வியாழன், 17 நவம்பர், 2011

சனி பரிகார கோயில்-திருக்கொள்ளிக்காடு

சனி பரிகார கோயில்-திருக்கொள்ளிக்காடு

தென் தமிழ்கத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் திருக்கொள்ளிக்காடு தலம் அமைந்துள்ளது.இறைவன் பெயர் ஸ்ரீஅக்னீஸ்வரர்.

அரிச்சந்திர மகாராஜா சனியின் பிடியில் சிக்கி தவித்த போது அளவு கடந்த சோதனைகளையும்,வேதனைகளையும் அடைந்து இறுதியில் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு துன்பங்கள் நீங்கிப் பேறு பெற்றதாக கூறப்படுகிறது..

ரயிலில் செல்ல வேண்டுமென்றால் திருவாரூர் -திருத்துறைப்பூண்டி ரயில் மார்க்கத்தில் இடையில் உள்ள திருநெல்லிக்காவல் ரயில் நிலையத்தில் இறங்கிக் கொண்டு அங்கிருந்து மேற்கே 6 கிலோ மீட்டர் தூரம் ஆட்டோ அல்லது திருக்கொள்ளிக்காடு செல்லும் பேருந்து மூலம் இத்தலத்திற்கு போகலாம்.



இத்தலத்து இறைவனருளால் சனிதோஷம் நீங்கப் பெற்ற திரிபுவனசக்கரவர்த்தி, தானமாகத் தந்த 120 ஏக்கர் நன்செய் (கோயிலை சுற்றி) இன்று கோயில் நிர்வாகத்தில் உள்ளது.

2 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பயனுள்ள பரிகாரம். பகிர்வுக்கு நன்றி..

பாலா சொன்னது…

இந்த தளத்தை பற்றி இதுவரை நான் கேள்வி பட்டதே இல்லை. நன்றி.