புதன், 3 ஏப்ரல், 2013

சந்தனம்,விபூதி,குங்குமம் நெற்றியில் பூசிக்கொள்வது ஏன்..?

நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். வாகனங்க ளின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய கடமை.

தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள், குங்குமத்தை ஒதுக்கி வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் ஸ்டிக்கர் பொட்டையே நம்பியிருக்கிறார்கள். ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கெடுதியே செய்யும். அதில் தடவியிருக்கும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்தும். மற்றும் சூரிய ஒளி நெற்றிப் பொட்டில் விழுவதைத் தடுத்துவிடும். கண் மற்றும் புருவங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு ஆபத்தானது.

திங்கள், 18 மார்ச், 2013

குருப்பெயர்ச்சி ராசிபலன் 2013 -2014

குருப்பெயர்ச்சி ராசிபலன் 2013 2014;

குரு சுபர்களில் மிக முக்கியமானவர்..குரு பார்க்க கோடி நன்மை...குரு என்றால் இருளை நீக்குபவர் என்று பொருள்..மெய்யுணர்வுக்கும்,ஆத்ம சிந்தனைக்கும் உரியவர்..முழுமையான உடல்,மன ரீதியான வளர்ச்சி அளிப்பவர்..வழிகாட்டி,மூலைக்கு அதிபதி,தன்னறிவு ,விவேகத்துக்கும்,வித்தைக்கும்,விழிப்புணர்ச்சிக்கும் உரியவர்...

மனித உணர்ச்சிகளையும்,எண்ணங்களையும் ஒழுங்குபடுத்தி சீராக இயங்கச் செய்பவர் குருபகவான் ஆவார்..ஒன்றில் வெற்றி பெறுவதற்கும் இவர் தயவு தேவை.எதிர்காலத்தைப் பற்றி கவலையை போக்குவார்..

 குரு ராசிக்கு 2,,7,9,11 ல் வரும்போது நல்ல வருமானமும்,புகழும்,செல்வாக்கும்,சுபகாரியங்களும்,எண்ணிய காரியங்கள் தடையின்றி நடப்பதும் உண்டாகும்..மாங்கல்ய பலம் உண்டாகி திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் தடையின்றி நடந்துமுடிவதும் குருபலத்தில்தான்..

சபரி சுத்த திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் இந்த வருட குருப்பெயர்ச்சி 30.5.2013 விஜய வருடம் வைகாசி 16 ஆம் நாள் மதியம் 3.55க்கு ரிசபம் ராசியில் இருந்து மிதுனம் ராசிக்கு மாறுகிறார்...வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 28.5.2013 இரவு 9 மணியளவில்  பெயர்ச்சியாகிறார் அதாவது கோயில் வழிபாடுகள் இந்த தேதியில்தான் நடக்கும்...

 மிதுன ராசிக்கு வரும் குரு 5,7,9 ஆம் பார்வையாக துலாம்,தனுசு,கும்பத்தை பார்க்கிறார்...இது அவரவர் ராசிக்கு எந்த இடம் என்பதை பொறுத்து அந்த ஸ்தானங்கள் பலம் பெறும்...

 இதனால் எந்தெந்த ராசியினருக்கு நன்மையான பலன்கள் என பார்ப்போம்..


 மேசம் ராசிக்கு 3ல் குரு வருகிறார்..
ரிசபம் ராசிக்கு குருபலம் உண்டாகிறது
மிதுனம் ராசிக்கு ஜென்மத்தில் குரு வருகிறார்
கடகம் ராசிக்கு விரயத்தில் குரு வருகிறார்
சிம்மம் ராசிக்கு லாபத்தில் குரு வருகிறார்
கன்னி ராசிக்கு பத்தில் குரு வருகிறார்
துலாம் ராசிக்கு பாக்யத்தில் குரு வருகிறார்
விருச்சிக ராசிக்கு அஷ்டமத்தில் குரு வருகிறார் 
தனுசு ராசிக்கு களத்திரத்தில் குரு வருகிறார்
மகரம் ராசிக்கு ருணரோகத்தில் குரு வருகிறார்
 கும்பம் ராசிக்கு பூர்வபுன்ணியத்தில் குரு வருகிறார்
மீனம் ராசிக்கு சுகஸ்தானத்தில் குரு வருகிறார்

இதன் பலன்கள் என்ன என்பதை ஒவ்வொரு ராசிக்கும் தினசரி எழுதுகிறேன்...
   .


வெள்ளி, 1 மார்ச், 2013

செய்வினைதோஷம் அகல, கெட்டசக்தி நீங்க;ஜோதிடம்

செய்வினைதோஷம் அகல, கெட்டசக்தி நீங்க:
    
பொதுவாக ஒரு ஜாதகத்தில் 6க்குடையவன் திசையில் எட்டுக்குடையவன் புக்தி நடக்கும் போதும், அஷ்டமாதிபதி திசையில், ருணரோகஸ்தானாதிபதி புக்தி நடந்தாலும், தனக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாக புலம்புவர். பலகோயில்களுக்கும் சென்று வருவார். பலமந்திரவாதிகளையும் சென்று பார்ப்பார். அதிக மனக்குழப்பமும், பயமும், எதிரிகளை கண்டு அஞ்சி குடும்பமே கதறம்படி செய்துவிடுவார். இவர்களுக்கு மரகதபச்சையை அணிவிப்பது நல்லது. அறிவுக்கு அதிபதி புதன். இதனால் இவருக்கு மனதெளிவு உண்டாகும். தொழிலில் கவனம் செலுத்துவார்.
    
மற்ற ரத்தினங்களைவிட மரகதம் அழகும் சிறப்பும் மிக்கது. இதனாலேயே தெய்வ விக்கிரகங்களும், லிங்கங்களும் மரகதத்தால் அதிகம் செய்யப்படுகின்றன. தஞ்சை மாவட்டத்தில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் ஒரு மரகதலிங்கம் உள்ளது. இங்கு சென்று இந்தலிங்கத்தை கண்குளிர தரிசித்தால் பல நோய்கள் தீருகின்றன என்பது அனுபவஸ்தர்கள் கருத்து.
    நாகப்பட்டினம், திருக்குவளை, திருக்காதவாயல், திரவாயமூர், திருவாரூர், திருமறைக்காடு ஆகிய ஸத்தலங்களிலும் மரகதலிங்கம் உள்ளது.
    கன்னியாகுமரி அம்மனுக்கு மரகதபச்சை மூக்குத்தி சிறந்த அணிகலனாக பிரகாசித்து வருகிறது.
    திருப்பதி வெங்கடாஜலபதி உற்சவர் மார்பிலும், மரகதப்பச்சை மின்னுவதை காணலாம்.
    மரகதப்பச்சை வசிய சக்தி, வெகுஜனசக்தி உடையது. இதனால் வியாபாரிகள் இதனை அணிந்து கொண்டால், வியாபாரம் பெருகும். இவை கொலம்பியா நாட்டில் அதிகளவில் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் காங்கேயம், பரமத்தி வேலூரிலும், இடைப்பாடியிலும் மத்திய தர மரகத பச்சைகள் கிடைக்கின்றன. ஜெய்ப்பூரில் செயற்கை மரகதப்பச்சைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரில் பட்டை தீட்டப்படுகின்றன. செயற்கை வைரம் எனப்படும் ஏடி (அமெரிக்கன் டைமண்ட்) அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
    புதன் கிரகத்தின் தோஷ    ங்களை போக்கக் கூடிய பரிகாரஸ்தலமாக ஜோதிட நூல்கள் கூறும், மதுரை மீனாட்சி அம்மன் திருஉருவசிலை மரகதபச்சையால் ஆனதுதான்.
    அறிவு சிறக்க மதுரை மிக சிறப்பு. ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், புதன்திசை நடப்பவர்களும், 5,14,23 தேதிகளில் பிறந்தோரும் மரகதப்பச்சை மோதிரம் அணியலாம்.மிதுன லக்னம்,கன்னி லக்னத்தாருக்கு புதன் லக்னாதிபதியாகவும் யோகாதிபதியாகவும் வருவதால் அவர்கள் அவசியம் அணிய வேண்டியது.

 இதை ஐம்பொன்னில் மோதிரமாக செய்து அதில் பச்சைக்கல் பதித்து பூஜித்து கொடுத்து வருகிறோம்..எப்படி அணிவது எப்படி பயன்படுத்துவது என்று சில முக்கியமான குறிப்புகளையும் தருகிறோம் வாங்க விருப்பம் இருப்பவர்கள் என் மெயிலுக்கு உங்க பிறந்த தேதி,பிறந்த நேரத்துடன் எழுதவும் sathishastro77@gmail.com

செய்வினை அகல கோயில் வழிபாடு;

பெரம்பலூர் அருகில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் வெள்ளி,திங்கள் கிழமை திறந்திருக்கும் அமாவாசை பெளர்ணமி அன்றும் திறந்திருக்கும் விக்கிரமாதித்யன் காலத்து கோயில் ஆகும் 2000 வருடம் பழமையானது...கெட்ட சக்திகளை அழிக்கும் சக்தி கொண்டது...இங்கு சென்று எலுமிச்சையில் தீபம் ஏற்றி 108 எலுமிச்சை மாலை சார்த்தி அம்பாளை வணங்கலாம்..

கிருத்திகை நட்சத்திரம் வரும் நாளில் செவ்வாயும் கிருத்திகையும் வரும் நாளில் பழனி அல்லது சென்னிமலை அல்லது திருச்செந்தூர் சென்று வணக்கலாம்...சூரனை அழித்த இடம் என்பதால் திருச்செந்தூர் கெட்ட சக்திகளை அழிக்கும் ஒப்பற்ற கடவுளாக முருகன் திகழ்கிறார்

மாந்த்ரீகம்;

மாந்த்ரீக வழியில் சென்றுதான் செய்வினை தோசம் பலர் எடுக்கிறார்கள் யார் செய்வினை இருக்குன்னு சொல்றாரோ அவரேதான் வந்து எடுத்தும் தருகிறார் பல இடங்களில் ஏமாற்றும் நடக்கிறது...சேலம் மாவட்டம்,வேலூர் மாவட்டம்,தர்மபுரி,கரூர் பகுஹிகளில் செய்வினை தோசம் எடுப்பவர்கள் உள்ளனர் சிலரை நான் நேரில் பார்த்திருக்கிறேன்...

என் இரு வாடிக்கையாளர்கள் வற்புறுத்தி கேட்டதால் மாந்த்ரீகர் ஒருவரை என் நண்பர் மூலம் தொடர்புகொண்டேன்..செய்வினை வைக்கப்பட்டவர் வீட்டிற்கு வந்து அவர் கண் முன்பே குழி தோண்டி அதில் இருந்து நிறைய தகடுகள் ,முடி,எலும்பு என எடுத்தார் ஒரு செப்பு குடமும் இருந்தது எங்களுடன் வரும்போது அந்த மாந்த்ரீகர் வெறும் கையுடன் தான் வந்தார் செப்பு குடம் அதில் கரித்துண்டுகள்,ஆணி,குடும்பத்தார் அழியனும்னு எழுதப்பட்ட செப்பு தகடு இதெல்லாம் அந்த குடத்தில் இருந்தது இதெல்லாம் அவர் கொண்டு வந்திருக்க சான்ஸ் இல்லை..ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை..அதுவரை அக்குடும்பத்தில் இருந்து வந்த     துர்மரணங்கள்,விபத்துகள்,மருத்துவ செலவுகள்,பெண்களுக்கு கெட்ட பெயர்,ஆண்களுக்கு வருமானம் இல்லாத நிலை எல்லாம் மாறியது...இப்போ அவங்க நல்லா இருக்காங்க..நான் இதை ஆதரிக்கவில்லை என் அனுபவத்தை சொல்றேன்..நம்புவது உங்க அனுபவத்தை பொறுத்து...!!

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

கடன் தொல்லை பணம் தங்காத பிரச்சினைக்கு ஜோதிட தீர்வு

எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க முடியவில்லை. பணம் தங்குவதில்லை. உடனே செலவாகிவிடுகிறது. வருமானத்திற்கும் அதிகமாக செலவினங்கள் கூடிக்கொண்டே போகிறது என்பவர்களும், தொழிலில் வேகமான முன்னேற்றம் அடையவும், புஷ்பராகம் மற்றும் கோமேதகம் இவற்றில் எந்த கல் உங்கள் ஜாதகப்படி பொருந்துகிறதோ அந்த கல்லை வெள்ளி மோதிரத்தில் அணியலாம். 

வெள்ளி சுக்ரனின் உலோகம். வெள்ளி, ரத்னத்தின் சக்தியை வேகமாக நம் மூளை நரம்புகளுக்கு கடத்தகூடியது. ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாமிடமாகிய தனஸ்தானாதிபதி 6,8, 12ல் மறைந்தாலும், இரண்டாம் இடத்தில் பாவகிரகங்கள் அமர்ந்தாலும் பணம் எவ்வளவு வந்தாலும் தங்கவில்லை. மேற்கொண்டு கடனும் ஏற்படுகிறது. வட்டி கட்டியே போராட்டம் நடத்தும் வாழ்க்கை அமைந்துவிடுகிறது. வசியமான பேச்சும் இல்லை. இவர்களுடைய பேச்சே இவர்களுக்கு பகையாகி விடுகிறது. சவால் விட்டு பேசுவார்கள். எதெற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்வார்கள். பணம் வந்துவிட்டால் கண்டபடி அள்ளி இறைப்பார்கள்.
    
பிறந்ததேதி 4,13, 22, 31 உடையவர்களும், பிறந்ததேதி கூட்டு எண் 4 உடையவர்களுக்கும் 13, 22,31 போன்ற எண்களில் பெயர் அமைந்தார்களுக்கும் 29, 30, 26, 30 பிறந்த தேதி கூட்டு எண் உடையவர்களுக்கும் இது பொருந்தும்.
    ஜாமீன் கையெழுத்து நண்பர்களுக்கு போட்டு மாட்டிக் கொள்பவர்கள், பிறர் கடனுக்கு பொறுப்பேற்று, விழிபிதுங்குபவர்களும் இவர்களே.
    
குடும்பத்திலும் பலவித பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். இவர்கள் கோமேதகம் அணியலாம். இது அனுபவத்தில் நல்ல பலன் தருகிறது..ஜாதககப்படி யார் தனாதிபதியோ அவர்களுக்கு தகுந்தார்போல வழிபாடு செய்தால் பிரச்சினையின் தீவிரம் குறையும்..கோமேதகம் மோதிரம் ஐம்பொன்னிலும் அணியலாம்..இது ஐந்து விதமான உலோகங்களால் செய்யப்பட்ட மோதிரம் இதை எனது நண்பர் ஒருவர் செய்து தருகிறார்..என் வாடிக்கையாளர்கள் பலருக்கு இட்ய்ஹன் படி செய்து கொடுத்துள்ளேன்..இது பெரும்பாலும் கறுப்பதில்லை..தங்கம் போலவே இருக்கிறது..

மோதிரம் தேவைப்படுபவர்கள்,உங்கள் பிறந்த தேதி பிறந்த நேரம் குறிப்புகளுடன் மெயில் செய்யுங்கள் sathishastro77 @gmail.com

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

ஜோதிடம்;சனி வக்ரம் எந்த ராசிக்கு அதிக யோகம்..? ராசிபலன் 2013

ஜோதிடம் ;சனி வக்ர ராசிபலன் 2013

.மகிமழீஸ்வரன் சமேத.மங்களாம்பிகை அருளால் நண்பர்கள் அனைவரும் செல்வ செழிப்பை அடைய பூரண ஆரோக்கியம் பெற இறையருளை வேண்டுகிறேன்....!!

மாசிமாத கிரகநிலைகள்;

16 ஆம் தேதி இரவு முதல் சனி வக்ர நிலை அடைந்து இருக்கிறார்...22 ஆம் தேதி முதல் கும்பத்திற்கு சுக்கிரன் செல்கிறார்..மார்ச் மாதம் 2 ஆம் தேதி முதல் சனி செவ்வாய் பார்வை உண்டாகிறது இதனால் நாட்டில் கலவரம்,குழப்பம்,போர் உண்டாகும் சூழல்,விபத்துக்கள் அதிகரிப்பு,பெரிய தீவிபத்துகள் அதிகரிப்பு உண்டாகும் சிவகாசி வெடி விபத்து மற்றும் ரயில்,பஸ் எரிந்தவை எல்லாம் செவ்வாய், சனி பார்வை காலங்கள் தான்... ஜாதகத்தில் செவ்வாய் சனி பார்வை உடையவர்களுக்கும் இக்காலம் அதிக சோதனைகளை உண்டாக்கும் கூட்டு மரணம் உண்டாகும் காலம் என்பதால் நெடுந்தொலைவு செல்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்....

சனி வக்ரத்தால் அதிக நற்பலன் பெறுபவர்கள் மீனம் ,கன்னி,மேசம்,கடகம்,விருச்சிகம் ராசிக்காரர்கள் தான் இவர்கள் தான் சனி தாக்கத்தால் அதிக பாதிப்பை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்...சனி பின்னோக்கி நகரும்போது ஏழரை சனி அஷ்டம சனி தாக்கம் குறைந்து நற்பலன் உண்டாகும்...

மேசம் ராசியினருக்கு ஜென்மத்தில் கேது இருப்பது மன உளைச்சலை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்  ..உங்கள் ராசிக்கு கெட்டவராகிய சனி வக்ரம் பெறுவது நற்பலன் தரும் ...

கடகம் ராசியினருக்கும் கண்டக சனி பாதகத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறது இவர்களுக்கும் சற்று நிம்மதியை தரும் ஜூன் மாத குரு பெயர்ச்சி இன்னும் அதிக நற்பலனையும் தரும்...

கன்னி ராசியினருக்கு இன்னும் இரண்டரை ஆண்டு ஏழரை சனி சோதனை கொடுத்தாலும் பலருக்கு புதிய சொத்துக்கள் அமைந்து இருக்கிறது திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்தி வைத்திருக்கிறார் சனி பகவான்...தொழில் நிரந்தரமாக அமைந்து இருக்கிறது...அலைச்சல் திரிச்சல் அதிகம் இருந்தாலும் திசா புத்தி சரியில்லாதவர்களுக்கும் சுய ஜாதகம் வலுவில்லாதவர்களுக்கு சோதனைகள் அதிகம் இருக்கும் ஆனால்; சுய ஜாதகம் வலுவாக இருப்போருக்கு அதிக கெடுதலை ஏழரை சனி உண்டாக்குவதில்லை..

துலாம் ராசியினருக்கு ஜென்ம சனி அஷ்டம குரு என இரு சோதனைகளை ஒரே சமயத்தில் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள் ஜூன் மாதம் வரை அஷ்டம குரு பண திண்டாட்டத்தை கொடுத்துக்கொண்டிருக்கும் அதன்பின் சரளமாக பணம் வந்து சேரும் என்றாலும் சனி வக்ரகாலத்தில் சர்று பெரிய பிரச்சினைகள் எல்லாம் விலகி நிம்மதி தரும்..

விருச்சிகம் ராசியினருக்கு உடல்நலன் பாதிப்புகள்,மனதில் அதிக குழப்பம் போன்றவற்றை இப்போது சந்தித்து வருகின்றனர்...ஏழரை சனி பத்தி அதிகம் கவலைப்பட்டே ஒரு வழி ஆகிடுவாங்க போலிருக்கு சின்ன பிரச்சினை என்றாலும் எனக்கு ஏழரை அதான் இப்படி நடக்குது என புலம்ப ஆரம்பித்து விடுவர் இதுவே தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி விடும் தைரியமா இருங்க ஏழரை சனியில ஏழரை கோடி சம்பாதிச்சவனும் இருக்கான் உங்க சுய ஜாதகம் சூப்பரா இருந்தா ஏழரை அள்ளி கொடுக்கும் தெரியுமா.சனி வக்ர காலம் உங்களுக்கு பலவித வழியில் இருந்தும் சந்தோசமான செய்திகளை கொண்டு வந்து சேர்க்கும்...

மீனம் ராசியினர் என்றாலே கமல் தான் நினைவுக்கு வருகின்றார் கடன் வாங்கி வீட்டை அடமானம் வெச்சி விஸ்வரூபம் தயாரிச்சு நடிச்சி கடைசி நேரத்துல அதை வெளியிட முடியாம தடையாகி எதிர்ப்புகளை சம்பாதித்து கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வேறு எந்த காலத்திலும் இவ்வளவு சோதனைகளை சந்தித்து இருக்காரா இல்லை அவருக்கு மீனம் ராசி.அஷ்டம சனி அவரை இப்படி பந்தாடுகிறது...ஆனாலும் சனி கெடுத்து கொடுத்தான்..100 கோடி லாபம் என்கீறார்கள் இனி அவர் 3 படங்களில் நடிக்க போகிறார் நடிக்க போகிறார் என்றால் இன்னும் கடுமையாக உழைக்கப் போகிறார் கடுமையாக உழைத்தால் சனி பகவான் அகமகிழ்ந்து அள்ளி அள்ளி கொடுப்பார் ....எனவே மீனம் ராசியினரே சனி வக்ரம் உங்களுக்கு கடுமையான சோதனையில் இருந்து இப்போது சற்றே இளைப்பாறுதல் தரும் பணச்சிக்கல்கள் தீரும்....சோதனை தாங்காமல் முடங்கி படுத்து விடாதீர்கள் அது பல மடங்கு சோதனையை தந்துவிடும்....