வெள்ளி, 17 அக்டோபர், 2014

சனி பகவான்

சனி ஒரு முடவன் என நம் பழைய புராணங்கள் சொல்கிறது சனி கிரகத்தின் ஒரு பகுதி உடைந்திருக்கிறது என விஞ்ஞானம் சொல்கிறது..சனி கிரகத்தின் பாதிப்புகள் ஆப்பிரிக்கா கண்டத்தில் அதிகம்..வறுமை,நோய்,வேறுபாடான மனிதர்கள்,வேறுபாடான இடம் என சனியின் பாதிப்புகள் அதிகம் அங்கு இருக்கின்றன....

பலவிதமான மனிதர்கள்,மதங்கள்,பலவித கலாச்சாரம் இருப்பதால் இந்தியா புதன் ஆதிக்கமும்,ஆன்மீகத்தில் உலகின் மற்ற நாடுகளை விட சிறந்து விளங்குவதால் குரு ஆதிக்கமும் பெற்ற நாடாக திகழ்கிறது..புதன் ஆதிக்கம் இருப்பதால்தான் அறிவாளிகள் இங்கு அதிகம்..குரு ஆதிக்கம் அதிகம் இருப்பதால்தான் ஆன்மீகவாதிகளும் அதிகம்.
அதே சமயம் புத்ரகாரகன் குருவின் அருளால் இனப்பெருக்கமும் அதிகம்..அறிவாற்றல் கிரகமான புதன் பூமியை நெருங்கி வருவதாக சொல்லப்படுகிறது ..புதன் தாக்கம் அதிகரிக்கும் வருடங்களில் பெண் குழந்தைகள் அதிகம் பிறக்கும்..டெஸ்ட்டியூப் குழந்தைகள் அதிகம் பிறப்பர்.விஞ்ஞானமும் வேகமாக வளர்கிறது...மனிதர்களின் மூளை உழைப்பு அதிகமாகி உடல் உழைப்பு குறைகிறது....புதனின் காரகத்துவமான மலட்டுதன்மையும் பூமியில் அதிகரிக்கிறது!! இதனால் பெண்கள் சக்தி அதிகரிக்கும்...!!

கருத்துகள் இல்லை: