வியாழன், 27 நவம்பர், 2014

குலதெய்வம் வழிபாடு -16 விதமான செல்வம் பெறும் வழி

துன்பமான காலத்தில் நம் தாயை போல காப்பது குலதெய்வம் ஆகும்...முன்னோர்கள் காலம் காலமாக வழிபடுவதால் அவர்கள் ஆசி அந்த கர்ப்பகிரகத்தில் உறைந்திருக்கும் நீங்கள் வழிபடும்போது உங்கள் கண்கள் வழியாக அதை கிரகித்துக்கொள்கிறீர்கள்..லக்னத்துக்கு 9ஆம் இடத்தில் சுபர் இருப்பவர்களுக்கு குலதெய்வம் ஆசி முழுமையாக இருக்கும்.

சித்திரை முதல் தேதி தமிழ் புத்தாண்டு அன்றும் தை மாதம் உத்திராயணம் புண்ணிய காலம் தொடங்கும்போதும் கோயிலுக்கு சென்று 16 விதமான அபிசேகப்பொருட்களால் அபிசேகம் செய்து,சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட்டு ,புதிய ஆடைகள் அணிவித்து நெய்தீபம் 27 ஏற்றி வழிபட்டு ,கோயிலுக்கு வந்தோருக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதமாக கொடுத்துவிட்டு வரலாம்...

அங்கேயே வீட்டுப்பெண்கள் மூலம் கைப்பட பொங்கல் வைக்க வேண்டும்...!! இதனால் குலதெய்வம் ஆசியால் குடும்பம் தழைத்தீங்கும்....

குலதெய்வத்துக்கு வெறும் சூடம் ஏற்றி வைத்து கும்பிட்டால் அது சந்தோசப்படும்..ஏன்னா அது நம்ம தாய் மாதிரி..கோவிச்சுக்கது..ஆனாலும் வருசம் ஒருமுறை அம்மா வீட்டுக்கு போறோம்...சிறப்பா செய்யனுமே...அதுக்குத்தான்...வாழ்க வளமுடன்..!!!

குலதெய்வம் கோயில் தெரியாதவர்கள் அவர்களது முன்னோர்கள் வாழ்ந்த ஊரில் இருக்கும் கோயிலில் வழிபாடு செய்யலாம்..அல்லது திருப்பதி பெருமாளை வழிபாடு செய்யலாம்...


முக்கியமான அபிசேக பொருட்கள் ;

நீர்                                        -குலம் தழைத்து ஓங்கும்
பன்னீர்                              -தேக அபிவிருத்தி
சங்கு தீர்த்தம் -                தனபிராப்தி
தைலம் -                            சுபமேன்மை நல்கும்
பஞ்சாமிரதம்-                  புஷ்டி தரும்
தேன் -                                அமுத கானம் குரல் வளம்
‘நெய் -                                பிதுர் வழி தோச நிவர்த்தி
கரும்புச்சாறு -                ஆரோக்கியம் அளிக்கும்
பால் -                                  ஆயுள் அபிவிருத்தி நலம்
தயிர் -                                 பிரஜா மேன்மை தரும்
பஞ்சகவ்யம் -                    மஹாபாதக நாசம்
திருமஞ்சனம் -                வம்சம் விருத்தியாகும்
இளநீர் -                             போக யோகம் கொடுப்பது
பழ வைகை சாறுகள் -சம்பத்து பெருகும்
எலுமிச்சை பழ சாரு - திருஷ்டிகள் விலகும்
மஞ்சள் பொடி -              மங்களம் பெருகிவிடும்
மாவு பொடிகள் -         கடன் உபாதை விலகும்
நெல்லி முள்ளிப்பொடி - ரோகங்கள் தடுக்கும்
சந்தனம் -                          லட்சுமி கடாட்சம்
கலச அபிசேகம் -               எம பயம் நீக்கும்
அன்னாபிசேகம் -           சாம்ராஜ்ய யோகம்
சொர்ணாபிஷேகம் -         நிரந்தர செல்வங்கள்


16 விதமான செல்வங்கள் ;

புகழ் ,கல்வி,ஆற்றல்,வெற்றி,நன்மக்கள்,பொன்,நெல்,ஆயுள்,
அறிவு,நல்லூழ்,இளமை,துணிவு, நோயின்மை,நுகர்ச்சி,பொருள் பெருமை

2 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல பகிர்வு.

Kumar சொன்னது…

9ம் இடத்தில் சுபர் இல்லை என்றால்?