புதன், 28 நவம்பர், 2012

வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்

வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்

வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவில் கலந்து கொடுக்கும் வசிய மருந்து என இருக்கிறது...கொல்லிமலை மூலிகைகள் ,அரசு ஆலமர ஒட்டுண்ணி தாவரங்கள் மூலமாக வசிய மை அக்காலத்தில் தயாரிப்பார்கள்..இது பெரும்பாலும் பிரிந்திருக்கும் கணவன் மனைவியை ஒன்று சேர்ப்பதற்கும்,காதலை சேர்த்து வைக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தது..ஆனால் பெரும்பாலும் கள்ளக் காதலுக்குத்தான் அதிக முக்கியத்துவம்..அழகான பக்கத்து வீட்டு பெண்ணை மயக்கணும் எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை என வரும் காமுகர்கள் தான் இந்த வசிய மருந்து வைத்தியர்களின் குறியாக இருந்திருக்கிறது...ஆனால் வசிய மை பொய்யில்லை..சில வைத்தியர்கள் போலியாக தயாரிக்கப்பட்ட வசிய மை,வசிய மருந்தை பணத்திற்காக விற்று விடுவார்கள்..

வசிய மை,வசிய மருந்து தயாரிப்பது பற்றி சித்தர்கள் பல நூல்களில் தெளிவாக எழுதி இருக்கின்றனர்..அவர்கள் சொன்ன மூலிகைகள்,சேர்க்கப்படும் பொருட்கள் தான் மறைபொருளாக இருக்கின்றன...

ஜோசியர்கள் பலரும் இதை அராய்ந்து இருக்கின்ரனர்..நிறைய பேர் இதை கொடுத்துக்கொண்டும் இருக்கின்றனர்..நானும் இதை பத்தி தெரிஞ்சிக்க நிறைய நூல்களையும் படித்தேன்..நிறைய பேரை சந்திச்சும் இருக்கேன்...தர்மபுரி பக்கம் ஒரு கிராமத்தில் ஒரு பெரியவர் இந்த மை கொடுப்பதாக சொல்லி வந்தனர்..ஒரு நண்பர் மூலமாக வாங்கி பார்த்ததில் அதில் சேர்த்தப்பட்ட சரக்கு மலிவானதாக இருந்தது..சேலம் பக்கமுள்ள கிராமங்களில் வசிய மருந்து சுலபமாக கிடைக்கும் என்றார்கள் அதிலும் நிறைய போலி...வசிய மை என்பது மயக்ககூடிய அல்லது அதிக வாசனை திரவியம் கலந்த திரவமாகவே இருக்கிறது..இது சரியல்ல..

பொதுவாக நெற்றியில் சன்ப்தனம்,குங்குமம் வைத்தாலே அது வசீகரமாக இருக்கும்...சந்தனம் என்பொஅது குரு...குங்குமம் என்பது செவ்வாய்...இது நம் மேல் ஒரு மரியாதையையும்,ஒரு நம்பிக்கையையும் நம்மை பார்ப்பவர்களிடத்தில் உண்டாக்கும்..இதனால்தான்...கோயில் பூசாரிகள்,அர்ச்சகர்கள்,ஆன்மீகவாதிகள்,சாமியார்கள்,ஜோசியர்கள் இதை நெற்றியில் திலகமாக இட்டுக்கொள்கின்றனர்...பெண்கள் நெற்றியில் குங்குமம் சிவப்பு நிறத்தில் இட்டுக்கொள்ளும்போது அவள் முகத்தை மட்டும் பார்த்து பேசும் கவன ஈர்ப்பை ஆன்களுக்கு உண்டாக்குகிறது..மரியாதையை,நல்லெண்ணத்தையும் உண்டாக்கும்...சிவப்பு எதிர்மறை எண்ணத்தை எதிராளிக்கு உண்டாக்காது..அதாவது கெட்ட எண்ணத்தை பார்ப்பவர்களிடத்தில் அவ்வளவு சீக்கிரம் உண்டாக்காது...இப்பல்லாம் துளியூண்டு ஸ்டிக்கர் பொட்டு வெச்சிக்கிறாங்க..அதெல்லாம் கணக்குல வராது..

நாயுறுவி வேரை வெள்ளிக்கிழமையில் பிடுங்கி பல் விளக்கினா பெண்கள் வசியம் ஆவாங்க என கவனகர் கனகசுப்புரத்தினம் ஒரு நூலில் எழுதியிருக்கார்...நாயுறுவி வேரை அரைச்சும்,அரச மரத்தில் கிளைகளில் ஒட்டுண்ணியாக சில தாவரங்கள் முளைத்திருக்கும் அவற்றை குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பறித்து,அரைத்து ,இன்னும் சில மூலிகைகளையும் கலந்துதான் வசிய மை,வசிய மருந்து தயாரிக்கப்படுகிறது...ஆலமரம் போல அரசமரம் போல இன்னும் சில மரங்களில் ஒட்டுண்ணிகள் முளைத்திருக்கும்..அவற்றை பிடுங்கி அரைத்துஉருண்டையாக உருட்டி காய வைத்து பிரிந்து இருக்கும் கணவன் ,மனைவிக்கு ரசம் இல்லாத உணவில் கலந்து கொடுத்தால் கனவன் அல்லது மனைவி மீது ஏக்கம் உண்டாகி ஒன்று சேர்வார்கள்....இதை சத்தியமங்கலம் காடுகளில் இந்த மூலிகைகளை பறித்து மருந்து தயாரித்து வந்த பர்கூர் மாதன் என்பவர் மூலம் அறிந்தேன்..அவர் மூலம் சிலருக்கும் கொடுத்தேன்..ஓரளவு பலனும் இருந்தது...அடிக்கடி அவரை பார்க்க முடிவதில்லை...

கேரளாவில் சிலர் கொடுக்கின்றனர்..ஆனால் நிறைய போலிகள் இருப்பதால் கவனமாக தான் கண்டறிய வேண்டும் ஒரு பணக்காரர் சில வைத்தியர்களை வீட்டிற்கே வரவழைத்து மாதம் ஒருமுறை வசிய மருந்து தயாரிக்க சொல்லி வாங்கிக்கொள்வாராம்..அவ்ளோ மருந்தை என்ன செய்றார்ன்னுதான் தெரியல..கடகம் ராசிக்காரங்கதான் இந்த தொழில்ல அதிகம் இருக்காங்க..அதுக்கப்புறம் தனுசு,மீனம்...இன்னும் மலையாள மாந்திரீகம் பத்தியும் நிறைய இருக்கு.அது பத்தி எழுதுறேன்!!

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

நீங்க சொல்கிற அத்தனையும் ஏதோ ஒரு பட்சத்தில் ஒரு சில பிரச்சனைகளை தரும் ஆகயால் வேறு சில மருந்து வகைகளை பயன்படுத்தலாம் ..உதாரனம்.கொட்டை கரந்தான் போன்ற உடலுக்கு எந்த கேடும் விளைவிப்பதும்மில்லை விரியமும் அதிகம் இது என் கைகண்ட அனுபவம் .நீங்கள்.கொடுக்கும் மருந்துக்கெல்லாம் முரிவு உண்டு ஆனால் நான்சொல்லும் மருந்துக்கு முறிவு அவ்வளவு சுலபமல்ல

Unlock சொன்னது…

,
அற்புதமான தகவல்
பதிவிற்க்கு நன்றிகள் ,,,,
,

thillai nataraja thunai சொன்னது…

ஐயா உங்க நம்பர் வேணும்