் என்பதுதான் இதுக்கு அடுத்ததுதான் ஜாதகம் திருமண பொருத்தம் என்பது வருகிறது.
எல்லாம் முடிவானதும் மாப்பிள்ளை வீடு பெரிய இடமாக அமைந்ததும் நம்ம ஜோசியர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுவோம் எனும் மனநிலைக்கு வருகிறார்கள்...ஜோசியரே நல்ல வரனா வந்திருக்கு ..அருமையான இடம்..பொண்ணுக்கு இந்த ராசிப்பையன் இருந்தா நல்லதுன்னு நீங்க சொன்ன மாதிரியே இருக்கு என அவரை முதலில் ப்ரைன் வாஷ் பண்ணிவிடுகிறார்கள் எங்கே பொருத்தம் இல்லைன்னு சொல்லிடுவாரொ என்ற பதட்டம்தான் காரணம் அப்புறம் நீங்க ஒரு பார்வை பார்த்துடுங்க என ஜோசியரிடம் கொடுக்கிறார்கள் இன்னும் சிலர் பொருத்தம் பார்ப்பது எப்படி என புத்தகம் படிச்சு பொருத்தம் பார்த்துவிட்டு கல்யாண நாள் குறிக்க மட்டும் ஜோசியரிடம் செல்வோரும் உண்டு.
அப்படி அழுத்தி சொல்லப்பட்டு அப்புறம் ஜோசியரிடம் கொடுத்தால் சிலர் நட்சத்திர பொருத்தம் ஓகே என சொல்லி விடுவதும் உண்டு...பொருத்தம் நட்சத்திரப்படி பார்க்கும்போது ரஜ்ஜு பொருத்தம் ,யோனி பொருத்தம் மிக முக்கியம்.இதில் அனுசரித்து போக வழியே இல்லை இவை இரண்டும் வராவிட்டால் அந்த ஜாதகத்தை ஒதுக்கிவிடுவது நல்லது.இருவருக்கும் ஒரே திசை நடப்பிலோ எதிர்காலத்திலோ வந்தால் அதையும் ஒதுக்கிவிடவேண்டும்.இருவரில் ஒருவருக்கு நாகதோசம் இருந்து இன்னொருவருக்கு இல்லையென்றாலும் அதுவும் ஆகாது.பரிகார செவ்வாய் என்றால் அடுத்தவருக்கும் அது இருக்கனும் இவை எல்லாம் இருவரின் உயிர் சார்ந்த விசயங்கள் ஆயுளுக்கே பாதிப்பு கொடுக்கும் அல்லது டைவர்ஸ் கேட்டு கோர்ட் படியேற வேண்டும் என்பது போன்ற தோசங்கள்.
இப்போது இருக்கும் தலைமுறையினருக்கு தோசம் என சொன்னால் பணம் வாங்க ஜோசியர் ஏதோ பரிகாரம் சொல்லப்போகிறார் என்றுதான் நினைக்கிறார்கள்...உண்மையில் தோசம் என்பதே மோசம் என்றுதான் பொருள்..அதாவது நாகதோசம் எனில் பிடிவாதம்,ஈகோ,அழுத்தமான குனமுடையவர்கள் என எடுத்துக்கொள்வோம் அந்த தோசம் இருப்பவருக்கு மென்மையான குணமுடையோரை திருமணம் செய்தால் நிலைக்குமா தாங்குவாரா...வலிமையானவருக்கு வலிமையானவரைதான் திருமணம் செய்ய வேண்டும்.செவ்வாய் தோசம் இருப்பவர் அதிக மோகம் கொண்டவர் என எடுத்துக்கொண்டால் தோசம் இல்லாதவர் அதில் விருப்பமே இல்லாதவர் என எடுத்துக்கொண்டால் இந்த ஜோடி ஒத்து வருமா...கள்ளக்காதல் ஏன் பிறக்காது..?இப்படி மறைமுகமாக எவ்வளவோ விசயங்கள் இந்த தோசங்களின் பிண்ணனியில் இருக்கின்றன...
இவற்றை எல்லாம் கவனிக்காமல் பல பெற்றோர்கள் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்துவிட்டு திருமணம் செய்துவைக்கிறார்கள்..பிரச்சினை ஆனதும் ஜோசியத்தின் மீதும் பொருத்தம் பார்த்த ஜோசியரின் மீதும் பழியை போடுவது வழக்கமாக இருக்கிறது...
2 கருத்துகள்:
பொருத்தம் பார்ப்பதில் இவ்ளோ இருக்கா ப்ப செம
உங்களை நான் போற்றுகிறேன்
மகம் ரேவதி பொருந்துமா
கருத்துரையிடுக