சனி, 30 ஏப்ரல், 2011

ரஜினி vs எம்.ஜி.ஆர்


ரஜினிக்கும் எம்.ஜி.ஆருக்கும் என்ன பிரச்சனை..?

எம்.ஜி.ஆர் மிக துணிச்சலும்,கோபமும் உடையவர்..அதிக அனுபவப்பட்டவர்...எம்.ஜி.ஆர் சினிமாக்கள் குறைந்து தமிழக அரசியலில் புரட்சி ஏற்படுத்திக்கொண்டிருந்த காலத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்...தனி ஸ்டைல்,வேகம் சிறுவர்களையும் இளைஞர்களையும் கிறுக்கு பிடிக்க வைத்துக்கொண்டிருந்தது..எம்.ஜி.ஆர் அசைக்க முடியாத ஒரு இடத்தில் இருக்கும்போது...இளைஞர்களுக்கு பிடித்தவராக ரஜினி மாறிப்போனார்..தலைமுறை இடைவெளி போல அந்த மாற்றம் நடந்தது...



பெரியவர்கள்,பெண்கள் எம்.ஜி.ஆரையும்,இளைஞர்கள் ரஜினியையும் நேசித்தனர்..இளம்பெண்கள் அப்போது கமலை நேசித்தனர்...அவர்களது ஆதர்ஷ நாயகனாக கமலே இருந்தார்..காரணம் அவரது அழகு,சிவப்பு நிறம்,சிரிப்பு,நடனம்...ரஜினி கறுப்பு என்பதால் தனுஷை சொன்னது போல இவரெல்லாம் ஹீரோவா என்ற விமர்சனத்தில் தான் ரஜினி நடித்துக்கொண்டிருந்தார்...


பில்லா படத்திற்கு பிறகுதான் ரஜினியின் சினிமா தலையெழுத்தே மாறியது...பாலாஜியின் கணிப்பு தவறவே இல்லை..அப்போது ஆக்‌ஷனில் பிரபலமாக இருந்த ஜெய்ஷங்கர்,ஏற்றிருக்க வேண்டிய வேடம் அது..இது ஒரு ஆண்டி ஹீரோ அப்ஜெக்ட் என்பதால் புது முகமாக இருக்க வேண்டும் என நினைத்தார்களொ..அல்லது புது முகமாக இருந்தால் சம்பளம் குறைவாக கொடுக்கலாம் என நினைத்தாரோ..அல்லது ரஜினிதான் இதுக்கு பவர் என நினைத்தாரோ ...,பாலாஜி... தெரியாது...படம் தீயாய் ஓடியது..

பைரவி' படத்தின்போது ரஜினிக்கு முதன்முதலில் 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தைக் கொடுத்து விளம்பரப்படுத்தியவர் கலைப்புலி தாணு! ஆனால் இதற்குபின்னர் தான் பில்லா வெளிவந்தது....சூப்பர்ஸ்டார் பட்டம் பில்லாவுக்குத்தான் பொருந்தும்..


மஞ்சள் பத்திரிக்கைகள்..என சொல்லப்படும் வகையில் அப்போது பிரபலமாக இருந்த பத்திரிக்கைகள் ரஜினியையும்,எம்,ஜி,ஆரையும் வைத்து பல கதைகள் கட்டி விட்டிருக்கின்றன...அதில் ஒன்றுதான் ரஜினி க்கும் எம்.ஜி.ஆருடன் நடித்துக்கொண்டிருந்த லதாவுக்கும் இருக்கும் பழக்கம்...இதை பற்றி அப்போது கிசு கிசு செய்திகள் வாய்வழி பரபரப்பு செய்தியாக பரப்பப்பட்டது... லதா,எம்.ஜி.ஆர் கிசுகிசு பிரபலமாக இருந்த நேரத்தில் ரஜினிக்கும் லதாவுக்கும் பழக்கம் என செய்தி காட்டுத்தீயாய் பரவியது..உண்மையில் தன்னிடம் பேட்டி எடுக்க வந்த கல்லூரி மாணவி லதாவைத்தான் ரஜினி விரும்பிக்கொண்டிருந்தார்..ஆனால் செய்தி நடிகை லதாவை ரஜினி விரட்டி விரட்டி தொந்தரவு செய்வதாக சொல்லப்பட்டது...


இதனால் எம்.ஜி.ஆர் ரஜினி மீது மிக ஆத்திரமாக இருப்பதாகவும்,ரஜினிக்கு எம்.ஜி.ஆரால் ஆபத்து நேரலாம் எனவும் கோடம்பாக்கம்.பயந்தது..ஆனால் இதை ஓபனாக பேசமுடியாதே...இதை அவரிடம் விளக்கவும் முடியாது...எம்.ஜி.ஆரும் கேட்க மாட்டார்..முதலில் உதை..அப்புறம் தான் பேச்சு இது எம்.ஜி.ஆர் பாணி...

இன்னொரு பக்கம் லதா மேட்டரை கிசுகிசுவாக எழுதிய நிருபர் ஸ்கூட்டரில் போய்கொண்டிருப்பதை ,காரில் சென்று கோண்டிருந்த ரஜினி பார்த்து விட்டார் உடனே கெட்ட வார்த்தையில் திட்டியபடியே காரில் துரத்த ஆரம்பித்து விட்டார்....ஸ்கூட்டர் மீது மிகுந்த வேகத்தோடு கார் மோதும் நிலை..ரஜினி மிக கோபத்தோடு இருக்கிறார்...அவ்வளவுதான் ...ரஜினி காரை தன் மேல் ஏற்றாமல் விடமாட்டார் என நிருபர் குலை நடுங்கிபோனார்....20 நிமிடம் அந்த சேஸிங் தொடர்ந்தது...எப்படியோ அன்று உயிர் தப்பினார் அந்த நிருபர்...


ரஜினி கையால் பல நிருபர்களுக்கு அடி விழுந்திருக்கிறது...எம்.ஜி.ஆருடனான மோதலை முடிவுக்கு கொண்டு வரவே லதாவை அவசரமாக ரஜினி திருமணம் செய்து கொண்டார் எனவும் சொல்வார்கள்...பத்து நிருபர்களை அவசரமாக அழைத்தார் ரஜினி..சுற்றிலும் கண்ணாடி பதிக்கப்பட்ட அறையில் மது பாட்டில்கள் சூழ கையில் மது கிண்ணத்துடன் அமர்ந்திருந்தார் ரஜினி...உட்காருங்க..சாப்பிடுறீங்களா என கேட்டாராம்..பரவாயில்லை..என்ன விசயம் சொல்லுங்க என்றனர் நிருபர்கள்..சிலருக்கு ரஜினி மீது கோபம்...
நாளைக்கு எனக்கும் லதாவுக்கும் கல்யாணம்..கல்யாணம் முடிஞ்சதும் ஃபோட்டோ தரேன்...நீங்க யாரும் வர்வேண்டாம்..ஃபோட்டோ நியூஸ் உங்க ஆஃபீஸ்க்கு அனுப்பிடுறேன் என்றாராம்...


அப்படி மீறி வந்தா என்றாராம் ஒரு நிருபர் துடுக்காக...

உதைப்பேன்..என்றாராம் ரஜினி சிறிதும் தாமதிக்காமல்.
அதிர்ந்தார்கள் நிருபர்கள்.....

ரஜினி தனது திருமண பத்திரிக்கை எடுத்துக்கொண்டுமுதல்வர் அலுவலகம் சென்று காத்திருந்தபோது,எம்.ஜி.ஆர் அவரை சந்திக்க மறுத்துவிட்டார்..அதன்பிறகு இருவரும் ஒரு சினிமா விருது நிகழ்ச்சியில் சந்தித்ததோடு சரி..அதிலும் ஒரு வார்த்தை பேசவில்லை.

புதன், 27 ஏப்ரல், 2011

ஜோதிடம்;அமாவாசை, பௌர்ணமியில் பிறந்தவர்களின் பலன்கள்


அமாவாசை, பௌர்ணமியில் பிறந்தவர்களின் பலன்கள்
ஜனன லக்னத்தில் சந்திரனும் சூரியனும் சேர்ந்திரக்கப் பிறந்தவர்கள் எந்த ஒரு காரியம் செய்தாலும் ரகசியமாகலே இருக்கும். என்ன தவறு செய்தாலும் வெளியில் தெரியாது. ஆனால், அதே சூரியனும் சந்திரனும் 7¬-க்கு 7-ல் சப்தமாதிபதியாய் இருக்க, அதாவது, பௌர்ணமி அன்று பிறந்தவர்கள் எந்த ஒரு சிறு குற்றம் செய்தாலும் அது வெளியில் தெரிந்து விடும் அல்லது அவரே உளறி மாட்டிக்கொள்வார் என்பதையும் அறிக

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

ஜெயலலிதா ஜாதகம் என்ன சொல்கிறது..?



ஜெயலலிதா ஜாதகம் என்ன சொல்கிறது..?


ஜெயலலிதா ஜாதகப்படி அவர் எதிர்காலம் எப்படி இருக்கும்..?அவர் ராசி நிலை எப்படி..?என்பது பற்றி அறிய விரும்பினேன்...ஒரு நண்பர் மூலமாக அவரது ஜாதக குறிப்பு கிடைத்தது.
 

ஜெயலலிதா பிறந்ததேதி;24.2.1948


பிறந்த நேரம்;1.30 மாலை.
இவரது நட்சத்திரம் ;மகம்
ராசி;சிம்மம்
 

மகத்தில் பிறந்தவர் ஜகத்தை ஆளுவார் என்ற ஜோதிட பழமொழி..இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ இவருக்கு நன்றாகவே
பொருந்துகிறது....இரண்டு முறை தமிழக முதல்வராக இருந்தவர் அல்லவா..?
மகம் நட்சத்திரம் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை சிறப்பில்லை.
ஆனால் பொது வாழ்வு,மக்கள் தொண்டு மிக சிறப்பாக அமைந்துவிடுகிறது.
 

இவர்களது பலவீனம்;முன்கோபம்,பிடிவாதம்.
 

அறிவாற்றலை பொறுத்தவறை நிறைய உலக ஞானம் உண்டு.
 

மகம் கேதுவின் நட்சத்திரம் என்பதால் வாழ்வில் போராட்டம் நிகழ்த்தி,கசப்பானஅனுபவங்களை தந்து,வாழ்க்கை பற்றிய புரிதல்களை தரும் கிரகம் கேது.
 

சிம்மம் ராசி அதிபதி சூரியன்..நெருப்பு போல சுட்டெரிக்கும் கோபத்துக்கு இவரே காரணம்.
 

சிம்மம் என்றால் சிங்கம்..அதனால் யாரும் இவர்களை நெருங்க முடியாது..துணிச்சலும்,தன்னம்பிக்கையும் மிக அதிகம்...
சிறை சென்றாலும்,முகத்தில் ஒரு கம்பீரம் இருக்கும்..’’அய்யோ’’ என அலற மாட்டார்கள்.
மகம் நட்சத்திரம்,சிம்மம் ராசிக்கும் இதுவரை ஏழரை சனி நடந்து வந்தது..சாதராண மனிதர்கள் சிம்ம ராசியாக இருந்தால்,கடந்த 5 ஆண்டுகளில் பட்ட துன்பத்திற்கு மரணமே தேவலாம் என்ற நிலைக்கு வந்திருப்பார்கள்.அந்தளவு துன்பத்தை சிம்ம ராசிக்கு ஏழரை சனி கொடுத்து இருக்கிறார்.
 

என் வாடிக்கையாளர்கள் சிம்ம ராசிக்காரர்கள் ,இந்த காலகட்டத்தில்,பலர் தொழில் இழந்து,வருமானம் இழந்து,குடும்பத்தில் நிம்மதி இழந்து தவித்து,கண்ணீர் விட்டதை நான் கடந்த காலங்களில் பார்த்திருக்கிறேன்..அந்த வகையில் ஜெயலலிதா ஆட்சியை இழந்து,தன் சொந்த கட்சிக்காரர்கள் அணி மாறுவதை கண்டு,உடல் நலம் ஆரோக்கியம் குன்றியும்,செல்வாக்கு குறைந்தும் துன்பப்பட்டதை ..பார்த்தோம்,கேள்விப்பட்டோம்.
ஆனால் இந்த நிலை,வரும் மே8 ஆம் தேதியுடன் மாறுகிறது..ஆம் குருப்பெயர்ச்சி சிறப்புடன் இவர் ராசிக்கு சாதகமாக உள்ளது...சிம்ம ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் மாறும் குரு,சகல பாக்கியங்களையும் அள்ளித்தருவார் என்பதில் சந்தேகமில்லை.
பாக்கியஸ்தானம் என்றாலே அது தெய்வஸ்தானம் மற்றும் பித்ருக்களின் ஆசி என்றுதான் பொருள்...தன் முயற்சிக்கு தெய்வம்,முன்னோர்கள்
துணை நிற்பார்கள்..இதனால் வெற்றி இவர்களுக்கு சுலபம்.
இதுவரை எண்ணி வந்த காரியங்கள் இவருக்கு கைகூடும் நாள் நெருங்கி விட்டது.
இதுவரை துன்பப்படுத்திய ஏழரை சனியும் வரும் ஐப்பசி மாதத்துடன் முடிகிறது..சனிபகவான் செல்லும்போது ஏதாவது நன்மையை செய்வார் என்ற முறையில்,
பெரிய அளவில் இவருக்கு நன்மைகள் கிடைக்கும்.
இதுவரை இவரை சூழ்ந்த எதிரிகளின் சூழ்ச்சி வலையில்,அவர்களே மாட்டிக்கொள்வார்கள்.
 

இழந்த செல்வாக்கு ,புகழ் மென்மேலும் வளரும்.
 

இவரது ஜாதகத்தில் குருச்சந்திர யோகம் உண்டு..குரு ஒன்பதாம் பார்வையாக சந்திரனைபார்வையிடுகிறார்..தற்சமயம் சந்திர புக்தி நடக்கிறது..அரசியல் கிரகம் செவ்வாயுடன் இணைந்திருக்கும்,சந்திரனை குரு பார்க்கிறார்..குரு,சந்திரன்,செவ்வாய்..மூன்று தெய்வீக கிரகங்களும் இணையும் ஸ்தானத்தில் ,அக்கிரகங்களில் ஒன்றின் திசா புக்தியில் மாபெரும் வெற்றி கிடைக்கும் என்பது விதி.
ராகுதிசை நடக்கிறது.ராகுவைப்போல கொடுப்பார் இல்லை என்பார்கள்.அதன் அடிப்படையிலும்,ராகுவையும் குரு பார்க்கிறார்
என்ற அடிப்படையிலும் இவர் நீண்ட நாள் கனவு நிறைவேறும் காலகட்டம் இது.
ஜாதகத்தில் ஏழாம் பாவகத்தில் குரு தனித்து நின்றதாலும் ராசிக்கு ஏழாம் வீடு சனி வீடு என்பதாலும் குடும்பம் இவருக்கு அமையவில்லை..இவரே தோழியராக சசிகலாவை,தன்னுடன் தங்க வைத்து அவர் குடும்பத்துக்கு ஆதரவு அளித்தாலும் அவர்கள் மூலம் இவருக்கு பிரச்சனை வரும் என்பதும் இவர்ஜாதகம் சொல்கிறது...இவருக்கு சுக்கிரன் உச்சம் என்பதால்தான் சினிமாத்துறையில் புகழ் பெற்று இருந்தார்..முக ராசியால் மக்களை கவர்ந்தார்...ஆடம்பரமாக வாழ்கிறார்...ஹெலிகாப்டரில் பறந்து வந்து ஓட்டு கேட்கிறார் என்றால் உச்சம் பெற்ற சுக்கிரனே காரணம் ஆகும்...
வாக்கு ஸ்தானத்தில் சனி இருப்பதால் உறுதியான பேச்சு..எதிரிகளை துவம்சம் செய்யக்கூடிய ,நடுங்க செய்யும் குரல்,இரண்டில் உள்ள சனி தருகிறது..ஆனால் அதுவே இவரது பலவீனத்துக்கும் காரணமாகிறது...சனி சந்திரன் வீட்டில் இருப்பதால் அலட்சியம் மிக அதிகம்..மனக்குழப்பத்தால் முக்கிய நேரங்களில் பெரிய வாய்ப்புகளை இழந்து விடும் ஆபத்தும் உண்டு.


சூரியன்,புதன் இணைந்து நின்று...நிபுணத்துவ யோகம் தருகிறார்கள்..எதிலும் ஆய்வு செய்தே இறங்குவார்....இவர் என்ன செய்யப்போகிறாரோ என எதிரிகளை தினசரி தூங்க விடாமல் அச்சம் கொள்ள செய்வார்.

பத்தில் சுக்கிரன்..இவரது லக்கினத்துக்கு யோகாதிபதி சுக்கிரன் பத்தில் நின்றதால் உச்சம் பெற்றதால் ,இவர் ஆட்சி புரியும் காலம் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்..கலைத்துறைக்கு முன்னேற்றம்,வசதி வாய்ப்புகள் உண்டாகும்.

எட்டு,ஒன்பதாம் அதிபதி சனி இரண்டில் நின்று..இரண்டுக்கு உடையவன் மூன்றில் நிற்பதால் தான் கோடிக்கணக்கான தன் கட்சித்தொண்டர்களை தைரியமுடன்,உற்சாகத்துடன் வைத்திருக்க முடிகிறது...மக்கள் இவர் குரல் கேட்டதும் புத்துணர்ச்சி அடைகின்றனர்...ஹெலிகாப்டரில் வந்து இறங்கினாலும்,தலைக்கனம் பிடித்தவர் என்றேண்ணி இருப்பவர்களும் ஓடி வந்து இவர் பேச்சை கேட்கின்றனர்.இதற்கு சனி புதன் சாரம் பெற்றதும் ஒரு காரணம்.

ராகு திசை முடிந்து குரு திசை வரும் காலம்...இவர் இன்னும் பக்குவப்படுவார்.....


ஜெயலலிதா ஜாதகப்படி குரு ராசிக்கு ஒன்பதாம் இடத்தை அடையும் நாள்;மே-8

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

2011 சனிப்பெயர்ச்சி பலன்கள்-ஓர் அதிசயம்


2011 சனிப்பெயர்ச்சி பலன்கள்-ஓர் அதிசயம்



சனிப்பெயர்ச்சி யில் என்ன அதிசயம் இருக்கிறது..?இது வழக்கமாக இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை நடப்பதுதானே என்கிறீர்களா.துலாம் வீடு சனியின் உச்ச வீடு.இந்த வீட்டை ஒரு முறை சனிபகவான் வந்தடைய 30 வருடம் ஆகும்.30 வருடத்திற்கு பின் சனி பகவான் இந்த வீட்டிற்கு வந்தடைகிறார்.சனி சக்தி வாய்ந்த கிரகம்.ஒருவர்ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருப்பின் ஆரம்ப வாழ்க்கை துன்பத்திலும்,பிற்கால வாழ்க்கை புகழ் பெற்றதாகவும் அமையலாம்.

சனிதான் கடும் உழைப்பிற்கு அதிபதி.சனி ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லாவிடில் அவன் சோம்பேறி.வேலையாள் கூட மிரட்டுவான்.அதே சமயம் சனி ஓவராக வலுத்துவிட்டால் புதனும் பார்த்துவிட்டால் அவர் மாதிரி சிறந்த தந்திரக்கார திருடனை பார்க்க முடியாது...தாவூத் ஜாதகத்தில் சனி அப்படித்தான் அமர்ந்திருக்கிறாரோ..என்னவோ..சந்தன கடத்தல் வீரப்பன் ஜாதகத்தில் சனி ,புதன் பலம் மிக்கதாய் இருந்திருப்பார்கள்.


சனி தன் உச்ச வீடாகிய துலாம் வரும்போது,உலகில் சனி காரகத்துவம் எல்லாம் மதிப்பு வாய்ந்ததாகவும்,பேசப்படுவதாகவும் அமையலாம்...30 வருடத்திற்கு முன்பு சனி துலாம் வரும்போது நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி ஆராய்ச்சி செய்..என என் ஜோதிட நண்பர் ஒருவர் சொன்னார்.சனி இரும்பு தொழிலுக்கு அதிபதி.பெரிய பெரிய மாஃபியா கும்பல்களுக்கு அதிபதி...இரும்பு சார்ந்த ஷேர்கள் மார்க்கெட்டில் திடீர்னு தாறுமாறா எகிரலாம்.குறிச்சி வெச்சுக்குங்க.

குருப்பெயர்ச்சியின் போது குரு மகரத்தில் நீசமாச்சே...அப்போதான் குரு காரகத்துவமான பணம் (டாலர்) அதள பாதாளத்தில் விழுந்தது.இன்னொரு காரகத்துவம் தங்கம் கடுமையாக ஏறுக்குமாறாக உயர்ந்தது..ஏழைகளுக்கு எட்டாக்கணி ஆனது..குருவின் இன்னொரு காரகத்துவம் மஞ்சள் திடீர்னு தங்கத்துக்கு நிகரா உயர்ந்து நின்றது...இதற்கு காரணம் என்ன..?மஞ்சள் மற்றும் தங்கம் தட்டுப்பாடுதான் விலை உயர்வுக்குகாரணம்.குரு கெட்டதால் இது ஏற்பட்டது...குரு கடகம் வந்து உச்சம் ஆகும்போது தங்கம் பதுக்கி வைக்கப்பட்டது,மூழ்கிபோனது,புதையல் தங்கம் எல்லாம் வெளியே வரும் அதாவது,கடலுக்குள் மறைந்திருக்கும் தங்கம் வெளியே வரும்.

சனி துலாத்தில் உச்சம் ஆகும்போது சனி காரகத்துவ பொருட்களும் அதிக உற்பத்தி ஆகும்....அதிக புழக்கம் உண்டாகும். ...இரும்பு,நீசதொழில்,அழுகும்பொருள் வியாபரம்(முட்டை,காய்கறி,கசாப்புகடை)இவையெல்லாம் இந்த காலகட்டத்தில் செய்திகளில் அதிகமாக அடிபடும்....டாலர் வீழ்ச்சி பற்றி ஒரு வருடத்திற்கும் மேல் பேசினோமே அதுபோல..
துலாத்தில் சனி இருக்கும்போது பிறந்தவர்களுக்கு பாதிப்பு உண்டாகும்.அது எப்படி..?ஒரு கெட்ட கிரகம் ஒரு ஜாதகர் பிறக்கும்போது இருந்த கோட்சாரத்தில் மீண்டும் அதே இடத்திற்கு வரும்போது பாதிப்பை தருவார்.
பிரபலமானவர்களில் யார் துலாத்தில் சனி இருக்க பிறந்தவர்...?கலைஞர் கருணாநிதி..!.