திங்கள், 9 பிப்ரவரி, 2015

பில்லி, சூனியம், சத்ரு பயம், பகைவர் தொல்லை, செய்வினை, இழந்த பதவியைப் பெற

பில்லி,  சூனியம், சத்ரு பயம், பகைவர்  தொல்லை, செய்வினை, இழந்த பதவியைப் பெற

அய்யவாடி [ஐவர் பாடி];
இங்குள்ள  பிரத்தியங்கிரா  தேவி  ஆலயம்  18 சித்தர்கள்  பூஜித்தும்,  அகஸ்திய முனிவருக்குக்  காட்சி  தந்த ஸ்தலம்,  பஞ்ச பாண்டவர்  பூஜித்த  ஸ்தலமுமாகும்.  இத்தேவியைத் தரிசனம்  செய்தால் எல்லா  கஷ்டங்களும் நீங்கி  வேண்டும்  வரங்களப்  பெறலாம்.  அமாவசை அன்று  காலை 10 மணி முதல்  1 மணி வரை  நிகும் பல யாக பூஜை.  அருள் தரும்  மகா  பிரத்தியாங்கிரா  தேவி  ஆலயம் தமிழ் நாட்டில்  இங்கு  மட்டுமே  உள்ளது. செவ்வாய்க்கிழமை  நெய்  தீபம்  ஏற்றி  வழிபட  இழந்ததைப் பெறலாம்.  இவள்  மட்டுமே  16  பேறுகளை [செல்வங்கள்]  தரக் கூடியவள்.
வழித் தடம்;
கும்பகோணத்திலிருந்து 7.கி.மீ. தூரத்திலுள்ளது. [நாச்சியார்கோவில் செல்லும்  பாதையில்]

நாமக்கல்;  ஒன்பது  சித்தர்களால்  ஆராதிக்கப்பட்டு  உருவேற்றப்பட்ட  நரசிம்ம  மூர்த்தங்கள்  ஒன்பதில்  குறிப்பிடதக்க  சிறப்பினைப்  பெற்றது,  நாமக்கல் ஸ்ரீ  நரசிம்ம மூர்த்தி  இக்கோவிலுக்கு  18 அடி  உயர  கூப்பிய கரத்துடன்  நிற்கும் மிகப் பழமை  வாய்ந்த ஸ்ரீ ஆஞ்ச நேயரை  பூஜிப்பதால்  செய்வினைப்  பாதிப்புகள்  விலகுகின்றன.
வழித் தடம்;
சேலத்திலிருந்து 28 கி.மீ. தூரத்தில் உள்ளது.

மதுரை- ஒத்தகடை;   ஒத்தகடை மெயின் ரோட்டில்  யானை  மலையின் பின்புறம்  யானை மலையின்  கீழ்  அமைந்துள்ளது. ஸ்ரீ யோக நரசிம்மர்  கோவில்.  இங்கு  நரசிம்மர்  யோக நிலையில்  காட்சி தரும் இவரை வழிபட பேய்,  பில்லி, சூன்யம்  விலகும்.  செவ்வாய் தோஷமுள்ளவர்  செவ்வாய்கிழமை  தோறும்  சிவப்பு வஸ்திரம்,  எலுமிச்சை  பானகம்  போட்டு  வணங்க  செவ்வாய்  தோசம்  நீங்கும்.

சிறுவாச்சூர்;  பில்லி- சூன்யம்  போன்றவற்றையே  தொழிலாக  கொண்டிருந்த  மந்தரவாதியை  அழித்து,  கோவில் கொண்டுள்ள  அம்மனான மதுரகாளியை  வழிபட்டால்  பில்லி- சூன்யங்கள் விலகி விடும்.  ஆதி சங்கரர்  வழிபட்ட ஸ்தலம்.  திங்கள், வெள்ளிக்கிழமை  மட்டும்  திறந்திருக்கும்.
வழித் தடம்;  திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில்  பெரம்பலூருக்குத் தெற்கே 8 கி.மீ. தூரத்தில் உள்ளது.

ஐயர் மலை;
இம்மலையில்  பதினெட்டாம்  படி மிகுந்த சிறப்பு வாய்ந்தது.  மனச்சாட்சிப்படி  நடக்காதவராலும்  வாக்கு தவறியவராலும் பாதிக்கப்பட்டவர்கள்   இறைவனை  வழிப்பட்டு  பதினெட்டாம்  படியில்  சத்தியம்  செய்தால்  அதற்குண்டான பலன்  கிடைக்கும் என்று  நம்பப்படுகிறது.  இறைவன்;  இரத்தினகிரீசர் அம்மன்;  அரும்பார் குழலி.
இம்மலையடிவாரத்தில்  உள்ள கம்பத்தடியில் கட்டுக்கட்டினால்  பில்லி, சூனியம், ஏவல், செய்வினை முதலியவை  நீங்கி  நலம் கிட்டி  வருகிறது என்பது  தொன்று தொட்டு நடைபெற்று வருகிற நிகழ்ச்சியாகும்.
வழித் தடம்;  மணப்பாறை-குளித்தலை  சாலையில் உள்ளது.

கொல்லிமலை;    செய்வினை  ஒருவருக்கு  இருந்தால்  அதனை  சுலபமாக  அறியலாம்,  கை, கால் மூட்டுகளில்  வலி,  கண்களுக்குக்  கீழ்  கருப்பு  வளையம்  இருந்தால்,  தோல்  வியாதி, மனதில் சதா சலிப்பு போன்றவை  இருக்கலாம்.
எந்தக்  காரணமும்  இன்றி  கணவன்  மனைவிக்குள் சண்டை, சச்சரவு  ஏற்பட்டு நன்றாக்  நடந்து  கொண்டிருந்த  வியாபாரம்  மந்தமாகி  விடுதல்,  குழந்தை  பாக்கியமின்மை இவை  யாவும்  செய்வினை, ஏவல்  தோஷம்  ஆகும்.
இவை யாவும்  நீங்கிட  கொல்லிமலையில்  உள்ள எட்டுக்கை அம்மன்  எனப்படும். கொல்லிப்பாவை  ஆலயம் சென்று  வழிபடவும்.  செவ்வாய், வெள்ளி, அமாவசை,  பெளணமி  போன்றவை  கொல்லிப்பாவைக்கு  உகந்த நாட்கள்.
வழித் தடம்;  நாமக்கல்லில்   இருந்தும்  சேலத்திலிருந்தும் செல்லலாம். 

3 கருத்துகள்:

Anon சொன்னது…

Last month, I had participated in the amavasai puja at Ayyavadi. They conducted the puja in 2 batches: 8am to 12 noon; 3 pm to 7 pm. The puja was conducted in proper Vedic manner and quite sincerely.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல தகவல்...

பெயரில்லா சொன்னது…

Good information