சனி, 3 செப்டம்பர், 2011

ஜோதிடம்;ரியல் எஸ்டேட்டில் வெற்றிபெற சூட்சுமம்


ரியல் எஸ்டேட்டில் வெற்றிபெற

நிலத்திற்கு அதிபதி செவ்வாய். ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றவர்கள், நாலாம் இடம் வலுவடைந்தவர்களுக்கு நிறைய சொத்துக்கள் சேரும். ஜாதகத்தில் பத்தாமிடம், நான்காமிடம், செவ்வாய் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்றவர்கள் ரியல் எஸ்டேட் எனப்படும் நிலம் வாங்கி விற்றல் தொழில் செய்கின்றனர். இதற்கு செவ்வாய் பலம் பெறுவதும் அவசியம். ஜாதகத்தில் சில குறைபாடுகள் இரந்து ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக இருப்பவர்கள் பவழம், கோமேதகம் அணியலாம். பவழம் அணிவதால் செவ்வாய் கிரகத்தின் சக்தி இவர்களுக்கு கிடைக்கும். நிலம் சம்பந்தமான காரிய அனுகூலங்கள் கிடைக்கும். கோமேதகம், ராகுவிற்கு உண்டானது. ராகுவை போல கொடுப்பவனும் இல்லை. கேதுவைப்போல் கெடுப்பவனும் இல்லை என்பார்கள். 


அந்தளவு ராகு நினைத்தால் ஒரேபொழுதில் ஒருவனை கோடீஸ்வர நிலைக்கு உயர்த்தி விடுவார்கள். தந்திரம், முரட்டுத்தனம், குறுக்குவழி அனைத்து சட்ட ஓட்டைகளும் அறிந்தவர் ராகு பகவான். பல மிகப்பெரிய அரசியல் ஊழல்களுக்கு காரணமாக இருந்தவர்கள் பலர் ஜாதகத்தில் ராகுவே கொடுப்பவராக இருந்திருக்கிறார். 

ராகு புதையல் போல செல்வத்தை தரக்கூடியவர். அக்காலத்தில் பலர் புதையல் எடுக்க கோமேதகத்தை பயன்படுத்தினார்கள். தீயசக்திகளை அடக்கவும சாபம் உள்ள நிலங்களின் கெட்ட சக்திகளை கட்டுப்படுத்தவும் கோமேதகம் பயன்படுகிறது. பவழம் கோமேதகம் ரத்னங்களை ஜாதகத்தை ஆய்வு செய்து அணிந்து கொள்ளவும். லக்னப்படி பவழம் அணியலாமா என்பதையும் பரிசோதித்துக் கொள்ளவும். ர்pயல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் மாதம் ஒருமுறை பழனி முருகனை தரிசனம் செய்து வருவது மிக்க நன்மைதரும். 4 13 22 31 தேதிகளில் பிறந்தவர்களும் 29 30 21 18 27 9 ந்தேதி பிறந்தவர்களும் 29ம் தேதி பிறந்தவர்களம் ரியல் எஸ்டேட் புரோக்கர்களாகவும் நிலம் வாங்கி பிரித்து விற்பனை செய்பவர்களாகவும் இருப்பார்கள்.



வெள்ளி, 2 செப்டம்பர், 2011

ஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக


கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக

ஜாதகத்தில் 7ம் இடம் என்று சொல்லக்கூடிய களத்திர ஸ்தானத்தில் பாபகிரகங்களாகிய சூரியன், சனி, ராகு, கேது, செவ்வாய், ராகு 10 சந்திரன், ராகு 10 சூரியன், செவ்வாய் 10 சூரியன், சனி 10 சந்திரன், சூரியன்10சனி அமையப்பெற்றவர்களும், களத்திரஸ்தானாதிபதி 6, 8, 12ல் மறைந்திருந்தாலும் குடும்பவாழ்வில் போராட்டமாக இருக்கும். பிரிவு ஏற்படலாம். தினசரி சண்டை, சச்சரவுகளாக காணப்படலர். இருவரும் எலியும், பூனையுமாக இருப்பார்கள். சாப்பாடு விஷயம் முதல், எதற்கெடுத்தாலும் குற்றம், குறை காணுகிற வாழ்க்கை துணை அமைந்து கஷ்டப்படுகிறீர்களா...

 கணவன் மனைவி ஒற்றுமை உண்டாக முத்து அல்லது சந்திரகாந்தகல் பதித்த வெள்ளி மோதிரம் அணியலாம்.  இவை சந்திரனின் ஆகாஷண சக்தியை தன்னகத்தே கொண்டவை. காதலுக்கு காரகத்துவம் வாய்ந்த கிரகமாகிய சந்திரன் சக்தி பூரணமாக கொண்ட ரத்னங்கள் முத்து, சந்திரகாந்த கற்கள் ஆகும். முத்து ஒரிஜினல் கிடைப்பது அபூர்வமாகிவிட்டது. ஹைதராபாத் முத்து எனப்படும் செயற்கையாக தயாரிக்கப்படும் முத்துகளே அதிகளவில் இப்போது கிடைக்கின்றன. இதைவிட, சந்திரகாந்தகல் அணிவது மிக உத்தமம். இந்தகல் மிகவும் குளிர்ச்சியானது. சந்திரன் சக்தியை உறிஞ்சி வழங்கக்கூடிய காந்தக்கல் போன்றது என்பதால் சந்திரகாந்தக்கல் எனப்படுகிறது.

இது மனதில் அமைதியும், அன்பையும் ஏற்படுத்தச் செய்யும். மனதில் நம்பிக்கை, தைரியத்தை ஏற்படுத்தும். மனதில் எப்போதும் கவலை சுமப்பவர்கள், சின்ன விஷயத்திற்கும் பயப்படுபவர்கள் தைரியமாக இதனை அணியலாம். அம்பாள் சக்தி நிரம்ப கிடைக்கும். தாய் கிரகமானாக சந்திரன் இருப்பதால், ஒரு தாயை போல அணிந்தவர்களை காப்பாற்றக்கூடியவை இந்த கற்கள். ஜாதகத்தில் சந்திரன் 6,8,12ல் மறைந்தவர்களுக்கும், கேது, ராகு, செவ்வாய், சனியுடன் இணைந்து காணப்படும் ஜாதகத்தை உடையவர்களும் இந்த கல்லை அணிந்து பலன் பெறலாம்.

2,11,20,29 தேதிகளில் பிறந்தவர்களும் இதனை அணியலாம். 7,16,25 தேதிகளில் பிறந்தவர்களுக்கும் இந்த கல் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் இந்த தேதிக்காரர்களே அதிக கற்பனை, வீண்பயம், மனக்குழப்பத்தை அதிகம் உடையவர்களாகவும், குடும்ப பிரச்சினைகளை சந்திப்பவர்களாகவும் இருக்கிறார்கள். 8,17,26,9,18,27 தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்து மனவருத்தத்துடன் வாழ்கிறார்கள். 7,16,25 தேதிகளில் பிறந்தவர்கள் 2,11,20,29 தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் நல்லது. 8,9 வரும் எண்களை பிறந்த தேதியாக கொண்டவர்களை தவிர மற்ற எண்காரர்களை இவர்கள் மணக்கலாம்.


ஜோதிடம்;திருமண வாழ்வும், பெண்கள் பிரச்சினையும்


திருமண வாழ்வும், பெண்கள் பிரச்சினையும்

பலபெண்களின் திருமணம் சாந்தமான கனவுகள் நல்ல கணவர் அமைய வேண்டும் என்பதுதான். எல்லா பெண்களும் அப்படித்தான் எண்ணுவார்கள். காலாகாலத்தில் திருமணம் நடைபெறாமல் வயது ஏறிக்கொண்டே இருக்கும் பல பெண்களையும் பார்த்திருக்கிறோம். இவர்கள் தங்கள் திருமணத்தடையை நீக்கிக் கொள்ள பல கோயில்களுக்கும் சென்று வருகின்றனர். ஏராளமான பணம் செலவழித்து பரிகாரம் செய்து கொண்டே இருக்கின்றார்கள். நல்ல கணவர் அமையவேண்டும் என பட்டினி கிடந்து விரதமும் இருக்கின்றனர். மேட்ரிமோனி, தரகர்களை சல்லடை போட்டு அலசுகிறார்கள். இவர்கள் தங்கள் ஜாதகப்படி அதிர்ஸ்ட ராசிக்கல் மோதிரம் அணிந்து கொண்டால், தங்கள் ஜாதகத்தில் பலம் இழந்து இருக்கும் கிரகங்களுக்கு வலுவூட்டும்படி, நவரத்ன கற்களை அணிந்து கொண்டால் உடனே அந்த தடைகள் நீங்கி நல்ல கணவர் அமைவார். நல்ல குடும்பமாக அமையும்.



திருமண தாமதத்திற்கு முடிவு உண்டாகும். என்னிடம் ஜாதகம் பார்க்க, ஒரு இளம்பெண்ணும், தாயாரும் வந்திருந்தனர். அந்த பெண் ஜாதகத்தில் லக்னத்தில் ராகுவும், 2ல் செவ்வாய், சனி இருந்தனர். அதை பார்த்ததும் பிரச்சினை என்ன என்று எனக்கு புரிந்து விட்டது. அம்மா.. . இந்த ஜாதகத்தில் திருமண தடைக்கு முக்கிய காரணம் உங்கள் மகளது பிடிவாதம்தான். பலவித எதிர்பார்ப்புகள் உங்கள் பெண்ணுக்கு இருப்பதால், வரும் வரன்களையெல்லாம் தட்டிக் கழித்து கொண்டே இருக்கிறார். இதை நீங்களும் தடுக்க முடியவில்லை. அந்த இளம்பெண் தலை குனிந்து கொண்டாள்.

அப்பெண்ணின் தாயார், ஆமாங்க. நானும் திட்டி பார்த்துவிட்டேன். இவள் திருந்தவில்லை. சின்ன குறையையும் பெரிதுபடுத்துகிறாள். பல நல்ல வரன்களும் இவளால் தட்டி போய்விட்டன. காலம் கடந்துவிட்டது. என்ன செய்வது? என்றார்கள். அந்த பெண்ணு;கு சில அறிவுரைகள் கூறி, லக்னத்தில் உள்ள ராகுவுக்கு பரிகாரமாக கோமேதகம் அணிய சொன்னோம். நானே வெள்ளியில் பதித்து, பூறைஜ செய்து கொடுத்தேன். இரண்டு மாதங்களில் அப்பெண்ணிற்கு நல்ல இடத்தில் திருமணம் ஏற்பாடாகியது. தாயும், மகளும் நன்றி சொல்லிவிட்டு போனார்கள்.

ராசிப்படி அதிர்ஸ்டக்கல் அணிவதிலும் சில பிரச்சினைகள் உள்ளன. கும்பராசிக்கு நீலக்கல் அணியும் நபர் கடகலக்னத்தில் பிறந்திருந்தால் அந்த ராசிக்கல் கெடுதலையே செய்யும். இதற்காக அதிஸ்டக்கல்ல குறை சொல்லி பலனில்லை. ராகுதிசை நடப்பவர்கள், கடகராசிக்காக அணிகிறேன் என முத்து அணிந்தால் பல தொல்லைகள்தான் வந்து சேரும்.

எனவே ராசிப்படி அணிந்தாலும், பிறந்ததேதிபடி அணிந்தாலும் ஜாதகத்தை ஒருமுறை ஆய்வு செய்தபின்னர் அணிவதே உத்தமம். எந்த கிரகம் நமக்கு அதிக பாதிப்பை தந்து கொண்டிருக்கிறதோ அதன் வேகத்தை குறைக்கவும், எந்த கிரகம் நமக்கு நல்ல பலன் தராமல் முடங்கி இருக்கிறதோ அதற்கு வேகம் கூட்டவும் இந்த அதிர்ஸ்டக்கற்கள் பயன்டுகின்றன. உங்கள் வாழ்வில் புதிய மறுமலர்ச்சியை, வெற்றி, புகழை தருகின்றன

ஜோதிடம்-நியூமராலஜி-நவரத்னம் (birth stone)


 ஜோதிடமும் நியூமராலஜியும் நவரத்னமும்
ஒருவரது பிறந்த தேதிக்கு ஏற்றவாறோ பிறந்த ராசிக்கு ஏற்பவோ கண்ணைமூடிக் கொண்டு ரத்னங்களை வாங்கி போட்டுக் கொண்டால் வேலை செய்துவிடாது பலன் தந்துவிடாது என்பது என் அனுபவம். ஏன் என்றால் ஜெம்ஸ் கடையில் சென்று அவர்கள் நியமித்திருக்கும் (சம்பளத்திற்கு ஜோசியராம்... என்ன கொடுமை?) ஜோசியரிடம் ஜாதகத்தை காட்டினால் அவர் சிபாரிசு செய்யும் கல்லை அந்த கடைக்காரர்கள் தருகிறார்கள். 


ஜாதகத்தை பார்க்கும்போது பிறந்ததேதி 9 என்பதற்காக நாம் பவளம் அணிந்து விடக்கூடாது. ஜாதகத்தில் லக்னம் மிதுனமாக இருந்துவிட்டால் அது எதிர்விளைவாக வேலை செய்ய ஆரம்பித்து விடும். ஏதிரிகள் தொல்லை. கடன்பிரச்சனை தோல்நோய உடல் உஷ்ணம் அதிக கோபம் போன்றவற்றை மிதுன லக்னத்தார்க்கு உண்டு பண்ணும். ஏனென்றால் பவளத்திற்கு உண்டான கிரகம் செவ்வாய். மிதுன லக்னத்திற்கு செவ்வாய் ருணரோக ஸ்தானாதிபதியாக ஆறுக்குடையவனாக கடன் எதிரியை உண்டு பண்ணுவதாக வருவதால் பவளம் அணிவது பிரச்சினையையே உண்டு பண்ணும்.
ஒரு ஜாதகத்தில் சுக்கிர திசை நடக்கும்போது நீலக்கல் அணிவதும் சந்திரதிசை நடக்கும்போது கோமேதகம் நீலம் அணிவதும் அதிக மனக்குழப்பத்தை உண்டு பண்ணும். பெண்களால் கெட்ட பெயர் அவமானத்தை ஏற்படுத்திவிடும்.
சுக்கிரதிசை நடந்த அன்பர் ஒருவர் மகரராசிக்கு நீலக்கல் அணிகிறேன் என கடையில் வாங்கி அணிந்தார். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என அவர் நம்பினார். நடந்ததோ வேறு. அலுவலகத்தில் வேலை செய்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுஅலுவலகத்தில் கெட்ட பெயர் உண்டானது. 

சுக்கிரன் சனி இணைவு அதிக காம உணர்வை உண்டாக்கும். சுக்கிரன் சந்திரன் இணைந்தால் இது இன்னும் அதிகம். பலருடன் தொடர்பு உண்டாகும்.ராகு,சுக்கிரன் இணைவு ஆள் தராதரம் பார்க்காமல் செக்ஸ் வெறி பிடித்தவர்களாக இருப்பர். தொழிலை மறந்துவிட்டு இதே வேலையாக அலைவார்கள். இதனை சரிசெய்ய நவரத்ன பரிகாரம் சிறந்ததாகும். அதற்கு நேர்மாறான எண்ணங்களை ஒழுக்கத்தை உண்டாக்கும் நவரத்னங்களில் ஒன்றை ஜாதகப்படி அணியவேண்டும். 

ரொமான்ஸ்;பெண்களுக்கு பிடித்த 10 வகை ஆண்கள்

பெண்களுக்கு பிடித்த 10 வகை ஆண்கள்



பெண்கள் யாரை விரும்புகிறார்கள் என பல காலம் ஜொள்ளு விட்டு அனுபவம் வாய்ந்த குப்பு சாமி தாத்தா விடம் எடுக்கப்பட்ட சர்வே;

1.தம்பி..ஆண்கள்னா அவன் சிரிச்ச முகமா இருக்கணும்.அப்பாவியா இருக்கணும் அப்பதான் பொண்ணுங்க கிட்டவே வருவாங்க...என ஒரே போடாக போட்டார்.

2.அப்பாவின்னாலும் கிறுக்கு பயலா இருக்க கூடாது.திறமையும் இருக்கணும்.அவந்தான் இதுக்கு சரிப்படுவான்னு மத்தவங்க சொல்ற மாதிரி நீ இருக்கணும்.அது எந்த விசயம் வேணா இருக்கலாம்.



3.ஆளுக்கு தகுந்த எள்ளுருண்டை மாதிரி ஒவ்வொரு பொண்ணும் தன்னோட அறிவுக்கு தகுந்த மாதிரிதான் தன் காதலனை பிடிப்பா.கற்றோரை கற்றோரே காமுறுவர் நு திருவள்ளுவர் சொல்லியிருக்கார்.அதாவது உனக்கு பெயிண்டிங்க்ஸ் பிடிக்கும்.அந்த பொண்ணுக்கும் அது பிடிக்கும்னா இரண்டு பேரும் ஈஸியா நட்புல விழுந்துடுவீங்க..அந்த பொண்ணைவிட நீ அதுல நிறைய விசயம் உனக்கு தெரியும்னா அந்த பொண்ணு உன்னை அடிக்கடி தொந்தரவு பண்ணி நிறைய தெரிஞ்சிக்க ஆசைப்படும்.அப்படியே டெவலப் ஆகும்.

4.அவர் ரொம்ப சூப்பரா பேசுவாரு..அவர் பேசினா நான் என்னையே மறந்துடுவேன்னு அந்த பொண்ணு தன் தோழிகிட்ட சொல்ற அளவுக்கு உன் பேச்சு இனிமையா இருக்கணும்...கடி போடுறான்பா னு தெறிச்சு ஓடுற மாதிரி அறுக்க கூடாது.சுத்தமா இருக்கணும்.நீட்டா ஷேவ் பண்ணி,கிராப் வெச்சி,இன் பண்ணின சர்ட் போட்டு இருக்கணும்.குளிகாம அழுக்கு ஜீன்ஸ் போட்டுகிட்டு பபுள்கம் போட்டுகிட்டு,தலைமுடியை ரொம்ப நாள் வெட்டாம, இருந்தா திரும்பி கூட பார்க்கிறதில்ல..

5.செக்சியா,ஆபாசமா பேசினா பொண்ணுங்களுக்கு பிடிக்கும்.அதுக்காக எடுத்தவுடனே அப்படி ஆரம்பிச்சா என்னை காப்பாத்துங்க..ரேப் பண்ண பார்க்குரான்னு அலற ஆரம்பிச்சிடும்.அந்த பெண்ணின் மனம் அறிந்து பேசு.அதுக்கு பிடிக்காதுன்னா விட்ரு.பல பெண்கள்கிட்டயும் வலிய வ்லைய போய் பேசினா ஜொள்ளுன்னு சொல்லிருவாங்க..தேவைன்னா மட்டும் பேசு.அடிக்கடி பேசினா லூசுன்னு சொல்லிரும்.

6.மரியாதை ரொம்ப முக்கியம்.மரியாதை கொடுத்தா பொண்ணுங்க அவங்ககிட்ட அதிக நேரம் செலவழிப்பாங்க.

7.நிறைய வம்புக்கதை,ஊர்க்கதை,சினிமாக்கதை சொல்ல தெரியணும்...மசாலாவா பேசணும்.அவங்க உனக்கு ரொம்ப முக்கியம் மாதிரி நடந்துக்கணும்.அதே சமயம் உன் படிப்பு,தொழில்லயும் சின்சியரா இருக்கணும்.படிப்பை மறந்துட்டு என் கூட சுத்துறான்.நம்மால இவன் படிப்பு கெடக்கூடாதுன்னு அந்த பொண்ணு நினைக்கும் அளவு சுத்தாதே.

8.அவங்க அப்பா,அம்மாகிட்டயும் நல்ல பேர் வாங்கணும்.அது ரொம்ப முக்கியம்.அதுதான் அவங்க அதிகம் எதிர்பார்ப்பது.

9.குழந்தைகள்னா ரொம்ப பிடிக்குமா..ஆமாம்னா நீ ரொம்ப நெருங்கிட்ட...

10.கண்களை பார்த்து பேசினா உடனே உங்களை முழுசா நம்புவாங்க..அதுதான் சரியான பேச்சும் கூட...நல்ல தொழில்,சம்பாதிக்கும் திறமை இருக்கும் ஆண்களை பெண்கள் இப்போ 40 சதவீதம் விரும்புறாங்க.அதுதான் உண்மையான பாதுகாப்புன்னு நினைக்கிறாங்க.