வெள்ளி, 28 நவம்பர், 2014

திருவண்ணாமலை -யாரெல்லாம் அவசியம் வழிபடவேண்டும்..?

திருவண்ணாமலை ; thiruvannamalai

 பஞ்சபூத தலங்களுள் நெருப்புக்குரிய தலம்.இங்கு மலையே இறைவனின் சொரூபம்.இத்திருக்கோயிலின் கிழக்குக் கோபுரம் 217 அடி உயரம் - தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது. மலைவலம் (கிரிவலம்) இங்குச் சிறப்புடையது. 25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோயில் (திருவாசகத்தில்) திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது.கார்த்திகை தீபப் பெருநாள் அன்றுதான் திருவண்ணாமலை திருத்தலத்தில் இறைவன் இறைவிக்கு இடப்பாகம் அளித்து அர்த்தநாரீஸ்வரர் ஆகக் காட்சி அளித்தார். அந்த நன்னாளில் மலைவலம் வருவது மகத்தான புண்ணியத்தைத் தரும். குறிப்பாக திருவண்ணாமலை கிரிவலம் அனைத்துப் பாவங்களையும் போக்கி மகத்தான புண்ணிய பலனைத் தரவல்லது.


கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருவம் கொண்டுள்ளது அண்ணாமலை. இத்தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கிரிவலம் மகிமை
 புராண காலத்தில் பார்வதி தேவியார் சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில்  மலையை வலம் வந்தார். அப்போது சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு. சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் ஒவ்வொரு மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் மலை வலம் வந்தனர். இன்றும் சூட்சும ரீதியாக வந்து கொண்டிருக்கின்றனர்.
சந்திரன் நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்) காரகன். பௌரணமியன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் கிரகித்து பூர்ண நிலவாக, அதிகக் கலைகள் கொண்டவனாக சந்திரன் விளங்குகிறான். இதனால் பௌர்ணமி மலை வலம் வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்பட்டது.

 ஜாதகத்தில் சூரியன் பலம் இழந்தவர்கள் ,சந்திரன் பலம் இழந்தவர்கள்,விருச்சிகம் ,சிம்மம் ராசியினர்,ஐப்பசி மாதம் பிறந்தவர்கள்,சித்திரை மாதம் பிறந்தவர்கள் ,சூரிய கிரகணம்,சந்திர கிரகணத்தில் பிறந்தவர்களுக்கான முக்கியமான பரிகாரம் திருவண்ணாமலை மகா தீபம் தரிசனம் செய்வதாகும்...ஐப்பசியில் சூரியன் பலம் இழக்கிறார்..அதனால் நம் முன்னோர்கள் தீப ஒளி நாள் என கொண்டாடினர்...சந்திரன் விருச்சிகத்தில் பலம் இழக்கிறார் அதனால் சூரியன் விருச்சிகத்துக்கு வரும் மதமான கார்த்திகையில் மகாதீபம் ஏற்றி கர்த்திகை தீபம் கொண்டாடினர்...ஒளிகிரகங்கள் ஒளி இழக்கும் மதங்களில் ஒளி தீபம் ஏற்றி வழிபட்டு தோசம் நீக்கும் திருவிழாக்கள் இவை..முன்னோர்களின் வழிபாட்டின் சூட்சுமம் இவை.

5–ந் தேதி மகாதீபம்
 
கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் 5–ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஏற்றப்படுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதி முன்புள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலைஉச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது

வியாழன், 27 நவம்பர், 2014

குலதெய்வம் வழிபாடு -16 விதமான செல்வம் பெறும் வழி

துன்பமான காலத்தில் நம் தாயை போல காப்பது குலதெய்வம் ஆகும்...முன்னோர்கள் காலம் காலமாக வழிபடுவதால் அவர்கள் ஆசி அந்த கர்ப்பகிரகத்தில் உறைந்திருக்கும் நீங்கள் வழிபடும்போது உங்கள் கண்கள் வழியாக அதை கிரகித்துக்கொள்கிறீர்கள்..லக்னத்துக்கு 9ஆம் இடத்தில் சுபர் இருப்பவர்களுக்கு குலதெய்வம் ஆசி முழுமையாக இருக்கும்.

சித்திரை முதல் தேதி தமிழ் புத்தாண்டு அன்றும் தை மாதம் உத்திராயணம் புண்ணிய காலம் தொடங்கும்போதும் கோயிலுக்கு சென்று 16 விதமான அபிசேகப்பொருட்களால் அபிசேகம் செய்து,சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட்டு ,புதிய ஆடைகள் அணிவித்து நெய்தீபம் 27 ஏற்றி வழிபட்டு ,கோயிலுக்கு வந்தோருக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதமாக கொடுத்துவிட்டு வரலாம்...

அங்கேயே வீட்டுப்பெண்கள் மூலம் கைப்பட பொங்கல் வைக்க வேண்டும்...!! இதனால் குலதெய்வம் ஆசியால் குடும்பம் தழைத்தீங்கும்....

குலதெய்வத்துக்கு வெறும் சூடம் ஏற்றி வைத்து கும்பிட்டால் அது சந்தோசப்படும்..ஏன்னா அது நம்ம தாய் மாதிரி..கோவிச்சுக்கது..ஆனாலும் வருசம் ஒருமுறை அம்மா வீட்டுக்கு போறோம்...சிறப்பா செய்யனுமே...அதுக்குத்தான்...வாழ்க வளமுடன்..!!!

குலதெய்வம் கோயில் தெரியாதவர்கள் அவர்களது முன்னோர்கள் வாழ்ந்த ஊரில் இருக்கும் கோயிலில் வழிபாடு செய்யலாம்..அல்லது திருப்பதி பெருமாளை வழிபாடு செய்யலாம்...


முக்கியமான அபிசேக பொருட்கள் ;

நீர்                                        -குலம் தழைத்து ஓங்கும்
பன்னீர்                              -தேக அபிவிருத்தி
சங்கு தீர்த்தம் -                தனபிராப்தி
தைலம் -                            சுபமேன்மை நல்கும்
பஞ்சாமிரதம்-                  புஷ்டி தரும்
தேன் -                                அமுத கானம் குரல் வளம்
‘நெய் -                                பிதுர் வழி தோச நிவர்த்தி
கரும்புச்சாறு -                ஆரோக்கியம் அளிக்கும்
பால் -                                  ஆயுள் அபிவிருத்தி நலம்
தயிர் -                                 பிரஜா மேன்மை தரும்
பஞ்சகவ்யம் -                    மஹாபாதக நாசம்
திருமஞ்சனம் -                வம்சம் விருத்தியாகும்
இளநீர் -                             போக யோகம் கொடுப்பது
பழ வைகை சாறுகள் -சம்பத்து பெருகும்
எலுமிச்சை பழ சாரு - திருஷ்டிகள் விலகும்
மஞ்சள் பொடி -              மங்களம் பெருகிவிடும்
மாவு பொடிகள் -         கடன் உபாதை விலகும்
நெல்லி முள்ளிப்பொடி - ரோகங்கள் தடுக்கும்
சந்தனம் -                          லட்சுமி கடாட்சம்
கலச அபிசேகம் -               எம பயம் நீக்கும்
அன்னாபிசேகம் -           சாம்ராஜ்ய யோகம்
சொர்ணாபிஷேகம் -         நிரந்தர செல்வங்கள்


16 விதமான செல்வங்கள் ;

புகழ் ,கல்வி,ஆற்றல்,வெற்றி,நன்மக்கள்,பொன்,நெல்,ஆயுள்,
அறிவு,நல்லூழ்,இளமை,துணிவு, நோயின்மை,நுகர்ச்சி,பொருள் பெருமை

செவ்வாய், 11 நவம்பர், 2014

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 -2017 உங்கள் ராசிக்கு எத்தனை சதவீதம் நன்மை- தீமை..?

 திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 -2017 ஏழரை சனி astrologer in erode,salem,coimbatore ,tamil astrology ,tamil jothidam ,nalla neram,astrologer sathishkumar,rasipalan,raasipalan,elarai sani,thanusu,mesam

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் டிசம்பர் 16-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது...வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் 16 அன்று மதியம் 2.43 மணிக்கு சனிப்பெயர்ச்சி அங்கு கொண்டாடப்படுகிறது..திருக்கணித பஞ்சாங்கப்படி நவம்பர் 2 சனிப்பெயர்ச்சி ஆனாலும் பிரபலமான சனிபகவான் கோயிலில் நடைபெறும் விழா முக்கியத்துவம் வாய்ந்தது..எனவே சனிப்பெயர்ச்சி பலன்கள் எல்லா ராசிகளுக்கும் மீண்டும் ஒருமுறை வேறு கோணத்திலும் எழுதுகிறேன்...இதில் முக்கியமான சிறு குறிப்பு பலன்கள் மட்டுமே....ஒரு ராசிக்கு எத்தனை சதவீதம் நன்மை தீமை என்றுதான் வரையறுக்க முடியும்...நட்சத்திரத்துக்கு எல்லாம் தேவை இல்லை....கரணம் ராசிக்கு சொல்லப்படும் தீய பலன் கூட சனி திசை சனி புத்தி நடந்தால்தான் முழுமையாக பதிக்கும்.இல்லையேல் பாதிப்பு 50 சத்வீதம்தான்..இதிலும் நல்ல திசாபுத்தி நடந்தால் அதையும் சமாளிக்க முடியும்...

ஏழரை சனி, அஷ்டம சனி...ஜென்ம சனி எது நடப்பினும் திசை,புத்தி,அந்தரம்,ஜனன ஜாதகம் போன்றவற்றையும் அனுசரித்துதான் பலன் கொடுக்குமே தவிர அஷ்டம சனியின் மொத்த கெடு பலனையும் எல்லா மேச ராசியினருக்கும் ஒரே மாதிரி சனிபகவான் கொடுத்துவிட மாட்டார்...

தனுசு ராசிக்கு அஷ்டம குருவும் ,விரய சனியும் நடக்கிறது....இவர்களுக்கு குரு திசை நடந்தால் அஷ்டம குரு பாதிப்பை தருவார் ..சனி திசை அல்லது புத்தி நடந்தால் விரய சனி அதிக பாதிப்பை தருவார்...

சனி யின் மாற்றத்தால் ஒவ்வொரு ராசியினருக்கும் எந்தெந்த பாவங்கள் அதாவது காரகத்துவங்கள் கெடும் வாய்ப்பு உண்டு ?  எந்த மாதிரி பிரச்சினைகளை சந்திக்க போகிறீர்கள் என பார்ப்போம்

மேசம் -இவர் ராசிக்கு 4ஆம் பாவம்தான் அதிக பாதிப்பை பெறும் ...4ஆம் பாவம் என்பது தாயாரை குறிக்கும்..சுகத்தை குறிக்கும் வாகனத்தை குறிக்கும்..ஆடு ,மாடு இவற்றால் நஷ்டத்தை சொல்லும்..மருத்துவ செலவு,சொத்து தகராறு இவற்றை சொல்லும் வனவாசம் போன்றது 4 ஆம் பாவம் கெடுவது ஆகும்..இந்த அஷ்டம சனியில் இவர் இந்த பிரச்சினைகளைதான் அதிகம் எதிர்கொள்வார்

ரிசபம் ;நம்பியவர்களால் ஏமாற்றம் ,சகோதரனால் இழப்பு/பிரச்சினை,கைகால் வலி

மிதுனம் ;சுப விரயம்,சொத்துக்கள் வாங்குவதால் உண்டாகும் செலவு

கடகம் ;அதிக அலைச்சல் ,மனக்குழப்பம்

சிம்மம் ;அதிக விரயம்,சிறை பட்டது போல தனிமையில் யோசனை,விரக்தி,குழப்பம்

கன்னி;லாபம்

துலாம் ;தொழில் பற்றியே யோசித்துக்கொண்டிருப்பது ,தொழில் பயம்

விருச்சிகம் ;தந்தைக்கு பாதிப்பு ,குடும்பத்தில் குழப்பம்,சகோதரனுக்கு பாதிப்பு ,வருமானம் முழுவதும் பலனற்ற வகையில் செலவு

தனுசு ;வயிறு சார்ந்த பாதிப்புகள் ,கண்ணுக்கு தெரியாத எதிரிகளால் சிக்கல்

மகரம்;வாழ்க்கை துணைவருடன் மனக்கசப்பு ,அதிக வருமானம்

கும்பம் ;கடன் பிரச்சினை ,நெருங்கிய உறவினருக்கு கண்டம் 

மீனம் ;அதிர்ஷ்டம்

 

சனிப்பெயர்ச்சியால் 12 ராசியினருக்கும் மாறப்போகும் சனியின் நிலை;2014-2017


மேசம்-அஷ்டம சனி -25 சதவீதம் நன்மை/ 75 சதவீதம் தீமை

பரிகாரம் /செல்ல வெண்டிய கோயில்-திருநள்ளாறு

ரிசபம் -கண்டக சனி -55 சதவீதம் / 45 சதவீதம் தீமை
 பரிகாரம் /செல்ல வேண்டிய கோயில்-குச்சனூர்

மிதுனம் -அதிர்ஷ்ட சனி -80 சதவீதம் நன்மை /20 சதவீதம் தீமை
 பரிகாரம் /செல்ல வெண்டிய கோயில்-சபரிமல

கடகம் -பஞ்சம சனி -50 சதவீதம் நன்மை /50 சதவீதம் தீமை
 பரிகாரம் /செல்ல வேண்டிய கோயில்-சுசீந்தரம்

சிம்மம் -அர்த்தாஷ்டம சனி -45 சதவீதம் நன்மை/ 55 சதவீதம் தீமை
 பரிகாரம் /செல்ல வேண்டிய கோயில்-பிள்ளையார்ப்பட்டி

கன்னி -ஜெயம் சனி -75 சதவீதம் நன்மை /25 சதவீதம் தீமை
 பரிகாரம் /செல்ல வேண்டிய கோயில்-நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்

துலாம் -பாத சனி -65 சதவீதம் நன்மை /35 சதவீதம் தீமை
 பரிகாரம் /செல்ல வேண்டிய கோயில்-எள்ளு தானம்,எள்ளு சாதம்

விருச்சிகம் -ஜென்ம சனி -30 சதவீதம் நன்மை /70 சதவீதம் தீமை
 பரிகாரம் /செல்ல வேண்டிய கோயில்-திருக்கொள்ளிக்காடு/எள் எண்ணெய் தீபம் சனிக்கிழமை தோறும்

தனுசு -விரய சனி -15 சதவீதம் நன்மை /85 சதவீதம் தீமை
 பரிகாரம் /செல்ல வேண்டிய கோயில்-திருநள்ளாறு/தினம்தோறும் காகத்துக்கு சாதம் ,சனி தோறும் முடவருக்கு உதவி

மகரம் -லாப சனி -90 சதவீதம் நன்மை /10 சதவீதம் தீமை
 பரிகாரம் /செல்ல வேண்டிய கோயில்-திருப்பதி /வன்னி மரம் சுற்றி வழிபடுவத

கும்பம் -கர்ம சனி -40 சதவீதம் நன்மை /60 சதவீதம் தீமை
 பரிகாரம் /செல்ல வேண்டிய கோயில்-திருக்கொள்ளிக்காடு-நீலக்கல் மோதிரம் அணிவது,குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வம் கோயிலில் மொட்டை அடித்துக்கொள்வது

மீனம் -பாக்ய சனி -65 சதவீதம் நன்மை /35 சதவீதம் தீமை
பரிகாரம் /செல்ல வேண்டிய கோயில்-திருச்செந்தூர்/சனிக்கிழமை ஊனமுற்றோர் க்கு அன்னதானம் 


சர்வ ஜன வசிய எந்திரம்;

தொழில் மந்தம் நீங்க,வருமானம் அதிகரிக்க ,பணம் தங்க வசிய எந்திரம் பயன்படும்.இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்.

இதன் விலை ரூ 700   k.sathishkumar 20010801181 State bank of India ,bhavani Ifsc;sbin0000971 இந்த வங்கி கணக்கில் பணம் கட்டியதும் உங்கள் பெயர் ,ராசி மற்றும் முகவரியை மெசேஜ் மூலம் இந்த நம்பருக்கு அனுப்பி வைக்கவும்.பூஜித்த எந்திரம் பத்திரமாக கொரியரில் அனுப்படும் .9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..


திங்கள், 3 நவம்பர், 2014

அஷ்டம சனி,பாத சனி,ஜென்ம சனி என்ன செய்யும்..? சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017

 அஷ்டம சனி,பாத சனி,ஜென்ம சனி என்ன செய்யும்..? சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 Astrologer in erode,salem,coimbatore

என்ன சார் தனுசு ராசிக்கு இப்படி சொல்லிட்டீங்க..சிம்ம ராசியை கவுத்திட்டீங்க என்றெல்லாம் கேட்காதீர்கள்..சனி பெயர்ச்சி யின் பலன்கள் இப்படித்தான் இருக்கும் என்பது மகாபாரத காலத்தில் இருந்து மாறாத கணக்கு.மீனம் ராசிக்கு அஷ்டம சனி நடந்த போது குழந்தைகளால் மன உளைச்சலுக்கு உள்ளானார்கள்..இப்போது மேச ராசிக்கு அஷ்டம சனி வந்திருக்கு .இவர்களும் அப்படி குழந்தைகளால் பிரச்சினை வரும்னு சொல்ல முடியாது...மருத்துவ செலவு,சொத்து பிரச்சினை வரும்...துலாம் ராசிக்கு ஜென்ம சனி முடிஞ்சிருச்சி..பாத சனி நடக்குது .போகும் பாதையில் கவனம் தேவை..வாகனம் காணாமல் போதல்,போகும் பாதையில் விபத்துக்களை சந்தித்தல் ,போகும் காரியம் தடையாகுதல் போன்ற பிரச்சினைகள் உண்டாக்கலாம்..
.
சனிப்பெயர்ச்சி வேறு குருப்பெயர்ச்சி வேறு இருப்பினும் குரு பெயர்ச்சி நன்றாக இருப்பின் ஓரளவு தப்பலாம்...சிம்மத்துக்கு சனியும் கைவிட்டு குருவும் கைவிட்டால் என்ன பலன் சொல்வது..? ஜாதகத்தில் சனி திசையோ சனி புத்தியோ நடந்தால் யார் என்ன செய்ய முடியும்..?கும்பத்துக்கு 6ஆம் இட குரு நடக்குது..ஜக்கிரதை கை கால் கட்டு போடும் சூழல் வரலாம்..தேவையில்லாமல் வம்பு வழக்கில் சிக்க நேரலாம்..!!

கெடுதலை சொல்லிவிட்டால் இன்னும் ஜாக்கிரதையா இருப்பீங்கன்னு நம்பிக்கைதான் வெறும் பயமுறுத்தலோ உங்களை அனாவசியாமோ மன உளைச்சல் ஆக்கவோ எழுதவில்லை..ராத்திரி 12 மணிக்கு போன் செஞ்சி புலம்பினார் ஒருத்தர் கஷ்டமா இருந்துச்சு...சனியின் கணக்கு தனி கணக்கு அது கர்மா கணக்கு..அது நல்லவர் கெட்டவர் பார்ப்பதில்லை..!!
ஆயிரம் கோயில் கும்பாபிசேகம் செய்த ஆட்சியாளராக இருந்தாலும் சிறைவாசம் அனுபவிச்சுதான் ஆகனும் சனியிடம்..அது தான் சனி பகவானுக்கு மக்கள் பயப்பட காரணம்!

ஜென்ம சனியை சந்திக்கப்போகும் விருச்சிகம் ராசியினர் குருபலம் இருக்கும்வரை அதாவது அடுத்த ஜூன் வரை சமாளிக்கலாம்..10 ஆம் இடத்து குரு பதவியை பறிக்கும் என்பது போல ஜென்ம சனியும் உலா வரப்போவதால் பதவிக்கு கூடுதல் ஆபத்துதான் முகத்தில் கர்ச்சீப் போடும் சூழ்நிலை அரசு அதிகாரிகளுக்கு வரலாம்...கணக்கு வழக்குகளில் கவனம் தேவை...ஜென்ம சனி இழக்க கூடாததை இழக்க செய்யும் ...ப்றிக்க கூடாதை பறிக்கும்..இதுவரை வராத பிரச்சினைகளெல்லாம் வந்து சேரும் ...சூரிய திசை நடந்தால் தந்தைக்கு கண்டம் சந்திரதிசை நடந்தால் அம்மாவுக்கும் உங்கள் உடலுக்கும் கண்டம்...சனி திசை நடந்தால் விபத்து கண்டம்....ராகு திசை நடந்தால் கீழான மனிதர்களால் பெரும் ஏமாற்றம் ,திருட்டால் இழப்பு போன்றவை உண்டாகலாம் கணவன் மனைவி பிரச்சினை பல மடங்கு அதிகரிக்கும்..ஜென்ம சனியை விருச்சிகம் ராசியினர் தாண்டி வருவதுதான் இப்போ மிக முக்கியம்..



சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..

நீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும்  இதை பயன்படுத்தலாம்..

இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..


தெய்வீக மூலிகை சாம்பிராணி;

கடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,அகில்,
அரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து  வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com