செவ்வாய், 29 அக்டோபர், 2013

சிதம்பரம் நடராஜர் கோயில் மர்மங்களும் ,உண்மையான ரகசியங்களும்!!


சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்."

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது

வெள்ளி, 25 அக்டோபர், 2013

குருப்பெயர்ச்சி 2014ல் எப்போது வரும்..?

குருப்பெயர்ச்சி வருடம் ஒரு முறை நிகழ்கிறது..இப்போது குரு மிதுனத்தில் இருக்கிறது...மிதுனம் ராசியினருக்கு ஜென்ம குருவாகவும்,கடகம் ராசியினருக்கு விரய குருவாகவும்,சிம்மம் ராசியினருக்கு லாப குருவாகவும் ,கன்னி ராசிக்கு 10 ஆமிட குருவாகவும் ,துலாம் ராசிக்கு பாக்ய குருவாகவும்,விருச்சிக ராசிக்கு அஷ்டம குருவாகவும்,தனுசு ராசிக்கு களத்திர லாப குருவாகவும்,மகரம் ராசிக்கு ருண ரோக குருவாகவும்,கும்பம் ராசிக்கு ஜெய குருவாகவும்,மீனம் ராசிக்கு சுகஸ்தான குருவாகவும்,மேசம் ராசிக்கு வீரிய குருவாகவும்,ரிசபம் ராசிக்கு தன குருவாகவும் இருக்கிறார்...

இந்த குருவால் அதிகம் பாதிக்கப்பட்ட ராசிகள் ;கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மீனம்,மேசம் ஆகும்

மிதுன க்ருவால் அதிகம் நன்மை பெற்ற பெறும் ராசிகள்;ரிசபம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம் ஆகும்..


அடுத்து மிதுனம் ராசியில் இருந்து குரு எப்போது கடகம் ராசிக்கு செல்கிறார் என பார்த்தால் 19.6.2014 அன்று பெயர்ச்சியகிறார்..

அப்போது கடகத்தில் குரு உச்சமாகி இருப்பார்..உலகில் அதிகம் கோயில் கொண்டுள்ள பகுதி தமிழகம் ஆகும்..கோயில்களை குறிக்கும் கிரகம் குருவாகும்...குரு அதிர்ஷ்டத்தை குறிப்பவர் ..செல்வாக்கை குறிப்பவர்...குரு கடகத்தில் உச்சமாகும்போது தமிழகத்துக்கு உலக அளவிலும் இந்திய அளவிலும் அதிக செல்வாக்கும் உண்டாகும் ஆன்மீக புரட்சியும் உண்டாகும்...

தமிழர்களும் கடல் பயணமும் சிலிர்ப்பான வரலாற்று உண்மை

தமிழர்களும் கடல் பயணமும்.

The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது. இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.

செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன. செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள். காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.

செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துகொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம். Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துள்ளியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.


 
ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி. 12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு. தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டுபிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது. Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.


தமிழர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு கடலில் கப்பல் செலுத்தி பயணம் புறிந்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் புறநானூற்று பாடல்களிலும் காணலாம். அதில் ஒரு பாடல்தான் இந்தப்பாடல்.

நளியிரு முந்நீர் நாவா யோட்டி

வளிதொழி லாண்ட வுரவோன் மருக - (புறம் - 66)

இதன் பொருள்:-

நீர் செறிந்த பெரிய கடலில் மரக்கலம் (கப்பல்) செலுத்தியும், அது அசையாதபோது காற்றினை ஏவல் கொண்டு செலுத்தும் வலிமையுடையவனின் வலித்தோன்றலே

என்று வெண்ணிக் குயத்தியார் சோழன் கரிகாற் பெருவளத்தானைப் பார்த்துப் பாடுகிறார்.

ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை. மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள். தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள். ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்துவைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே.



உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள். தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இந்த அக்கறையின்மை, நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைகளிலும் தமிழனை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

நன்றி-சித்தர்கள் தமிழின் முதல் விஞ்ஞானிகள் ஃபேஸ்புக் பக்கம்


ஞாயிறு, 6 அக்டோபர், 2013

கைலாய மலைக்கு நிகரான பொதிகை மலை அகத்தியர் அதிசய அனுபவங்கள்

பொதிகை மலை -

ஆத்மார்த்மாக செய்யும் எந்த தொழிலிலும் ஜெயிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர். சேர்மராஜ்...கம்ப்யூட்டரின் உதவியோடு மிக வித்தியாசமாக விளம்பரங்கள் வடிவமைப்பதில் இவருக்கு நிகர் இவரே.

மூச்சுவிட நேரமில்லாத இவரது களப்பணியில் இவர் இளைப்பாறவும்,களைப்பை போக்கிக் கொள்ளவும் அவ்வப்போது செல்வது, மலைப்பிரதேசங்களில் உள்ள ஆன்மிக தலங்களுக்குதான்.

அப்படிப்பட்ட இடம்தான் அகத்திய மாமுனி எழுந்தருளியிருக்கும் பொதிகைமலை. தமிழக கேரளா மாநிலங்களின் எல்லையில் இருந்தாலும் இப்போதைக்கு கேரளா வழியாகத்தான் செல்ல முடியும்.


பொதிகை மலையின் உச்சியில் உள்ள அகத்தியரை தரிசனம் செய்யவேண்டும் என்றால் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து ஒன்றரை மணிநேர வாகன பயணத்திற்கு பின், பொதிகை மலைக்கு செல்லும் மலைப்பாதையில் வனத்துறையின் சோதனைச் சாவடியை அடையலாம்.

சோதனைச் சாவடியில் ஒருவருக்கு முன்னூற்று ஐம்பது ரூபாய் வீதம் பணம் கட்டிவிட்டு, தங்கள் சொந்த பொறுப்பில் போய்வருவதாகவும், பயணத்தின் போது உயிருக்கோ, உடமைக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு தாங்களே பொறுப்பு என்றும் எழுதிக் கொடுத்துவிட்டு செல்ல வேண்டும்.

நான்கு பேர் கொண்ட குழு என்றால் ஒரு வழிகாட்டியை வனத்துறையே ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறது. அங்கு இருந்து காலையில் கிளம்பினால் சூரியனைக்கூட பார்க்கமுடியாத அடர்ந்த காட்டிற்குள் ஒன்றரை நாள் பயணத்திற்கு பிறகு அகத்தியரை தரிசித்துவிட்டு, மீண்டும் ஒன்றரை நாள் பயணம் செய்து திரும்பவேண்டும்.

அவரவருக்கான உணவுப்பொருள், இரவில் தூங்க தேவைப்படும் போர்வை, மழைவந்தால் பாதுகாத்துக் கொள்ள ரெயின்கோட், அட்டை கடியில் இருந்து காப்பாற்றிக் கொள்ள மூக்குப்பொடி, வேப்பெண்ணெய், மற்றும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டும், வழியில் யானை போன்ற காட்டினங்களை எதிர்கொண்டும் போய்வரவேண்டும்.

பல இடங்களில் காணப்படும் செங்குத்தான பாறைகளில் தொங்கவிடப்பட்டுள்ள கயிறை அல்லது கம்பியை பிடித்துக் கொண்டுதான் ஏற வேண்டும், அதே போல இறங்க வேண்டும், கொஞ்சம் கவனம் தவறினாலோ, கால் பிசகினாலோ பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து மீள முடியாத பள்ளத்தில் விழவேண்டியிருக்கும்.

இதை படிக்கும் யாருக்கும் போகத் தைரியம் வராது தயக்கம்தான்வரும் ஆனால் இதைவிட அதிகமாகவே “ரிஸ்க்குகளை’ எதிர்பார்த்து சேர்மராஜ் கிளம்பிவிட்டார், காரணம் தனது ஞானகுருவான அகத்தியரை சந்திக்க போகிறோம் என்று மனதிற்குள் மழைபோல பெய்த சந்தோஷம், இவரது கருத்தையொத்த நண்பர்கள் பதினோரு பேர் சேர்ந்து கொள்ள பயணம் சிறப்பாக அமைந்துவிட்டது.

சிறப்பு என்று சொல்வதைவிட அளவில்லாத மனத்திருப்தி, ஆன்மிக மகிழ்ச்சி, உள்ளத்தினுள் ஒருவகை எழுச்சியை உணர்ந்தோம்.

காரணம் தொட்டு விளையாடும்படியான மேகக்கூட்டம், மூக்கினுள் நுழைந்து அடிவயிறு வரை ஆழப்பாயும் மூலிøக்காற்று, காட்டுக்குள் தூக்கம், கலவை உணவு, இப்படிக்கூட குடிநீருக்கு சுவை இருக்குமா என ஆச்சரியம் தரும் குடிநீர், பளிங்கு போன்ற தண்ணீரைக் கொண்டு வற்றாமல் ஒடும் காட்டாறு, அழகும், சுகமும்தரும் அருவிகள், இப்படி பசுமையும், இயற்கையும் பின்னிப் பிணைந்த அடர்ந்த வனம், விதவிதமான மலர்களின் மணம், ஆகா,ஆகா அது ஒரு அளவில்லாத ஆனந்தம்.

செல்போன் எடுக்காது, வாகன சத்தம் கேட்காது, அவசரமாய் செல்லும் மனிதர்கள் கிடையாது, அரக்கபரக்க சாப்பிட வேண்டியது இருக்காது, நவீனம் என்ற பெயரிலான எந்த எலக்ட்ரானிக் குப்பைகளும் கிடையாது, எங்கு பார்த்தாலும் இயற்கை அன்னை அள்ளித்தந்த பொக்கிஷமே. கைலாஷ் மலைக்கு போனவர் ஒருவர் எங்களுடன் வந்திருந்தார், அவர் இந்த பொதிகை மலையைப் பார்த்துவிட்டு, அதற்கு நிகரான பரவசத்தை, பிரமிப்பை இந்த மலை தனக்கு தருவதாக சொன்னார் என்றால் பாருங்களேன்.

அவ்வளவு கடுமையான மலைப்பாதையிலும் நாங்கள் மறக்காமல் கூடை, கூடையாக கொண்டு சென்ற மலர்களால் ஆராதித்து, தேன் முதல் சந்தனம் வரையிலான பொருட்களால் அபிஷேகம் செய்தபோது, அகத்தியரின் முகத்தில் மின்னல் கீற்றாய் வெளிப்பட்ட புன்னகையை பார்க்க, அந்த மாமுனியை தரிசிக்க, இன்னொரு முறை மட்டுமல்ல, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பல முறை போய்பார்த்துவரவே ஆசை என்று சிலிர்ப்புடன் கூறி முடித்தார் சேர்மராஜ்.
நன்றி -

சனி, 5 அக்டோபர், 2013

நண்பர்களுக்கு நன்றி..மகாளயபட்ச அமாவாசை அன்னதானம்

காலை 6 மணிக்கெல்லாம் பவானி கூடுதுறை கோயிலில் ஒரு லட்சம் மக்கள் திரண்டிருந்தனர்..கோயிலுக்கு செல்லும் பெரிய பாதையெங்கும் சிறிதும் இடமில்லாமல் மக்கள் நெருக்கமாக வந்துக்கிட்டே இருந்தனர்...போன வருசத்தை விட இந்த வருடம் கூட்டம் இரு மடங்கு அதிகம் இருந்தது..மீடியாக்களுக்கு நன்றி...

200 க்கும் மேற்பட்ட பிராமணர்கள் தர்ப்பணம் செய்து கொடுத்துக்கொண்டே இருந்தனர்...நான்,என் அப்பாவை கூட்டிட்டு போயிருந்தேன்..அவர் எங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தார்...வீட்டில் தயார் செய்து கொண்டு போயிருந்த எலுமிச்சை சாதம் அன்னதானம் பாக்கெட் 100 இருந்தது..கோயிலுக்குள் சிலருக்கு கொடுத்தேன் ஒவ்வொருத்தரும் 50 பாக்கெட் சாதம் வெச்சிருந்தாங்க..சிலர் அதை வாங்கி பாதி விலைக்கும் விற்கவும் ஆரம்பிச்சிருந்தாங்க...கஷ்டப்பட்டு செஞ்சு கொண்டு போன சாதத்தை இவங்கக்கிட்ட கொடுத்து வீணாக்க கூடாது என நண்பர் மூலம் அப்படியே முதியோர் இல்லத்துக்கு கொடுத்து அனுப்பினேன்.

இரண்டு நாளைக்கு அந்த சாதத்தை வைத்து சாப்பிடலாம்..எலுமிச்சை,புளிசாதம் மகிமை அதுதான்..பிறகு மதியம் காதுகேளாத,வாய்பேசாத குழந்தைகள் பள்ளிக்கு அன்னதான உணவை தயார் செய்யும் வேலை..குடும்பத்துடன் செய்தோம்..சப்பாத்தி 300 இட்லி 400 ,குருமா என அந்த வேலை தொடங்கியது..மாலை நன்கொடை அனுப்பிய நண்பர்களுக்கு சிறப்பு அர்ச்சனை செய்ய மறுபடி கோயிலுக்கு பயணம் ....

அதை முடித்து இரவு வந்து தயார் ஆகியிருந்த உணவை ஆட்டோவில் கொண்டு சென்று,80க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிமாறிவிட்டும் வந்தேன்..காதும் கேட்காது வாயும் பேச முடியாது..ஆனா அந்த குழந்தைகளுக்கு அன்பும்,அறிவும் ஆண்டவன் நிறைய கொடுத்திருக்கான்..பக்கத்து இலை பையனுக்கு இன்னும் இரண்டு இட்லி வைங்க..அவனுக்கு இட்லின்னா பிடிக்கும்னு ஜாடையில் சொல்கிறான் ஒரு பையன்..சப்பாத்தி என் தோழிக்கு வேண்டாம் அவள் சாப்பிட மாட்டாள் என இன்னொரு பொண்ணு ஜாடையில் சொல்லுது..ஒவ்வொரு முறை உணவு வைக்கும்போது அந்த குழந்தைங்க கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்றாங்க...அவங்க ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா இருக்காங்க..சின்னப்பசங்க மேல பெரிய பொண்ணுங்க எல்லாம் அம்மா மாதிரி அக்கறையா இருக்காங்க..ஒரு பொண்ணு சின்னப்பையனுக்கு அன்பா,அக்கறையாஇட்லி ஊட்டிய காட்சி நெகிழ்ச்சியா இருந்தது..இவங்களுக்கு உறவுன்னு சொல்லிக்க உறவா இருக்குறது அவங்களேதான்!! உணவுக்கு நன்கொடை அனுப்பிய நண்பர்களுக்கு மிக்க நன்றி..அவர்களுக்கு சங்கமேஸ்வரரின் அருள் கிடைக்க எப்போதும் பிரார்த்திக்கின்றேன்..!!

வியாழன், 3 அக்டோபர், 2013

கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம் ராசிக்கான மகாள்யபட்ச அமாவாசை பரிகாரம்

மகாவிஸ்ணுவின் ஆசிர்வாதம் பித்ருக்களுக்கு கிடைக்கும் நாள் மகாளயபட்ச அமாவாசை எனப்படும் அதாவது உங்கள் முன்னோர்கள் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்து ,மோட்சம் கிட்டாமல் தவிப்போர்க்கு ஆத்ம சாந்தி கிடைக்கும் நாள்..அந்நாளில் அவர்களை நினைத்து அவர்களுக்குண்டான திதி கடமையை நாம் நிறைவேற்றி அவர்களின் ஆசி பெற்று நம் துன்பங்களை தீர்த்துக்கொள்ளும் நாள்..கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம் ராசியினர் இதை முறைப்படி செயல்படுத்தினால் ஏழரை சனி,அஷ்டம சனி தொல்லைகள் குறையும்.நாளை நம் பாவங்களை போக்கிக்கொள்ள தானம்,தர்மம் செய்ய உத்தமமான நாள்..இரண்டாம் வருடமாக என் ஃபேஸ்புக் நண்பர்கள் சார்பில்,நல்ல நேரம் இணையதளம் வாசகர்கள் சார்பில், தான தர்மங்களை செய்ய இருக்கிறேன்...

காதுகேளாத,வாய்பேச முடியாத குழந்தைகள் பள்ளி ஈரோட்டில் இருக்கிறது..அங்கு நாளை இரவு உணவு நண்பர்கள் சார்பில் ஏற்றுக்கொண்டிருக்கிறேன் 80 குழந்தைகளுக்கு உணவு வழங்குகிறோம்..மெனு 320 இட்லி..180 சப்பாத்தி..இனிப்பு 80..கடையில் வாங்கித்தர விருப்பம் இல்லை...கடையில் புரோட்டோ சாப்பிட்டு ஒரு குழந்தைக்கு மஞ்சள் காமாலையே வந்துவிட்டதாம்..அதனால் வீட்டில் தயார் செய்ய இருக்கிறேன் குடும்பத்தாரும் சந்தோசமாக சம்மதித்துவிட்டனர்..இதன் புண்ணியங்கள் அனைத்தும் நண்பர்களுக்கு சேரட்டும்..நாளை காலை கூடுதுறையிலும் உணவு வழங்க இருக்கிறேன்..ஆனா நிறைய உணவு தானங்கள் வரும் என்பதால் வேட்டி துண்டு,செருப்பு போன்றவற்றை சிலருக்கு வழங்க உள்ளேன்..!! நண்பர்கள் சார்பாக...ஓம் நமச்சிவாய!
தொடர்புக்கு;sathishastro77@gmail.com

செவ்வாய், 1 அக்டோபர், 2013

2,4,6,8,9 இது ரொம்ப முக்கியம்..திருமண முகூர்த்த விதிகள்

2,4,6,8,9 இது ரொம்ப முக்கியம்...எதுக்கு தெரியுமா...? கல்யாணம் நடக்கும்போது முகூர்த்தம் குறிப்போம்..ஒரு மாசத்துல 6,7 முகூர்த்தம் இருக்கும் அதுல வளர்பிறை முகூர்த்தம் பார்ப்போம்..என்னிக்கு ஞாயித்துக்கிழமை வருதோ அன்னிக்கு வெச்சிடுவோம் அதான் எல்லார்க்கும் செள்கர்யம் என பார்த்து வெச்சிடுவோம்..இதான் பெரும்பாலானோர் நிலை..ஆனா என்னிக்கு கல்யாண பொண்ணு பிறந்த நட்சத்திரத்துக்கு அன்றைய நட்சத்திரம் 2,4,6,8,9 ஆக வருகிறதோ அன்றைய முகூர்த்ததைதான் குறிக்கனும்..அது மட்டுமில்ல..நீங்க எந்த முக்கிய காரியம் செய்வதாக இருந்தாலும் ,பத்திர பதிவு,தொழில் தொடங்க,வீடு வாங்க என எல்லாமே இந்த மாதிரி உங்க நட்சத்திரத்துக்கு அன்னிக்கு எத்தனையாவது நட்சத்திரம்னு பார்த்து செயல்படுங்க ...வெற்றி கிடைக்கும்!!