வெள்ளி, 30 மே, 2014

இந்தியாவின் எதிர்காலம் ஜோதிடம்

சுதந்திரம் பெறும்போது இந்தியா வுக்கு ஜாதகம் கணித்தால் கடகம் ராசி வரும்.அந்த கடக ராசியில் எத்தனை கிரகம் இருக்கிறது என பாருங்கள்.இப்போது அந்த கடகத்தில் தான் குரு ஜூன் 19 அன்று உச்சம் பெற போகிறார் கிட்டதட்ட 10 வருடம் கிரகம் இல்லாத ராசி கட்டத்தில் உலா வந்துகொண்டிருந்த குருவுக்கு கடகத்தில்தான் நிறைய கிரகம் ராசியில் நுழையப்போகிறார் தனியாக பயணம் செய்த ஒருவர் கூட்டமாக நண்பர்களை பார்த்தால் சந்தோசம் பிச்சிக்காதா...அப்படித்தான் குரு பல கிரகம் கூட்டு அமைப்பில் இருக்கும் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆனதும்,அதன் காரகத்துவங்களை குரு பிரகாசப்படுத்தப்போகிரார் குரு பார்க்க கோடி நன்மை உண்டாகிறது. கேதுவை பார்ப்பதால் மதம்,ஆன்மீகம் செழித்தோங்கும்..எந்த பிரச்சினையும் இல்லாமல் சுதந்திரமாக அவரவர் மதத்தை பின்பற்ற அரசு உதவும்.மக்கள் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொள்வார்கள் அந்நிய நாட்டு மொகம்,கலாச்சரம் குறையும்.பல நன்மைகளை இந்தியாவுக்கு வாரி வழங்கப்போகிறார்.

குரு பெயர்ச்சி ஆவதற்கு முன்பே 2 மாதங்களுக்கு முன்பே பலன் தருவார் அப்படி பார்த்தால் பலமான ஆளுங்கட்சி அமைந்தது தான் அந்த பலன்.இனி மிக பிரபலமாக இந்தியா பேசப்படப்போகிறது ..பல ஆயிரம் நன்மைகள் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் உண்டாகப்போகிறது என என் ஜோதிட கணக்கு சொல்கிறது...ராசிக்கு கண்டக சனி நடப்பது உள்நாட்டு கலவரத்தை சொன்னாலும் நீதி,வளம்,முன்னேற்றம் கண்கூடாக தெரிகிறது.பொருளாதார வளர்ச்சி சிற்ப்பாக இருக்கும் என்பதே இப்போது தெளிவாக தெரிகிறது!

வியாழன், 29 மே, 2014

குரு வழிகாட்டிய ஜோதிடம்

ஆரம்ப கால ஜோதிடனாய் இருந்தபோது 10ல் குரு வந்தால் பதவி பறிபோகும் என ஒரு முட்டை வியாபாரிக்கு பலன் சொல்லி திகில் கிளப்பிவிட்டுவிட்டேன்.அவர் என் குருவிடம் போய் ,இப்படி உங்க சிஷ்யன் சொல்லிட்டார் என புலம்பிட்டார்.

குருவிடம் இருந்து அழைப்பு வந்தது.அவரோ கோபக்காரர் பயந்துகொண்டுதான் போனேன்.10ல குரு வந்தா தொழில் போயிடும் என சொன்னியா என்றார். நான் மெளனமாக இருந்தேன்.10ல் குரு வந்தாலும் இவருக்கு சுக்கிரனை குரு பார்க்கிறார் ஜாதகத்தை பார்த்தியா இல்லையா...என்றார். நான் இதை கவனிக்கலையே என யோசித்தேன்.குரு மாறியதும் இவர் வண்டி வாங்கி தொழிலை விரிவுபடுத்த போகிறார் பாரு.என்றார் அதன்படியே குருப்பெயர்ச்சி ஆனதும்,அவருக்கு போட்டியாக இருந்த இன்னொரு முட்டை வியாபாரி தொழிலை விட்டுப்போக இவருக்கு இன்னும் அதிக மளிகை கடைகள் கிடைக்க தொழிலை விரிவுபடுத்தி மினி ஆட்டோ வாங்கி அதிக கடைகளுக்கு சப்ளை செய்தார்..
 
குரு சொன்னது பலித்தது..அதன்பின் நான் ராசிபலன் அப்படியே சொல்லக்கூடாது என புரிந்துகொண்டேன். குரு வாழ்க என சொல்லி அன்று ஒரு பாடம் அவரிடம் கற்றேன். இது 7 வருடத்துக்கு முன் நடந்தது.உங்கள் பிறப்பு ஜாதகத்தில் குரு எங்கே வந்தாலும் செவ்வாயை,சுக்கிரனை பார்த்தால் அதிர்ஷ்டம் உண்டு.சுபகாரியம் நடக்கும் சொத்து சேர்க்கையோ, அல்லது திருமணமோ,குழந்தை பாக்யமோ உண்டாகும். அவரவர் வயதுக்கு தகுந்தாற்போல இது மாறுபடும்.குரு இன்று இல்லை..ஆனால்
அவர் ஒவ்வொரு சொல்லும் இன்று என்னை வழி நடத்துகிறது!! 
 
குரு வாழ்க ,குருவே துணை ,குருவே சரணம்!

திங்கள், 19 மே, 2014

மோடி ஜாதகமும் ராகுல் ஜாதகமும்

பாராளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றிருக்கும் பாரதியா ஜனதா கட்சிக்கும் ,பிரதமராக வரும் 24ஆம் தேதி பதவி ஏற்கும் நரேந்திர மோடி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தமிழகத்தில் எல்லா கட்சிகளையும் மண் கவ்வ வைத்து 37 இடங்களை பிடித்து பெரும் சாதனையை செய்த ஒன் மேன் ஆர்மி அம்மா ஜெயலலிதா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...நாம் முன்பே சொன்னது போலதான் நடந்திருக்கிறது போனில் பாராட்டிய நம் வாசகர்களுக்கு நன்றி...ஜெயலலிதா அவர்களது மகம் நட்சத்திரம் சிம்மம் ராசிக்கு யோகமான நாளில்தான் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது தேர்தல் தேதியும் யோகம்...முடிவுகள் அறிவுக்கும் நாளும் அவருக்கே ஜெயம் என்றானது தமிழ் வருடத்தின் பெயரே ஜெய வருடம் அப்புறம் என்ன இறையருள் அசி அவருக்கு பரிபூரணமாக இருந்திருக்கிறது!!

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியர்கள் காங்கிரசை கழுவி துடைத்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டார்கள்..கூட்டணி தர்மம் எனும் பெயரில் கூட்டணி கட்சிகள் அடிக்கும் கூத்துகளை கண்டுகொள்ளாமல் இருந்ததர்கான தண்டனை...மக்களின் கோபத்தை  தேர்தலின் போதுதான் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அறிவு ஜீவித்தனமாக இருந்திருக்கிறார்கள்..ராகுல் ஜாதகத்தின் மகிமை பற்றி முன்பே நான் எடுத்து சொல்லி இருக்கிறேன்..ராகுல் காந்தி பிரதமர் ஆவாரா..?

வெறும் ராசியை வைத்து பலன் பார்க்க முடியாது. ஜாதகத்தில் இருக்கும் கிரக பலம்தான் முக்கியம் என்பதற்கு உதாரணம் மோடி..ராகுல்..இருவருமே விருச்சிகம் தான். ஒருவர் அபார வெற்றி, ஒருவர் படு தோல்வி.ராசியின் அதிபதி செவ்வாய் பலம் பெற வேண்டும்...பிறக்கும்போது கிரகங்கள் பலமான இடத்தில் அமைந்திருக்கவேண்டும்..தற்சமயம் நல்ல திசாபுத்தியும் இருக்க வேண்டும் ராசி அதிபதி பலம் இழந்த ராகுல் வாழ்வில் எதையும் சாதிக்கவில்லை.. ராசி அதிபதி பலம் பெற்ற மோடி தொட்டதெல்லாம் வெற்றிதான்..



புதன், 14 மே, 2014

குருப்பெயர்ச்சி ராசிக்கு பார்க்கனுமா லக்னத்துக்கு பார்க்கனுமா..?

குருப்பெயர்ச்சி 2015 ராசிக்கு பார்க்கலாமா லக்னத்துக்கு பார்க்கனுமா..?

குருப்பெயர்ச்சி ராசியை அடிப்படையாக வைத்தே எல்லா வார இதழ்களும் மீடியாக்களும் ஜோதிட பத்திரிக்கைகளும் எழுதுகின்றன..ராசிக்கு குரு 2,5,7,9 ஆம் இடங்களுக்கு நல்ல பலன்களை தரும் செல்வாக்கை தரும் பணம் நிறைய வரும் தொழில் நன்றாக இருக்கும் அந்த அடிப்படையில் மிதுனம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மீனம் ராசியினருக்கு 2014 -2015 குருப்பெயர்ச்சி ராசிபலன் மிக யோகமாகவே இருக்கிறது இதனை ராசியினராக கொண்டவர்களுக்கு மட்டுமல்ல..இதனை லக்னமாக கொண்டவர்களுக்கு இரட்டிப்பு பலனை குரு மாறுதல் உண்டாக்கும் ராசியை விட லக்னம் இன்னும் சக்தி அதிகம் பலன் அதிகம்.

நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த ராசி மண்டலத்தில் இருக்கிராரோ அது ராசி...நாம் பிறக்கும்போது சூரியன் எந்த ராசி மண்டலத்தில் இருக்கிறாரோ அது லக்னம்..சந்திரனே ஒளியை சூரியனிடமிருந்து எனக்கொண்டால் சூரியனின் அமைப்புடைய லக்னம் இன்னும் சிறந்ததுதானே.

சந்திரன் மிக அருகில் நமக்கு ஒளியை கொடுக்கும் என்ற அடிப்படையில் அவர் மனதுக்கு அதிபதி எனும் வகையில் சந்திரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் .ஜோதிட குரு பராசரர் காலத்துக்கு முன்பு சந்திரனை கொண்டே பலன் காணப்பட்டது.அதன் பின்புதான் இன்னும் துல்லியமான பலனை அறிய லக்னம் வகுக்கப்பட்டது...சந்திரன் இரண்டு நாட்களுக்கு மேல் ஒரு ராசியில் இருக்கும் லக்னம் இரண்டு மணி நேரம்தான் குறிக்கிறது அப்படி பார்த்தால் இன்னும் துல்லியமான பலனை சொல்லும்..

.மிதுனம் லக்னத்தாருக்கு இந்த குரு பெயர்ச்சி மிக சிறப்பான யோகத்தை தரப்போகிறது முதல்வர் ஜெயலலிதா லக்னம் மிதுனம்...அந்த அடிப்படையில் பார்த்தால் அவர் ராசி சிம்மத்துக்கு குருப்பெயர்ச்சி பலன் சுமார்தான் ஆனால் லக்னத்த்துக்கு மிக சிறப்பா இருக்கே..? இரண்டாம் இடத்தில் உச்சம் ஆகும் குரு செல்வக்கை அதிகபபடுத்துதே..? குருப்பெயர்ச்சிக்கு முன்பே தேர்தல் ரிசல்ட் வந்துவிடும் ...ரிசல்ட் வரும்போது அவர் ராசிக்கு லாபஸ்தானத்தில் குரு...ரிசல்ட் வந்தபின் குருப்பெயர்ச்சிக்கு பின் லக்னத்துக்கு இரண்டில் குரு உச்சம்...இவை அவருக்கு சிறப்பாகவே இருக்கு.தேர்தல் தேதி அறிவித்த நாள்,தேர்தல் தேதி,தேர்தல் முடிவுகள் எல்லாமே அவர் ஜாதகத்துக்கு சாஹகமாக இருக்கிறது என முன்பே சொல்லி இருந்தேன்...இதனால் அவர் எதிரிகளின் பலம் மிகவும் தாழ்ந்துவிடுகிறது...

ராசி மட்டுமல்ல பலன் பார்க்கும்போது லக்னத்தையும் கவனிப்பது அவசியமாகிறது!!

திங்கள், 5 மே, 2014

செவ்வாய் வக்ரம்...சனி வக்ரம்..பலன்களும் தீர்வுகளும்

செவ்வாய் வக்ரமாக இருக்கும்போது தீவிபத்து,ரயில்விபத்து,பூமி அதிர்ச்சி,மின்வெட்டு,நாசவேலைகள் இருக்கும் என ஒரு மாதத்துக்கு முன் செவ்வாய் வக்ரம் தொடங்கும்போது சொல்லி இருந்தேன்.. வரும் 10.5.2014 முதல் வக்ரம் நிவர்த்தி ஆகிறது...இதன்படி பார்த்தால் மின்வெட்டு பிரச்சினைக்கு வழி பிறக்கும்னு நம்புறேன்..

செவ்வாய்,சனி இருவரும் ஒரே நேரத்தில் வக்ரம் அடைந்தவுடன் பல பிரச்சினைகள் அடுத்தடுத்து உண்டாகின்றன..எல்லாம் அதிர்ச்சியான செய்திகள்தான்..

சனி வக்ரம் 17.7.2014 வரை இருக்கு..அதுவரை சனியால் பாதிப்பில் இருக்கும் ராசிகளான மீனம்,துலாம்,கன்னி,விருச்சிகம் ராசியினருக்கு பாதிப்பு குறைகிறது

 நந்தியை நீரில் முழ்க வைத்து வருண ஜெபம் செய்தால் மழை பெய்யும் என்பது மன்னர்கள் காலத்தில் இருந்து ஆண்டாண்டு காலமாக நம் மண்ணில் இருக்கும் நம்பிக்கை...இரு தினங்களுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை திருநள்ளாறு உட்பட மதுரை,திருச்சி என முக்கிய கோயில்களில் அவ்வாறு வருண ஜெப செய்தது இப்போது மதுரை திருச்சி என சில ஊர்களில் நல்ல மழை பெய்கிறது...சுக்கிரன் பலமானால் மழை பெய்யும் என முன்பு ஒருமுறை எழுதி இருந்தேன்...28 ஆம் தேதி முதல் சுக்கிரனும் உச்சமாகி இருக்கிறது..இனி தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்யும்..வைகாசியில் நல்ல மழை எதிர்பார்க்கலாம்..!!
  


முலாம்பழம் பழச்சாறுதான் இப்போ மிக அதிகமா தமிழகத்தில் மக்கள் விரும்பி குடிக்கிறாங்க..இதை குடிக்காம கோக்,பெப்சி,என குடிப்பவர்கள் இந்த பழத்தை பத்தி தெரிஞ்சுக்குங்க..இது உடலை குளிர்ச்சியாக்குவதில் மற்ற பழங்களை விட,முதலிடம் வகிக்கிறது...புரதம், சர்க்கரைச் சத்து, இரும்பு, கால்ஷியம், வைட்டமின் "ஏ',"சி' என்று பலவிதச் சத்துகள் இதில் அடங்கியுள்ளன.கீல்வாதம், சீழ் வடிதல், கல்லீரல் வீக்கம், சிறுநீர் அடைப்பு போன்ற பல குறைபாடுகளுக்கு முலாம்பழம் மிகவும் ஏற்றது.

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மாமருந்து.கோடை காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு இது பெரும் பிரச்சினையாக இருக்கும்..கோக்,பெப்சி குடிச்சா உங்கள் கல்லீரல்,கணையம்,இரைப்பை கடுமையாக பாதிக்கப்படும்...எது வசதி..? உங்க குழந்தைகளின் மீது குடும்பத்தின் மீது,உண்மையான அன்பு இருந்தா கோக் ,பெப்சியை தவிர்த்துவிடுங்கள்.. முலாம்பழம் கிலோ 20 ரூபாய் தான் ..5 பேர் குடிக்கலாம்..வீட்டுக்கு வாங்கிட்டு போங்க....வெய்யிலையும் சமாளிக்கலாம், உடலையும் பாதுகாக்கலாம்..!!