வியாழன், 10 நவம்பர், 2011

ஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரன் பொது பலன்கள் astrology

ஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரன் பொது பலன்கள்;astrology future

இன்று பெளர்ணமி என்பதால் சந்திரன் பற்றி எழுதலாம் என்ற் ஆசையில் இந்த பதிவு.சந்திரன் பத்தி எழுதினா அப்போ அதன் காரகத்துவமான காதல்,காமம் எல்லாம் எழுதுவீங்களா..என ஆர்வமுடன் படிக்க வந்தீங்களா.சந்திரனுக்கு இன்னொரு காரகத்துவமும் உண்டு.அம்மா...அட..அரசியல் இல்லைங்க.. பெற்ற தாயை சொன்னேன்.அன்பு என்பதற்கும்,காதல் என்பதற்கும் மட்டும்தான் சந்திரன்..அதுக்கு மேல் பலான மேட்டர்ல ஆர்வம் உண்டாவதற்கு மற்ற கிரகங்கள் சம்பந்தம்தான் காரணம்.


ஜாதகத்தில் லக்கினத்தில் சந்திரன் இருந்தா உடனே காதல் கல்யாணம் தான் செய்வ..என்று பல ஜோதிடர்கள் சொல்லி விடுகிறார்கள்..ஏற்கனவே நான் சொல்லியபடி இரண்டாமிடமும்,7 மிடமும்,7க்குடையவனையும்,சுக்கிரனையும் பார்த்துதான் இறுதி முடிவுக்கு வரமுடியும்.

சந்திரன் ஆதிபத்தியம் எதுவானாலும் பரவாயில்லை.பலன்கள் சிறந்து விளங்கும்.ஒரு ஜாதகத்தில் சூரியனும்,சந்திரனும் நல்லா அமைஞ்சிட்டாலே சிறப்புதாங்க..காரணம் இவங்க தானே தாயும் தந்தையும்.சிவன்,பார்வதி மாதிரி.இன்னும் சொல்ல போனா,சூரியன் என்பது ஆத்மா.சந்திரன் என்பது மனம் மற்றும் உடல்.அப்போ இவங்க எவ்வளவு முக்கியம்..?

நீங்க வளர்பிறையில் பிறந்தீர்களா..? தேய்பிறையில் பிறந்தீர்களா..? இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.தேய்பிறைன்னா சஞ்சலம் அதிகம்.பயம் அதிகம்.பெளர்ணமி,அமாவாசையில் பிறந்திருந்தா அதுக்கு ஒரு பலன் இருக்கு.அமாவாசையில் பிறந்தவன் திருடன் என்பார்கள்.அது உண்மையில்லை.அன்று பிறந்தவன் தப்பு செய்தா சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது என்று மட்டும் சாஸ்திரம் சொல்கிறது.பெளர்ணமி..?வாழ்வில் இருட்டே இல்லை.வெளிச்சம்தான்.என சொல்லலாம்.பெண்ணா இருந்தா விசேஷம்.

லக்கினத்தில் சந்திரன் இருப்பின் அறிவாற்றல் உடையவர்கள்.வளர்பிறை சந்திரன்னா முகராசி.தேய்பிறைன்னா பிடிவாதம் அதிகம்.எல்லாமே இவங்களுக்கு பிடிச்சமாதிரி இருக்கணும்.

இரண்டில் சந்திரன்;பணம் தாராளமா வந்து சேரும்.இவர்கள் பேச்சை கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கும்.அழகா சிலர் பாடவும் செய்வாங்க..என் அத்தை ஒருவர் சினிமா பாடல் எல்லாம் அத்துபடி.வேலை செய்துகொண்டே பாடிக்கொண்டே இருப்பார்கள்.சுசீலா அம்மா வந்துட்டாங்க என அந்த தெருவில் கிண்டல் அடிப்பர்.குருவும் பார்த்தா இன்னும் சூப்பர் வாய்ஸ்.கடன் வாங்கினா சிலர் ,அசிங்கபடுவார்கள்.ஆனா இவங்களுக்கு கடன் கொடுக்குறதை கூட கொடுப்பவர்கள் அன்பா கொடுப்பாங்களாம்.கடகராசியினர் சுலபமா மத்தவங்க கிட்ட கடன் வாங்குவாங்களே.அது மாதிரிதான்.

3 ல் சந்திரன்;எதையும் நிலையாக செய்யும் பழக்கம் கிடையாது.மனைவி பேச்சே வேதம்.உடல் சீக்கிரம் குண்டாகிவிடும்.இவருக்கு பின் பிறந்தது பெண்ணாக இருந்தால் பாதிப்புதான்.எதிரிகளை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவார்.

4ல் சந்திரன்;வீடு,மனை யோகம் பெற்றவர்.அழகா பேசுவார்.பொண்ணுககிட்ட இவரோட நளினம் இருக்கே அப்பப்பா காண கண்கோடி வேண்டும்.அவ்ளோ அழகா கரெக்ட் பண்ணிடுவார்.தேய்பிறை சந்திரன்னா உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை..ஆஸ்துமா,சர்க்கரை அபாயம் உண்டு.

5ல் சந்திரன்;சார் நான் உங்களை காதலிக்கிறேன் என தினம் ஒரு பொண்ணுகிட்ட இருந்து லெட்டர் வந்தா..எப்படியிருக்கும்..? அப்படி நடக்குமா..? ஏன் நடக்காது..? 5 ல் சந்திரன் இருப்பவர்களை காதல் துரத்தும்.ஆண்? பெண் இருவருக்குமேதான்.வசியம் மிக அதிகம்.ஆன்மீகத்தில் அதிக நாட்டம்.தேவியின் அருள் பெற்றவர்கள்.அடிக்கடி ஆன்மீக பயணம் மேற்கொள்வார்கள்.கல்வி குறைவா இருந்தாலும் அனுபவம் மிக அதிகம்.

6ல் சந்திரன்;சந்திரன் மறைஞ்சிட்டா புத்தி மறைஞ்சிடாது..? உடல் ஆரோக்கியம்..? எல்லாம் பாதிக்கும் எப்பொ இருந்து..? மோசமான திசா புத்தி வரும்போதெல்லாம்..? ராகு திசையில் சனி,செவ்வாய்,சந்திரன்,சூரியன்,கேது புத்தி வரும்போதெல்லாம் பாதிப்பு அதிகம் அறுவை சிகிச்சை,விபத்து வரை போகும்.சனி திசை,கேது,சூரியன்,செவ்வாய் திசையிலும் இதே நிலைதான்.லக்கினத்துக்கு 4 ஆம் இடம்,4 ஆம் அதிபதிபதி பாதித்து இருந்தால் இன்னும் மோசம்.மேலும் கடன் ஏற்படவும் வாய்ப்புண்டு.

இவர்களுக்கு ஒரு செய்தி கிடைத்தால் அதை ஊரெல்லாம் பரப்பி விடுவார்கள்.ரேடியொ மாதிரி.

--------------தொடரும்

3 கருத்துகள்:

பாலா சொன்னது…

தெரியாதவற்றை தெரிந்து கொண்டேன் நன்றி.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சிறப்பான பகிர்வு. நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

பலன்களை அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.


நம்ம தளத்தில்:
வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!