ராஜயோகம் தரும் ரத சப்தமி ;திங்கள் கிழமை 26.1.2015
ஜோதிட
சாஸ்திரம், ‘ஆரோக்கியம் தருபவன் சூரியன்’ என்று சொல்கிறது. அதர்வண வேதம்,
‘சூரியனை வழிபடுவதால், உடல் நலம் சிறக்கும்’ என்று குறிப்பிடுகிறது. இந்த
நாளில், வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க் கோலமிட்டு சூரியனை
வழிபடுவது விசேஷமானது. இந்த நாளில் விரதம் இருப்பதும் சூரியனுக்கு
சர்க்கரைப் பொங்கல் வடை, இனிப்பு வகைகள் நிவேதனம் செய்வதும் சிறப்பானது.
பிரத்யட்ச தெய்வம் என்று கொண்டாடப்படும் சூரியனின் வட திசைப் பயணம், தை முதல் நாள் தொடங்குகிறது என்று சொன்னாலும், அந்தப் பயணம் தைமாதம் ‘சப்தமி’ நாளில்தான் ஆரம்பமாகிறது.
இந்த நாளில், எருக்க இலைகளை தலையில் வைத்தபடி கிழக்கு நோக்கி நீராட
வேண்டும் என்கிறது சாஸ்திரம். இதனால், சூரியனின் கிரணங்கள் எருக்க இலையின்
வழியே நம் உடலில் படிந்து, நோய்களை குணப்படுத்துகின்றன என்று
வரையறுக்கிறார்கள்...
வரும் திங்கள் கிழமை 26.1.2015 அதிகாலையில்(சூரியன் உதயமாகும்போது நதிக்கரையில் இருக்கனும் ) ஏதேனும் ஒரு நதிக்கரையில் நின்று 7 எருக்கம் இலைகளை தலையில் வைத்து ,பச்சரிசி,மஞ்சள்,பசும் சாணம்,அருகம்புல் வைத்து,கிழக்கு பார்த்து சூரியனை வழிபட்டு ,ஏழு முறை நதியில் மூழ்கி எழவும் சூரிய காயத்ரி மந்திரம் தெரிந்தவர்கள் அதனை சொல்லி மூழ்கலாம்...இதனால் ஏழு ஜென்ம பாவம் விலகும்..ஏழு தலைமுறை முன்னோர்கள் ஆசி கிடைக்கும்..நோய் விலகும்..பாவம் தொலையும்..கஷ்டம் தீரும்.
பெண்கள் ரதசப்தமி கோலம் போடும்போது ஒரு சக்கரம் இருக்கும் தேர் படம் வரைந்து, உள்ளே சூரியன்,சந்திரன் படம் வரையவும்...இதை அதிகாலையில் சூரியன் உதயமாகும்போது வரைந்து அதை சுற்றி காவி கலர் பார்டர் கொடுக்கவும்..!!

1 கருத்து:
Really nice sharing... I'm visiting Ur website daily.... it is very useful for me and everybody. Keep publish...
கருத்துரையிடுக