செவ்வாய், 25 ஏப்ரல், 2017

நட்சத்திர சாரம் தரும் திசாபுத்தி பலன்கள்

நட்சத்திர சாரம்


ஜோதிடத்தில் நட்சத்திரத்தின் முக்கிய பங்கு என்ன? ஏன் நட்சத்திரங்கள் ஒரு அங்கமாக ஜோதிடத்தில் இருக்கிறது.
ரிஷிகளும் முனிவர்களும் நட்சத்திரத்தின் வல்லமையை உணர்ந்திருந்தனர். சூரியன் போல பல மடங்கு வெளிச்சமும், ஆற்றலும் கொண்டவை நட்சத்திரங்கள்.


எனவே தான், நட்சத்திரம் பற்றிய ஆய்வு செய்து அதை பற்றி விளக்கி உள்ளனர். ஒவ்வொரு நட்சத்திரத்தை ஒவ்வொரு கிரக பலத்துடனும் காரகத்துடனும் முடிவாக வெளிட்டனர். அதில் திரிகோண ஸ்தானத்தில் வரும் நட்சத்திர காரகம் இயற்கையால் ஒரே மாதிரி அமைப்பில் இருந்ததை கண்டு வியந்து, திரிகோணத்தின் மகிமை அறிந்தனர்.


வானில் ராசி மண்டலம் என்பது, பல நட்சத்திர கூட்டங்களை உள்ளடக்கியது என்கிறது விஞ்ஞானம். ஒரு கிரகம் ஒரு ராசியில் உள்ளே செல்லும் போது, நட்சத்திர கூட்டம் வழியேதான் செல்கிறது. மேலும் ஒரு பாவத்தின் ஆதிபத்திய பலனை, கிரகங்கள் நட்சத்திரம் மூலமே பெற்று தருகிறது. இதில் இருந்து நட்சத்திர சாரம் என்பதன் முக்கியத்துவம் அறியலாம்.


ஒவ்வொரு கிரகமும், சூரியனின் கட்டுப்பாட்டிலும். சூரிய ஒளியை பிரதிபலிகிறது என்பதை தாண்டி, சூரியனை போல பல மடங்கு ஒளி பெற்ற நட்சத்திரங்களில் உள்ளே செல்லும் போது, நட்சத்திர காரகதுவதையும் பூமிக்கு பிரதிபலிகிறது என்பதே முழு உண்மை. எனவே நட்சத்திர பலம் அறிய நட்சத்திர அதிபதிகளை முனிவர்கள் வகுத்து சென்றனர்.



உங்கள் ஜாதகத்தில் என்ன திசை நடக்கிறது..? அந்த கிரகத்தின் நட்சத்திரம் என்ன..? அந்த நட்சத்திர அதிபதி நல்லவரா கெட்டவரா என்பதையும் பார்த்துக்கொள்ளுங்கள்…மிதுன லக்னத்துக்கு சுக்கிர திசை நடக்கிறது..சுக்கிரன் நன்றாக இருக்கிறார்..ஆனால் அவர் இருப்பது செவ்வாய் நட்சத்திரத்தில்.செவ்வாய் லக்ன பாவி…அதனால் திசை சிறப்பான யோகத்தை தரவில்லை என அறியலாம் இதுவே புதன் நட்சத்திரத்தில் இருந்தால் புதன் சுகாதிபதி சொத்துக்களை நிறைய தருவார்.


சாரம் தரும் பலன்களின் விளக்கம்



----------------------------------------------------------------------------
ஒரு ராசியில் அமரும் லக்ன நட்பு கிரகம், லக்னத்திற்கு கேந்திர திரிகோண அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன நண்பனாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு கேந்திர திரிகோணம் பெற நல்ல பலன்கள் ஏற்படும்.
2. லக்ன நட்பு கிரகமும் லக்ன எதிரி சார நாதனும்

-------------------------------------------------------------------------------
ஒரு ராசியில் அமரும் லக்ன நட்பு கிரகம், லக்னத்திற்கு கேந்திர திரிகோண அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன எதிரியாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு மறைவில் இருந்து பலம் பெற பலமான யோகம் தரும் ஏற்படும்.




ஒரு ராசியில் அமரும் லக்ன எதிரி கிரகம், லக்னத்திற்கு கேந்திர திரிகோண அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன நண்பனாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு கேந்திர திரிகோணம் பெற நல்ல பலன்கள் ஏற்படும்.


ஜோதிட கலையில் லக்னம் என்னும் உயிர் ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உடல் ஸ்தானமாக கருதப்படும் சந்திரன் நின்ற வீட்டிற்கு இரண்டாவது பட்சமாக முக்கியத்துவம் கொடுக்கபட்டு அவர் அவர்கள் பலாபலன்கள் பார்க்கப்பட்டும் சொல்லப்பட்டும் வருகிறது. இது இப்படி இருக்க சத்தியரிஷி, அத்திரி, சட்டமுனிவர் போன்றோர் கருத்துப்படி நட்சத்திர சாரகதிப்படி பலன்களை காணும் போது அப்பலன்கள் நடைமுறைக்கு ஏற்க்குறைய ஒத்து வருவதை காணலாம்

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

வாட்சப் மூலம் ஜோதிட பாடங்கள்

வணக்கம் நண்பர்களே நல்ல நேரம் வாசகர்கள் ,நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் பூரண உடல்நலம் மனநலம் நிறை செல்வம் பெற்று வாழ்க வளமுடன் என பிரார்த்திக்கிறேன்...

ஜோதிடம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இன்று மக்களிடம் அதிகமாக இருக்கிறது இதற்காக பலகலைகழகங்களும் தனி பாடத்திட்டங்கள் தொடங்கி இருக்கின்றன...தனியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜோதிடர்களும் ஜோதிட வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.

நாமும் நாம் கற்ற ஜோதிடத்தை ஆர்வம் இருப்போருக்கு கற்று தந்தால் என்ன என்று தோன்றியது.அதை நல்ல நேரம் இணையதளத்தில் எழுத விருப்பம் இருந்தாலும் பொது வெளியில் அவற்றை முழுமையாக வெளிப்படுத்த விரும்ப வில்லை குரு மூலம் 7 வருடங்கள் சிரமப்பட்டு பயின்று அதை பலர் காப்பி செய்து பல இடங்களில் வெளியிடுவார்கள் ..எனவே தனிப்பட்ட முறையில் பாடம் நடத்த என்ன வழி என யோசித்த போது வாட்சப் நினைவுக்கு வந்தது இன்று எல்லோரும் வாட்சப் உபயோகிக்கிறோம்.இதுவரை யாரும் செய்யாத புது முயற்சியாக கட்டணம் அடிப்படையில் வாட்சப்பில் ஜோதிட பாடம் நடத்துவது என முடிவு செய்தேன்.அதை இந்த தமிழ் புத்தாண்டில் செயலிலும் கொண்டு வந்து விட்டேன்..

                                    
வாட்சப் ஜோதிட குழு எப்படி இயங்குகிறது அதன் விதிமுறைகள் என்ன என்று பார்ப்போம்.

இது கட்டண சேவையாகும்.தினசரி நான்கு பக்கங்கள் ஜோதிட பாடம் பி.டி.எப் பைலாக வாட்சப்பில் அனுப்பப்படும்.வாரம் 5 நாட்கள் ..ஒருவருடம் வரை..அடிப்படை முதல் உயர்நிலை வரை ..மாதக்கட்டணம் ரூ 500                       

வங்கி கணக்கு விவரம் :k.sathishkumar 20010801181 State bank of India ,bhavani Ifsc;sbin0000971.                       

குழுவில் இணைந்தவர்கள் கட்டணம் செலுத்திவிட்டு தனி தகவலில் தகவல் சொன்னால் போதுமானது.                       

              
குழு விதிமுறைகள் ‘: நம் குழு ஜோதிடத்துக்கானது...பாடங்கள் தினசரி பதிவேற்றப்படும்.சனி ,ஞாயிறு விடுமுறை.பாடங்களை அப்போது நன்கு படித்துக்கொள்ளவும்.மனப்பாடம் செய்ய வேண்டிய பகுதிகளை மனப்பாடம் செய்துதான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்...ஜோதிடராக தொழில் செய்ய விருப்பம் இருந்தாலும் சரி பொழுதுபோக்குக்காக படித்தாலும் சரி ..முழுமையாக கற்றுக்கொள்ள வெண்டும் என இருந்தாலும் சரி.ஆர்வம் மிக முக்கியம்.கடினமான பாடங்கள் முடிந்தளவு எளிமையாக தருகிறேன்.                       

குழுவில் இருக்கும் மற்ற நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த தொந்தரவும் செய்யக்கூடாது                       

குழுவில் ஜோதிடம் தவிர வேறு படங்கள் வீடியோக்கள் பகிர கூடாது.
பாடங்களை முடிந்தளவு அன்றே படித்து விடுங்கள்...குழுவில் இருக்கும் பாடங்களை எக்காரணம் கொண்டும் அனுமதியின்றி பிறருடன் பகிரக்கூடாது அது குரு துரோகமாகும்                       

பாடங்களை படிக்க எனக்கு நீங்கள் தரும் பெரிய வெகுமதி உங்கள் ஆர்வமே ஆகும்..சந்தேகங்களை குழுவில் கேட்க சங்கடப்பட வெண்டாம் பெரும்பாலான சந்தேகங்கள் அன்றைய பாடத்தில் மட்டும் இருந்தால் நல்லது                       


ஒரு மாதம் வரை அடிப்படை பாடமே போகும்.. 100 பாடங்கள் வரை ஜோதிடத்தின் எல்லா பகுதிகளையும் தனிதனியே வரிசையாக பார்த்துக்கொண்டே வரலாம் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக உயர்நிலை வரும்.. அப்போது ஜாதகம் பார்க்கும் விதம் எல்லாம் புரிய வரும் அதுவரை அவசரம் வேண்டாம்..பொறுமை ஆர்வம் தான் முக்கியம்...  வாட்சப்பில் இதற்கு சம்மதம் தெரிவிப்பவர் மட்டுமே குழுவில் இணைக்கப்படுகிறார்கள்..

தினசரி காலை பாடங்கள் வாட்சப்பில் படிக்கலாம்.. டவுன்லோடு செய்து லேப்டாப்பில் படிக்கலாம் ..

    பெயர் இருப்பிடம் ஊர் ராசி நட்சத்திரம் லக்னம் சொல்லி குழுவில் அறிமுகப்படுத்திக்கொண்டு பாடங்களை படிக்க துவங்கலாம்..

ஜோதிட குருகுலம் என்ற வாட்சப் குழு 64 நண்பர்களுடன் நன்றாக இயங்க ஆரம்பித்துவிட்டது..விருப்பம் இருப்போர் வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும்...எப்போதும் இணைந்து கொள்ளலாம்..அல்லது மெயில் மூலமாகவும் இணையலாம்....நன்றி வாழ்க வளமுடன்             

திங்கள், 10 ஏப்ரல், 2017

எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து செல்வ வளம் தரும் உப்பு ஜோதிடம்


உப்பிட்டவரை உள்ளளவும் நினை..உப்பிட்டவருக்கு துரோகம் எண்ணாதே என்ற பழமொழியின் பின்னால் நிறைய உண்மைகள் இருக்கு.உப்பு மிக சக்தி வாய்ந்தது அது சுவை மட்டும் கொடுக்கும் பொருள் அல்ல.உப்பு மகாலட்சுமியின் அம்சம்.தெய்வீக பொருளாகத்தான் இந்தியாவில் பார்க்கப்படுகிறது.நிறைய சம்பிரதாயங்கள் உப்பை வைத்தே செய்யப்படும்.உப்புக்கு வறுமையை விரட்டும் சக்தி உண்டு.உப்பை தொட்டுவிட்டு உண்மையை மட்டும் பேசனும் பொய் சொன்னால் அது முதல் உங்கள் வாழ்வில் இறங்குமுகம்தான்.
சனியின் கடுமையான தோசங்களை போக்க இரும்பு சட்டியில் உப்பு போட்டு தானமாக தருவதால் கடும் துன்பம் தீரும்.வெள்ளிக்கிழமை உப்பு வாங்குவதால் அதிர்ஷ்டம் பெருகும்.
உப்பு மீது சத்தியம் செய்து விட்டு அதை மீறினால் கடுமையான துன்பங்கள் வந்து சேரும்.இன்றளவும் உப்பு மீது சத்தியம் செய்து விட்டு கடன் வாங்குவோர் உண்டு..உப்பு சத்தியம் என்பதால் வட்டிப்பணத்தை சரியாக கொடுத்து விட வேண்டும் என்ற பயம் இருக்கும்.உப்பை தரையில் சிந்தினால் பாவம்...திருமணம் செய்து வீட்டுக்கு வரும் மணப்பெண் உப்பையும் பருப்பையும் கொண்டு வருவாள்.
கொங்கு பகுதியில் திருமண நிச்சயத்தின் போது உப்பு சாட்சியாக வைத்து திருமணத்தை உறுதி செய்வர் அதை மீறி வேறு பக்கம் பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்து விடக்கூடாது என்பதற்காக உப்பு மையமாக வைத்து பேசப்படுகிறது.

எல்லா ஆசைகளையும் துறந்தவர் தான் ஆன்மீகவாதி... கோயிலுக்கு போவோர் எல்லாம் ஆன்மீகவாதி அல்ல.ஆன்மீகவாதி உணவின் மீதான ஆசையை கைவிட வேண்டும் அக்காலத்தில் உப்பில்லா உணவு சாப்பிட்டு துறவு வாழ்க்கையை வாழ்வர்..உப்பை கைவிட்டால்தான் உண்மையான ஆன்மீகவாதி என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
மன வைராக்கியம் இருப்போர்தான் யோக சாதனையை செய்து நீண்ட காலம் வாழ முடியும்.மக்களுக்கு நல்வழி காட்ட முடியும்.முறையான சிவபூஜை தொய்வின்றி நடத்த முடியும்.மன வைராக்கியம் பெருக,நாக்கை கட்டுப்படுத்த,ஆசைகள் உணர்வுகளை கட்டுப்படுத்த உணவில் உப்பை கைவிடல் முக்கிய பயிற்சியாக இருக்கிறது.

பிரம்ம ஹத்தி தோசம் தோசம் நீங்க பரிகாரம்

பிரம்ம ஹத்தி தோசம்
------------------------------------

குரு பலமிழந்து சனி பலம் பெற்று, குருவும் சனியும் 5 பாகைக்குள் இணைந்து அல்லது சம சப்த பார்வை பெறும் போது, இந்த தோஷம் உண்டாகிறது.


சூட்சுமம்-குருவின் பலம் அதிகம் இருந்து, சனி குருவுடன் இணையும் போதோ அல்லது சம சப்த பார்வை பெறும் போதோ, சனியின் அசுப தன்மை குறைந்து சுப தன்மை அடையும். அதே நேரத்தில் குருவின் பலம் சிறிது குறையும். இதில் இருந்து அறியும் சூட்சுமம் என்னவென்றால் முன்னோர்கள் செய்த பூர்வ பலன்களின் (குரு) பலம், முன்னோர்களின் கர்ம பலன்களை (சனி) விட பலம் பெற்று, சனி தரும் அசுப பலன்களை குறைகிறது என்பதே சூட்சுமம். 

இதனால் ஜாதகன் நினைத்த அனைத்தும் கடவுள் அருளால் கிடைக்க பெற்று, நல்ல நிலையில் இருக்க வைக்கிறது.
இங்கே சனி பலம் அதிகமாகி குரு பலம் குறையும் போது பிரம்ம ஹத்தி தோஷம் என்ற பூர்வ பல குறைபாடு ஏற்படுகிறது. ஒரு உயிரை வதைத்த பாவத்தை அல்லது அதற்கு தவறான முறையில் வழிகாட்டியாக இருக்கும் பாவமே, பிரம்ம ஹத்தி தோஷம். இதனால் கர்ம பலம் அதிகமாகி, குரு பலம் குறைகிறது. இதுவே பிரம்ம ஹத்தி தோஷம்.

ஆனால் இந்த தோஷம் மிக அரிதாகவே ஜாதகத்தில் காணலாம். ஏனெனில் குரு அவ்வளவு சீக்கிரம் பலமிலப்பதில்லை.


பிரம்ம ஹத்தி தோஷம் பரிகாரம்!

பிரம்மஹத்தி தோஷத்திற்க்கு பரிகாரம் என்றால் திருவிடை மருதூர்கோவிலில் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜை செய்து கோவிலின் தலைவாசல் வழியாக சென்று பின்வாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு. மதுரை மன்னனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் இக் கோவிலின் வழியாக இம்முறையில் சென்றுவந்தபோது நீங்கியதாக கூறப்படுகிறது.  பெரும்பாலானவர்கள் சொல்வது இந்தக்கோவிலின் பரிஹார முறையைத்தான்.

இதைத்தவிர வேறு சில எளிதான பரிஹாரமுறைகளும் சொல்லப்படுகிறது.


ராம நாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் ராமபிரான் கடலுக்கு அடியில் உருவாக்கிய நவக்கிரகங்களுக்கு தகுந்த வைதீகர் மூலம் பூஜைகள் செய்து கடலில் நீராடி வழிபட்டு அங்குள்ள கடலடைத்த பெருமாளை வணங்கினால் பிரம்மஹத்திதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை

பழமையான சிவன் கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் பஞ்சக்கூட்டு எண்ணெய் கொண்டு விளக்கேற்றிவந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். ராமேஸ்வரம் கடலில் நீராடி அனைத்து தீர்த்தங்களிலும் குளித்து ஒரு நாள் அங்கேயே தங்கி இருந்து மறுநாள் ராமேஸ்வரம் அருகில் தனுஷ்கோடிசெல்லும் வழியில் உள்ள ஜடாமகுடேஸ்வரர் கோவிலில் உள்ள ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி ஜடாமகுடேஸ்வரரை வழிபட்டு வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. 

ஏனென்றால் ராவணனுடன் வதம் செய்து ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் இத்தலத்தில்தான் ராமபிரானுக்கு நீங்கியதாக வரலாறு.

 ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று, மாலை 5 மணிக்கு சிவன் கோவிலுக்கு சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்து சிவனை வணங்கிவரவேண்டும். 

இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கி, சிவனுக்கு மூன்று அகல் விளக்கு ஏற்றி, அர்ச்சனையும், அபிஷேகம் செய்து வந்தால் சிவபெருமான் அருள்பாலித்து, பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவார் என்பது ஐதீகம். இவைகளை செய்வதால் பிரம்மஹத்தி தோஷத்தால் அனுபவித்து வரும் பாதிப்புகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வட நாட்டில் இருப்போர் பிரம்மஹத்தி தோசம் நீங்க இங்கு ராமேஸ்வரம்  வருகின்றனர் அது போல நாமும் பிரம்மஹத்தி தோசம் நீங்க கஷ்டப்பட்டு வட நாட்டில் தரிசனம் செய்வதுதான் தோசம் நீங்கும் முறையாகும்..அதற்கு திருவேணி சங்கமம் வழிபாடுதான் சரியான தோசம் நீங்கும் பரிகாரமாக இருக்க முடியும்.