வியாழன், 22 ஜனவரி, 2015

உங்களுக்கு உதவக்கூடிய, நன்மை செய்யும் ராசிக்காரர்கள் யார்..?ராசிபலன்

உங்களுக்கு உதவக்கூடிய நன்மை செய்யும் ராசிக்காரர்கள் யார்..?


மேசம் ராசிக்காரர்களுக்கு கடகம்,சிம்மம்,தனுசு,மீனம் ராசியினர் நன்மை செய்வர், உதவுவர்..தீமை உண்டாகாது....கன்னி,விருச்சிகம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்..
---------------------------
ரிசபம் ராசிக்காரர்களுக்கு கடகம்,சிம்மம்,கன்னி,,,மகரம்,மீனம் ராசியினர் நன்மை செய்வர்..துலாம் ,தனுசு ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்..

----------------------


மிதுனம், ராசியினருக்கு கன்னி,துலாம்,சிம்மம்,தனுசு,கும்பம்,மேசம் ராசியினர் நன்மை செய்வர்.விருச்சிகம்,மகரம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

------------------------------
கடகம் ராசியினருக்கு ரிசபம்,துலாம்,விருச்சிகம்,மகரம்,ஆகிய ராசியினரால் யோகம் உண்டாகும்..தனுசு,கும்பம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

---------------------------
சிம்ம ராசியினருக்கு மிதுனம்,விருச்சிகம்,தனுசு,கும்பம்,மேசம் ராசியினரால் நன்மை உண்டகும்..
 மகரம்,மீனம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

---------------------------

கன்னி ராசியில் பிறந்தவருக்கு தனுசு,மகரம்,மீனம்,ரிசபம்,கடகம் ராசியினர் நன்மை செய்வர்.கும்பம்,மேசம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

--------------------------


துலாம் ராசியினருக்கு மகரம்,கும்பம்,மேசம்,மிதுனம்,சிம்மம் ராசியினர் நன்மை செய்வர்.மீனம்,ரிசபம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

-----------------------------
விருச்சிகம் ராசியில் பிற்ந்தவருக்கு கும்பம்,மீனம்,ரிசபம்,கடகம்,கன்னி ராசியினர் நன்மை செய்வர்.மேசம்,மிதுனம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

---------------------------
தனுசு , ராசியில் பிறந்தவர்களுக்கு மேசம்,மிதுனம்,சிம்மம்,கன்னி,,ராசியினரால் நன்மை உண்டாகும்..ரிசபம்,கடகம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

---------------------------------
மகரம், ராசியில் பிறந்தவர்களுக்கு ரிசபம்,கடகம்,ராசிக்காரர்கள் நன்மை செய்வார்கள்..மிதுனம்,சிம்மம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

--------------------------------
கும்பம்-ராசியில் பிறந்தவர்களுக்கு ரிசபம்,மிதுனம்,சிம்மம்,துலாம் ராசியினர் நன்மை செய்வர்.கடகம்,கன்னி ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

-------------------------------
மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு ரிசபம்,மிதுனம்,கடகம்,கன்னி,விருச்சிகம் ராசியினர் நன்மை செய்வர்..சிம்மம்,துலாம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

-------------------------------
இந்த பலன்கள் வியாபார கூட்டுக்கும்,நட்புக்கும் மட்டுமே பொருந்தும் உறவு முறைக்கு பொருந்தி பார்த்து குழப்பிக்கொள்ள வேண்டாம்
‪#‎ராசிபலன்‬ ‪#‎ஜோதிடம்‬ ‪#‎astrology‬ ‪#‎raasipalan‬ 2015 raasipalan

திங்கள், 19 ஜனவரி, 2015

தை அமாவாசை

தை மாதத்தில் (தமிழ் மாதம்) மகர ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில்) அமையும் தினமே தை அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் படுகிறது..

சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். சந்திரன் நமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் தரக்கூடியவர்
சூரியனைப் "பிதுர் காரகன்" என்றும், சந்திரனை "மாதுர் காரகன்" என்றும் சோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும் சந்திரனும் நமது தாய்,தந்தையாக வழிபடும் தெய்வங்களாக இந்துக்கள் கருதுகின்றனர்..

இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசையில் வழிபடுவது மிக சிறப்பு..அதுவும் உத்தராயணம் எனும் புண்ணியகாலமாக தை அமவாசைக்கு பல மடங்கு புண்ணியம் உண்டு..இந்நாளில் குலதெய்வத்தை வணங்குவதும்,புண்ணியநதிகளில் நீராடுவதும்,தான தர்மம் செய்வதும் அளவற்ற புண்ணிய பலன்களை தரும்..!!

செவ்வாய், 13 ஜனவரி, 2015

தைப்பொங்கல் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட நல்ல நேரம்

தைப்பொங்கல் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட நல்ல நேரம்;


தைப்பிறந்தால் வழி பிறக்கும்...பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட நல்ல நேரம்;காலை 8 முதல் 8.25 வரை...மற்றும் காலை 10.30 முதல் 12.30 வரை..
------------------------
தை அமாவாசை அன்னதானம்;
ஜனவரி 20 ஆம் தேதி அன்று வருகிறது.உத்திராயண புண்ணிய காலத்தில் பிரம்ம லோகம் உயிர்களை ரட்ஷிக்கும் காலமாகும்..முன்னோர்கள் நம்மை ஆசிர்வதித்து வழி நடத்தும் மாதமான இக்காலத்தில் தை அமாவாசை அன்று குலதெய்வம் கோயில் சென்று 16 விதமான அபிசேகம் செய்து வழிபடுங்கள். தான தர்மங்கள் செய்யுங்கள்..புரட்டாசி மகாளயபட்ச அமாவாசைக்கு பின்னர் தை அமாவாசைக்கு வழக்கம்போல ஆதரவற்றோர்க்கு அன்னதானம்,முதியோர்களுக்கு உதவிகள்,உடல் உணமுற்றோர்க்கு உதவிகள் என செய்ய இருக்கிறொம்..இணைய விருப்பம் இருப்போர் மெயிலுக்கு தொடர்பு கொள்ளலாம் sathishastro77@gmail.com

சனி, 3 ஜனவரி, 2015

செல்வவளம் பெருக சூட்சும ஆன்மீக வழிகள் astrology

மகாபாரத்ததுல பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்திருப்பார் ...எல்லோருக்கும் ஆசியும்,உபதேசமும் செய்வார்...1000 அம்புகளாவது உடலில் தைத்திருக்கும்..அப்புறம் எப்படி இவர் சாகாம இன்னும் பேசிக்கிட்டிருக்காருன்னு சின்ன வயசுல யோசிச்சுருக்கேன்...அவருக்கு எப்போ விருப்ப்ம் இருக்கோ அப்போ உயிரை விடும் வரம் இருந்தது...அதனால் சூரியன் மகர ராசியில் நுழையக்கூடிய உத்தராயண புண்ணிய காலம் இறந்தால்தான் பிரம்மலோகத்தில் தன் ஆன்மா நுழைய முடியும் என எண்ணி அவர் காத்திருந்தார்..மகர ராசியில் சூரியன் நுழையும் காலம் சூரியன் வடக்கு நோக்கி தன் பயணத்தை துவங்குகிறது....அதைத்தான் நாம் தைப்பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டு கொண்டாடுகிறோம்..


கெடுதல்கள் குறைந்து நன்மைகள் விளையும் காலம் என்பதால் நல்ல சக்திகள் சூரியனிடம் இருந்து பூமிக்கு கிடைக்கும் காலம் என்பதால் அச்சமயம் சூரியனை தெய்வமாக வழிபடும் பழக்கம் நம் தமிழகத்தில்தான் இருக்கிறது.. இப்படி ஒரு விஞ்ஞான அறிவு தமிழர்களிடம் மட்டும் உலகில் இருக்கிறது..உத்திராயண காலத்தில் மரணம் அடைந்தால் சொர்க்கம் நிச்சயம் என்பதுபோல மார்கழி மாத வளர்பிறையில் சொர்க்கவாசலும் திறக்கப்படுகிறது..மார்கழி ஏகாதசி முடிந்து அடுத்த நாள் துவாதசியில் அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்தார்..ஆதிசங்கரர் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தார்..அன்று நாம் பெரியவர்களுக்கு நெல்லிக்கனி சாதம் உண்ண கொடுத்தால் செல்வம் இரட்டிப்பாகும்..இப்படி எல்லாம் சில ரகசிய சடங்குகளை செய்து நம் முன்னோர்கள் செல்வம் பெருக வழி செய்தனர்..
 
 தை மாத அமாவாசைக்கு அடுத்த ஏழாவது நாள் ரதசப்தமி தினம். இன்று சூரிய பகவானின் ரதம் வடக்கு திசை நோக்கித் திரும்புவதாக ஐதீகம். ஆதவனின் பயணத்தில் ஏற்படும் இந்தச் சிறு திருப்பத்தையும் நாம் பண்டிகையாகக் கொண்டாடுகிறோம். இந்நன்னாளில் சுமங்கலிகள் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு எருக்கம் இலைகளை அடுக்கி, அதன் மீது சிறிது அரிசியும் மஞ்சள் தூளும் கலந்து (அட்சதை) இலை அடுக்கை அப்படியே தலை மீது வைத்துக் கொண்டு குளிப்பது வழக்கம். ஆண்கள் வெறும் அட்சதையை தலையில் போட்டுக் கொண்டு குளிக்கலாம். பூஜை அறையில் தேர்க்கோலம் இட்டு, சர்க்கரைப் பொங்கல், வடை நிவேதனம் செய்து வழிபடலாம். 
 
தை அமாவாசை அன்னதானம்;
 
தை அமாவாசை 20.1.2014 அன்று வருகிறது.. அன்று ஆதரவற்ற குழந்தைகளுக்கும்,உடல் ஊனமுற்றோர்களுக்கும் , முதியோர்களுக்கும் அன்னதானம் செய்ய இருக்கிறோம்.. விருப்பம் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம் என் ஈமெயிலில் தொடர்பு கொள்ளவும்...sathishastro77@gmail.com நன்கொடை அனுப்புபவர்கள் குடும்பத்தார் பெயரில் அன்று முருகனுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யப்படும்..

நன்கொடை அனுப்ப விரும்புபவர்கள்’இந்த வங்கி கணக்கிற்கு அனுப்பலாம்..

k.sathishkumar,20010801181,state bank of india,bhavani

cell;9443499003

புதன், 24 டிசம்பர், 2014

தனுசு ராசியினருக்கு ஏழரை சனி சோதனை காலமா..? astrology

 astrologer in erode,salem,coimbatore ,tamil astrology ,tamil jothidam ,nalla neram,astrologer sathishkumar,rasipalan,raasipalan,elarai sani,thanusu,mesam

நல்ல நேரம் ப்ளாக்கில் எழுதப்பட்ட இந்த பதிவு மட்டும் 16,000 ஹிட்ஸ் தாண்டி போய்க்கொண்டிருக்கிறது..மொத்த சனிப்பெயர்ச்சி பலன் பதிவுகள் 3 வாரங்களில் 90,000 முறை படிக்கப்பட்டிருக்கின்றன..இந்த பதிவுக்கு மட்டும் 1,100க்கும் மேற்பட்ட பேஸ்புக் நண்பர்கள் லைக் போட்ருக்கீங்க..நன்றி நண்பர்களே..இன்னும் துல்லியமான சனிப்பெயர்ச்சி பலன்கள் மீண்டும் ஒருமுறை எல்லா ராசிக்கும் எழுதப்போகிறேன்...அதில் சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்படும் முக்கியமான 7 ராசியினருக்கு கெடு பலன்கள் எத்தனை சதவீதம்..அப்பலன்கள் நடக்குமா நடக்காதா ,எப்போது நடக்கும் என மறுபடியும் எழுதியிருக்கிறேன்...மற்ற பதிவுகளையும் படித்து பார்க்கவும்.

ஜென்ம சனி,அஷ்டம சனி,பாத சனி, பலன்கள் படிக்க க்ளிக் செய்யவும்



தனுசு ராசியினரின் ஏழரை சனி சோதனை காலமா..? astrology

தனுசு ராசியினருக்கு இப்போது குரு எட்டாம் ராசியில் இருக்கிறது எட்டில் குரு பண வரவுக்கு கெடுதல்தான் ...பணம் தங்குவதில்லை..நிறைய செலவுகள் வந்துகொண்டே இருக்கும் வருமானமே இல்லை செலவு மட்டும் வந்துகிட்டே இருக்கு என புலம்பும் நேரம் இது.குரு ராசியின் அதிபதியும் ஆவதால் தன்னம்பிக்கை குறைந்துபோகும் குழப்பம் அதிகமாக இருக்கும்..

.ராசிக்கு 12ல் சனி வந்துவிட்டதால் தூக்கம் கெடும்...எதிர்காலம் குறித்து பயம் உண்டாகும்...சனி சந்திரனை நெருங்கும்போது என்ன நடக்கிறது என பார்த்தால் சந்திரம் உடல்,மனம் இவற்ருக்கு அதிபதி..சனி முடக்கம் தருபவர் இருள் கிரகம்...சந்திரன் வெளிச்சம் என்றால் சனி இருள்...அப்போ வெளிச்சத்தை குறைத்து இருளை அதிகமாக்குகிறார் என்றுதான் அர்த்தமாகிறது..

ஒளி கிரகம் கெடும்போதுதான் தவறான வழியில் செல்ல நேர்கிறது.. குழப்பம் அதிகமாகிறது..கல்வியில் மந்தம் ,தெளிவான சிந்தனை இல்லாமல் மனம் போன வழியில் செயல்படுவது உண்டாகிறது சுய ஜாதகத்தில் இயற்கையாக சந்திரன் கெட்டவர்களுக்கும், தேய்பிறையில் பிறந்தவர்களுக்கும் ஏழரை சனி சோதனை அதிகமாக இருக்கும்.

ஏழரை சனி கண்டு வளர்பிறையில் பிறந்தவரும்,சந்திரன் பாவ கிரகங்களுடன் சேராதவர்களும் ,சந்திர திசை ,சனி திசை ,சந்திர புத்தி,சனி புத்தி நடக்காதவர்களும் அதிகம் கவலையுற தேவையில்லை..அப்படி நடப்பவர்கள் அதன் காரகத்துவம் எதனை குறிக்கிறதோ அந்த ஸ்தானம் பாதிக்கப்படும்..

குறிப்பாக மேசம் ராசியில் சுய ஜாதகத்தில் சனி இருப்பின் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...விபத்தை உண்டாக்கும்..குருப்பெயர்ச்சியானால் 2015 ஜூன் மாதம் முதல் பணப்பிரச்சினை தீரும்..

நள மகாராஜா ஏழரை சனி முடிந்தபின் திருநள்ளாறு போனாரா..சனி ஆரம்பித்தவுடன் போனாரா....அவர் சனியை வழிபட்டாரா..? தர்ப்பணேஸ்வரரை வழிபட்டாரா என நளதமயந்தி கதை படித்தவர்களுக்கு புரியும்...!!! இப்போது கன்னி ராசிக்காரர்கள் மட்டுமே அங்கு செல்ல தகுதியானவர்கள்.. பணம் பொருள் தேவைப்படுபவர்கள்,நல்ல நிம்மதி கொடுக்கும் பெருமாள் கோயில் சென்று வழிபடுங்கள்....முக்தி ? தேவைப்படுபவர்கள் சிவன் கோயில் போய் வாருங்கள்..எல்லாவற்றையும் போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள்!! ‪#‎thirunallar‬ ‪#‎astrology‬ ‪#‎raasipalan‬
  
வளைகாப்பு ரகசியம்;

கர்ப்பிணி பெண்களுக்கு 7ஆவது மாதத்தில் வளைகாப்பு எனும் சடங்கு நடத்தி பிறந்த வீட்டுக்கு அழைத்து செல்வது நம் மண்ணில் காலம் காலமாக நடக்கும் சம்பிரதாயம்...எல்லா உறவினர்களும் வந்து 7 விதமான அறுசுவை உணவு கொடுத்து ஆசீர்வாதம் செய்யும்போது கர்ப்பிணி உள்ளம் மகிழ்ச்சியக இருக்கும் வயிற்றில் இருக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்..
.அறுசுவை உணவு கர்ப்பிணி சாப்பிடும்போது எல்லாவிதமான சத்துளும் குழந்தைக்கு கிடைக்கும்..மேலும் ஏழு மாதத்துக்கு பின் கணவனுடன் உறவு கொண்டால் குழந்தை வயிற்றில் திரும்பி கொள்ளும்...மூளை வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும் என மருத்துவ நுண்ணறிவோடு நம் முன்னோர் உண்டாக்கிய சடங்குதான் இது..7 வது மாதத்துடன் கணவன் மனைவியை பிரித்து வைப்பது அதற்குத்தான்..
இப்போதெல்லாம் வீண் செலவு என்றெண்ணி அதையும் சிலர் தவிர்க்கின்றனர்..9 வது மாசம் அம்மா வீட்டுக்கு போனா போதும் என நாகரீகம் கருதி தவிர்க்கின்றனர்...‪#‎science‬ ‪#‎medical‬

 கரு உருவாவதற்கு முன்பே தாய், தந்தையரின் உடல் நலம் இவ்வாறு இருந்தால் தான் பிறக்கும் குழந்தைகள் நீண்ட காலம் உடல் மனநலத்துடன் வாழும் என வரையறுத்துத் தந்தவர்கள் நம் முன்னோர்கள்...இன்று அப்படி வழிகாட்ட இப்போதிருக்கும் பெரியோர்கள் முயற்சித்தாலும் பெரியோர்களை பார்த்து நீ என்ன லூசா என்பார்கள் இன்றைய இளசுகள்....!! கருர் சதாசிவம் சித்தர் பெற்றோர்கள் குழந்தை உருவாகும் முன் நம் உடலில் இருக்கும் அனைத்து செல்களும் சுத்தமாக வேண்டும் என எண்ணி பல நூறு கோடி முறை ராம் ராம் என உச்சரித்து திருப்தியான மனநிலை வந்தபிறகே தாம்பத்யம் கொண்டார்களாம்..ஆனா இப்ப கல்யாணம் ஆன உடனே அது ஏன் முதல் இரவு..? முதல் பகல் வைக்க கூடாதா என கொலைவெறியுடன் இருக்கிறார்கள் நம்மாட்கள்!!


ஒருவருக்கு ஆயுள் பத்தி தெரிஞ்சிக்கனும்னா லக்னத்துக்கு எட்டாம் இடத்தை வெச்சி தீர்க்காயுளா என்பதை அறிகிறோம்..அதே போல ஒருவருடைய சொத்துக்களுக்கு அதாவது வீடு நிலம் இவர்ருக்கும் ஆயுள் கணக்கிடலாம்..அதாவது இவருக்கு அந்த சொத்து நிலைக்குமா கைய விட்டு போயிடுமா என பார்க்கும் முறை..இதற்கு 4ஆம் இடத்துக்கு எட்டாம் இடம் பார்க்கனும்...அதுதான் 11 அம் இடம்..அதாவது லாப ஸ்தனம் என சொல்லப்படும் இடம்..
இந்த இடத்தில் சுபர்..அல்லது 11 ஆம் அதிபதி பாவருடன் சேராமல் கெடாமல் பகை,நீசமில்லாமல் இருக்கனும் அப்பதான் அவருக்கு எப்பவும் சுகவாசியாகவும்,ஆரோக்கியமாகவும்,நிறைய சொத்து சேர்க்கைகளும் பெற்று இருப்பார்..
இப்ப கருணாநிதி ஜாதகம் பார்த்தால் அவருக்கு 11 ஆம் இடத்தில் சந்திரன் உச்சம் ஆகி இருக்கும்..அவர் இந்த வயதிலும் ஆரோக்கியமாக செயல்பட இதுவும் ஒரு முக்கிய காரணம்..அதுவும் லக்னாதிபதியே அங்கு இருப்பதால் சொத்துக்கள் வளர்ந்துகொண்டே இருக்கும்.அவருக்கு 4ஆம் இடத்தில் சனி உச்சமும் ஆகி இருக்கும்..‪#‎jothidam‬ ‪#‎astrology‬