புதன், 30 ஏப்ரல், 2014

குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 -2015

குருப்பெயர்ச்சி பலன்கள் 2014

மேசம் முதல் கன்னி வரையிலான ராசிபலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்..

குரு, திருக்கணித பஞ்சாங்கப்படி,வரும் 19.6.2014 முதல் மிதுனம் ராசியில் இருந்து கடகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்..அது சமயம் துலாம் முதல் மீனம் வரையிலான ராசியினருக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும் என பார்ப்போம்.

துலாம்;உங்கள் ராசிக்கு குரு 19.6.2014 முதல் ராசிக்கு10 ல் வருகிறார்...பத்தாமிடத்து குரு பதவியை கெடுப்பான் தொழிலை கெடுப்பான் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருக்கிறது..அதன் பர்வையையும் பொறுத்தே பலன் காண வெண்டும் திசாபுத்தி 1,4,5,9 க்குடையவனாக இருந்தால் குரு பெயர்ச்சி சரியில்லைன்னாலும் கெடுதல் செய்யாது என்றுதான் ஜோதிடம் சொல்கிறது ..குரு 10 ல் இருந்தால் படுத்தி எடுத்துவிடும் என சிலர் பயமுறுத்துகிறார்கள்.துலாம் ராசிக்கு 10ல் குரு வந்தாலும் இரண்டாம் இடத்தை குரு பார்ப்பதால் வருமானத்துக்கு தடங்கல் இல்லை..குடும்பம் அமையாதவர்களுக்கு அதாவது திருமணம் ஆகாதவருக்கு திருமணம் கூடி வரும்..4ஆம் இடத்தை குரு பார்ப்பதா உடல் ஆரோக்கியம் மேம்படும்..

6ஆம் இடத்தை குரு பார்ப்பதால் எதிரிகள்,கடன் தொல்லை நீங்கும்.உங்கள் பேச்சே உங்களுக்கு பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்க்கும் காலமாக இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை ..உடன் பணிபுரிபவர்களிடம் கவனம் தேவை வீண் பழி போட வாய்ப்பிருக்கிறது.

விருச்சிகம்;19.6.2014 முதல் உங்கள் ராசிக்கு குரு 9அம் இடத்தில் மாறுகிறார் 9ஆம் இடம் பாக்கியஸ்தானம்...தெய்வீக அருள் நிறைந்த 9ஆம் இடத்தில் குரு வந்தால் தெய்வ அனுகூலத்திற்கு சொல்லவே வேண்டியதில்லை வேண்டிய வரத்தை உங்கள் இஷ்ட தெய்வம் அள்ளிக்கொடுக்கும் காலம் இது.9ல் குரு வந்தால் நினைதது எல்லாம் நடக்கும் முயற்சி செய்தது எல்லாம் நல்லவிதமாக முடியும்..

கேட்ட்தெல்லாம் கிடைக்கும்.தொட்டது துலங்கும்...வருமானம் பல வழிகளிலும் வந்து கொட்டும்..செல்வாக்கு பல மடங்கு அதிகரிக்கும் பணி செய்யுமிடத்தில் நல்ல பெயர் மதிப்பு மரியாதை கிடைக்கும்...சொந்த தொழிலில் பல மடங்கு லாபம் தரும்..குரு 9ஆம் இடத்தில் இருந்து 1,3,5 ஆம் இடத்தை பார்வை செய்கிறார் 1ஆம் இடத்தை பார்த்து தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்கிறார் 5ஆம் இடத்தை பார்த்து அதிர்ஷ்டத்தை வாரி வழங்குகிறார்...3ஆம் இடத்தை பார்த்து நிறைய புது முயற்சிகளை ஊக்கப்படுத்துகிறார்.வெற்றி உங்களுக்கே...

தனுசு;உங்கள் ராசிப்படி 19.6.2014 முதல் குரு எட்டாம் ராசிக்கு மாறுகிறார் ..எட்டாம் இடத்து குரு எதையும் எட்டாமல் போக செய்யும்..என கிராமத்தில் சொல்வார்கள்.. 8ஆம் இடம் என்பதே நஷ்டம்,தோல்விதான்..குரு செல்வாக்கு,சொல்வாக்கு,தனாதிபதி அவர் எட்டில் மறைவது சுமார்தான்..இருப்பினும் உங்கள் ராசிக்கு 12,2,4ஆம் இடங்களை பார்க்கிறார் ..முக்கியமாக தனஸ்தானத்தை பார்க்கிறார் வருமானத்துக்கு குறைவில்லாமல் பார்த்துக்கொள்கிறார்..

 ராசிநாதன் 8ல் மறைந்தாலும் 4ஆம் இடமாகிய சுகஸ்தானத்தை பார்வை செய்வதால் எதிலும் அகப்படமாட்டீர்கள்...மருத்துவ செலவு வரும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் வாகனங்களில் செல்கையில் கவனம் தேவை.நாம் சும்மா இருந்தாலும் நம் வாய் சும்மா இருக்காது நம் வாய் சும்மா இருந்தாலும் அடுத்தவன் சும்மா இருக்க மாட்டான் என்பதற்கு ஏற்ப வீண் வம்பு நண்பர்கள் வடிவத்தில் கூட வரும்.அதிக செலவு குறைந்த வருமானம் இதுதான் இன்றைய நிலை.அதற்கேற்றோர்போல் எதிர்காலம் கருதி செயல்படுங்கள்..

மகரம்;உங்கள் ராசிக்கு இதுவரை ஆறில் அமர்ந்து படாதபாடு படுத்திய குரு இப்போது 19.6.2014 முதல் 7ஆம் இடத்துக்கு மாறுகிறார் 7ஆம் இடம் குருபலம் குரு பலம் வந்தால் பணபலம் வரும்..பணபலம் வந்தால் மனபலம் வந்துவிடும்.அப்படித்தான் இதுவரை சோர்ந்து கிடந்த உங்களுக்கு புதிய புத்துணர்ச்சியை குருபகவான் கொடுக்கப்போகிறார்...

7ல் குரு வந்தால் கல்யாணம் தடையில்லாமல் நடக்கும்..கடன் மளமளவென்று அடையும்..தொழில் வளம் அடையும் பணி செய்யுமிடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.பதவி உயர்வும் கிடைக்கும்.லாப ஸ்தானத்தை குரு பார்த்தால் கல்லாபெட்டி நிறையும்..2014 ,2015 ஆம் ஆண்டு உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் ஆண்டாக இருக்கிறது புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள் சிலர் வீடு கட்டுவீர்கள்...மனைவியோடு ஒற்றுமை உண்டாகும்...கூட்டு தொழிலில் இருப்பவர்கள் மட்டும் தங்கள் பார்ட்னர் விசயத்தில் கவனம் தேவை.குரு அள்ளி அள்ளி கொடுக்கும் அட்சய பாத்திரமாக இந்த வருடம் திகழப்போகிறார்...

கும்பம்;அன்பரே 19.6.2014 முதல் குரு உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்துக்கு குரு வருகிறார் ராசிக்கு 6ல் குரு வந்தால் நோய் உண்டாகும் கடன் உண்டாகும் என சொல்லப்பட்டாலும்..ராசிக்கு தன ஸ்தானத்தை உச்ச குரு பார்ப்பதால் வருமானத்துக்கு எந்த குறைவும் வந்துவிடாது..அதே சமயம் தான தர்மம் செய்தால் பல தோசங்கள் அடிபடும் என்றே குரு 12ஆம் இடத்து பார்வை சொல்கிறது..குரு 6ல் வரும் காலம் வாகங்களில் செல்கையில் மிக கவனமாகவும் இருக்கவேண்டும்.

 பங்காளிகள் வகையில் பஞ்சாயத்து வரலாம்..குடும்பத்தில் இருப்போருக்கு அடிக்கடி மருத்துவ சிகிச்சை செய்ய நேரலாம் அதனால் பண நெருக்கடி உண்டாகலாம்..நண்பர்களாக இருந்தாலும் உறவக இருந்தாலும் இந்த காலத்தில் ஜாமீன் போட்டால் பகை வளரும்.பேச்சில் நிதானம் தேவை..கொஞ்சம் அசந்தாலும் காணாமல் போதல்,மறந்து போதல்,கடன் கொடுத்து திரும்பாமை போன்ற சங்கடங்கள் உண்டாக நேரும்.பெரிய பாதிப்பு இல்லை...கவனமாக செயல்பட்டால் போதும்.

மீனம்;உங்கள் ராசிக்கு இதுவரை 4ல் அமர்ந்து நிம்மதியை குலைத்து வந்த குரு இனி 19.6.2014 முதல் 5ஆம் இடத்துக்கு மாறுகிறார்..இனி எல்லாம் சுகமே.பணபலம் வந்துவிட்டால் மனபலம் வந்து விடுமே.இனி தடைபட்டு கிடந்து அனைத்து பணவரவுகளும் வந்து சேரும்...முடங்கி கிடந்த தொழில் இனி மெல்ல சீராகும்.பணி செய்யுமிடத்தில் இருந்து வந்த டார்ச்சர் விலகும்..குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை விலகி நிம்மதி உண்டாகும்..

எப்படி அடைக்கப்போகிறோம் என வாங்கிப்போட்ட கடன்கள் அடைபட நிறைய வழிகள் பிறக்கும், தொட்டதெல்லாம் துலங்கும், நினைதத்து நிறைவேறும் கேட்டது கிடைக்கும்..அப்புறம் என்ன அடிச்சு தூள் கிளப்புங்க...பெரிய மனிதர்கள் ஆதரவுடன் சில நல்ல விசயங்களை உங்களுக்கு சாதகமாக செய்து கொள்வீர்கள்...திருமணம் ஆகாதவர்களுக்கு ஆவணி,ஐப்பசியில் யில் திருமணம் நடக்கும்.சொத்துக்கள் சேர்க்கை சிலருக்கு உண்டாகும் சிலர் வீடு கட்டும் முயற்சிகள் செய்வீர்கள்..அஷ்டம சனியும் விலகும் காலம் நெருங்கி விட்டதால், இனி நிம்மதியாய் இருங்கள்.

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2014 -2015

குருப்பெயர்ச்சி ராசிபலன் 2014-2015

திருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

Read More at: bhakthiplanet.com/2014/03/guru-peyarchi-predictions-2014-2015/ © BHAKTHIPLANET.COM
திருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

Read More at: bhakthiplanet.com/2014/03/guru-peyarchi-predictions-2014-2015/ © BHAKTHIPLANET.COM
திருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

Read More at: bhakthiplanet.com/2014/03/guru-peyarchi-predictions-2014-2015/ © BHAKTHIPLANET.COM
திருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்

Read More at: bhakthiplanet.com/2014/03/guru-peyarchi-predictions-2014-2015/ © BHAKTHIPLANET.COM
திருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்

Read More at: bhakthiplanet.com/2014/03/guru-peyarchi-predictions-2014-2015/ © BHAKTHIPLANET.COM

திருக்கணித பஞ்சாங்கப்படி குரு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு 19.6.2014 காலை முதல் பெயர்ச்சி ஆகிறார்..

கடகத்தில் ராஜகிரகமான குரு உச்சம் பெறுவது 12 வருடத்திற்கு ஒருமுறை நிகழும்.குரு உச்சம அடைவதால் நம் நாட்டின் மதிப்பு உயரும்...பொருளாதாரம் உயரும்...இந்தியாவின் ஆன்மீகம் உலகில் பெரிதும் போற்றப்படும் காலமாக இருக்கும்..ஆன்மீகம் ,நீதி,செழித்தோங்கும்...நாட்டில் அமைதி உண்டாகும் மக்கள் செல்வ செழிப்புடன் இருப்பர்..ஆட்சியாளர்களால் மக்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கும்.பெண்களுக்கு பாதுகாப்பு உறுதியாகும் சட்டங்கள் இயற்றப்படும்.குழந்தைகள் இறப்பு சதவீதம் குறைக்கும் புதிய நவீன மருந்துகள் கண்டுபிடிக்கப்படும்..நாட்டின் பாதுகாப்பு பலப்படும்.நாட்டில் ஆட்சி மாற்றங்கள் உண்டாகும்.புதிய அர்சு மக்கள் நலன் காக்கும் அரசாகவும்,இந்திய பண்பாடு,கலாச்சாரத்தை போற்றி பாதுகாக்கும் அரசாகவும் இருக்கும்.மத நல்லிணக்கம் உண்டாகும்...மக்கள் ஆன்மீகத்தை அதிகம் நாடுவர்..தியானம்,யோகா போன்றவற்றை அரசு ஊக்குவிக்கும்..மக்கள் அதனை அதிகம் நாடுவர்.

மேசம் ராசியினருக்கு குரு ராசிக்கு 4ல் மாறுகிறார் ...4ஆம் இடம் சுகஸ்தானம்...இது சுமரான பலனைதான் தருகிறது..உங்கள் ராசிக்கு விரயாதிபதி குரு உச்சம் ஆவது சிரப்பில்லை விரயசெலவு அதிகரிக்கும் கலமாகத்தன் இருக்கிறது...ராசிக்கு 4ல் வரும் குரு உடல், ஆரோக்கியத்தை பாதிக்க செய்வார்..8,10 ஆம் இடங்களை பார்வை செய்வதால் திடீர் பண வரவு,தொழிலில் முன்னேற்றம் கண்டிப்பாக இருக்கும் செலவுகள் அதிகரித்தாலும் அந்த அளவு பண வரவுக்கும் குறைவிருக்காது காரணம் குரு பார்வை 8ஆம் இடத்தை அதிர்ஷ்ட ஸ்தானம் ஆகும்..சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகளை தருவார்..அம்மாவுக்கு பாதிப்பு..அதிக பண விரயம்...குடும்பத்தில் விண் வாக்குவாதம் உண்டாக்கும்...தொழில்மந்தமாக காணப்படும்.... பெரிய முதலீடுகளை இந்த காலத்தில் செய்து சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்...புதிய ஆட்களிடம் கவனம் தேவை.ராசிபலன் இப்படி இருந்தாலும் உங்கள் ஜாதகத்தில் 6,8 ஆம் அதிபதி திசை நடந்தால் மேற்க்கண்ட மோசமான பலன் அப்படியே நடக்கும்..4,5,9 ஆம் அதிபதிகள் திசைகள் நடந்தால் இந்த பலன் மாறி சுப பலந்தான் நடக்கும் பெரிய பாதிப்பு இருக்காது...

ரிசபம்;ராசிக்கு குரு இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்தார்..இனி 3ஆம் இடத்துக்கு மாறுகிறார்.. ரிசபத்துக்கு குரு பகைதான்..அவர் 3ல் மறைவதும் ஒரு யோகமே...காரணம் ராசிக்கு எட்டாம் அதிபதியாக குரு வருகிறார் அதவது 8ஆம் இடம் நஷ்டம்..தோல்வியை குறிக்கும்..கெட்ட செலவுகளை குறிக்கும்..அப்படி ராசிக்கு முழுமையான கெடுபலனை தரக்கூடிய குரு 3ல் கெட்டு போவது அதிர்ஷ்டம் தான் என்று சொல்ல வேண்டும்.கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பார்கள்..எதிரியே ஒழிந்துவிட்டால் உங்கலை துன்புறுத்த யார் இருக்கிறார்கள்..? எனவே மிக யோகமான பலன்களை குருப்பெயர்ச்சி உங்களுக்கு தரப்போகிறது...

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் ..தொழிலில் இதுவரை இருந்த சிக்கல்கள் அகலும் உங்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள்...பணவரவு தேவைக்கு அதிகமாக வந்து சேமிப்பை உயர்த்தும்...லக்னத்துக்கு 4,5,9 ஆம் அதிபதிகள் திசை நடப்பவர்களுக்கு இன்னும் யோகத்தையே செய்யும் வீடு,சொத்துக்கள் சேர்க்கைகள் உண்டாக்கும்.ராசிக்கு 7ஆம் இடத்தை பார்வை செய்வதால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும்..மனைவியுடன் இருந்த கசப்புகள் விலகும்..மனைவி வழியில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்..9ஆம் இடத்தை பார்வை செய்வதால் தந்தை வழியில் இருந்த பிரச்சினைகள் தீரும்...குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும்..11ஆம் இடத்தை பார்வை செய்வதால் முன்பு எப்போதும் இல்லாத அளவில் லாபம் தொழிலில் குவியப்போகிறது..

மிதுனம் ;உங்கள் ராசிக்கு குருபகவான் 19.6.2014 முதல் தனஸ்தானத்தில் உச்சம் பெறப்போகிறார்...ராசிக்கு இரண்டில் குரு வந்தால், பேச்சு தெளிவாகும் பேச்சால் பல வெற்றிகளை குவிப்பீர்கள்..செல்வாக்கு அதிகரிக்கும்...பணம் பல வழிகளிலும் வந்து சேமிப்பை முன்னேப்போதும் இல்லாத அளவில் நிரப்பும்..2ஆம் இடம் குடும்ப ஸ்தானம் என்பதால் குடும்பத்தில் சந்தோசம்,குதூகலம் அதிகரிக்கும்...குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் அந்நியோன்யம்,புரிந்துகொள்ளும் தன்மை உண்டாகும்..பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர்.உங்கள் ராசிக்கு தொழில் காரகன் குரு உச்சம் பெறுவது தொழிலில் முன்னேற்றம்,புதிய தொழில் தொடங்குதல்,பதவி உயர்வு   கிடைக்கும் காலமாக இது இருக்கும்.6ஆம் இடத்தை குரு பார்ப்பதால் நோய்கள் தீரும்...கட்டுப்பாட்டில் இருக்கும்..நல்ல மருத்துவ சிகிச்சைகள் கிடைத்து பூரண குணம்டைவீர்கள்...எதிரிகள் அடங்கிப்போவார்கள்..6,8 திசை நடந்தால் இது சுமாரான பலனை தரும்..4,59 ஆம் அதிபதிகள் திசைகள் நடந்தால் இரட்டிப்பு பலன்கள் தரும்..பெருமாளை வழிபடுங்கள்...

கடகம்; குரு உங்கள் ராசியில்தான் வந்து உச்சம் ஆகிறார் உங்க ராசிக்கு 5,7,9 ஆம் இடங்களை பார்வை செய்கிறார்..ஜென்மகுரு இடமாறுதல் செய்யும்..ராமர் வனவாசம்போனது ஜென்ம குருவிலே என்று பாடல் இருக்கிறது இதனால் பயப்பட வேண்டாம்..திசாபுத்தி பாதிப்பாக இருந்தால்மட்டும் 6,8 ஆம் அதிபதி திசையாக இருந்தால் வீடு அல்லது தொழில் மாற்றம் உண்டகலாம்..பூர்வ புண்ணியத்தை குரு பார்ப்பதால் வெற்றி,புகழ் உண்டாகும் காலமாகவே இருக்கிரது அதனால் பயப்பட தேவையில்லை.பாக்யஸ்தானத்தை குரு பார்ப்பதால்..தந்தை வழியில் ஆதாயம் உண்டு குழந்தைகளால் பெருமை உண்டு வீட்டில் சுபகாரியம் நடக்கும்..வருமானம் பல வழிகளிலும் வந்து சேரும் குரு உங்கள் ராசிக்கு பாக்யாதிபதி என்பதால் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கக்கூடியவர் என்பதால் அவர் உச்சம் ஆவது நல்லதுதானே..?அதனால் தைரியமாக இருங்கள் குருப்பெயர்ச்சி உங்களுக்கு யோகத்தையே தரும்...

சிம்மம்;இதுவரை உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் இயங்கி வந்த குரு பகவான் இனி 19.6.2014 முதல் ராசிக்கு 12ல் விரய ஸ்தானத்துக்கு செல்கிறார் ..விரய செலவுகள்,சுப செலவுகள் வந்து சேரும் காலமாக இருக்கிறது.. இடம் வாங்குதல்,வீடு கட்டுதல் போன்ற சுப செலவுகள் செய்து கொண்டிருந்தால் நல்லது அந்த வகையில் விரய செலவு என்ற தோசம் பரிகாரமாகிவிடும்.உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதி குரு 12ல் மறைவது கெட்டவன் கெட்டிடில் ராஜயோகம் அடிப்படையிலும்,8க்குடையவன் 12ல்மறைந்தால் விபரீத ராஜயோகம் என்ற அடிப்படையிலும் பெரிய நன்மையையும் கொடுக்கப்போகிறது..அந்த வகையில் திடீர் புகழ்,செல்வாக்கை கொடுக்கும்...பெரிய மனிதர்களின் ஆதரவும்,உதவியும் கிடைக்கும்..6ஆம் இடத்தை குரு பார்வை செய்வதால் எதிரிகள் தொல்லை இனி இருக்காது...ஓடி ஒளிவர்.கெட்ட செலவுகள் இனி இருக்காது மருத்துவ செலவுகள் குறையும்..ராசிக்கு 12ல் குரு உச்சம் அடைவதால் ஆன்மீகத்தில் பெரிய மகான்களின் ஆசி கிடைக்கும்..

கன்னி; உங்கள் ராசிக்கு இதுவரை 10 ஆம் இடத்தில் இருந்து வந்த குரு 19.6.2014 முதல் லாபஸ்தானத்துக்கு மாறுகிறார்..இது அருமையான காலம்..குரு தனகாரகன் ,செல்வாக்கை தருபவன் லாபத்தில் வந்தால் செல்வமழை பெய்யும்...புகழ்,மரியாதை உங்களை தேடி வரும்...குடும்பத்தில் சந்தோசத்துக்கு குறைவிருக்காது...கடன்,நோய் முற்றிலும் நீங்கும்...தொழில் பல மடங்கு லாபம் சம்பாதித்து கொடுக்கும்...பணியில் பதவி உயர்வு கிடைக்கும்..திருமணம் ஆகாதவர்களுக்கு அழகான துணை,அன்பான துணை அமையும்.கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும் வீட்டில் ஆடம்பரபொருட்கள் வாங்கி குவிப்பீர்கள்..தங்கம் சேரும் காலம் இது..புதிய சொத்துக்கல் வாங்குவீர்கள்...உங்கள் ராசிக்கு 3,5,7 ஆம் இடங்களை குரு பார்வை செய்வதால் அந்த இடங்கள் எல்லாம் புத்துணர்ச்சி அடைகின்றன..பிள்ளைகள் வழியில் சந்தோசம்,எடுத்த காரியத்தில் தடை விலகி வெற்றி உண்டாகுதல்,சகோதர வழியில் ஆதாயம்,மாமனார் வழியில் ஆதாயம்,மனைவி வழியில் ஆதாயம்,கணவர் வழி ஆதரவு,புதிய தொழில் தொடங்கி வெற்றிகரமாக செயல்படுதல் போன்ற நல்லவை அனைத்தும் நடக்கும்.மொத்தத்தில் இதுவரை பட்ட கஷ்டம் எல்லாம் விலகி உங்களுக்கு பெரிய நிம்மதியையும் சந்தோசத்தையும் தரப்போகிறது இந்த குருப்பெயர்ச்சி.


மீதி ராசிகளுக்கான பலன்கள் படிக்க இங்கு கிளிக் செய்யவும் ...


திங்கள், 21 ஏப்ரல், 2014

திருமண பொருத்தம் கோட்டை விட்டுடாதீங்க..astrology

ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து நான்காம் இடம்...சுகஸ்தானம் என்று பெயர்..வீடு,வாகனம்,ஆடு,மாடு எல்லாவர்ரையும் குறிக்கும் இடம்..அசையும்,அசைய சொத்துக்கள் எல்லாமே இதை வைத்துதான் முடிவு செய்யப்படுகிறது..அம்மா,மற்றும் உங்கள் உடல் ஆரோக்கியம் பற்ரி சொல்லுமிடமும் இதுதான்..இதற்கு எட்டாமிடம் அதவது 11 ஆம் இடமாகிய லாபஸ்தானம் நன்றாக இருந்தால்தான் உங்கள் பெயரில் இருக்கும் வீடு நிலைக்கும்..11 ஆம் அதிபதி கெட்டிருந்தால் லக்னத்துக்கு மறைந்தால் உங்கள் பெயரில் வாங்கும் சொத்தும் விரைவில் விற்பனையகி விடும் நிலைத்து நிற்காது..4ஆம் அதிபதி 6ல் இருந்தால் உங்கள் சொத்தை மத்தவங்க அனுபவிப்பங்க..நீங்க அனுபவிக்க முடியாது...வீடு கட்ட ஆரம்பிச்சா அதை முடிக்கவும் முடியாது.. கடன் நிறைய ஆகி அதை விற்கும்படி
ஆகிவிடும்!! 


 ராகு கேது அதாவது நாகதோசம் ,செவ்வாய் தோசம் இருப்பவர்களை அதே போல் தோசம் இருப்பவர்களுடன் மட்டும் தான் சேர்க்க வேண்டும் என ஜோதிடம் சொல்கிறது ....அது ஏன் அப்படி சொன்னார்கள் ....இப்படி தோசம் இருப்போருக்கு காமப்பசி ,அறிவுப்பசி அதிகம் ....தோசம் இல்லாதவரை சேர்க்கும்போது பசி தீராது ...தப்பு நடக்கும் பிரிவு வரும் ....இதுதான் உண்மை ,ஜாதகபொருத்தம் பார்த்து திருமணம் செய்வதில் அர்த்தம் இருக்கிறது

 ஏப்ரல் 28சுக்கிரன் உச்சம் ஆகும்னு சொன்னீங்க ...அப்போ லவ் லெட்டர் கொடுத்தா சக்சஸ் ஆகுமா சார் சொல்லுங்கன்னு காலையில இருந்து ஒருத்தர் ஒரே நச்சு ....இன்னுமாய்யா லெட்டர் கொடுத்துட்ட்ருக்கீங்க,முதல்ல அந்த பொண்ணுக்கு ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுய்யா ....இல்ல சார் நானே பழைய நோக்கியா தான் வெச்சிருக்கேன் ..அப்போ முதல்ல சம்பாதி ....அப்புறம் லவ் பண்ணலாம் ண்னு சொன்னேன் ....ஆள் கப்சிப்

 மேசம் ராசியினருக்கு அஷ்டம சனியும் 4ல். குருவுமாக 2015 ஆம் ஆண்டு உடல் ஆரோக்கிய பாதிப்பு ,சொத்து பிரச்சினை தரும்படி இருக்கும் முருகனை 6படை வீட்டிலும் சென்று வழிபடுவது தான் பரிகாரம் ...

 திருமண பொருத்தம் பார்க்கும்போது ஒழுக்க குறைவான ஜாதகங்களை கண்டறிந்து விலக்க முடியும் 4ல் பாவ கிரகம் இருந்து 4ஆம் அதிபதி பாவர்களுடன் இருந்தால் விலக்கலாம் ...செவ் /ராகு ,செவ் /சுக் ,சனி /ராகு ,சனி /சுக் ,என கிரக கூட்டுகள் சரியில்லை ....7ஆம் அதிபதி 8ல் இருந்தால் அல்லது 6ல். இருந்தால் எப்போதும் பஞ்சாயத்துதான் ...இவனுக்கு எட்டாது அவளுக்கு பத்தாது ....ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து சொல்ல வேண்டும் இது பொது பலன் தான்

 ஒரே ராசி ,நட்சத்திரம் கொண்டவர்கள் ஒரு ஊரில் 5,000 பேர் கூட இருப்பார்கள் ..ஒரே லக்னம் ,ஒரே ஜாதகம் கொண்டவர்கள் அப்படி இல்லை ...எனவே ராசி நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்து முடிவு செய்யாதீர்கள் ...யோகமான திசை நடப்பவர்களை திருமணம் செய்தால்தான் திருமணத்திற்கு பின் முன்னேற்றம் காண முடியும் ...திருமணத்துக்கு பின் வீழ்ந்தவர்கள் நிறைய உண்டு

 சுவரில் டைல்ஸ் ஒட்டவே கூடாது. அது சுவர்களின் சுவாசத்தைக் கெடுக்கும். வீட்டுக்குள் காற்று வராது. அதனால்தான் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றவர்கள், திரும்பி வந்ததும் மின்விசிறியைப் போட்டுக்கொள்கிறார்கள். வீடு, இறுக்கமாக இருப்பதால் அதில் வசிப்போருக்கு நிறைய நோய்களும் வருகின்றன...நம் முன்னோர்கள் செங்கல் பயன்படுத்தசொன்னதின் காரணம் அதில் நிறைய துளைகள் இருக்கின்றன..காற்று ஈரப்பதத்தை வீட்டினுள் செலுத்தி தட்பவெப்பநிலையை அது சீராக்குகிறது இப்போது சிமெண்ட் செங்கல் வந்துவிட்டன..அது நுண் துளைகள் இல்லாதவை..ஆபத்தானது..!!

திங்கள், 14 ஏப்ரல், 2014

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. ஜெயம் உண்டாகட்டும்...செல்வம் பெருகட்டும்!!

தமிழ் புத்தாண்டு காலை 7.35 மணிக்கு மேசம் ராசியில் சூரியன் இரவேசித்தது முதல் தொடங்கியது...ஜெய வருடம் தொடங்கியது...இந்த இனிய நன்னாளில் நம் வாசக நண்பர்கள் அனைவரும் பூரண உடல்நலம் ,மனநலம்,செல்வவளம் பெற்று சிறப்புடன் வாழ தமிழ் கடவுள் முருகனை பிரார்த்திக்கின்றேன்..செல்வவளத்துடன் வாழ  லட்சுமி நராயணனை துதிக்கின்றேன்...

இன்று காலை கண் பார்வையற்றோர் மற்ரும் ஆதரவற்ற பெரியோர் மற்ரும் குழந்தைகள் இல்லம் சென்று 108 பேருக்கு அன்னதானம் செய்து புதிய வருடத்தை தொடங்கினேன்...நண்பர்கள் உதவியால் சாப்பாடு ,இனிப்பு,வடையுடன் அறுசுவை உணவு வழங்கப்பட்டது....உதவியாக இருந்த நண்பர்கள் அனைவரது குடும்பத்தார் பெயரிலும் முருகன் கோயில் மற்றும் லட்சுமி நாராயணன் கோயிலில் அர்ச்சனை, வழிபாடு  செய்யப்பட்டது..என்றும் பூரண உடல் நலத்துடன் செல்வவளத்துடன் வாழ்க...!!


ஜெய வருடம் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரத்தில் திங்கள் கிழமையில் பிறந்திருக்கிறது ராஜா சந்திரன்...அறிவாற்றல் பெருகட்டும்...அன்பு தழைத்தோங்கட்டும் தாய்மையின் அன்பை சந்திரன் குறிக்கும்..அத்தயக தாயன்புள்ளத்துடன் மக்களின் குறைகளை தீர்க்கும் நல்ல அரசாங்கம் அமையட்டும்...ராசிகள் 12 ஐயும் வலம் வந்து சூரியன் மேசம் ராசியில் மீண்டும் தன் சுற்றை தொடங்குகிறார் இதுவே முதல் ராசி என்பதால் தமிழ் புத்தாண்டு கொண்டாடுகிறோம்..சூரியன் மேசத்தில் உச்சமாகி இருப்பார்...இந்த காலத்தில் தேர்தலும் நடப்பதால் சூரியன் உலகிற்கே சகல ஜீவராசிகளுக்கும் தலைவன் என்பதாலும் வாழ வைப்பதாலும்...கண்டிப்புக்கும்,நேர்மைக்கும் பெயர் எடுத்தவர் என்பதாலும் நல்ல நேர்மையான ,கண்டிப்பான அரசு மத்தியில் அமையும் என்பதில் சந்தேகமில்லை!!


செவ்வாய், 8 ஏப்ரல், 2014

ஆண்ட்ராய்டு 2014 -2015 ஜெய வருட தமிழ் பஞ்சாங்கம் இலவசம்

ஆண்ட்ரய்டில் தமிழ் பஞ்சாங்கம் இலவசமாக கிடைக்கிறது..தணிகை பஞ்சாங்கம் திரு.சரவணன் அய்யர் இதை துல்லியமாக கணித்து அழகாக வடிவமைத்து வெளியிட்டுள்ளார்....இது ஜெய வருட 2014 -2015 வரை பார்க்கும்படியான பஞ்சாங்கம் ஆகும்..பி.டி.எஃப் ஃபைலாக தரவிறக்கி படித்துக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களுக்கு பெரிதும் பயன்படும்..திரு.சரவணன் அய்யர் அவர்களுக்கு நன்றி..

திங்கள், 7 ஏப்ரல், 2014

ஜோதிட அனுபவங்கள்;மீனம் ராசியினருக்கு எச்சரிக்கை பரிகாரம்

மீனம் ராசியினருக்கு வரும் ஜூலை மாதம் ராகு கேது பெயர்சி முதல் கேது உங்கள் ராசிக்கு வருகிறார்..குரு,சனியால் பணம்,சொத்துக்கள் சேர்க்கை உண்டானாலும் உடல் ஆரொக்கிய பாதிப்பை விபத்தை தவிர்க்க இயலாது...அதற்கு ஒரு பரிகாரம்..ஒவ்வொரு மாதமும் சங்கடஹ சதுர்த்தி வரும்..அன்று வினாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அவல் கடல்கை நைவேத்தியம் செய்து வர நன்மை உண்டாகும் தோசம் விலகும் பிறப்பு ஜாதகத்தில் சந்திரன் கேது இணைந்து இருப்பவர்களும் இதை செய்யலாம்..

 பெண் வீட்டார் தன் மகளுக்கு ஜாதகம் பார்க்கும்போது வசதி,படிப்பு,தொழில் மட்டும் பார்க்காமல் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்க்காமல் தன் மகளுடன் மட்டும் அப்பையன் வாழ்வானா என்பதையும் பார்க்க ஜாதகத்தை கவனிக்கவும்..செவ்வாய்,ராகு,புதன் இணைவு இருப்பது.. பலருடன் தொடர்பை உண்டாக்கும் கிரக அமைப்பாகும்..சந்திரனுக்கு 7ல் சுக்கிரன் இருப்பதும் மோசமான அமைப்புதான்...6 மாதத்தில் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் நிற்கும் காலம் இது இதற்கு காரணம் ஒன்று தாம்பத்ய உறவு சரியில்லாமல் போவது, இன்னொன்று வேறு தொடர்புகள்தான்...சிலர் ஈகோ என்பார்கள்..ஈகோ என்பதெ தாம்பத்யம் சுகமில்லை என்பதுதான்.

 மூன்று மாதத்துக்கு முன் ஒரு ஜாதகம் பார்த்தேன் ஒரு அம்மா தன் மகனின் ஜாதகம் எடுத்துக்கொண்டு வந்திருந்தார்கள்..அவன் ஜாதகத்தில் சுக்கிரன்,செவ்வாய்,ராகு இணைந்து இருந்தது.ராகு புத்தியும் அப்போது நடந்தது.திருமண பொருத்தம் பார்ப்பதற்காக சில ஜாதகங்களும் கொண்டு வந்திருந்தார்கள்..இந்த பையன் இன்னும் சில நாட்களில் வீட்டுக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்யப்போகிறான் என சொன்னேன் அந்தம்மா அதிர்ச்சியுடன் அவன் அப்படி இல்லை என மறுத்தார்கள்...பொருத்தமும் பார்க்க விருப்பமில்லாமல் சென்று விட்டார்கள்..இன்று அந்தம்மா போன் செய்து அழுதார்கள்.. நீங்க சொன்ன மாதிரியே போன மாசம் அவன் காதல் திருமணம் செஞ்சிக்கிட்டான் என்றார்கள் ..என்ன செய்வது விதி வலியது....!