செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

மகாசிவராத்திரி மகிமை mahashivratri

தன் பக்தனான மார்க்கண்டேயரை எமனிடமிருந்து சிவபெருமான் காத்த நாள் சிவராத்திரி. அந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கடையூர்.ஆயுள் தோசம் ஜாதகத்தில் இருப்போரும்,நீண்ட ஆயுளுடன் வாழ விரும்புவோர் இன்று இரவு கண் விழித்து, 4 கால பூஜைகளையும் தரிசித்து, பட்டினி இருந்து சிவபெருமானை வழிபடுங்கள்.


மகா சிவராத்திரி என்பது ஸ்பெஷல் தரிசன டிக்கெட் வாங்கி கொண்டு ,கூட்டத்தில் இடிபடாமல், சுகமாக போய் சிவன் கோயிலில் தரிசனம் செய்வது இல்லை.வியர்த்து விறுவிறுக்க ,முட்டி மோதி எப்படியாவது அன்று சிவலிங்கத்தை தரிசனம் செய்வதும் அல்ல.

சிவன் எனும் எழாபிறவியின் அடையாள சின்னத்தை மனதில் நிறுத்தி ,மாயைகளில் இருந்து விடுபட ஒருநாளாவது எல்லாவற்றையும் மறந்து,இனி எனக்கு பிறவி துன்பமே வேண்டாம்..என சிவபூஜை செய்து தனிமையில் தியானிப்பது ஆகும்..அதுவும் மாலை 6 மணி முதல் மறுநாள் சூரிய உதயம் வரை என்பது ஒரு கணக்கு.அத்ற்கு ஏன் இந்த நாள்...? குறிப்பிட்ட இந்த நாளில் உங்கள் மனம் வேகமாக ஒடுங்கும்..அதாவது ஒருநிலைப்படும்.பல லட்சம் பேர் கூட்டுப்பிரார்த்தனை செய்யும்போது அதன் சக்தி மிக மிக அதிகம்.அதன் மூலம் பல சூட்சும நன்மைகள் கிடைக்கும்.நான்கு கால பூஜைகளிலும் கலந்து கொண்டு கண் விழித்து பாராயணம் செய்வதால் மனபலம்,ஆத்ம பலம் பெருகும்.


மகா சிவராத்திரி நாளில்தான் புனிதமான கங்கை நதி பூமிக்கு வந்த நாள் ஆகும்.மகசிவராத்திரி எல்லா சிவன் கோயில்களிலும் சிறப்பாக வழிபடப்பட்டாலும்..தமிழகத்தில் புராண காலம் தொட்டு மிக முக்கியமாக போற்றி வணங்கப்படும் சிவ ஆலயங்கள் இவைகள்தான்..அட்ட வீரட்டான தலங்களான திருக்கண்டியூர், திருக்கோவிலூர், திருவதிகை, திருப்பறியலூர், திருவிற்குடி, திருவழுவூர், திருக்குறுக்கை, திருக்கடவூர் ஆகிய திருத்தலங்கள்.
பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்கள்; திருவண்ணாமலை, திருவானைக்கா, ஓமாம்புலியூர், திருக்கழுக்குன்றம், திருக்கோகர்ணம், திருப்பனந்தாள், நாகைப்பட்டினம், கஞ்சனூர், திருவைகாவூர் ஆகிய திருத்தலங்களிலும் சிவராத்திரி மிக விசேஷமாக போற்றப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் சிவபக்தர்கள் சிவராத்திரியன்று விரதம் கடைப்பிடித்து பன்னிரண்டு சிவன் கோவில் களுக்குச் செல்வார்கள். திருமலை மகாதேவர் கோவிலிலிருந்து புறப்பட்டு, திருமலை, திற்குறிச்சி, திற்பரம்பு, திருநந்திக்கரை, பொன்மலை, பன்னிப்பாக்கம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக் கோடு, திருநட்டாலம் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங் களுக்கு நடையும் ஓட்டமு மாகச் செல்வார்கள். இவர்கள் அன்றிரவு சுமார் 70 கிலோமீட்டர் தூரம் ஓடுவார் கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ஓடும் போது "கோவிந்தா கோவிந்தா' என்று குரல் கொடுத்த வண்ணம் ஓடுவர். இது சைவ- வைணவ ஒற்றுமையை எடுத்துக் காட்டும் என்பர்

 பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்று அகந்தை ஏற்பட்டபோது, சிவபெருமான் அடி, முடி காண கட்டளை இட்டார். அவ்வாறு காணமுடியாமல் அவர் கள் தோல்வியுற்றபோது, சிவபெருமான் நெருப்பு உருவாய் மாறி காட்சி கொடுத்து மலையாக மாறினார். அந்த நாள் மகா சிவராத்திரி ஆகும். சிவபெருமான் ஜோதி வடிவில் கல்மலையாக மாறிய திருத்தலம் திருவண்ணாமலை.


ஸ்ரீ மகாவிஷ்ணு அலங்காரப்பிரியர். சிவன் அபிஷேகப் பிரியர் என்பது முன்னோர் வாக்கு. பால் பாவம் நீக்கும், தயிர் நோய் நீக்கும். தேன் இல்லத்திற்கு இனிமை சேர்க்கும்,
இளநீர் பகைமை நீக்கும், மஞ்சள் மங்கலம் சேர்க்கும், சந்தனம் குடும்ப ஒற்றுமை ஏற்படுத்தும். பழரசம் தொழில் மேன்மை தரும். கரும்புச் சாறு பித்ருக்கள் சாபம் நீக்கும், எலுமிச்சம் பழச்சாறு சத்ரு சம்ஹாரம், பஞ்சாமிர்தம் கணவன், மனைவி ஒற்றுமை ஏற்படுத்தும். நெய் சிவனருள் கிட்டும். அரிசி மாவு கடன் நீக்கும், நல்லெண்ணெய் புத்திரபேறு அளிக்கும்.
புனிதநதி தீர்த்தம் நாம், நம் முன்னோர்கள் அனைவரின் பாவம் நீங்கி இப்பிறவியிலேயே எல்லா நலனையும் அளிக்கும். தாழம்பூ இன்று ஒரு நாள் மட்டும் சிவகதி அளிக்கும்.

மேற்கண்ட 16 வகை பொருட்களை கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய அல்லது சிவ ஆலயத்தில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய அளிக்க 16 வகை சம்பத்துகளையும் பெறலாம். இவையே 16 பேறு என்கிறது லிங்க புராணம். 

 மனிதர்களாக பிறந்த நாம் வாழ்வில் ஒரு முறையேனும் நமக்காக மட்டுமின்றி, நம்முடைய முன்னோர்களுக்கும், நம்முடைய சந்ததிகளுக்கும் எல்லாம் நலமும், புண்ணியமும் பெற வேண்டி ஒரு முறை மகா சிவராத்திரி விரதம் இருந்து நான்கு கால பூஜையில் கலந்து கொண்டு தங்களால் இயன்ற பொருளுதவி சிவால யத்திற்கு அளித்து தொண்டு செய்தால், நூறு ஏகாதசி விரத மிருந்த பலன் கிட்டு வதுடன், சிவன் அருளுடன் நாராயணின் பேரருளும் பெற்று குபேர சம்பத்துடன் வாழ லாம் என்று சிவகாமம் கூறுகிறது.