திங்கள், 17 செப்டம்பர், 2012

கடகம் லக்னத்தில் பிறந்தவரா நீங்கள்..? ராசிபலன்


கடகம் லக்னத்தில் பிறந்தவரா நீங்கள்..? ராசிபலன்



கடக லக்னம் சந்திரனின் ஆட்சி பெற்ற வீடாகும்..சந்திரன் மனதுக்கு அதிபதி..உடலுக்கு அதிபதி என்பதால் இவர்கள் ம்னதும்,உடலும் தூய்மையானது..அழகானது..அன்பு நிறைந்தது..அழகிய கவர்ச்சியான உடல் அமைப்பு,கண்களையும்,வசியமான பேச்சையும் உடையவர்கள்..சந்திரன் லக்னத்துல பிறந்துட்டு காதல்,காமம்,ஆசை இல்லாமலா..? நிறைய இருக்கும்..மன்மத ராசா தான்...அல்லது தீர்க்கதரிசி..பெரும் லட்சியக்கனவு கொண்டவர்கள்,இந்த உலகிற்கு புதிய சரித்திர சாதனையை செய்ய பிறப்பெடுத்தவர்கள் எனலாம்...என்ன காரணம் எனில் இவரது லக்னம் பெரியது....நல்ல அறிவாற்றல்,புத்திக்கூர்மை நிறைந்தது...ஆக்கவும்,அழிக்கவும் இவர்களால் முடியும்..காம ஆசையால்,பணத்தாசையால்,சூதாட்டத்தால் பொருளை இழநதவர்கள் இந்த லக்னத்தார் மிக அதிகம்..அதே சம்யம் அருள் மட்டுமே வேண்டும்...புதிதாக எதையாவது சாதிக்க வேண்டும்..

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என கடுமையாக உழைத்த மாகன்களும் அநேகம்..இந்து மதத்தை பரப்ப தன் வாழ்நாள் முழுவதும் இந்தியா முழுக்க நடந்து,பல கோயில்களை சீர்திருத்திய ஆதிசங்கரர் பிறந்ததும் இந்த லக்னம் தான்...

யோகா,தியானம்,சித்த மருத்துவம்,சினிமா போன்ற கலைத்துறையில் சாதித்துக்கொண்டிருப்பவர்களிந்த லக்னத்தார் அதிகம்...விஜய்,அஜீத் ,சூர்யா போல வர வேண்டும் என இன்றும் கோடம்பாக்கம் வீதிகளில் சாப்பாடு கூட இல்லாமல் சுற்றும் பல இளைஞர்கள் இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் அநேகம்..காரணம் கடக லக்னம் என்பது பெரிய ஆசைகளை தன்னகத்தே கொண்டது...சினிமா ஆசை மட்டும் அல்ல.அம்பானி,டாட்டா,லட்சுமி மிட்டல் போல தானும் தொழில் அதிபர் ஆக வேண்டும் என துடிப்பவர்களும் அநேகம்..
கடக லக்னத்தில் பிறந்தவருக்கு வேறு பெண்கள் பேரில் நாட்டம் இருக்கும் என்று சொல்லலாம். தந்தை சொல்லுக்கு அதிகமாக மதிப்புக் கொடுக்க மாட்டார்கள். இதனால் இவர்களுக்கு சிறிது கெட்ட பெயர் உண்டாகலாம். தானதர்மம் செய்வதில் தாராள மனப்பான்மை இருக்கும். செல்வங்கள் இவர்களை வந்தடையும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.மனைவி இவர்களுக்கு எப்போதும் எதிரிதான்..அல்லது பிரிந்துவிடும்..காரணம் 7 ஆம் பாவம் சனி வீடாக வருகிறது...பெண்களால் சந்தேகம் அடைந்து இவர் மனைவி இவரை துன்புறுத்துவார்..அல்லது மனைவியால் இவருக்கு கெட்ட பெயர் உண்டாகலாம்...மனைவிக்கும் இவருக்கும் ஈகோ பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும்..
கடக லக்னத்தில் செவ்வாயும், குருவும் சுபர்கள். செவ்வாய் யோகக்காரர்கள். செவ்வாயும் குருவும் சேர்ந்திருந்தால் நல்ல யோகத்தை கொடுத்து வாழ்க்கையை உயர்த்துவார்கள். சூரியன், புதன், சுக்கிரன் மூவரும் பாவிகள். சனி, சுக்கிரன், புதன் மாராகதிபதிகள். இவர்கள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகத்திற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள்.


திங்கள், 10 செப்டம்பர், 2012

ஜோதிடம்;சிம்மம்,கன்னி,துலாம் லக்கினத்தில் பிறந்தவர் பலன்


ஜோதிடம்;சிம்மம்,கன்னி,துலாம் லக்கினத்தில் பிறந்தவர் ராசி பலன்;



சிம்ம லக்னம்
சிம்ம லக்னத்திற்கு பிறந்தவர்களைக் கண்டு பிறர் கொஞ்சம் தயங்கிப்பேசவும் மரியாதை கொடுக்கவும் வேண்டியிருக்கும். பலருக்கு கம்பீரமான தோற்றமும் இருக்கும். திடபுத்தியுள்ளவராகவும் இருப்பார்கள். ஆனால் முன்கோபியாகவும் இருப்பர்.
சிம்ம லக்னத்திற்கு செவ்வாயும், சூரியனும் சுபர்கள் சுக்கிரனும் புதனும் பாவிகள். செவ்வாயுடன் சுக்கிரன் கூடியிருந்தால் கெட்ட பலன்களையே கொடுப்பார்கள். சுக்கிரன் சனி, புதன் இவர்கள் மாரகாதிபதிகள். மாரக ஸ்தானத்தில் இவர்கள் இருந்தால் மாரகத்திற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள்.
சிம்ம லக்னம் என்ற பெயருக்கேற்ப மற்றவர்களுக்கு பல சமயங்களில் சிம்ம ஸ்வரூபமாகவே இருப்பார்கள்.

இவர்கள் வாழ்வின் பிறபகுதியில் நற்பலனும்,யோகபலனும் பெறுவார்கள்..அரசு அதிகாரிகள்,நகை,வண்டி வாகன தொழில் செய்பவர்கள்,அரசியல்வாதிகள் பலர் இந்த லக்னத்தில் பிறந்தவர்களாகவே இருக்கின்றனர்...

5,10,27,30 இந்த வயதுகளில் கண்டம் உண்டாகி விலகும்..

லக்கினத்தை சுபர்கள் பார்த்து லக்னாதிபதி,அஷ்டமாதிபதி,ஆயுள்காரகன் வலுத்திருந்தால் பூரண ஆயுள் உண்டாகும்..

கோபம்,பிடிவாதம்,இவரது பலவீனம்..தன்னிடம் பழகுபவர்கள் நேர்மையாக,உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பார்..

கன்னி லக்னம்
கன்னியா லக்னமல்லவா? சற்று அடக்கமாகவே இருப்பார்கள். எதிலும் திறமைசாலியாக விளங்குவார்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றலும் விவேகமும் இருக்கும். நல்ல நடத்தையுள்ளவர்களாகவும் விளங்குவார்கள்.
கன்யா லக்னத்திற்கு சந்திரனும், சனியும் சுபர்கள். செவ்வாய், குரு, பாவிகள் புதனும், சுக்கிரனும் யோகக்காரர்கள். புதனும், சுக்கிரனம் கூடி வலிமை பெற்றிருந்தால் நல்ல யோகத்தைக் கொடுப்பார்கள். சந்திரன், செவ்வாய், குரு இவர்கள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகத்திற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள்.
இவர்கள் திறமைசாலிகள் என்று பெயர் எடுத்து புகழுடன் விளங்குவார்கள்.

இவர்கள் மிக எளிதில் பணக்காரர் ஆகிவிடுவார்..நிறைய நட்பு வட்டமும்,நிறைய யோசனைகளும்,சாதூர்யமும் நிறைந்தவர் ஆச்சே..

பத்திரிக்கையாளர்கள்,மருத்துவர்கள்,ஆசிரியர்கள்,வழக்கறிஞர்கள் நிரைய பேர் இந்த லக்னத்தை சார்ந்தவர்கள்..

புதன்,சுக்கிரன் நன்றாக இவர்கள் ஜாதகத்தில் அமைந்திருந்தால் வாழ்நாள் முழுக்க யோகம்தான்..

லக்னத்தை சுபர்கள் பார்த்தால் ஆயுள் காரர்கள் சிறப்பாக இருந்தால் 77 வயது வரை ஆயுள் பலம் உண்டு..

துலாம் லக்னம்
துலாம் என்றால் தராசு ஆயிற்றே! தராசு பிhக்கும் தொழில் ஏற்படும். தராசு போல் பேசுவார்கள். வியாபாரத்தில் சாமர்த்தியம் புத்திசாலித்தனம், செல்வம் சேர்ப்பதில் கவனம், எதிலும் முன்ஜாக்கிரதை இருக்கும். செல்வங்கள் சேரும். வாழ்க்கையில் சுகங்கள் அனுபவிக்கவும். வாய்ப்புண்டு. ஆயுள் நீண்டது என்றே கூறவேண்டும்.

துலா லக்னத்திற்கு புதன், சுக்கிரன், சனி மூவரும் சுபர்கள். சூரியன், செவ்வாய், குரு பாவிகள், சந்திரனும், புதனும், யோகக்காரர்கள். சந்திரனும், புதனும் கூடியிருந்தால் பிரபலமான யோகத்தைக் கொடுப்பார்கள். சூரியன், குரு மாரகாதிபர்கள். அங்காரகன் தோஷம் உடையவன்.

துலாம் லக்னத்தார் பெண்கள் விசயத்தில் கொஞ்சம் பலவீனம் என்றே சொல்லலாம்..பெண்களாக இருப்பின் ஆண்களால் பல பிரச்சினைகளை சந்திப்பர்..காரணம் இவர்கள் அழகானவர்கள்..அழகாக பேசுவார்கள்..பெரும் செலவுகள் தங்களை அலங்கரித்துக்கொள்வதற்காகவே இருக்கும்..சுற்றுலா,ஆடம்பரத்தில் அதிக விருப்பம் கொண்டவர்கள்...இரண்டாம் அதிபதி செவ்வாய் என்பதால் கோபம் வந்தால் எதிரிகளை ப்ளாக் செய்துவிடுவார்கள் அவர்களுடன் பழகுவதை முற்றிலும் தவிர்த்துவிடுவார்கள்..தராசு சின்னமே இவர்கள் ஒருவரை பார்த்தவுடன் எளிதில் எடைபோடக்கூடியவர்கள் என்பதால்தான்..நுணுக்கமான அறிவு நிறைந்தவர்கள்....உணவு சுவையாக அன்பாக பரிமாற வேண்டும் என்பதில் முக்கியத்துவம் காட்டுவார்கள்..ரசனை அதிகம் நிறைந்தவர்கள்..இப்படி இருந்தா நல்லாருக்கும் என அழகாக எடுத்து சொல்வார்கள்..

இவர்களில் பெரும்பாலானவர்கள் வியாபாரிகளாகவும்,சட்ட நுணுக்கம் தெரிந்த வழக்கறிஞர்களாகவும் இருக்கிறார்கள்..நடிகர்களாகவும் கலைத்துறையில் சாதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்...

வியாழன், 6 செப்டம்பர், 2012

மேசம்,ரிசபம்,மிதுனம் லக்னத்தில் பிறந்தவர் பலன்கள்


மேசம்,ரிசபம்,மிதுனம் லக்னத்தில் பிறந்தவர் பலன்கள்;ஜோதிடம்


மேஷ லக்னம்
மேஷ லகனத்தில் பிறந்தவர் கம்பீரமான தோற்றம் உடையவர்..செல்வங்களைச் சேர்ப்பதில் கருத்துள்ளவராக இருப்பார். அறிவும் அழகும் பொருந்தியபிறகும், பிறரிடம் பழகுவதில் சௌஜன்யமாக இருப்பார். பலர் விரும்பும் வண்ணம் நடந்துகொள்வார்..முன்கோபம்,பிடிவாதமும் அதிகம் கணப்படும்..முகத்திலும்,தலையிலும் தழும்பு இருக்கலாம்..ஆணித்தரமான பேச்சு இருக்கும்..45 வயதுக்கு மேல் எதிர்பாராத பண வசதி உண்டாகும்..உடன்பிறந்தோரால் சகாயம் இல்லைகடுமையாக உழைக்ககூடியவர்கள்...சக்திக்கு மீறிய காரியங்களில் ஈடுபட்டு பிரச்சினைகளில் சிக்கி கொள்வார்...வாழ்க்கை துணை விசயத்தில் ஏமாற்றம் உண்டாகும்..அல்லது வாழ்க்கை துணை உடல்நலக்கோளாறுகளால் அவதிபடுவார்..பவள மோதிரம் அணியலாம்பிறரை அளவுக்கு மீறி நம்புவது கூடாது..பிடிவாதத்தை தளர்த்திக்கொள்ளவும் பிறர் சொல்வதையும் கேளுங்கள்..
மேஷ லக்னத்தில் சுபர்கள் இருக்க அல்லது சுபர்களால் பார்க்க பூர்ண ஆயுள் இருப்பார் என்று சொல்லலாம். இவர்களுக்கு சூரியன், குரு சுபர்கள், குருவோடு சனி சம்பந்தப்பட்டால் குரு எப்போதும் தன் பலனையே கொடுத்து வருவார். சூரியனும் குருவும் யோக்காரர்கள். இருவரும் ஒன்று கூடினால் நல்ல பலன்களையே கொடுத்து வருவார்கள். புதன், சுக்கிரன், சனி, இம்மூவரும் இவர்களுக்கு பாவிகள். புதன் மூலம் மாரகம் (மரணம்) இல்லை. சனி, சுக்ரன் மூலம் மாரகம் ஏற்படும்.லக்னத்தில் சனி நின்று நீசம் அடைந்தால் போராட்டமான வாழ்க்கையாக இருக்கும்...

ரிஷப லக்னம்
ரிஷப லக்னத்தில் பிறந்தவர். செல்வச் சீமானாக வாழும் அமைப்பு இருக்கிறது. நல்லவளும், அழகுள்ளவளுமான மனைவியை அடைந்து சந்தோஷ வாழ்க்கை அனுபவிப்பார். எப்போதும் கூடுமானவரையில் மன நிம்மதியுடனேயே வாழ்வார். கணக்கில் வல்லவராக இருப்பார். ரிஷப லக்னத்திற்கு சூரியனும், சனியும் நல்லவர்கள். லக்னத்தில் இந்த சுபர்கள் இருந்தாலும் பார்த்தாலும் ஆயுள் 75 என்று சொல்லலாம். குரு, சந்திரன், சுக்ரன் பாவிகள், சனி ஒருவரே இவர்களக்கு ராஜயோகம் கொடுப்பார்.சனி திசை நல்ல யோகத்தை முன்னேற்றத்தை தரும்..நல்ல நினைவாற்றல் உடையவர்..சந்திரன் லக்னத்தில் அமைந்தால் மிக நல்லது...பிறரை பேசி மயக்குவதில் வல்லவர்..குடும்ப பொறுப்பை சுமக்கும் சூழல் சிறு வயதில் இருந்தே உண்டகிவிடும்..தாரளமாக செலவு செய்து அடிக்கடி பணச்சிக்கலை உண்டாக்கி கொள்வர்..சிற்றின்ப ஆசை அதிகமாகவே இருக்கும்..பெண்களாக இருந்தால் கண்ணழகும்,உடல் அழகும் பிறரை மயக்கும்படி அமைந்திருக்கும்..எதிர்பார்ப்பு அதிகம் என்பதால் திருமண வாழ்க்கை ஏதாவது மனக்கவலை ஏற்பட்டவணமோ அல்லது ஏமாற்றம் தரும்படியாகவோ அமைந்துவிடும்...
செவ்வாய், புதன் மாரகர்கள், இவர்களுடன் பலன் பொருந்திய கிரஹங்கள் சேர்ந்திருந்தால் இவர்கள் மூலம் மாரகம் இல்லை.வெள்ளை நிறம் யோகம் தரும்..மரகத பச்சை நவரத்னம் அணியலாம்..மதுரை மீனாட்சியை வழிபடலாம்.,...

மிதுன லக்னம்
மிதுன லக்னத்தில் பிறந்தவர் எப்போதும் புன்சிரிப்பு தவழும் முகத்துடன் இருப்பார். எல்லோரிடமும் இனிய வசனங்களே பேசுவார். மங்கையர்களை அதிகமாக விரும்புவார். அவர்கள் மூலம் அடையும் இன்பத்தை பெரிதும் விரும்புவர். இவருக்கு கற்பனா சக்தியும், கணிதத்தில் வல்லமையும் உண்டு. பெண்கள் இவரைப் பார்த்து ரசிக்கும் தன்மையுடன் இருப்பார்.
மிதுன லக்னத்திற்கு குரு, செவ்வாய். சூரியன் மூவரும் கெட்டவர்கள். குருவுடன் சனி சேர்ந்தர்ல் யோககாரனாவான். சந்திரன் தோஷமுடையவன். எனினும் இவன் மாரகனாக மாட்டான். குரு, செவ்வாய், சூரியன் மாரக ஸ்தானத்திலிருந்தால் மாரகத்திற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள். ஏதற்கும் இவர்களுடைய வலுவை அறிந்து எதையும் சொல்ல வேண்டும்.எப்போதும் ஏதேனும் ஒரு சிந்தனை..விரைவாக பணக்காரன் ஆக என்ன வழி என சிந்தித்துக் கொண்டிருப்பார்..

எதையும் ஆரய்ந்து கண்டுபிடிக்க முயல்வார் யாரையும் நம்ப மாட்டார்...நம்பினால் ஏமாற்றம் அடைந்தும் விடுவார்...நகைச்சுவையாக பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்..குடும்பத்திற்காக அயராது உழைப்பர்..தன்னை மரியாதை குறைவாக நடத்தினால் பொறுத்துக்கொள்ள மாட்டார்...33 வயதுக்கு மேல் நல்ல முன்னேற்றம் என செட்டில் ஆகிவிடுவார்..துனைவரோடு போராட்டம் இருக்கும்..

வெள்ளை ,பச்சை,க்ரே அதிர்ஷ்டம் தரும்..மரகத பச்சை நல்லது..திருப்பதி பெருமாளை வருடம் தோறும் சென்று வணங்கி வருதல் நல்லது..அம்மாவை பாதுகாத்து அவருடன் இணக்கமாக இருந்தால் பண வரவு எப்போதும் இருக்கும்...பங்கு சந்தையில் கவனம் தேவை..வெகு விரைவில் செல்வந்தராக இவர் எடுக்கும் முயற்சிகள் பெரும் நஷ்டத்தை உண்டு பண்ணும்..அதிர்ஷ்ட எண் 5

புதன், 5 செப்டம்பர், 2012

ஆனந்த விகடனுக்கு நன்றி

ஆனந்த விகடன் வலையோசை பகுதியில் நமது நல்ல நேரம் ப்ளாக் இடம் பெற்றிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..ஆனந்த விகடனுக்கு பரிந்துரைத்த நம் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி...


வலையோசை பகுதி விகடனில் வரும்போதெல்லாம் ஜோதிடம் நாம் எழுதுவதால் இதில் இடம்பெறாது என நினைத்தேன்..இருப்பினும் விகடனில்  எனது ஜோதிட கட்டுரையான விஜயகாந்த் ஜாதக பலன்கள் இடம் பெற்றிருக்கிறது..இது வலையோசை பகுதியில் ஜோதிட கட்டுரை முதல்முறை....பதிவர்கள் பயனுள்ள கட்டுரையான அதிக ஹிட்ஸ் வாங்குவது எப்படி என்ற கட்டுரையும்,கருணாநிதியை கோபபட வைத்த பேஸ்புக் கமெண்ட்ஸ் என்ற கட்டுரையும் இடம்பெற்றிருக்கிறது!!சந்தோசமா இருக்கு!!

http://en.vikatan.com/article.php?aid=23306&sid=645&mid=32


செவ்வாய், 4 செப்டம்பர், 2012

நாக தோசம்,சர்ப்ப தோசம் தரும் ராகு கேது உங்க ஜாதகத்துல எப்படி.?ராசிபலன்


ராகு கேது இருவரும் சாயா கிரஹங்கள். இருவரைப் பற்றியும் பொதுவாகவே சொல்லவேண்டும் அதாவது:

ஒருவர் பிறக்கும்போது லக்னத்தில் ராகு கேது இவர்களில் யார் இருந்தாலும் ஜாதகர் புத்திரபாக்கியம் உண்டு. ஆயுள் விருத்தியில்லாதவர். செல்வந்தன். ஆனாலும், ஏதேனும் வியாதியால் கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பார்.
இரண்டாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் எப்போதும் ஏதோ ஒன்றைப் பற்றிக் கவலைப் பட்டுக்கொண்டேயிருப்பார். அற்ப வித்தையுள்ளவர். நடுத்தரவயதிற்கு மேல் பாக்கியவான் என்று சொல்லக்கூடிய நிலையை அடைபவர். தயை கருணை என்பது இல்லாத கடின சித்தம் உள்ளவர். சோம்பல் என்பது உடன் பிறந்தது போல் உறவாகும். இரு விவாக ப்ராப்தியுள்ளவர்.
மூன்றாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் புகழ்மிக்கவர். திடீர் கோபத்திற்கு ஆளாவார். தைரியசாலி. அகால போஜனமுள்ளவர். லஷ்மியின் அருள்பெறும் பாக்கியமும் உண்டு என்று சொல்லவேண்டும்.
நான்காவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் தயவு தாஷண்யம் உள்ளவர். முன் சகோதரிகள் உள்ளவர். அற்ப புத்தியுள்ளவர். துன்மார்க்கர் என்று பெயர் எடுக்கும் சூழ்நிலையும் ஏற்படும்.
ஐந்தாம் இடத்தில் ராகு இருந்தால் முன்னோர் வழி சாபம்..புத்திர தோசம் என சொல்லப்படுகிறது..பூர்வபுண்ணியம் பாதிக்கப்படுகிறது..காரிய தடைகள் அதிகம் உண்டாகிறது..5 ஆம் அதிபதியும்,சுக்கிரனும்,குருவும் கெட்டால் குழந்தை இல்லை...அல்லது தாமதமாக பிறக்கும்..

ஆறாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் ஸ்திர பாக்கியம் அதிகம் உள்ளவர். ஸ்திரீகள் மகிழும் வண்ணம் நடந்துகொள்பவர். சில ஸ்திரீகளின் பகைமையும் சம்பாதித்துக் கொள்ளவேண்டியதாகவும் ஏற்படும்.
ஏழாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் நீர் ரோகத்தால் கஷ்டப்பட வேண்டியதாக ஏற்படும். வித்துவான் இரண்டு மனைவியர் உண்டு.
எட்டாவது இடத்தில் இருக்கும் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் அதிகம் குறிப்பாக சொல்லவே;ணடியதில்லை. மற்ற கிரகங்களின் பார்வை, சேர்க்கை இவைகளைக் கொண்டு பலன் சொல்லலாம்.
ஒன்பதாம் இடத்தில் ராகு இருந்தால் தந்தை முரண்பாடானவர்..தந்தைக்கும்,ஜாதகருக்கும் ஆகாது..பங்காளி சண்டை இருக்கும்..குலதெய்வ வழிபாடு நின்று போகும்..பாக்யங்களை கெடுக்கிறது..நல்ல வீடு,மனைவி,குழந்தைகள் விசயத்தில் சில மன சஞ்சலங்களை உண்டாக்கும்..

பத்தாம் இடத்தில் ராகு இருந்தால் கேது இருந்தால் பணம் பறந்துவரும் என்பார்கள்..தொழில் ஸ்தானத்தில் ஒரு அசுபராவது இருப்பது தொழிலுக்கு பிரச்சினை இல்லை எனலாம்..

பதினொன்றாம் இடத்தில் இருக்கும் ராகு லாபத்தையே கொடுப்பார்..நல்லது...பணம் பல வழிகளிலும் வந்து சேரும்..குறுக்கு வழியில் கூட சம்பாதித்து விடுவார்...

12 ஆம் இடத்தில் ராகு மறைவது கேது மறைவது நல்லதுதான்...12ல் கேது மறுபிறப்பு இல்லை என்பார்கள்..எல்லா கஷ்டத்தையும் கொடுத்துவிடுவாரா..என்றால் அப்படி இல்லை..பிறபகுதியில் ஆன்மீக யாத்திரை,கோயில் கட்டுதல் போன்ற புண்ணிய பலன்களை சேர்ப்பார்..

கிரக நாயகர்கள் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலனைக் கொடுப்பார்கள் என்பது பொதுவாக சொல்லக்கூடியதே தவிர இதை வைத்து பலனைக் கனிக்கக்கூடாது. மற்ற கிரகங்களின் பார்வை, சேர்ககை, தசைகள், புத்திகள் இவைகளின் பலன்களையும் கவனிக்கவேண்டும்.