தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 கன்னி
உத்திரம் 2அம் பாதம் முதல் அஸ்தனம்,சித்திரை 2 ஆம் பாதம் வரை நட்சத்திரங்கள் கொண்ட கன்னி ராசி நண்பர்களே....உபய ராசியில் பிறந்தவர் நீங்கள் என்பதாலும்,புதனின் ராசியை கொண்டவர் என்பதாலும் நல்ல அறிவாளி..நிறைய அனுபவசாலி,நிறைய படிப்பாளி...பிறருக்கு புத்தி சொல்வதில் உங்களை அடிச்சிக்க ஆள் கிடையது..ஆனா எனக்கே பத்து பேர் புத்தி சொல்ற அளவுக்கு சொதப்பிக்கிட்டு இருக்கேனே என நீங்கள் புலம்புவது புரிகிறது.....கன்னி ராசிக்காரர்கள் அம்மா மீது அதிக பாசம் கொண்டவர்கள் கல்யாணம் ஆகிட்டா மனைவி மீது அதிக பாசம் கொண்டவர்கள் ஆகிவிடுவர் இதனால் மாமியார், மருமகள் சண்டைக்கு குறைவே இருக்காது....யார் பக்கமும் சாயாத பாபாவாக இருந்துகொண்டால் மட்டுமே சமாளிக்க இயலும்..
உங்க ராசிக்கு இப்போது விரய குரு நடக்கிறது. குரு உங்க ராசிக்கு 12ல் இருப்பதால் நிறைய பணம் தேவைப்படுகிறது ஆனால் கிடைப்பது என்னவோ ,கைக்கே பத்தவில்லை என்ற நிலைதான்..வர வேண்டிய பணம் வராத நிலை...கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க முடியாத கையறு நிலை ...கடன் நெருக்கடி சிலருக்கு அதிகம் இருக்கும் குரு மறைவது அவமானம்,செல்வாக்கு குறைதல்,தொழில் மந்தம் உண்டாக்கும் கணவன் மனைவி இடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் ...
குருப்பெயர்ச்சி ஆனால் சிலருக்கு இடமாறுதல்,தொழில் மாறுதல்,வீடு மாறுதல் அடைவர்...ஆடி மாதம் குருப்பெயர்ச்சி வருகிறது..அது ஜென்ம குருவாக வருவதால் ,அலைச்சல் இருப்பினும் மறைந்த குரு ஜென்மத்தில் வந்து 5,7,9ஆம் இடங்களை பார்வை செய்வதால் ,குருபார்க்க கோடி நன்மை என்பது போல குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும்....பணவ்பரவு நன்றக இருக்கும்..
ராசிக்கு விரயாதிபதி சூரியன் உச்சம் பெற்று இருப்பதும்,ராசிக்கு எட்டாம் அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பதும் சரியல்ல. எனவே இந்த சித்திரை மாதம் முடியும் வரை நெருக்கடி,அவமானம்,எதிரிகள் தொல்லை அதிகம் காணப்படவே செய்யும் ..தந்தை வழியில் பகை உண்டாகும் தந்தை ,தந்தை வழி நெருங்கிய உறவில் இருக்கும் உறவுகள் மருத்துவ செலவு ,அலைச்சல் உண்டாக்கும்....தந்தைஒயால் குழப்பம்,பிரச்சினை,சங்கடம் உண்டாக்கும்..சித்திரை மாதம் முடிந்தபின் நல்ல பலன்கள் உண்டாகும்..
குலதெய்வம் கோயிலில் 16 விதமான அபிசேகங்கள் செய்து வழிபடவும்..
2 கருத்துகள்:
16 வகை அபிஷேகம்..!! என்னென்ன வகை அபிஷேகம்..செய்யவேண்டும் சார்..
Sir 16 vagai abishegam enna enna seyannum sir
கருத்துரையிடுக