புதன், 24 ஆகஸ்ட், 2011

சர்க்கரை வியாதியை ஒரே நாளில் குணமாக்கும் டாக்டர் sugar


சர்க்கரை நோய் ஒரே நாளில் குணமாக்கும் டாக்டர் #அமானுஷ்யம்


சர்க்கரை வியாதிதான் இந்தியாவின் தேசிய நோய் எனும் அளவுக்கு நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது.


சர்க்கரை நோய் பற்றிய சில குறிப்புகள்;
 நாம் சாப்பிடும் உணவு நமது வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளால் குளுகோஸ் எனும் எரிபொருளாக மாறுகிறது. இது ஒரு சர்க்கரை பொருள்.  இந்த குளுகோஸ் இரத்தத்திற்குள் சென்று பின்னர் இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உடற்செல்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.கணையம் எனும் உடல் உறுப்பு இன்சுலின் எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த இன்சுலின் இரத்தத்தின் வழியாக செல்களை சென்றடைகின்றன. அங்கு குளுகோஸ் ஐ சந்தித்து, செல்களானது குளுகோஸ்-ஐ தங்களுக்குள் எடுத்துக் கொள்ளச் செய்கிறது.குளுக்கோஸ்-ஐ செல்கள் எரித்து உடலுக்கு தேவையான சக்தியினை உற்பத்தி செய்து தருகிறது.

 குளுக்கோஸ்-லிருந்து சக்தியை உற்பத்தி செய்வதை சர்க்கரை நோய் கடினமாக்குகிறது.வயிறு போன்ற ஜீரண உறுப்புகள், உணவினை குளுகோஸ்-ஆக மாறச் செய்கின்றன. அவை இரத்தத்திற்குள் சென்று இரத்தத்தின் வழியாக செல்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடிவதில்லை....


சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள்;


1.அடிக்கடி சிறுநீர் கழித்தல்(இரவு நேரமும் கூட)
2.தோலி அரிப்பு ஏற்படுதல்
3.அதிகமான தாகம்
4.எப்போதும் பசியுடன் இருத்தல்
5.எடை குறைதல்

சர்க்கரை நோயை ஒரே நாளில் குணமாகிறதாம்;

சத்தீஸ்கர் மாநிலத்தில் ’’துர்க்’’ என்னும் ஊரில் உள்ள ஜும்மா மசூதி ஒன்றில் முஸ்லீம் வைத்தியர் ஒருவர் ஒட்டக பாலில் கலந்த ஒரு மருந்து மந்திரம் ஒதி, தருகிறாராம்.அதை ஒரே மடக்கில் குடித்துவிட்டால்,ஒரு மணிநேரம் கழித்து,டெஸ்ட் எடுத்து பார்த்தால் சர்க்கரை அளவு நார்மல்.கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிகிறது.கட்டணச் செலவு 150 ரூபாய்தான்.(ஒரு நாளைக்கு 1000 பேர்னா என்னாச்சு..ம்ஹீம்)

ஈரோட்டில் இருந்து சிலர் போய் வந்திருக்கின்றனர்...நார்மலாக இருப்பதாக சொல்கிறார்கள்.என் உறவினர் ஒருவர் அடுத்த வாரம் செல்கிறார்.அவர் சென்று வந்ததும்,இதன் உண்மை நிலையை முழுமையாக எழுதுகிறேன்.சர்க்கரை வியாதிக்காக மாதம் 2000 செலவானாலும் பரவாயில்லை.அடிக்கடி தண்ணீர் குடிப்பதும்,சிறுநீர் கழிப்பதும்,சர்க்கரை இல்லாமல் டீ குடிப்பதும் கொடுமை..என்கிறார் அவர்.


காஞ்சனா -செம காமெடி..செம திகில்



காஞ்சனா முனி-2 சினிமா விமர்சனம்

முனி திரைப்படத்தை பார்த்துவிட்டு இதை பார்ப்பவர்களுக்கு ராகவா லாரன்ஸ் அதிலி நிறைய சீன்களை சுட்டுவிட்டாரோ என தோன்றும்.
அந்தளவு முனியில் உள்ள சீன்களை வசனம் மட்டும் மாற்றிபலஇடங்களில் கோர்த்து இருக்கிறார் இயக்குனர் ராகவா.லா.



முனியில் ராஜ்கிரன்.காஞ்சனாவில் சரத்குமார்.இருவருமே வில்லன்களால் அநியாயமாக கொல்லப்பட்டவர்கள்.இருவருமே அப்பாவிகள் ப்ளஸ் பழிவாங்க ராகவா வை தேடி வந்து புகுந்துகொண்டு வில்லன்களை பழி வாங்குபவர்கள்.காஞ்சனாவில் சரத்குமார் அரவாணியாக வந்து ,அரவாணிகளுக்காக குரல் கொடுக்கிறார்.அது செம டச்சிங்.சிலஅரவாணிகள் பிச்சையெடுப்பதும்,பாலியல் தொழில் செய்வதும்தான் அரவாணிகளுக்கு சமூகத்தில் மதிப்பில்லை என சொல்லி தன் வளர்ப்பு மகளை டாக்டருக்கு படிக்கவைக்கிறார்.அவரும் அரவாணிதான்.டாக்டருக்கு படிக்கும் தன் மகளுக்காக ஆஸ்பிடல் கட்ட ஒரு இடத்தை வாங்க,அதை வில்லன்ஆட்கள் பறிமுதல் செய்து சரத்குமாரை கொன்று விட,அவர்களை பழி வாங்க ராகவா உடலில் புகுந்து,வில்லன்களை துவம்சம் செய்து விடுகிறார். 


கோவை சரளா முனி படத்தில் இருந்த அதே கேரக்டரை இதிலும் ஏற்றிருக்கிறார்.தமிழில் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகை சரளாதான்.அந்தளவு காமெடி காட்சிகளில் பின்னுகிறார்.பேயாக லாரன்ஸ் ஆட்டம் போடும்போது பயத்தில்,அவர் ஃபெர்மான்ஸ் சூப்பர்.அதே போல லாரன்ஸை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு,கோவை சரளாவும் அவர் மருமகளும் பேயை விரட்ட மந்திரவாதியை கூட்டிவந்து ,படும் பாடு செம காமெடி.படத்தின் திரைக்கதை பரபரப்பாகவும் ,காமெடியாகவும்,திகிலாவும் போகுமாறு இயக்குனர் லாரன்ஸ் அமைத்திருக்கிறார்.அதில்தான் வெற்றி.

சந்திரமுகி க்ளைமாக்ஸ் போல காஞ்சனா வில் க்ளைமாக்ஸ் பாடலில் ராகவா பெண் வேடத்தில் போடும் பேயாட்டம் கலக்கல்.இதுதான் படத்தின் உயிர்நாடி.தெலுங்கில் படம் செம ஹிட்டாம்.தமிழிலும் படம் பிக்கப் ஆகிவிட்டது என்கிறார்கள்.தமிழில் நல்ல வசூலை கொடுத்திருக்கிறது..தமிழில் பேய்+காமெடி+ஃபார்முலா வந்தது இல்லை...பழைய விட்டலாச்சார்யா படங்கள் மட்டுமே அப்படி இருந்தது.

அதன் பிறகு லாரன்ஸ் மட்டுமே அந்த ஃபார்முலாவில் திரைக்கதை அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார்.கோவை சரளா இப்படத்தில் முக்கிய பாத்திரமாக காஞ்சனாவிற்கு பின்,படத்தின் முழு பாரத்தையும் சுமக்கிறார்.

சரத் ,லட்சுமி ராய் கவுரவ வேடம்தான்...


காஞ்சனா -சூப்பர் எண்டர்டைனர்

உங்கள் ராசிப்படி,எந்த நோய் பாதிக்கும்..?-ஜோதிடம்


உங்கள் ராசிப்படி,எந்த நோய் பாதிக்கும்..?-ஜோதிடம்

இராசிகளும்- நோய்களும்
நல்ல நேரம்
மேஷம்http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQRjFepN5jgLq5P8WcVvFx4wMzKFoTyo7CXuTAB-t9XypvDlHP6
வான தேவனின் முதல் இராசி இது. இதன் அதிபதி செவ்வாய், சர ராசி
வகையும், ஆண் இனத்தையும் சார்ந்தது. உடலில் இதன் அங்கம் தலை மெலிந்தபலம் வாய்ந்த தேகம்.



மேஷ இராசிக்கும் ஆறாமதிபதி புதன். இவர் யார் கூட சேருகின்றாரோ
அவரின் குணத்தை பெற்று நோயினை தருவார். இந்த புதன் சனியுடன் கூடினால்நரம்பு சம்பந்தமான நோயினை தருவார். இவர்கள் மூளை சம்பந்தமானநோயினால் மரணமடைவார்கள்.
நல்ல நேரம்
ரிஷபம்
இது காளை உருவத்தை உடையது. பெண் இராசி ஸ்திரவகையைச் சார்ந்தது.
நாற்கால் இராசி கழுத்து உடல் பகுதியை குறிக்கும். இதன் இலக்கினாதிபதி சுக்கிரன்.இந்த இராசிக்கு 6ம் இடம் துலாம். அதன் அதிபதி சுக்கிரன். எனவே
இவர்களுக்கு பெண் நோய்கள் அல்லது சுபம் சம்பந்தமான நோய்கள் வரும்.
இவர்கள் அந்திப்பொழுதில் காய்ச்சலால் மரணமடைவார்கள்.(பயப்பட
வேண்டாம் சாஸ்திரம் சொல்கிறது)
நல்ல நேரம்
மிதுனம்
காலதேவனின் மூன்றாவது இராசி. ஆண் இனத்தையும் உபய வகைகளையும்
சார்ந்தது இது. உடலில் மார்பினை குறிக்கும். இதன் இலக்கினாதிபதி புதன். இந்தஇலக்கினத்தில் பிறந்தவன் புகழுடையவன்.
இந்த இராசிக்கு ஆறாமிடம் விருச்சிகம். அதன் அதிபதி செவ்வாய்.
செவ்வாய் என்பதால் பித்த இரத்த சம்பந்தமான நோய்கள் தோன்றும். செவ்வாய்எட்டாமிடத்தில் இருந்தால் ஆயுளோடும் யோகத்தோடம் கூடிய அறுவை சிகிச்சைகள்ஏற்படும்.
நல்ல நேரம்
கடகம்
மேஷத்தை போன்றே சர இராசி. பெண் இனத்தைச் சேர்ந்தது. இது உடலில்
இருதயம், தோள்பட்டை ஆகியவற்றைக் குறிக்கும். பெண் தன்மையுடையவன்.குளிர்ச்சி பொருந்தியவன். வெண்மை நிறத்தை உடையவன்.இந்த இராசிக்கு ஆறாமிடம் தனுசு. இதன் அதிபதி குருபகவான்.எனவேவாத சம்பந்தமான நோய்கள் வரும்.
நல்ல நேரம்
சிம்மம்
இது வெட்பமான இராசி. இது ஸ்திரி வகையைச் சார்ந்தது. ஆண்
இனத்தையும் சார்ந்தது. இதன் அதிபதி சூரியன். இந்த இலக்கினத்தில் பிறந்தவன்சிவப்பாகவும் ஒல்லியாகவும் இருப்பான். இந்த இராசி வயிற்றுப் பகுதியைக்குறிக்கும்.

இந்த இராசிக்கு ஆறாமிடம் மகரம். அதன் அதிபதி சனி. எனவே
சகலவிதமான நோய்களும் இந்த இராசிக்கு வரலாம். ஏற்கனவே இலக்கினாதிபதிசூரியன் என்பதால் உடல் சுட்டுக்கொண்டே இருக்கும். பலம் குறைந்தவனாகஇருப்பான். அல்லது வயிற்று தொல்லைகள் நிறைந்தவனாக இருப்பான்.
நல்ல நேரம்
கன்னி
வான மண்டலத்தில் இந்த இராசியைப் பார்த்தால் இரு பெண்கள் நிற்பது
போன்று இருக்கும். இது பெண் இராசியைச் சேர்ந்தது. உபய இராசி. அதிபதி புதன்.இது உடலில் அடி வயிறு, இடை ஆகியவற்றைக் குறிக்கும்.
இந்த இராசிக்கு ஆறாமிடம் கும்பம். இதன் அதிபதி சனி. ஆனால் சிம்ம
இலக்கினத்திற்கு சனி படுத்தும் கெடுதல்கள் இந்த இராசிக்கு இராது. ஆனால்
பித்த, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தோன்றலாம்.
நல்ல நேரம்
துலாம்
தராசின் அமைப்பினை உடையது. சர இராசி ஆண் இனத்தைச் சார்ந்தது.
இதன் அதிபதி சுக்கிரன். உடலின் முதுகு பகுதியைக் குறிக்கும்.
இந்த இராசிக்கு ஆறாமிடம் மீனமாகும். அதன் அதிபதி குரு. இந்த
குருபகவான் தான் நின்ற இடத்திற்கு தகுந்தாற்போன்று வாத ரோகங்களைத்
தருவார்.
நல்ல நேரம்
விருச்சிகம்
வான மண்டலத்தில் எட்டாவது இராசி. இதனைப் பார்க்கும் போது
தேளின் அமைப்பு போன்று இருக்கும். ஸ்திரி இராசி. பெண் வகையைச் சார்ந்தது.இது உடலின் ஆண் குறியையும், பெண் குறியையும் குறிக்கும் இந்த இராசிநேயர்கள் விளையாட்டாக கடுஞ்சொற்களை கூறுவர். ஆனால் நிலையானமனத்தை பெற்றிருக்க மாட்டார்கள்.
இந்த இராசிக்கு ஆறாமிடம் மேஷம். அதிபதி செவ்வாய். அதே நேரம்
இந்த இராசிக்கு இலக்கினாதிபதியும் செவ்வாயே. எனவே இவர்களுக்கு
செவ்வாயினால் ஏற்படும் நோய்கள் குறைவே. ஆனால் இந்த இராசியில்
சந்திரன் இருக்க பிறந்தவர்கள் கபநோய் உடையவர்களாக இருப்பார்கள்.
நல்ல நேரம்
தனுசு
தனுசு என்றால் வில் அம்பு என்று ஒரு பொருள் உண்டு. இந்த இராசி
இத்தகைய அமைப்பை உடையது. இது உபய வகையில் ஆண் வகையைச்
சார்ந்தது. உடலின் தொடையைக் குறிப்பதாகும். இதன் அதிபதி குருபகவான்.
இந்த இராசியின் ஆறாமதிபதி ரிஷபம். அதிபதி சுக்கிரன். ஆனால்
இலக்கினாதிபதி குருவாக இருப்பதால் இவர்களுக்கு மறைமுக நோய்கள்
அதிகம் ஏற்படாமல் சிலேத்ம நோய்களே அதிகம் தோன்றும்.
மகரம்வான மண்டலத்தில் பத்தாவது இராசி. சர இராசியில் பெண் வகையைச்சார்ந்தது. துஷ்டன் என்று கஷ்டப்படுத்துபவனுமான சனிபகவான் இந்த இராசிக்குஅதிபதியாகின்றார்.
இந்த இராசிக்கு ஆறாமிடம் மிதுனமாகும். இதன் அதிபதி புதனாவார்.
எனவே இந்த இராசிக்காரர்களுக்கு வாத சம்பந்தமான நோய்கள் வரும். ஆனால்பதன் யாருடன் சேருகிறார் என்பதைப் பொருத்து நோயானது மாறக்கூடும்.
நல்ல நேரம்
கும்பம்
கும்பம் போன்ற அமைப்புடைய இராசி. ஆண் வகையைச் சார்ந்தது.
மகரத்தின் அதிபதியாகிய சனிபகவான் இதற்கு காரகம் வகிக்கிறார். இது உடலில்கணுக்காலை குறிக்கும். இதனை இலக்கனமாகக் கொண்டவர்கள் தன்னையேபுகழ்வார்கள். புpறரை நிந்திப்பார்கள். மிகவும் அமைதியானவர்கள்.
இந்த இராசிக்கு ஆறாமிடம் கடகம். அதன் அதிபதி சந்திரன். எனவே
இவர்களுக்கு பித்தம், வாதம், கபம் சம்பந்தமான நோய்கள் தோன்றும்.
நல்ல நேரம்
மீனம்
வான மண்டலத்தில் கடைசி இராசி. இரண்டு மீன்கள் ஒன்றெயொன்று
பார்ப்பது போல் அதாவது தற்போதைய தூரதர்ஷன் சின்னம் போன்று இருக்கும்.உபய இராசி. பெண் இனம். இது நீர் இராசி.

இந்த இராசிக்கு ஆறாமிடம் சிம்மம். இதன் அதிபதி சூரியன். எனவே உடல்
எப்போதும் சுட்டுக்கொண்டே இருக்கும். பித்த சம்மந்தமான நோய்களைக்
கொடுக்கும்.


மேலே சொல்லப்பட்டவை பொதுவானவை. அவ்வப்போது நடக்கும் திசைகளுக்கு
ஏற்ப நோயின் தன்மைகள் மாறுபடக்கூடும்.
இருந்தும் உழைப்பிற்கேற்ற பலன் இருக்காது....இவர்கள் வருடம் 
ஒரு முறை திருப்பதி அல்லது திருநள்ளாரு சென்று வருவது நல்லது....


ராசிபலன்;உங்கள் ராசியும் ஒரு வரி நச் பலனும்



 ராசிபலன்;



மேஷம்; யாரையும் நம்பாதவர்கள்

ரிசபம் ;     உழைப்பாளி

மிதுனம்;மெதுவாக செயல்படுபவர்கள்

கடகம்;  தன் முடிவில் எப்போதும் மாறாதவர்கள்,பிடிவாதமாக சாதிப்பார்கள்,
தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்வார்கள்.

சிம்மம்;தனித்து வாழ்பவர்கள்,எதையும் எதிர்த்து போராடுபவர்கள்


கன்னி;கற்பனை வாதி,தொழில் சார்ந்த வாழ்க்கை

துலாம்;  தராசு போல பேசுபவர்கள்

விருச்சிகம்; விஷ(ய)முள்ளவர்.

தனுசு;  போர்க்குணம் ஊர் எல்லைக்கு அப்பால் வாழ்பவர்கள்.(பொதுவாக)

மகரம்;  சுறா உள்ள கடல் பகுதி போல மர்மம் நிறைந்த மனசு உடையவர்

கும்பம்; வெளியே தன் வாழ்வை பற்றி அலட்டிக்கொள்ளாதவர்.கடின போராட்டம்

மீனம்;  மீனை போல அலைந்து திரிபவர்கள்




ஜோதிடம் கற்றுக் கொள்வது எப்படி..?


ஜோதிடம் கற்க;
ஜோதிடம் கற்று ஜோதிடம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள பலரும் எனக்கு 
மெயில் அனுப்புகிறார்கள்.ஜோதிடம் கற்று தருவீர்களா என கேட்கிறார்கள்.ஜோதிடம் 
என்பது ஒரு கடல்.அதில் கையளவு நீரை தான் நாம் வைத்திருக்கிறோம் என என் குரு அடிக்கடி சொல்வார்.எனது ஜோதிட சேவைக்கு முதல் பிள்ளையார் 
சுழி போட்டது எனது ஜோதிட புத்தகம் தான்.இதன் மூலம்தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆதரவால்முழு நேர ஜோதிடராக இருக்க முடிகிறது.ரெகுலராக என்னிடம் மட்டுமே ஜோதிடம் பார்ப்பவர்கள் சுமார் 300 பேர் இருப்பார்கள்.தினசரி ஒருவர் என்றாலும்,வருடம் முழுவதும்பிரச்சனை இல்லை.இதனால் ஜோதிடராக 24 மணி நேர சேவையில் இறங்கிவிட்டேன்.

எண்கணித ஜோதிடம் பற்றியும்,பெயர் எப்படி அமைந்தால் வெற்றி கிடைக்கும் 
என்பது பற்றியும் அதிர்ஷ்ட ஜோதிட சாஸ்திரம் என்னும் இந்த நூல் 96 பக்கங்களில் 
விளக்குகிறது.


குரு மூலமாக கற்கப்படும் ஜோதிடமே நிலையான அறிவை தரும்.அவர்களின் 
ஆசியோடு படிப்பதே உண்மையான ஜோதிட கல்வி.என் குரு நாகப்பன் அவர்கள் 
அவரது குருவிற்கு துணி துவைத்து,சமையல் செய்து,கால் அமுக்கிவிட்டெல்லாம்
 ஜோதிடம் கற்றார்.குருவிற்கு சேவை செய்யும் உண்மையான சீடனாக இருந்து,
குருவுடன் வாழ்ந்து ஜோதிடம் கற்ற கதையை அடிக்கடி என்னிடம் சொல்வார்.
நான் அவரிடம் கற்றுக்கொண்ட நேரம் காலை ஒரு மணி நேரம் மாலை 
ஒரு மணி நேரம்.இரண்டு வருடங்கள்.இவையெல்லாம் அனுபவ ஜோதிடம்தான்.
அவர் ஜோதிடம் பார்க்கும்போது அருகில் இருப்பேன்.இவர் நட்சத்திரம் அனுசம்.
இவர் எப்படி தெரியுமா என விளக்குவார்.இவருக்கு உடன் பிறந்தோர் நால்வர்.
அதை எப்படி சொன்னேன் தெரியுமா என என்னிடம் ஜாதகம் வைத்து விளக்கி 
சொல்வார்.இப்படியே குழந்தை பாக்யம்,திருமண தாமதம் என ஒவ்வொன்றுக்கும் 
பார்க்கும் முறை என பிரித்து சொல்லி தருவார்.


முதன் முதலில் வேறு ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் கற்று தருவீர்களா 
என நான் கேட்டதற்கு லிஃப்கோ பதிப்பகத்தின் குடும்ப ஜோதிடம் புத்தகம் கொடுத்து 
இதை முதலில் மனப்பாடம் செய்.பிறகு வா.என சொல்லிவிட்டார்.ஜோதிடம் 
என்பதில் மனப்பாட பகுதிகள் நிறைய இருக்கின்றன...
(தொடரும்)