திங்கள், 20 ஜனவரி, 2014

காதலியை மனைவியாக பெறும் யோகம் யாருக்கு..? ஜோதிடம்

காதல் இல்லாமல் இன்றைய சினிமா இல்லை...புது புது ரகமாக காதலை சொல்லிக்கொடுக்கும் சினிமாக்கள் வெள்ளிதோறும் ரிலீஸ் ஆகின்றன...நாமும் காதலிக்காவிட்டால் நம்மை மனித இனத்தில் இருந்தே ஒதுக்கிவிடுவார்கள் என்ற நெருக்கடியை இன்றைய சினிமா இளம் தலைமுறை மத்தியில் உருவாக்கி விட்டது...சின்ன பொண்ணுங்க கூட அது என் ஆளு என பெருமையாக சொல்லும் அளவுக்கு இன்றைய நிலைமை இருக்கு.

பத்தாவது படிக்கும் பெண்கள் கூட,இன்று பெரும்பாலும் காதலில் விழ அஜித்,விஜய் சினிமாக்களும் முக்கிய காரணம்.கூட படிக்கிற தன் தோழிகள் காதலில் ஊறி திளைக்கும்போது தனக்கும் பாய்ஃப்ரெண்ட் வேண்டும் எனும் கெள்ரவத்துக்காக காதலிக்கும் பொண்ணுங்களும் இருக்காங்க..அப்போ பசங்க இல்லையான்னு கேட்காதீங்க..பசங்கதான் இந்த விசயத்துல மெஜாரிட்டியா இருக்காங்களே..பொண்ணுங்களும் இப்ப பசங்க அளவுக்கு வந்துக்கிட்டு இருக்காங்க பசங்கலை போல பொண்ணுங்களும் லவ் லெட்டெர் எல்லாம் கொடுத்து ப்ரப்போஸ் பண்ணும் நிலை சாதாரணமாகிவிட்டது!! 

காதல் எல்லாமே கண்ணாமூச்சி..அவன் பொழுதுபோக்குக்கு, ஒருஃபிகர பாக்கறான்.. அவ செலவு பண்ணதான் ஒரு லூச தேடுறா..என ஒரு படத்தின் பாட்டு இன்றைய காதலின் நிலையை தெளிவாக் சொல்கிறது...

சரி..இதையெல்லாம் மீறி...தெய்வீக காதல்! செய்து,காதலில் யார் வெற்றி பெறுகிறார்கள்..காதலியை யார் மனைவியாக அடைகிறார்கள்..? காதல் வாழ்க்கையை வெற்றிகரமாக யார் வாழ்கிறார்கள்..? ஜோதிடம் அதற்கு என்ன சொல்கிறது..?

ஒரு ஜோதிட பாடல் அக்காலத்திலேயே அழகாக விளக்கி இருக்கிறது இதுதான் இன்று வரைக்கும் ஜோதிடர்களுக்கு அடிப்படை பாடம்.

கூறும் ஏழாமிடத்தான் குணமிகு நவத்தில் தோன்றிட
சீறும் பஞ்சமித்தோன் இன்பமாய் இணைந்திட்டாலும்
ஏறும் பாக்கியத்தோன் இருவரையும் கண்ணூற்றாலும்
மாறும் புவியில் பிறந்தோன் காந்தருவம் புரிவன் தானே!

ஐந்தாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் மூவரும் கூடி திரிகோண கேந்திரத்தில் தனலாபத்தில் இருந்து சுபர் பார்வை பெற்றால் அவர்களுக்கு ஏற்படும் காதல்,திருமணத்தில் முடிந்து நீடித்த மகிழ்ச்சியை தரும் என்பது உறுதி.மத்த காதல் எல்லாம் திருமணத்தில் முடிந்தாலும் நீடிக்காது பிரிவினையை உண்டாக்கும்...5,7,9 ஆம் அதிபதிகள் கூடினால் காதல்தான்..காதல் கல்யாணத்திலும் முடியும்தான் ஆனா 5,7,9 அதிபதிகள் 6,8,12ல் மறைந்திருந்தால் கல்யானம் ஆன சில நாட்களில் இருவரும் பிரிவர்...
ஒருவருக்கு வாழ்க்கையில் ஏற்படும் வெற்றிக்கும் ,மகிழ்ச்சிக்கும்,யோகத்திற்கும் காதல் திருமணத்துக்கும் குருபகவானும் ஒன்பதாம் அதிபதியும் அருள் புரிய வேண்டும்!!


தை அமாவாசை அன்னதானம்;

நண்பர்களே...வரும் தை அமாவாசை அன்று கண் பார்வையற்றோர் காப்பகம் ஒன்றிற்கு அன்னதானம் செய்ய நினைக்கிறேன்..நண்பர்கள் பங்களிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும் தை அமாவாசை மிக சக்தி வாய்ந்த நாள்..அன்று சித்தர்கள் வழிபாடு மிக சிறப்பு வாய்ந்தது...அன்றைய தானம் தர்மம் உங்கள் வாழ்வில் பெரும் திருப்புமுனையை உண்டாக்கும்..உங்கள் கடும் நெருக்கடிகளை தீர்க்கும்.....உங்கள் பாவங்களை தீர்க்கும்..அன்று கொங்கு மண்டலத்தில் இருக்கும் 108 சித்தர்களின் தலைவராகிய தம்பக்கலை எனும் சித்துவில் தலை சிறந்தவராகிய தம்பிக்கலை அயன் கோயில் சிற்ப்பு வழிபாடும் அர்ச்சனையும் செய்ய இருக்கிறேன் உங்கள் குடும்பத்தார் விபரங்களையும் அனுப்பலாம்..பூஜிக்கப்படும்..அத்துடன் உங்கள் நன்கொடைகலையும் அனுப்பலாம்..அன்னதானத்துக்கு பயன்படுத்திக்கொள்ளப்படும்.30.1.2014 தேதி அன்று அன்னதானம் பூஜை செய்யப்படும்..தொடர்பு கொள்ள 9443499003 mail;sathishastro77@gmail.com 

k.sathishkumar
state bank of india
bhavani 
20010801181

வெள்ளி, 10 ஜனவரி, 2014

2014 ஆண்டு எப்படி இருக்கும்..? எந்த ராசியினருக்கு யோகம்..? ராசிபலன்

புத்தாண்டு ராசிபலன் எழுதுவதை பலரும் படிக்கின்றனர் காரணம் பிறக்கும் புது ஆண்டில் நமக்கு சாதகமான பலன் இருக்குமா என்ர எதிர்பார்ப்புதான் இதனால் புது வருட் காலண்டரில், முதல் தேதியில் எல்லா ராசியினருக்கு யோகம்,வரவு ,இன்பம் என போடுவதை போல நாமும் எழுத முடிவதில்லை ..

.
அந்த வருடம் நடக்கப்போகும் குரு பெயர்ச்சி,சனிப்பெயர்ச்சி,ராகு கேது பெயர்ச்சியை அனுசரித்தே சொல்ல வேண்டியிருக்கிறது..அதிலும் பல ராசிபலன் புத்தகங்கள் எதற்கு வம்பு என எந்த ராசியினருக்கும் கடுமையாக எழுதாமல், மிதமாகவே பலன் எழுதுகின்றனர்..நானும் கடுமையாக எழுதனும் என சொல்லவில்லை...ராசிபலன் மட்டுமே இந்த வருடத்தை உங்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ மாற்றும் என சொல்லவில்லை உங்க ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமையாக கெடாமல் இருந்தால் ,சந்திரன் கெடாமல் இருந்தால் நல்ல புத்தியுடன், தன்னம்பிக்கையுடன் எதிலும் வெற்றி அடைவீர்கள்..

 கோட்சாரம் பெரிதாக பாதிக்காது.. மேலும் திசா புத்தி இன்னும் சாதகமாக இருந்தால் நிச்சயம் அஷ்டம சனி ஏழரை சனி யோகமே செய்கிறது. ஏழரை சனியில் கல்யானம் செய்பவர்கள் வீடு கட்டுபவர்கள் நிறைய இருக்கின்றனர்..ஏழரை சனியில் தொழில் மன்ப்தம்,கடன்படுபவர்கள் மிகவும் சிலர்தான் அதுவும் ஜாதகத்தில் சனி கெட்டவர்களுக்குதான் அந்த பாதிப்பு அதிகம்.

ஒருவர் ஜாதகம் பார்க்க வந்திருந்தார் அவருக்கு சனி லக்னத்துக்கு 12ல் மறைந்திருந்தது திசாபுத்தி யோகமாக இருக்கும்போது எல்லாம் சிரப்பாக அமைந்துவிட்டது திசை மாறும்போது சனியால் பாதிப்புகள் அதிகம் உண்டானது காரனம் சனி வலிமை இல்லாததால் தொழில் பாதிப்பு,ஆள் கிடைக்காமை இந்த பிரச்சினையால் கையில் ஆர்டர் இருந்தும் தொழிலை நடத்த முடியவில்லை...வேலையாள் இல்லாமல் செய்ய முடியாத தொழில் அது...வேலையாளுக்கு சனி தான் காரகன் அவர் வலிமையில்லாவிட்டால் என்ன செய்ய முடியும்.? தொழிலை மூடும் நிலை வந்துவிட்டது..ஆட்களுக்க பஞ்சம் என கேட்பீர்கள்...இரண்டு நாள் வேலை செஞ்சா மூணாவது நாள் வ்பர மட்டேங்கிறாங்க..புதுசு புதுசா ஆட்களை தேட முடியவில்லை என அவர் அலுத்துக்கொள்கிறார் என்ன செய்வது..?இப்படி திசாபுத்தி பாதிப்பு ஏழரை சனியை விட பாதிக்கும்.

2014ல் மீனம் ராசியினருக்கு நவம்பர் மாதத்தில் அஷ்டம சனி முடிகிறது மேசம் ராசியினருக்கு அஷ்டம சனி அரம்பிக்கிறது ...கன்னி ராசியினருக்கு ஏழரை சனி முடிகிறது..தனுசு ராசியினருக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது..துலாம் ராசிக்கு ஜெம சனி முடிந்து விருச்சிக ரசிக்கு ஜென்ம சனி தொடங்குகிறது....

ரிசப ராசிக்கு குருபலம் முடிந்து ஜூன் மாதம் முதல் மிதுன ராசிக்கு குருபலம் ஆரம்பிக்கிறது...மீனம் ராசியினருக்கும்,மகரம் ராசியினருக்கும்,விருச்சிகம் ராசியினருக்கும் குருபலம் ஆரம்பிக்கிறது..இவர்களில் திருமணம் ஆகதவர்களுக்கு திருமணம் கைகூடும்....

மீனம் ராசியினருக்கு அஷ்டம சனியும் முடிந்து குருபலமும் தொடங்குவது யோகமன காலம்தானே...அவர்களுக்கு 2014,2015 இரண்டுமே சிறப்பான வருடங்களாகத்தான் இருக்கப்போகிறது திசாபுத்தியும் சாதகமாக இருந்தால் வெற்றிமேல் வெற்றிதான் இதை உறுதி செய்ய உங்கள் ஜாதகத்தை எனக்கு மெயில் செய்யுங்கள்..பலன் எழுதி அனுப்புகிறேன் (கட்டனம் உண்டு..விளம்பரம் காணவும்)

ஐம்பொன் மோதிரம்  அணிவதால் உண்டாகும் பலன் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன்..ஐம்பொன்னில் மோதிரம் அணிவதால் நல்ல அதிர்ஷ்டம்,செல்வாக்கு உண்டகும்.. கடன் அடைய,தொழில் அமைய,கணவன் மனைவி ஒற்றுமை உண்டாக இது நல்ல பலன் கொடுக்கிறது...உங்கள் ஜாதகப்படி கல் தேர்வு செய்து மோதிரம் செய்து பூஜித்து உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்...sathishastro77@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் பிறந்த தேதி நேரத்துடன் அனுப்பி வைக்கிறோம்..மோதிரம் செய்துகொள்ள விருப்பம் இருந்தால் மட்டும் அனுப்பவும்.. என் நேரத்தை வீணாக்க வேண்டாம்.


தை அமாவாசை அன்னதானம்;

நண்பர்களே...வரும் தை அமாவாசை அன்று கண் பார்வையற்றோர் காப்பகம் ஒன்றிற்கு அன்னதானம் செய்ய நினைக்கிறேன்..நண்பர்கள் பங்களிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும் தை அமாவாசை மிக சக்தி வாய்ந்த நாள்..அன்று சித்தர்கள் வழிபாடு மிக சிறப்பு வாய்ந்தது...அன்றைய தானம் தர்மம் உங்கள் வாழ்வில் பெரும் திருப்புமுனையை உண்டாக்கும்..உங்கள் கடும் நெருக்கடிகளை தீர்க்கும்.....உங்கள் பாவங்களை தீர்க்கும்..அன்று கொங்கு மண்டலத்தில் இருக்கும் 108 சித்தர்களின் தலைவராகிய தம்பக்கலை எனும் சித்துவில் தலை சிறந்தவராகிய தம்பிக்கலை அயன் கோயில் சிற்ப்பு வழிபாடும் அர்ச்சனையும் செய்ய இருக்கிறேன் உங்கள் குடும்பத்தார் விபரங்களையும் அனுப்பலாம்..பூஜிக்கப்படும்..அத்துடன் உங்கள் நன்கொடைகலையும் அனுப்பலாம்..அன்னதானத்துக்கு பயன்படுத்திக்கொள்ளப்படும்.30.1.2014 தேதி அன்று அன்னதானம் பூஜை செய்யப்படும்..தொடர்பு கொள்ள 9443499003 mail;sathishastro77@gmail.com 

k.sathishkumar
state bank of india
bhavani 
20010801181


வியாழன், 9 ஜனவரி, 2014

2014 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்..? ஜோதிட கணிப்பு

கர்மகாரகன் சனியும் சுபகிரகமான குருவும் உச்சமாக ஒரே நேரத்தில் இருக்கப்போகும் ஆண்டு 2014 தான்.இதற்கு முன் முப்பதாண்டுகளுக்கு முன்பு,.1984ல் சனி மட்டுமே உச்சமாக இருந்தது ....84ல் தான் இந்திரா காந்தி கொல்லப்பட்டார் நாடு முழுவதும் கடும் கலவரம் பல்லாயிரம் சீக்கியர் படுகொலை நடந்தது..ஆனால் சனி மட்டும் உச்சமாக இருந்ததால் அந்த விளைவுகள் உண்டானது ...சனி உச்சமாகும்போது ஒரு பெரிய விளைவை உண்டாக்குவார்..அந்த ஆண்டுதான் போபால் விஷ வாயு வால் 20,ஆயிரம் மக்கள் பலியாகினர்...2013ல் சனி உச்சமானதும்,நடந்த பெரும் கோர விபத்து என்றால் உத்ரகாண்ட் தான்...50,000 மக்களாவது பலியாகி இருப்பர்...1954 ஆம் ஆண்டுதான் சனியும் குருவும் உச்சமாகி இருந்தது..அந்த ஆண்டு எப்படி இருந்தது என பார்த்தால் 2014 ஓரளவு அனுமானிக்க முடியும்...

 காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆன் ஆண்டு 1954...அவர் கர்மவீரர் என போற்றப்பட்டவர்..அதாவது கர்மகாரகன் எனப்படும் சனி உச்சம் ஆன ஆண்டில்.முதல்வர் ஆகியிருக்கிறார்...இவர்தான் பல பாலங்கள்,அணைகள்,பள்ளிக்கூடங்களை கட்டியவர்..பல அரசு நிறுனங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தார்..அனல்மின் நிலையம்,துப்பாக்கி தொழிற்சாலை,பெல் எல்லாம் இவர் கொண்டு வந்தவை.அதன்பின் இப்போதுவரை இவர்போல யாரும் தமிழகத்தை கட்டமைத்தது இல்லை...அந்த 1954 இல் தான் சனியும் குருவும் உச்சம் ஆகி இருந்தது..அதாவது இக்கிரகங்கள் முழுமையான சக்தியுடன் இருக்கும் காலம்...அதன்பின் 2014 ல் தான் சனியும் குருவும் உச்சமாகப்போகிறது!!

 நவகிரகங்களில் நல்ல கிரகங்களின் ஹீரோ குருதான்..அவர் உச்சம் ஆகும்போது நல்லது பல மக்களுக்கு நடக்கனும் என்பது விதி..அப்போ மே மாதத்தில் தேர்தல் முடிந்து ,நல்ல பிரதமர் ஒருவர் நமக்கு அமைவார் அவர் இந்த உலகமே வியக்கும்படியான இந்திய மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும்படியான நல்ல காரியங்களை செய்வார் என எதிர்பார்க்கிறேன்..லஞ்சம்,ஊழல்,காலதாமதம் இல்லாத அரசு நிர்வாகம்,வறுமை இல்லாத செல்வவளம் கொழிக்கும் இந்தியாவாக மாறும் என நம்புகிறேன்...!!!


ராசிப்படி குருப்பெயர்ச்சி பலன்கள் எழுதுவதுதான் வழக்கம் ஆனால் லக்னப்படியும் குரு பெயர்ச்சி எப்படி இருக்குன்னு பார்ப்பது அவசியம்..லக்னமும், ராசியும் ஒண்ணா இருப்பவர்களுக்கு அந்த சலுகையும் போச்சு..உதாரணமா ஜெயலலிதா அவர்களுக்கு சிம்ம ராசி...ராசிக்கு குரு 12ல் மறையப்போகிறார்..ஆனா லக்னத்துக்கு 2ல் உச்சம் அடைகிறார் இது சாதகம்தான்..கருணாநிதிக்கு ராசிக்கு 3ல் குரு மறைகிறார்...தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்' என ஜோதிட பாடல் சொல்கிறது..துரியோதனின் அத்தனை ராஜதந்திரமும் பலிக்காமல் அவன் படை மாண்டுவிட்டதாம்...அவர் லக்னப்படி ஜென்மத்துக்கு வருகிறார் ஜென்ம ராமர் சீதையை வனத்திலே சிறைவைத்ததும் ஜென்ம குருவில்தான் என பழம்பாடல் சொல்கிறது.அதாவது ஜென்ம குரு சிறைபடுவது போல இருக்குமாம்...இருவரில் யாருக்கு திசாபுத்தி சாதகமா இருக்கோ அவங்களுக்கு இன்னும் பலம் உண்டாகும் இது பெருசா பாதிக்காது..திசாபுத்தி பாதகமா இருந்தா அவங்களுக்கு இன்னும் பலவீனம்தான்!!


தை அமாவாசை அன்னதானம்;

நண்பர்களே...வரும் தை அமாவாசை அன்று கண் பார்வையற்றோர் காப்பகம் ஒன்றிற்கு அன்னதானம் செய்ய நினைக்கிறேன்..நண்பர்கள் பங்களிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும் தை அமாவாசை மிக சக்தி வாய்ந்த நாள்..அன்று சித்தர்கள் வழிபாடு மிக சிறப்பு வாய்ந்தது...அன்றைய தானம் தர்மம் உங்கள் வாழ்வில் பெரும் திருப்புமுனையை உண்டாக்கும்..உங்கள் கடும் நெருக்கடிகளை தீர்க்கும்.....உங்கள் பாவங்களை தீர்க்கும்..அன்று கொங்கு மண்டலத்தில் இருக்கும் 108 சித்தர்களின் தலைவராகிய தம்பக்கலை எனும் சித்துவில் தலை சிறந்தவராகிய தம்பிக்கலை அயன் கோயில் சிற்ப்பு வழிபாடும் அர்ச்சனையும் செய்ய இருக்கிறேன் உங்கள் குடும்பத்தார் விபரங்களையும் அனுப்பலாம்..பூஜிக்கப்படும்..அத்துடன் உங்கள் நன்கொடைகலையும் அனுப்பலாம்..அன்னதானத்துக்கு பயன்படுத்திக்கொள்ளப்படும்.30.1.2014 தேதி அன்று அன்னதானம் பூஜை செய்யப்படும்..தொடர்பு கொள்ள 9443499003 mail;sathishastro77@gmail.com 

k.sathishkumar
state bank of india
bhavani 
20010801181

திங்கள், 6 ஜனவரி, 2014

குருபூஜை அன்னதானம்..ராசிபலன் பரிகாரம் ஜோதிடம்

காது கேளாத,வாய்பேச முடியாத குழந்தைகள் பள்ளியில் குருபூஜை பரிகாரமாக அன்னதானம் செய்யப்போவதாக சொல்லி இருந்தேன்.. அது இன்றைக்கு உங்களின் ஆதரவால் சிறப்பாக நடைபெற்றது.......



சாதம்,சாம்பார்,ரசம்,பொறியல்,வடை என அனைத்தையும் வீட்டிலியே சமைத்து எடுத்து சென்றிருந்தோம்..சுமார் 82 குழந்தைகள் ..மதியம் 2 மணிக்கு உணவு வழங்கப்பட்டது...குரு கிரகத்தின் பாதிப்பால் அவதியுறும் சில ராசியினருக்கு அன்னதானம் செய்வது நல்லது என சொல்லி இருந்தோம் அஷ்டம சனி ஏழரை சனியால் பாதிக்கப்பட்டுள்ள மீனம்,துலாம்,கன்னி,விருச்சிகம் ராசியினருக்கும் பரிகாரமாக இதை சொல்லி இருந்தோம் இதை செய்யமுடியாதவர்கள் எங்களுடன் கலந்துகொள்ளலாம் என சொல்லி இருந்தேன் அதன் பேரில் உதவி செய்த நண்பர்களுக்கு மிக்க நன்றி...அக்குழந்தைகள் உங்களுக்காக உங்கள் குடும்பத்துக்காக பிரார்த்தனை செய்தபின் உணவு உண்டது மனதை நெகிழ செய்தது...!! நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!!

வெள்ளி, 3 ஜனவரி, 2014

திருப்பதி பெருமாள் கோயில் பிரசாதமும்,தமிழக கோயில்கள் பிரசாதமும்..~~~

தினம் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தரும் திருப்பதியில் வழங்கப்படும் அனைத்து பிரசாதங்களும் மூலவரான வெங்கடாஜலபதி சன்னதிக்கு எடுத்து சென்று அமுது செய்வித்து அதாவது படைக்கப்பட்டு அதன்பின்பே விநியோகம் செய்யப்படுகிறது..ஆனால் பிரபலமான தமிழக கோயில்களில் அப்படி செய்கிறார்களா..? இல்லை..காண்ட்ராக்ட் எடுத்தவர் எந்த சோற்றை மடித்து தருகிறாரோ அதுதான் பிரசாதம்..அநியாயம்!!!

திருநள்ளாறு செல்பவர்கள் சனிபகவானையே நினைத்து செல்ல வேண்டாம்...சிவன் கோயில் அது.தர்பாரண்யேஸ்வரர்,தியாகராஜர்,மரகதலிங்கம் என மூன்று சிவ ரூபங்கள் உள்ளன..மூன்றையும் தரிசனம் செய்துவிட்டு,ப்ராணாம்பிகை அம்பாளை தரிசனம் செய்தபின் சனீஸ்வரரை வழிபட வேண்டும்..நளனுக்கு சனிதோசம் நீங்க அருள் செய்தவர் தர்பாரண்யேஸ்வரர்...ஆகவே அந்த சிவனை வழிபட்டால்தான் சனி தோசம் நீங்கும்!!!!

 பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்களா..என கேட்கிறார்கள்...புனர்பூசத்தில் பிறந்தவர்கள் அனைவரும்,ராமரை போல ஏகபத்தினி விரதனாகவா இருக்கிறார்கள்..?

 நமது நாட்டின் மூலிகை வளங்களை அழிக்கவும்,நம் மண்ணின் உயிர்ப்பு சக்தியை சீர்குலைக்கவும் ஏவப்பட்ட உயிர்மை ஆயுதம்தான் பார்த்தீனியம் செடி..இந்த செடியின் விசத்தன்மை காற்றில் பரவி நம்மை நோயுற செய்து நமது நோயை போக்கக்கூடிய மூலிகைகளையும்,விவசாயத்தையும் அழிக்கிறது.இதன் மூலம் நாம் நோயாளியாகி,தினம் மருத்துவமனையை நாட வேண்டிய நிலை...இது கிராமங்களில் மிக வேகமாக பரவி வருகிறது...நமது கிராமங்களை அழிக்க ஏவப்பட்ட அணுகுண்டை விட மோசமான பையோ வெப்பன்ஸ் அதாவது உயிர்மை ஆயுதமான இதனை அழிப்பது மிக அவசியம்.அவசரம்!!

 ஊமத்தம்பூ,அரளிப்பூ,எருக்கம்பூ எல்லாம் விஷ செடிகள்...நம் நாட்டு விஷ செடிகள் நன்மை செய்பவை...காலரா,பிளேக்,அம்மை போன்ற காற்றில் பரவும் நோய்கள் வராமல் தடுக்க நம் முன்னோர்கள் கடவுள் சிலைகளுக்கு இவற்றை மாலைகளாக கட்டி அணிவித்தும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றியும் நோய்கிருமிகளை காற்றிலேயே அழித்தனர்..இதுதான் உண்மையான பகுத்தறிவு..கடவுள் சிலைகளை உடைப்பதும்,பார்ப்பானை அடித்து கொல்லு என்பதும் பகுத்தறிவு அல்ல..!

 கனிகளில் உணவு கனி ,காற்றுக்கனி என நம் பெரியவர்கள் பிரித்து வைத்திருக்கிறார்கள்...மா,கொய்யா,வாழை,போன்றவை உனவுகனிகள் ஆகும்,நுணா,கொன்றை போன்றவை காற்றுக்கனிகள்..காற்றில் மூலம் பரவும் நோய்க்கிருமிகளை அழிக்க இந்த கனிகள் உதவும்..அந்தகாலத்தில் கோபுரமாடங்கள் போன்ற உய்ரமான இடங்களில் ஏறி நின்று முரசில் நுணா கனியை தடவி முரசை அடித்து அதன்மூலம் காற்றில் பரவும் பிளேக் போன்ற நோய்க்கிருமிகளை விரட்டினர்..

அதுபோலவே சின்னக்குழந்தைகளுக்கு நுணா காய்களை கொடுத்து பிள்ளையார் பந்து விளையாட்டு என சொல்லி ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாட செய்தனர் இதனாலும் கார்ரில் அது வீசப்படும்போது நோய்க்கிருமிகளை அழிக்கும் ..நுணா மரத்தால் செய்யப்பட்ட விவசாயகருவிகளை பயன்படுத்தினர்..உழவு மாடுகளுக்கு நுகத்தடி போன்றவை நுணா மரத்தால் செய்யப்பட்டன..இதனால் விவசாய வேலை செய்து கைகள் புன்ணானால் அந்த கைப்பிடியே மருந்தாக செயல்படும்..மாடுகளுக்கும் கழுத்தில் காயம்பட்டால் அந்த நுகத்தடியே மருந்தாக வேலை செய்யும்..குணமாக்கும்..நுணா கனியை சாப்பிடுவது கடும் விசம்...ஆனால் இப்போது நோனி எனும் கெமிக்கல் கலந்த மருந்த இதில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது..நுணா பற்றி அறியாமல் பலரும் வாங்கி அருந்துகின்றனர்...இதனால் புதிய நோய்கள்தான் உண்டாகும்!!

 கொன்றை மலருக்கும்... தமிழ் வருடம் பிறக்கும் சித்திரை மாதத்துக்குமான தொடர்பு... பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது. ஆம்... சித்திரை முதல் தேதியன்று கண் விழித்ததும் பார்க்க வேண்டிய மங்கலப் பொருட்களின் வரிசையில் பொன்னுக்கு அடுத்தபடியாக இடம்பிடித்திருப்பது கொன்றை மலரே! அந்தளவுக்குச் சிறப்பு பெற்றது கொன்றை.
 
 கொன்றை மலரைக் கொண்டு வழிபட்டால் பொன்னை வைத்து வணங்கிய பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் இதற்கு 'சொர்ண புஷ்பம்' என்கிற பெயரும் உண்டு!