செவ்வாய், 14 அக்டோபர், 2014

சனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மகரம்

 சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மகரம்;

ஆர் கே சதீஷ்குமார் ஜோசியர் ;

திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு சனி பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்....அது சமயம்தனுசுராசியை சேர்ந்தவர்களுக்கு என்ன பலன்கள் உண்டாகும் என பார்ப்போம்

பன்னிரெண்டு ராசிகளிலேயே மனிதாபிமானம் அதிகமுள்ள ராசி மகரம்தான். புறங்கூறுதல், மறைத்துப் பேசுதல், மனசாட்சிக்கு எதிராக செயல்படுதல் என்பதெல்லாம் அறவே உங்களுக்குப் பிடிக்காது. ஆரம்ப காலத்தில் வாழ்வில் அடிபட்டு,போராடி  வெற்றிகளை சந்தித்ததால் பணம், புகழ், பதவி வந்தாலும் பெருமையாக வாழத் தெரியாது. வியாபாரமாக இருந்தாலும், உத்யோகமாக இருந்தாலும் ஏனோதானோ என்றில்லாமல்ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள்..

உத்திராடம் 2,3,4 ஆம் பாதங்கள் மற்றும் திருவோணம்,அவிட்டம் நட்சத்திரங்களை சேர்ந்த மகரம் ராசி நண்பர்களே...உங்கள் ராசி நாயகனாகிய சனி பகவான் தனம்,வாக்கு ,குடும்பம் போன்றவற்றை குறிப்பிடும் இரண்டாம் வீட்டிற்கு அதிபதி ஆவார்.தற்போது கோட்சாரப்படி லாபஸ்தானம் எனும் பதினொன்றாம் வீட்டில் பிரவேசிக்கிறார் ஏற்கனவே கடக ராசியில் பிரவேசித்து சஞ்சரித்து கொண்டிருக்கும் குருவின் சுப பார்வை ராசிக்கும்,சனிக்கும் உண்டாகிறது.சனிக்கு பதினொன்றாம் வீடு சிறப்பானது...

ஆரோக்கிய பாதிப்புகள் ,மருத்துவ செலவுகள் முற்ரிலும் நீங்கும்.தனாதிபதி லாபத்தில் இயங்குவதால் வருமானத்துக்கு குறைவே இருக்காது..முன்பை விட பல மடங்கு அதிகரிக்கும்.இதனால் நீண்ட கால கடன்கள் அடைபடும்.
புதிதாக கடன் வாங்கி தொழில் செய்யலாமா ,வீடு கட்டலாமா என தயங்கி கொண்டிருப்பவர்கள் இனி தயக்கமின்றி அதை செய்யுங்கள்.எந்த பிரச்சினையும் இல்லாமல் கடனை அடைத்துவிடலாம்

உழைப்பிற்கும் ,திறமைக்கும் ஏற்ற லாபம் நிச்சயம் கிடைக்கும்.மூத்த சகோதர சகோதரிகளின் ஆதரவு உயர்வுக்கு வழிவகுக்கும்.இரண்டிற்குறிய சனி பதினொன்றில் உள்ளதால் புகழும்,செல்வாக்கும் அதிகரிக்கும் வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் பதவி உயர்வும் நிச்சயம் கிடைக்கும்.நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வும் இட மாறுதலும் கிடைக்கும்..

கலைத்துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் வெளிச்சம் அடையும் காலம் இப்போதுதான் காரணம் சனி ஜென்ம ராசி,ஐந்தாம் இடம்,எட்டாம் இடத்தை பார்வை செய்வது  இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வருவது போலாகும்...

உத்திராடம் நட்சத்திரம் சார்ந்தவர்கள் தெய்வ வழிபாட்டில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள் புதிதாக ஒன்றை சாதிப்பார்கள் உறவினர்கள் புகழும்படி நிலைத்த செல்வாக்கு அமையும்படி நல்ல காரியம் ஒன்று உங்களால் நடைபெற போகிறது

திருவோணம் நட்சத்திரத்தா கலைத்துறையில் இருப்பின் எதிர்பாராத வெற்றியும் பெரிய மனிதர்களின் ஆதரவால் திடீர் உயர்வை அடைவீர்கள்....பணியில் இருப்பவர்கள் இரட்டிப்பு லாபம் பிறர் பொராமைப்படும்படி அடைவீர்கள்

அவிட்டம் நட்சத்திரத்தார் வீடு கட்டுதல்,நிலம் வாங்குதல் போன்ற நீண்ட கால முதலீடுகளை செய்வீர்கள்..



   
சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........இந்த காலங்களில் சனி பாதிப்பு இருந்தால் குறையும்..

பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்

சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..


தெய்வீக மூலிகை சாம்பிராணி;

கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து  வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com

கருத்துகள் இல்லை: