திருநள்ளாறு கோயில் சின்ன வயசுல போயிருந்தேன். அதன் பின் 20 வருடம் கழித்து இப்பதான் சென்றேன்.குளம் மிகவும் மிகவும் அசுத்தமா இருக்கு.அதனால் சுத்தம் செய்றாங்க..என்றார்கள் வேதனையாக இருந்தது.
அங்கு போய் குளிக்கும் ஆசை போய்விட்டது.திருநள்ளாறு குளத்தில் குளிப்பதோ ,துணியை அவிழ்த்து தலையை சுற்றி போடுவதோ செய்யாதீர்கள்...அந்த குளத்துக்கு செய்யும் மோசமான பாவகாரியம் அது.நளன் குளித்த குளம்.அதை வணங்கி தலையில் தண்ணீர் தெளித்து கொள்ளுங்கள். அதுவே சிறப்பு.திருநள்ளாறில் சிவனும்,அம்பாளும்தான் முக்கியம் அவர்களை வணங்கிவிட்டு சனியை வணங்குங்கள்..நளன் முதலில் சிவனைதான் தரிசித்தார் ...
திருநள்ளாறு தர்ப்பணேஸ்வரரை பார்க்க ஆவலாக நீண்ட நேரம் வரிசையில் சென்றேன்.வரிசை எறும்பு போல நகர்ந்தது.கோயிலுக்குள் சென்றதும் சனீஸ்வரர் சன்னதி வழியாக சென்றது...அப்புறம் வரிசை கோயிலுக்கு வெளியே முடிந்தது.சனிபவானை நான் பார்க்கவில்லை.தர்ப்பணேஸ்வரரையும்,பிரணாம்பிகை அம்பாளையும் பார்த்துட்டு தான் பார்ப்பேன் என சொன்ன என்னை உடன் வந்த நண்பர் ..வியப்பாக பார்த்துட்டு நான் சனியை பார்த்துட்டேனே இதுக்கு என்ன பரிகாரம் என்றார்..பரிகாரம் பன்ற இடத்துலியுமா..? என்றேன்.
சிவன் எங்கே என கேட்டால் சனிக்கிழமைன்னா அப்படித்தான்னு சொல்லிட்டாங்க..இன்னிக்கு இந்த கூட்டத்துல சிவனை பார்க்காமல் விடுறதில்லைன்னு பார்த்தா 250 ரூபா டிக்கெட் எடுத்தா சிவனை பார்க்கலாமாம்.இது என்னடா அநியாயம் என பார்த்தால் ஒரு கூட்டம் சனியை மட்டும் பார்த்துட்டு பரம திருபதியுடன் போயிட்டே இருக்காங்க..யாருமே சிவனையோ அம்பாளையோ பார்க்கல..சனிக்கிழமை இப்படித்தானாம் எல்லோருமே சனியை பார்க்கதான் வராங்கலாம்
தர்ப்பணேஸ்வரா..இது என்ன கொடுமை...என நொந்துகொண்டு நண்பரின் சிபாரிசில் தர்ப்பணேஸ்வரரையும் ,பிராணம்பிகையும் கண்குளிர தரிசித்துவிட்டு சனி பகவானையும் சைடில் நின்று வணங்கிவிட்டு வந்தேன்.

கும்பகோணம்,நாகை,திருவாரூர் மாவட்ட முக்கியமான கோயில்கள் சென்று
வந்தேன்.அங்கு எல்லா இடத்திலும் எனக்கும் வெறுப்பும்,அதிர்ச்சியும் தந்தது
அசுத்தம்தான்...
அதுவும் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகும்
கோயில்கள் சுத்தமில்லாமல் கோயிலுக்கு வெளியே குப்பைகளும்,துர்நாற்றமும்
வீசுவது மனம் கனக்க செய்தது.கோயிலுக்குள் 20 வருடங்களாக கிடக்கும் பழைய
உடைந்த சாமான்கள் பல லாரிகள் ஏற்றும் அளவு கிடக்கின்றன..குறிப்பாக
நாச்சியார் கோயில் கல்கருடன் ஆலயம்.
வெளிநட்டினர் வந்து போகும் இடமல்லவா..அவர்கள் என்ன
நினைப்பர்..? கும்பகோனம் நவகிரக கோயில்கள் போய் வந்தவர்களுக்கு நான்
சொல்வது புரியும்.கழிவறை,குளியல் அறை,வசதிகள் ரொம்ப குறைவு..1000 பேருக்கு
ஒரு பாத்ரூம் ஒத்து வருமா..? இத்தனைக்கும் பல முக்கிய அரசு
அதிகாரிகள்,அமைச்சர் குடும்பங்களும் 60 ஆம் கல்யாணம் போன்ற
நிகழ்வுக்கெல்லாம் ,நவகிரக பரிகாரத்துக்கெல்லாம் வந்து போய்க்கொண்டுதான்
இருக்கிறார்கள்..
சரியான சாலை வசதியும் இல்லை.திங்களூர் செல்வதே பெரும்பாடாய் இருந்தது.இத்தனைக்கும் நான் போனது காரில்.
அரசை மட்டும் குறை சொல்லவில்லை..அங்குள்ள மக்கள் ,கடைக்காரர்கள் ,மாவட்ட நிர்வாகம்,தொண்டு நிறுவனங்கள் எல்லோருமே சிந்திக்க வேண்டும்
1 கருத்து:
ஆன்மீக தரிசனம்....
கருத்துரையிடுக