திங்கள், 6 அக்டோபர், 2014

சனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 சிம்மம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் -சிம்மம் -2014 -2017

astrologer in erode,salem,coimbatore ,tamil astrology ,tamil jothidam ,nalla neram,astrologer sathishkumar,rasipalan,raasipalan,elarai sani,thanusu,mesam

சனிபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 16.12.2014 முதல் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இது திருநள்ளாறு கோயிலில் அனுஷ்டிக்கும் தேதியாகும்..துல்லியமான கணக்கு எனில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.மேசம் ராசிக்கு அதுமுதல் அஷ்டம சனியும் ,ரிசபம் ராசிக்கு கண்டச்சனியும் ,சிம்மம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும்,துலாம் ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும் ,விருச்சிக ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும்,தனுசு ராசிக்கு ஏழரை சனியில் விரய சனியும் ஆரம்பிக்கிறது...19.12.2017 வரை இது நீடிக்கும்..


சிம்மம் ராசியினருக்கு சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்..?

சிம்மம் சூரியன் வீடு என்பதால் நெருப்பு ராசி...இவர்களும் நெருப்பு போன்றவர்கள்தான்...துணிச்சலும்,தைரியமும் கூடவே பிறந்தது...இவர்களது கோபம் அக்னி போல சுடும்..எல்லாம் சரியாக இருக்க வேண்டும்..எல்லாம் ஒழுங்காக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.....சூரியன் ராசி என்பதால் ஒரு அரசன் போல எப்போதும் மிடுக்காக,கம்பீரமாக நடந்துகொள்வார்கள்...கீழிறிங்கி போவதில் துளியும் விருப்பம் இருக்காது இதனால் அனுசரித்து போகாதவர் என்ற கெட்டப்பெயரும் இவருக்கு வரும்...அதை புரிந்தும் இவர் சரி செய்துகொள்ள மாட்டார் இயல்பு அப்படி.

தன்மானத்துக்கு ஒரு பங்கம் வந்துவிட்டால் எரிமலையாய் வெடித்து சிதறுவார்...கோபம்,பிடிவாதத்தை கொஞ்சம் குறைச்சிக்கிட்டா பரவாயில்லை என வீட்டில் உள்ளவர்களே ஆதங்கப்படுவார்கள்...நான் சொல்வதே சரி எனும் போக்கு பலருக்கும் வருத்தத்தை உண்டாக்கும்...எந்த செயலையும் ஆரம்பித்துவிட்டால் அதை முடிக்காமல் விட மாட்டார்...சிங்கம் மாதிரிதான் ஆனால் அதுவே இவர்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடுகிறது...நிர்வாக விசயத்திலும்,கடுமையாக உழைப்பதிலும் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை..

மகம்,பூரம்,உத்திரம் 1 ஆம் வரை உள்ள சிம்ம ராசிக்காரர்களுக்கு இதுவரை மூன்றாம் இடத்து சனி நடந்து வந்தது..இனி நான்காம் இடத்து சனி அதாவது அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது...3ல் சனி இருக்கும்போது நீங்கதான் ராஜா..அளவு கடந்த துணிச்சலை வீரிய ஸ்தானத்து சனி அள்ளிக்கொடுத்தார் இதனால் எதிரிகளை எதிர்ப்புகளை துவம்சம் செய்தீர்கள்..3ஆம் இடத்து சனி செல்வாக்கையும்,செல்வவளத்தையும் சிலருக்கு அள்ளிக்கொடுத்தது...இப்போது அர்த்தாஷ்டம சனி அவ்வளவு விசேஷமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்..ஆனாலும் சனி வக்ரம்,சனி நீசம் என்றெல்லாம் ஒரு வருஷம் இடையிடையே வருவதால் நீங்கள் தப்பித்துக்கொள்ள நிறைய வாய்ப்பிருக்கிறது...

4ல் சனி என்ன செய்யும்..? உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்..அதிக மன அழுத்தம்,மன உளைச்சலை தரும்..நண்பர்கள்,உறவினர்களால் பலவிதத்திலும் உங்களுக்கு இடைஞ்சல்,பிரச்சினைகளை தருவர்...காரிய தடங்கல்,முயற்சிப்பது எல்லாம் தோல்வியில் முடியும்...தொழில் மந்தம்,வருமான தடை இருக்கும் எனவே கவனமாக நிதானமாகத்தான் செயல்படவேண்டும்..இல்லையெனில் சிக்கலில் சிக்கிக்கொள்ள நேரும்..அரசாங்க பிரச்சினைகள் வரும் என்பதால் பட்டகாலில் படும்...என உணர்ந்து செயல்படவும்.

மகம் கேது நட்சத்திரம் என்பதால் கொஞ்சம் பிரச்சினைகள் அதிகம்தான்...பிரச்சினையில் சிக்கினால் அதைப்பற்றியே நினைத்து தூக்கமில்லாமல் தவிப்பீர்கள்....கேது கெடுக்கும் என்பதற்கேற்ப..உடல் ஆரோக்கியத்தை கவனிக்கவும்,,ரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதிகள் இருப்பின் இக்காலகட்டத்தில் இன்னும் கூடுதல் கவனம் அவசியம்.

பூரம் காரர்கள் சொத்துக்கள் வீடு வாங்குவதில் கட்டுவதில் சிக்கலில் சிக்கிக்கொள்ளலாம் எச்சரிக்கை அவசியம்...கண்ணை மூடிக்கொண்டு கடன் வாங்குவதை தவிர்க்கவும்.வாழ்க்கை துணை சார்ந்த பிரச்சினைகள் உண்டகலாம்...அமைதியாக அனுசரித்து செல்வது நல்லது...

உத்திரம் 1ஆம் பாதம் நெருப்பு போல எல்லோரையும் சுட்டெரிக்காதீர்கள் நெருப்பு வளையத்தில் நீங்களே சிக்கிக்கொள்வீர்கள்...உறவுகள்,நட்புகளை இழக்கும் காலம் இது.வரவு செலவு இன்னும் கவனம் அவசியம்.

குரு 12ல் உங்க ராசிக்கு இருப்பது சாதகமற்ற நிலை என்பதால்தான் சனிப்பெயர்ச்சியும் கடுமையாகிறது..12ஆம் இடத்து குரு அடுத்து வருவதும் ஜென்ம குரு...இரண்டுமே பண நெருக்கடி செல்வாக்கு நெருக்கடிகளை தரக்கூடியது....யாரும் உதவாத நிலை இருப்பதான் செல்வாக்கு நெருக்கடியாகும்......

சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்......அது சமயம் பிரச்சினைகள் குறையும்.பாதிப்பு இல்லை

பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்
---------------------------------------
சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..


தெய்வீக மூலிகை சாம்பிராணி;


கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து  வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..நவகிரக சக்திகள் கொண்ட மூலிகைகள் கலந்திருப்பதால் நவகிரக தோசங்கள் அனைத்தும் விலகும்...குடும்பத்தில் நிம்மதி ,செல்வசெழிப்பு உண்டாகும்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com

கருத்துகள் இல்லை: